வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி அறுபத்தி மூன்று – நம்பிக்கையும் புரிதலும்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தினசரி நாட்காட்டியின் தேதி போல உங்கள் கவலைகளை தினமும் கிழித்து எறிந்து விடுங்கள்; ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி புதிதாய் வாழுங்கள்.

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே!

 

யாரிவள்! பகுதி அறுபத்தி மூன்று நம்பிக்கையும் புரிதலும்! 

அன்பு, பாசம், நேசம் இவற்றை விட ஒருவர் மேல் கொண்ட நம்பிக்கையே நல்லதொரு புரிதலை உருவாக்கும். திருமணமான பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பலவித எண்ணங்களும், குழப்பங்களும், யோசனைகளும் இருக்கும்! இருவருக்குமான புரிதலே நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும்!

 

திருமணமான மறுநாள் பலவித எண்ணங்களுடன் பெற்றோரை விட்டுப் பிரிந்து கண்கலங்க புகுந்த வீட்டினருடன் கிளம்பினாள். இவளுக்கு இது புதியதோர் சூழல்! இதுவரை பழகாத மனிதர்கள். கணவன் உள்பட! கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருடனும் பழகி புரிந்து கொண்டு அவர்களிடத்தில் நல்ல பெயர் எடுக்கணும்! அப்பா அம்மாவை பெருமைப்படுத்தணும்! என்று யோசித்தவாறே பயணம் செய்யத் துவங்கினாள்!!

 

உண்மையாகவே அம்மாவுக்கு இப்போது நிம்மதியாக இருந்திருக்கும்! இவளுக்கொரு நல்வாழ்க்கை அமைத்து தருவது ஒன்றே அவளின் இலக்கு அல்லவா! அம்மாவை இவளின் நெருங்கிய தோழி பார்த்துக் கொள்வதாக சொல்லவே சற்றே நிம்மதியுடன் திருச்சிக்கு கிளம்பினாள்!

 

திருமணமான இரண்டு நாட்களுக்குள்ளாகவே கணவனைக்  குறித்த பார்வை இவளுக்கு மாறத் துவங்கியது! பார்க்க அதிகார தோரணையும், கம்பீரமாகவும் இருந்தாலும், அவர் மென்மையானவர் என்பது புரிபட ஆரம்பித்தது! இவளிடத்தில் மெல்ல மெல்லப் பேசி தன்னைப் பற்றிய புரிதலையும், நம்பிக்கையும் உருவாக்கிக் கொண்டே இருந்தார்! 

 

இவளையும் மிகந்த கவனமுடன் பார்த்துக் கொண்டார். சின்னச் சின்ன விஷயங்களில் கூட கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டது அவளைக் கவர்ந்தது! இப்படியே பத்து நாட்கள் போல கடந்து செல்ல ஒருநாள் தனிக்குடித்தனம் செய்வதற்காக டெல்லிக்கு ரயிலும் ஏறி விட்டார்கள்!

 

இரவுப் பயணத்தில் எல்லாம் ரயிலில் அவ்வப்போது அவர் இருக்கிறாரா! என்று இவள் பார்த்துக் கொள்வதும், மேல் பர்த்தில் படுத்துக் கொண்டிருக்கும் அவர் 'பயப்படாம தூங்கு! நான் இங்க தான் இருக்கேன்! என்று சைகையில் உறுதி தருவதாகவும் கடந்தது! அப்போ அவரும் விழிப்புடன் இருந்து என்னுடைய பத்திரத் தன்மையை தானே கவனித்துக் கொண்டிருக்கிறார்!! என்று நினைத்து மகிழ்ச்சிக் கொண்டாள். அப்படியே உறங்கியும் போனாள்!

 

தலைநகரம் அவளை ஆரத்தியெடுத்து வரவேற்றது!

 

'நீ ஒருத்தர பார்த்தவுடனே அவர் எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுடுமாமே' உன் ஃப்ரெண்ட் சொன்னா! என்றார். 

 

ஆமா! மனசுக்குத் தெரிஞ்சுடும்! இனிமே இவங்களோட தொடர்ந்து பேசலாமா! வேண்டாமான்னு! என்றாள்.

 

அப்ப நான் எப்படிப்பட்டவன்னு கூட சொல்லுவியா! என்றார்.

 

அவளும் சிரித்துக் கொண்டாள்.

 

டெல்லிக்குச் சென்ற பின் இவள் தன்னுடையவள் என்ற உணர்வில்  இதுவரை தான் கடந்து வந்த பாதைகளை ஒளிவு மறைவின்றி எந்த தயக்கமும் இல்லாமல் இயல்பாக அவரால் இவளிடத்தில் பகிர்ந்து கொள்ள முடிந்தது!

 

அவருக்கு பொய் சொல்லவும் தெரியலை! யாருக்காகவும் வேஷம் போடவும் தெரியலை! என்பது அவருடைய கண்களில் புலனானது!

 

இதை விட ஒரு கணவனுக்கு என்ன அழகு வேண்டும்! 

 

அவளுக்குள்ளும் கணவனைக் குறித்தான பலமான நம்பிக்கை உருவானது! இவர் என்னுடையவர்! என்னவர்! இந்த வாழ்க்கையை இவருடன் இணைந்து தான் கடந்திட வேண்டும்! என்ற உறுதியான முடிவுக்கு வந்தாள்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

 1. மகிழ்ச்சி தொடரட்டும் டெல்லியில்...

  பதிலளிநீக்கு
 2. "உலகம் சுற்றும் வாலிபன்" என்று அப்போது தெரியாது தானே...?

  பதிலளிநீக்கு
 3. முதல் பாரா டிட்டோ!
  சூப்பர்! அருமையான வாழ்க்கைத் தொடக்கம்!

  தில்லி ராஜா (உங்க ராஜா!!) வாழ்க! னு கோஷம் போடலாம்!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. உயரத்தால் மட்டுமல்ல, மனதாலும் உயர்ந்த மனிதர்

  பதிலளிநீக்கு
 5. நல்ல மனிதர் வாழ்க்கை துணையாக கிடைத்தது பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும். உங்களுக்கும் தான். சகோ கரந்தை ஜெயக்குமார் சொல்வது போல மனதால் உயர்ந்த மனிதர் தான்.
  வாழ்க வளமுடன் இருவரும் பல்லாண்டு.

  பதிலளிநீக்கு
 6. வாழ்க்கையின் ஆரம்பம் இனிய மனிதருடன் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

  எனது கணவரும் முன்பே தெரிந்தவர்தான் பேசிப் பழகியதில்லை. திருமணத்துக்கு இரு மாடுகளை வண்டியில் பூட்டியாகி விட்டது வண்டி கவிழாமல் இருவருமே கொண்டு இழுக்க வேண்டும் என அழகாக கூறினார் இருவருமே புரிந்து கொண்டோம்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....