செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஐம்பத்தி மூன்று – மேடும் பள்ளங்களும்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

IF YOU LIGHT A LAMP FOR SOMEONE ELSE IT WILL ALSO BRIGHTEN YOUR PATH.

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! 

 

யாரிவள்! பகுதி ஐம்பத்தி மூன்று மேடும் பள்ளங்களும்!




 

நாம் போகும் பாதையில் எப்படி மேடும் பள்ளங்களும் இருக்கோ அது போலத் தான் நம் வாழ்க்கைப் பாதையும்! அமைதியாகவும் நிம்மதியாகவும் எவ்வளவு நாட்கள் இருந்து விட முடியும் அல்லவா! ஒரு சலசலப்பு நீரோடைக்கும் உண்டு தானே! இவளின் வாழ்விலும் அவள் கடந்து வந்த பாதையில் நிறைய மேடும் பள்ளங்களும் இருந்தன.

 

அவளின் பதினைந்து வயது வரை எல்லோரையும் போல தான் சுட்டித்தனங்களுடன் கடந்தது. அதன் பிறகான வாழ்வில் நிறைய அனுபவங்களையும், இறுக்கமான சூழ்நிலைகளையும் கடக்க வேண்டியிருந்தது. அந்த பருவத்துக்குரிய ஹார்மோன் மாற்றங்களுடன் குறுகுறுப்புடன் துறுதுறுவென்று இருக்க முடியாமல் போனது காலத்தின் கட்டாயம்! மனதில் கவலைகளும், குழப்பங்களும், பொறுப்புகளும் சூழ்ந்து கொண்டது!

 

அம்மா என்றால் ருசியான கைப்பக்குவமும், உழைப்பும், ஓடி ஓடி அம்மாவிடம் வாங்கிக் கொண்ட அடிகளும், திட்டுகளும் தான் எப்போதும் நினைவுக்கு வரும்! அம்மாவிடம் முதுகில் ஒரு அடி வாங்கிக் கொண்டால் நான்கு விரல்களும் பதிந்து போயிருக்கும். அழுது கொண்டே வாசலிலேயே அமர்ந்திருப்பாள் இவள்! அப்பா வந்ததும் அதைக் காண்பிப்பாள்! 

 

ஏண்டி! குழந்தைய அடிச்ச! தோ பாரு செவந்து போயிருக்கு! தப்பு பண்ணினா எடுத்துச் சொல்லி அன்பால திருத்தணும்! உடனே கைய ஓங்கிடறதா? என்று அப்பா இவளுக்காக பரிந்து பேசி அம்மாவிடம் கோபித்துக் கொண்டதும் தான் இவளின் அழுகை நிற்கும்..🙂

 

ஆனால்! இப்போது அம்மாவின் வாழ்வும், அவள் கடந்து வந்த கடினமான பாதைகளும், வலிகளும், வேதனைகளும் என எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிந்தது இவளால்! இனி! அம்மாவை கஷ்டப்பட விடக் கூடாது! நன்றாக பார்த்துக்கணும்! என் உழைப்பில் அம்மாவை கவனித்துக் கொள்ளணும்! என்றெல்லாம் யோசித்து முடிவு செய்து கொண்டாள்!

 

கல்லூரியில் முதல் வருடத்தின் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்தாள். இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரி திறந்து விடும். இவள் இரண்டாம் வருடத்துக்குச் சென்று விடுவாள். அம்மாவுக்கும் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வருடமாகி விட்டது. செக்கப்புக்கு செல்ல வேண்டும். இவளுக்கும் செமஸ்டர் கட்டணம் செலுத்த வேண்டும் என யோசித்து அப்பா பணம் ஏற்பாடு செய்து கொண்டு வந்து பீரோவில் வைத்தார். அம்மாவிடமும் இது பற்றி சொல்லி வைத்தார்.

 

இவள் வசித்த அரசுக் குடியிருப்பில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லை. புகார் தெரிவித்தும் யாரும் வரவில்லை! மெழுகுவர்த்தியும், மண்ணெண்ணெயில் எரியும் சிம்னி விளக்கும் தான் அம்மாவுக்கும் இவளின் படிப்புக்கும் உதவின. வேர்வையே அறியாத கோவையில் வசித்ததால் விசிறி எதுவும் அப்போது தேவைப்படவில்லை! மூன்றாம் நாள் பகல் பொழுதில் மின்சார வாரியத்திலிருந்து ஊழியர்கள் வந்து லைனை பார்த்தார்கள்!

 

பூவரச மரத்தின் கிளைகள் மின்கம்பிகளில் உரசிக் கொண்டிருந்ததால் மின்சாரம் தடைபட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தார்கள். அதை சரி செய்ய வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை அங்கு சொல்லப்பட்டது! என்ன அது???

 

இன்னும் என்னென்ன பாதைகளை கடந்து வந்திருக்கிறாள் இந்த பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. சாதாரணமாக மின்வாரிய ஊழியர்களே மரக்கிளையை வெட்டி விடுவார்கள்.  ஆனால் இங்கு ஏனோ இப்படி ஒரு நிகழ்வு..  

    பதிலளிநீக்கு
  2. மின் ஊழியர்கள் அதிகமான லஞ்சம் கேட்டார்களோ... ?

    பதிலளிநீக்கு
  3. முகநூலில் படித்து விட்டதால் அடுத்து என்ன என்று தெரிந்து விடுகிறது.
    மின் ஊழியர்கள் போட்ட நிபந்தனையால் ஏற்பட்ட விளைவு !

    பதிலளிநீக்கு
  4. வெட்டுவதற்குப் பைசாவா? இல்லை நீங்களே வெட்ட வேண்டும் என்றார்களா? என்ன நிபந்தனையோ? மரங்கள் வளரும் பகுதியில் அவர்களே வந்து வெட்டிவிடுவார்களே.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சென்ற பதிவும் வாசித்துவிட்டேன். அந்தப் பருவ வயதில் இத்தனை பொறுப்பு என்பது ரெம்ப நல்ல விஷயம்.

    மின் ஊழியர்கள் நிபந்தனை அங்கு வாசித்த நினைவு. அங்கும் இங்கும் வரும் போது இங்கு பிந்தைய பகுதிகள் வருவதால் கருத்து சொல்லும் போது கொஞ்சம் குழப்பம் ஏற்படுவதுண்டு சில சமயம்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....