புதன், 17 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி அறுபத்தி எட்டு – அன்பும் உரிமையும்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வாழ்க்கை ஒரு பயணம் - நல்லதோ கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள்; இன்பம் வந்தால் ரசித்துக் கொண்டே செல்லுங்கள்; துன்பம் வந்தால் சகித்துக் கொள்ளுங்கள் - தேங்கி விடாதீர்கள்.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

யாரிவள்! பகுதி அறுபத்தி எட்டு அன்பும் உரிமையும்! 

புடவையே கட்டிக்க முடியல! கொஞ்ச நாளா  அப்பாவோட சட்டையும் பாவாடையுமா தான் இருக்கேன்! என்றாள் அம்மா!

 

அம்மா நான் நைட்டி எடுத்துண்டு வந்துருக்கேன்! அது ஈஸியா இருக்கும்! இல்லன்னா போன தடவ அவர் உங்கிட்ட என்ன சொன்னார்னு ஞாபகம் இருக்கா! என்றாள்.

 

மாமி! உங்களுக்கு நான் சுடிதார் வாங்கிண்டு வரட்டுமான்னு கேட்டாரே! என்று சொன்னதும் அம்மாவின் முகத்தில் புன்னகையும், வெட்கமும்..!

 

மாப்பிள்ளைட்ட சண்டை எதுவும் போட்டுட்டு வந்துட்டியா! நல்ல மனுஷன்! அம்மா தான் இவளிடம் கேட்டாள்.

 

சண்டைனா என்ன?? அப்பாவும் நீயும் அப்பப்போ டிஷ்யூம் டிஷ்யூம் போட்டுப்பீங்களே! அதுவா!!! என இவள் சிரித்துக் கொண்டே கேட்க..

 

சே..சே.. அது சண்டையெல்லாம் இல்லடா! அன்புல, உரிமைல ஏதோ ரெண்டு வார்த்தை சொல்றது தான்! இவ மேல எனக்கு என்ன கோபம் இருக்கப் போறது! என்று முந்திக் கொண்டு சொன்னார் அப்பா!

 

ம்க்கும்! இருக்கும் போதெல்லாம் விட்டுட்டார்! இப்ப என்ன அன்பு வேண்டிக் கிடக்கு! என்று முகத்தை இடித்துக் கொண்டாள் அம்மா.

 

அவ கிடக்கிறா விடு! நான் சொல்றேன் கேளுடா! 'வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் எவ்வளவு உழைச்சிருக்கா தெரியுமா! சமையலும் டாப்பா பண்ணுவா!' என்று அப்பா அம்மாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்க. 

 

எப்படியோ என் டாபிக்கை விட்டு மாத்தியாச்சு! என நினைத்துக் கொண்ட இவள். சரி சரி! உங்க சண்டையெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்! எல்லாரும் சாப்பிடலாம் வாங்கோ! 

 

அம்மா! உனக்கு ரசம் சாதத்தை நன்னா மசிச்சு கரைச்சு தரேன்! சாப்பிட்டுட்டு மாத்திரையெல்லாம் போடணும்! சரியா! நேரமாச்சு வாங்கோ! வாங்கோ! எனக்கு தூக்கம் கண்ண சுழட்டறது!

 

இப்படியாக ஒவ்வொரு நாள் பொழுதையும் ஏதோ ஒன்று சொல்லி மாற்றித் தான் கடக்க வேண்டியிருந்தது.

 

இவள் வந்த பிறகு இரண்டு முறை ரேடியோதெரபி செய்து கொண்டாள் அம்மா. அந்த குறிப்பிட்ட அறையில் கதிர்வீச்சு கொடுப்பதால் அங்கு அம்மாவைத் தவிர யாரும் இருக்கக்கூடாது! சிகிச்சையின் போது ஒன்றும் தெரிவதில்லை! வீட்டுக்கு வந்த பின் தான் அதன் விளைவுகள் தெரிய வரும். துடித்துப் போய்விடுவாள் அம்மா.

 

கடந்த சில முறைகளாக இவள் இங்கு வரும் போது சமையல் மட்டும் அம்மா தான் பண்ணித் தந்தாள்! மற்ற வீட்டு வேலைகளை இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இம்முறை அம்மாவால் எதுவும் செய்ய முடியலை! அனைத்தையும் இவளே பார்த்துக் கொண்டாள்!

 

அம்மா வாய்க்கணக்கில் கில்லாடியாச்சே! நான் வந்ததுல இருந்து பத்து நாள் கணக்கு பண்ணி இன்னும் கிளம்பலையான்னு கேட்பாளே! என்ன சொல்றதுன்னு குழப்பமாக இருந்தது! அதனால் அடுக்களை வேலைகளிலேயே முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டாள்! அனாவசியமாக அம்மாவின் முன் போய் நிற்பதை தவிர்த்து வந்தாள்!

 

இதனிடையே பாட்டி 82வது வயதில் தன் வாழ்நாளின் இறுதிகட்டத்தில் போராடிக் கொண்டிருந்தார். அம்மாவை காரில் அழைத்துச் சென்று பாட்டியை பார்த்து விட்டு வந்தார்கள். முதலில் அம்மாவா? பெண்ணா? என்பது போல் இருவருக்குமிடையே கடும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது!

 

பொதுவாக அம்மா கட்டிலில் படுத்துக் கொள்ள இவள் கீழே பாயில் படுத்துக் கொண்டிருப்பாள்! அன்று ஏனோ 'நீ என் பக்கத்துல படுத்துக்கோயேன்! என்று இவளை அழைத்தாள் அம்மா! 

 

இவளின் மீது இருக்கும் கோபமெல்லாம் போய்விட்டது போல என்று நினைத்துக் கொண்டு அம்மாவின் அருகில் படுத்து தூங்கிவிட்டாள்! சிறிது நேரத்தில் திடீரென ஒரு சப்தம்!!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

 1. இப்போது எழுதுவதே கூட சுலபமாக இருக்காது.  அப்போது இந்த நேரங்களை எப்படி கடந்தீர்களோ...

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் பேசிக் கொண்டதெல்லாம் ரசித்தாலும், ஊடே ஏதோ ஒரு சோகம். அம்மாவின் அருகில் படுத்ததும் சத்தம். மனம் ஏதோ கணக்குப் போடுகிறது......உங்களின் மன நிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்று நினைக்க முடிகிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 3. மனதுக்கு மிகவும் கஷ்டமான தருணங்கள் .

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....