திங்கள், 22 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எழுபத்தி மூன்று – வாழ்வின் சுவை!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வாழ்க்கை ஒரு கல்லைப் போன்றது; அதை சிற்பமாக்குவதும், சிலையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

 

******

 


யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! 


யாரிவள்! பகுதி எழுபத்தி மூன்று வாழ்வின் சுவை!




 

வாழ்வின் ஓட்டத்துக்கு ஏற்றாற் போல் தன்னை வகுத்துக் கொள்வதே பக்குவம்! குழந்தை வளர்ப்பில் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்! சுட்டிப்பெண்ணாக இருந்த போது அம்மா எழுப்பி விட்டு எழுந்து கொண்டிருந்தாள். இப்போது இவள் பெற்ற சுட்டியின் அழுகையின் ஒலி கேட்டு எழுந்திருக்கிறாள். சில நேரம் குழந்தையின் அழுகை கூடத் தெரியாமல் அசந்தும் தூங்கியிருக்கிறாள்!

 

கணவன் தான் குழந்தையை சமாதானம் செய்து, தாலாட்டுப் பாடி தூங்க வைப்பார். இவளையும் எழுப்பி விட்டு குழந்தைக்கு பால் புகட்டச் சொல்வார். குழந்தை தூங்கும் நேரத்தில் சத்தமில்லாமல் இவள் வேலைகளை முடிப்பதும், விழித்திருக்கும் நேரங்களில் விளையாடுவதுமாக நாட்கள் செல்லத் தொடங்கியது.

 

குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள். தனக்கு தெரிந்ததைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தாள். குழந்தையிடமிருந்தும் அதற்கு என்ன தேவை! எதற்கு இந்த அழுகை! என்பதெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நடந்து கொண்டாள்! சின்ன சின்ன திட்டமிடல்களும், பக்குவமும் அவளை வழிநடத்தியது!

 

வாழ்க்கை இப்படியே சென்றால் அதன் சுவை திகட்டக்கூடும் என்று இறைவன் அப்போது முடிவு செய்து விட்டார்! அம்மாவின் மறைவுக்குப் பின் அப்பா கோவையிலிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்குச் சென்று விட்டார். கோவை தான் தனக்கு பிடித்த ஊர் என்றும் இது போல வேறு எங்குமே இருக்காதென்றும், சுவை மிகுந்த சிறுவாணித் தண்ணீர் பற்றியும் கதை கதையாக எப்போதுமே  சொல்லிக் கொண்டிருப்பார்.

 

அம்மாவின் மறைவுக்குப் பின் அப்பாவுக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை! ஓரிரு வருடங்கள் தான் மாற்றல் வாங்கிக் கொண்டு சென்ற அந்த ஊரிலும் இருந்தார்! பின்பு விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு திருச்சியில் குடியேற முடிவு செய்தார்! இவளின் புகுந்த வீடும் திருச்சி என்பதால் அங்கேயே குடியேற முடிவும் செய்தார்! ஒரு பெண்மணி இல்லாத வீடு வீடும் அல்ல! அவள் எடுக்கும் முடிவுகளை ஏற்காத மனதும் மனதல்ல!

 

தன் ஓய்வுக்கால பணத்தில் ஒரு வீட்டை கட்டி அதில் வசிக்க முடிவு செய்து அதற்கான வேலைகளும் நடைபெற்றன. இதுவரை சொந்த வீடு என்பது இவர்களைப் பொறுத்த வரையில் கனவாக மட்டுமே இருந்தது! கிடைத்த ஒரு சில வாய்ப்புகளும் சில காரணங்களால் கைநழுவிப் போனது! வாழ்க்கையின் ஓட்டத்தில் படகை சரிவர இயக்குவதே திண்டாட்டமாக இருந்ததால் இவற்றை பற்றியெல்லாம் யோசிக்கவே அவர்களுக்கு தோன்றவில்லை!

 

அம்மாவின் வாழ்க்கை அந்த சின்னஞ்சிறிய அரசுக் குடியிருப்பு வீட்டோடு முடிந்து விட்டது! எந்தவிதமான வசதிகளையும் அவள் வாழ்நாளில் அனுபவித்ததில்லை! உழைப்பையும் அன்பையும் மட்டுமே கொட்டி கட்டுக்கோப்பான அந்த அழகான கூட்டை உருவாக்கியிருந்தாள்! அவள் இல்லாமல் அந்தக் கூடு இப்போது காற்றுக்கும் மழைக்கும் ஊசலாடி கொண்டிருக்கிறது!

 

அப்பாவின் எண்ணமாவது நிறைவேறட்டும்! தனக்கு சொந்தம் என்று சொல்லக்கூடிய ஒரு இடத்தில் எந்த இடைஞ்சலின்றியும் வசிக்கட்டும்! இறை சிந்தனையில் மனத்துயரங்களை அவர் கடக்கட்டும்! அவரின் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக இருக்கட்டும் என்று பலவாறாக நினைத்திருந்தாள்! மனிதர்கள் எடுக்கும் முடிவுக்கு இறைவன் வடிவம் கொடுப்பாரா என்பது போகப் போகத் தான் தெரியும்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. இன்றைய வாசகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டு போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.

    துணை இழந்தக பறவை போல ஆண்கள் அல்லாடுவது என் அப்பா விஷயத்தில் எங்கள் வீட்டிலும் நடந்தது.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய வாசகம் சற்று குழப்பமாக இருக்கிறது.

    தங்களது அப்பாவின் நிலைதான் எனக்கும், அவரது சூழல்களை நான் அறிவேன்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் தந்தையின் எண்ணம், விருப்பம் நிறைவேறியிருக்கும் என நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  4. அவரின் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக இருக்கட்டும் என்று பலவாறாக நினைத்திருந்தாள்! மனிதர்கள் எடுக்கும் முடிவுக்கு இறைவன் வடிவம் கொடுப்பாரா என்பது போகப் போகத் தான் தெரியும்!//

    இப்பகுதி அடுத்த பகுதியைப் பற்றி ஏதோ தோன்ற வைக்கிறது. உங்கள் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆனதற்கான காரணம் பற்றி முன்பு சொன்ன நினைவு இருக்கிறது. ஒரு வேளை அதைப் பற்றியோ என்று.
    வாசகம் நல்ல வாசகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆண்டவனின் எண்ணம் என்னவோ ?
    மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....