ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி அறுபத்தி ஐந்து – உணர்வுகளின் சங்கமம்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

புரிதல் - அன்பானவர்களின் மனதையும் புன்னகையையும் அறிந்து கொள்வதில் தான் உள்ளது.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! 

 

யாரிவள்! பகுதி அறுபத்தி ஐந்து உணர்வுகளின் சங்கமம்!



 

அப்பாவின் இடத்தை எப்படி இந்த மனிதரால் இவ்வளவு குறுகிய காலத்தில் பிடிக்க முடிந்தது!! என்று ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு! அப்பாவை போலவே சுத்தமும், நேர்த்தியும் இவரிடமும் இருப்பதாலா! இல்லையென்றால் அப்பாவைப் போலவே என்னைக் குழந்தை போன்று பத்திரமாக  பார்த்துக் கொள்வதாலா! இல்லையென்றால் அதற்கும் மேல் இவரிடம் எனக்கு ஏற்பட்டுள்ள  ஈர்ப்பின் காரணமாகவா!

 

இதுவரை அவளது வாழ்வில் அப்பா மட்டும் தான் சிறந்த மனிதராக தோன்றிக் கொண்டிருந்தது! ஆனால் சமீபகாலங்களில் இவரின் இருப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறது மனது! கண்களும் இவரைத் தேடிக் கொண்டிருக்கிறது! இவரின் முன்பு என் கவலைகளும், வேதனைகளும்  கற்பூரமாய் கரைந்து விடுகிறது! 

 

சட்டென என் மனதில் ஒட்டிக் கொண்டு விட்டார்! இதுவரை இது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லையே! இவரிடத்தில் விஷய ஞானமும், பக்குவமும் இருக்கிறது! என்று கணவனைக் குறித்தான சிந்தனைகளுடன் டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தாள். டெல்லியில் முதல் குளிர்காலம் இவளை சில்லென்று வரவேற்றது!

 

கோவையின் தட்பவெப்பத்தை பற்றி பெருமையடித்துக் கொண்டிருந்த இவளுக்கு டெல்லியின் குளிர் உடலை நடுக்கியது. இத்தனைக்கும் இது ஆரம்பம் தானாம்! அடுத்த மாதம் தான் உச்சத்தை தொடுமாம்! இவளின் நடுக்கத்தை கண்டு சிரித்துக் கொண்டே தன் நீண்ட கைகளால் அரவணைத்துக் கொண்டு ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 


அதன் பிறகு வந்த நாட்களில் பெரும்பாலான நேரங்கள் இவள் கம்பளியை விட்டு வெளியே வரவில்லை! இவளின் பாட்டி குமுட்டி அடுப்பில் சமைத்தது போல் ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உட்கார்ந்த இடத்திலேயே சப்பாத்தி போட்டு சாப்பிட்டு விடலாம்! என்று கணவனிடம் சொல்லவும் அவர் பலமாக சிரித்தார்!

 

இப்படியாக அடுத்த சில மாதங்கள் குளிரோடு கடந்து வந்தாள்! அடுத்து வந்த கோடைக்காலத்தில் மீண்டும் ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது! கணவரின் பெரியப்பா மறைந்து விட அந்தக் காரியங்களில் கலந்து கொண்ட பின் இவளை கோவையில் அம்மாவை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு அவர் திருச்சியிலிருந்தே டெல்லிக்குத் திரும்பினார்!

 

அம்மா இன்னும் மூன்று மாதங்கள் தான் இருப்பார்! என்று மருத்துவர் கூற இவளிடத்தில் என்ன செய்வதென தெரியாத தவிப்பு. எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம் என்று நினைத்தால் இப்படி அடி மேல் அடி வருகிறதே. ஆனால் அம்மாவோ அப்போதும் திடமான மனதுடன் 'உனக்கு என்ன வேணும்னு சொல்லு பண்ணித் தரேன்!' என்கிறாள்.

 

மற்ற வீட்டு வேலைகளை இவள் பார்த்துக் கொள்ள, அம்மா இவளுக்குப் பிடித்த 'பருப்புருண்டைக் குழம்பு' செய்து தந்தாள்! அம்மா எப்போதும் நிறைய தான் பண்ணுவார்! குட்டிப் பெண்ணாக இருந்த போது மாலைநேரத்து ஸ்நாக்காக  இரண்டு உருண்டைகளை கிண்ணத்தில் போட்டுக் கொண்டு ரசித்து சாப்பிட்டதை நினைத்துக் கொண்டாள். இனி இதெல்லாம் எனக்குப் பண்ணித் தர அம்மா இருப்பாளா!!

 

புன்னகையுடன் இவள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் எதையும் காண்பித்துக் கொள்ள முடியாத சூழல்! தன்னுடைய துக்கத்தை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்! கணவனுக்கு கடிதமாக எழுதி ஆறுதல் தேடினாள்! அம்மா என்றுமே தைரியமான மனுஷி! மகளின் அழகான வாழ்க்கையை பார்க்கணும் என்று ஆசைப்பட்டாள்!

 

அப்பா அம்மாவை டெல்லிக்கு அழைத்துச் சென்றாளா? தொடர்ந்து பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

9 கருத்துகள்:

  1. நாம் தெரியாது என்று நினைக்கிறோம்.  அம்மாவுக்கு தன் நிலை தெரியாதிருந்திருக்குமா?  தெரியாதது போலவே உங்களுடன் எல்லாம் பழகி இருந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  2. மகளின் ஆனந்த வாழ்க்கையைப் பார்ப்பதில்தானே தாய்க்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  3. அம்மாவுக்கு தெரிந்துதான் வெளிக்காட்டாமல் வாழ்ந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  4. நம் நெருக்கமானவர் அதுவும் அம்மாவின் இறுதி நாள் குறிக்கப்பட்டுவிட்டால் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கும் வேண்டும், சுற்றி உள்ளவர்களுக்கும் வேண்டும் ஆனால் மிக மிகக் கடினமான விஷயம். அம்மா தைரியமான மனுஷி! உள்ளுக்குள் போராட்டம் இருந்திருக்குமோ?!! எனக்கு நினைத்துப் பார்க்கவே மனம் கலக்கமாகிறது.

    உங்களுக்கும் எவ்வளவு இருந்திருக்கும் என்று தெரிகிறது. கடுமையான நாட்கள்,

    அம்மா அப்பாவை அழைத்துச் சென்றீர்களோ? தில்லிக்கு! பாவம் அம்மா...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் வெங்கட் சார் மற்றும் ஆதி மேடம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு பதிவைப் படித்தேன். அருமையான கதை. முதலிலிருந்து படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இவரின் முன்பு என் கவலைகளும், வேதனைகளும் கற்பூரமாய் கரைந்து விடுகிறது! //

    அதுதான் வேண்டும். இப்படி பட்ட வாழ்க்கைதுணை ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும்.

    அம்மாவின் நினைவுகள் பகிர்வு நெகிழ்வு.
    படம் மிக அருமை.

    முகநூலில் தொடர்வதால் அடுத்து என்ன என்று தெரிந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை பதிவும் அருமை. தங்கள் வாழ்க்கைத் துணைவர் (சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள்.) நீங்கள் விரும்பிய மாதிரியே அமைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. ஒருவரையொருவர் வாழ்க்கை ஆரம்பிக்கும் அந்த முதல் கட்ட ஆரம்பத்திலேயே நன்கு புரிந்து கொண்டு விட்டால், அங்கு பிரச்சனைகளுக்கு ஏதும் இடமில்லையே.... மகிழ்ச்சிதான்.

    தங்கள் அம்மாவின் நிலையை அறிந்ததும், அதை நீங்கள் இங்கு பகிர்ந்து படித்ததும் எனக்கே மனது மிகவும் கஸ்டமாக இருக்கிறது. அந்த சூழ்நிலையில் உங்கள் மனது எப்படி பரிதவித்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. எங்கள் உறவுகளில் ஒருவருக்கும் இதே கால கெடு விதிக்கப்பட்டதும், நாங்களும் தவித்திருக்கிறோம். என்ன சொல்ல... தங்கள் மன தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடர்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. நல்லதோர் கணவனிடம் மகளை ஒப்படைத்து விட்டேன் என அம்மா உள்ளூர மகிழ்ந்திருப்பார்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....