திங்கள், 1 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஐம்பத்தி இரண்டு – இரும்பு மனுஷி!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல - ஐசக் நியூட்டன்

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

யாரிவள்! பகுதி ஐம்பத்தி இரண்டு - இரும்பு மனுஷி!




 

எதற்கும் கலங்காதவள்! எதற்கும் அஞ்சாதவள்! திடமான மனது கொண்டவள்! அம்மா என்பவள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவள் என்று சொல்வார்கள். ஆம்! அது முற்றிலும் உண்மை என்பதை இவள் கண் முன்னே பார்த்து உணர்ந்து கொண்டாள். ஆறு முறை கீமோதெரபி செய்ததில் தலைமுடியெல்லாம் கொட்டிப் போய் அம்மா மிகவும் துவண்டு போனாலும் அம்மாவின் மனோதிடம் அவளை மீட்டுக் கொண்டு வந்தது.

 

அதன் பிறகு வழக்கமான தன் வேலைகளைத் தொடர்ந்தாள். கணவரையும், பிள்ளைகளையும் கவனிக்கணும், முடிக்க வேண்டிய கடமைகள் இருக்கே! அன்றாடம் மாத்திரைகள் எடுத்துக்கணும்! வருடம் ஒருமுறை செக் பண்ணிக்கனும்! என்ற அறிவுறுத்தலோடு அம்மா மீண்டும் செயல்பட ஆரம்பித்தாள்.

 

இனி! அம்மாவுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்ற நிம்மதி பெருமூச்சுடன் அவளும் கல்லூரியில் கவனம் செலுத்தத் துவங்கினாள். ஆரம்பத்தில் எதுவும் புரிபடவில்லை! பின்பு மெல்ல மெல்ல இயந்திரங்களைக் குறித்த தகவல்களும், அவற்றின் செயல்பாடுகளும் என முழுமூச்சாக அதில் ஆழ்ந்து போனாள்.

 

பணிமனையில் சிறப்பாக பணியாற்றினாள். உதிரிபாகங்கள் குறித்த வரைபடங்களை அவளே ஆர்வமுடன் வரைந்து பார்த்தாள். அப்போது வீட்டில் பார்த்த பொருட்களை எல்லாம் அதன் Top view, left side view, Right side view என பார்த்து போட்டுப் பார்ப்பாள். Machine drawingம், Workshopல் இயந்திரங்களோடு பணிபுரிவதும் அவளுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தது!

 

தனக்கான வாழ்க்கை முறையும், கொள்கைகளும் என அவள் ஒவ்வொரு நாளும் தன்னை மெருகேற்றிக் கொண்டாள். அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகள், வாரக் கடைசியில் செய்ய வேண்டிய வேலைகள், கல்லூரிப் பாடங்கள் என்று பிரித்துக் கொண்டு செயல்பட்டாள். 

 

அன்றாடம் வீட்டு வேலைகளில் உதவுவது, வாரம் முழுவதும் கல்லூரிக்கு அணிந்து சென்ற உடைகளையும் ஓவர்கோட்டையும் சனி, ஞாயிறில் துவைத்து அயர்ன் செய்து கொள்வது என்று அவளுக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவையே ஏற்படலை! அவளாகவே தன்னை செதுக்கிக் கொண்டாள். சுத்தமும், நேர்த்தியும் அவளைப் பொறுத்தவரையில் முக்கியமாகப் பட்டது!

 

வீட்டிலிருந்து அவினாசி சாலை வரை நடந்து சென்று அங்கிருந்து பாலிடெக்னிக் வரை செல்லும் பேருந்தைப் பிடித்து தான் அன்றாடம் சென்று வந்தாள். தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டாள்.

 

இன்னும் என்னென்ன செய்தாள் இந்தப் பெண்!  தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. ஒரு சிறப்பான திட்டமிடலுடன் நகர்ந்திருந்திருக்கிறது வாழ்க்கை. உங்கள் படிப்பு தற்போது எந்த வகையிலாவது உதவுகிறதா?

    பதிலளிநீக்கு
  2. அம்மா நலம் பெற்றதுவரை மகிழ்ச்சி. திட்டமிட்டபடி செயல்பாடும் இருப்பது திறமையான விசயம்.

    பதிலளிநீக்கு
  3. பொறுப்போடு, பொறுமையோடு நல்ல திட்டமிடல் உங்களுக்கு அதுவும் அந்த வயதில்! நீங்க தேர்ந்தெடுத்த படிப்பு நல்ல அருமையான படிப்பு. யதார்த்தத்திற்கு மிகவும் உதவும் படிப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வாசகமும் உங்கள் பதிவும் அருமை.
    அம்மாவின் மன உறுதி உங்களுக்கும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. விரும்பிய படிப்புடன் திட்டமிடப்பட்ட வாழ்க்கை .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....