வியாழன், 18 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி அறுபத்தி ஒன்பது – வழிநடத்திய பாட்டி!



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீ எத்தனை புயல்களைச் சந்தித்தாய் என்பது பற்றி உலகத்துக்குக் கவலையில்லை; பத்திரமாய் கப்பலை கரை சேர்த்தாயா என்பது தான் முக்கியம் - சுவாமி விவேகானந்தர். 

 

******

 

 யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! 

 

யாரிவள்! பகுதி அறுபத்தி ஒன்பது – வழிநடத்திய பாட்டி!


 

அம்மா தான் குழந்தைகளை இவ்வுலகில் வழிநடத்துவார் இல்லையா! பாட்டியும் அவ்வாறு விண்ணுலகுக்கு பயணம் செய்து தன் மகளை வரவேற்று அரவணைத்துக் கொள்ளச் சென்று விட, பாட்டியின் கண்கள் யாருக்கேனும் பயன் தரட்டும் என கொடுக்கப்பட்டது! இனி! பாட்டி தன் கண்களின் ஒளியால் புன்னகைத்தவாறே ஆசி வழங்கிக் கொண்டிருப்பார்!

 

இங்கு அம்மா திடீரென ஒருநாள் தன் பக்கத்தில் இவளை படுக்கச் சொல்ல, இவளும் சற்றே கண் அசர இவளை எழுப்பி தொந்தரவு செய்ய வேண்டாமென தனியே பாத்ரூமுக்குச் சென்று அங்கே விழுந்து விட்டார். பின்பு அந்த நடுநிசியில் தோழியை அழைத்து ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

 

நோயின் தீவிரத்தால் எலும்புகள் எல்லாம் நொறுங்கும் வண்ணம் இருப்பதாகச் சொல்லி வீட்டுக்கு அனுப்பி விட, அன்று முதல் அம்மாவிற்கு படுக்கையிலேயே தான் எல்லாம் என ஆனது! அதன் பின் நடுநிசியில் வலிப்பு ஒருநாள் வர, நினைவுகள் தவற என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றால் பதட்டம் உண்டானது! 

 

காலில் வலி என்பாள் அம்மா. எவ்வளவு சூடாக வெந்நீர் வைத்துக் கொடுத்தாலும் சூடே இல்லை என்பாள். காலில் எதையாவது வைத்து கட்டி விடச் சொல்வாள். அது இறுக்கமே இல்லை என்பாள். இப்படி தன் இறுதி நாளை மிகவும்  அவதிப்பட்டு எண்ணிக் கொண்டிருந்தாள்!

 

ஒருநாள் அப்பாவுடன் பணிபுரியும் ஒருவர் அம்மாவைப் பார்க்க வரவே அவருடன் பேசிக் கொண்டிருந்தாள் இவள்! திடீரென 'ஏண்டி! பிள்ளை பெத்தவ இப்படி உட்காரலாமா! உள்ளே போடி! குழந்தை அங்க தனியா இருக்கு பாரு!' என்றாள் அம்மா! ஒன்றுமே புரியவில்லை இவளுக்கு! 

 

அன்று முதல் அம்மாவைப் பார்க்க வருபவர்களிடம் 'எனக்கு பேத்தி பிறந்திருக்கா! உள்ள தூளில தூங்கிண்டிருக்கா! போய் பாருங்கோ!' என்று சொல்லத் தொடங்கி விட்டாள் அம்மா! 'குழந்தைய குளிப்பாட்டு! தூளிக்கு கீழே உலக்கைய போட்டு வை!' என்று வரிசையாக ஏதேதோ அறிவுரைகள்!

 

பாட்டியின் காரியங்கள் எல்லாம் முடிந்து அம்மாவின் ப்ரியமான மன்னியும் வந்து விட, அவரிடம் 'குழந்தைக்கு புண்ணியாசனம் செய்யணும்! மாக்கோலம் போட்டு எல்லாம் ஏற்பாடு பண்ணுங்கோ மன்னி! என்னை வீல்சேர்ல உட்கார வைங்கோ! சமையல் நான் பண்ணிடறேன்! வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு கறி, சேமியா பாயசம், வடை தட்டணும்! என்று சொல்லிக் கொண்டே செல்கிறாள்.

 

இவர்களுக்கு எல்லோருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை! மன்னியும் நடுக்கூடத்தில் பெரிய கோலம் ஒன்றைப் போட அம்மாவுக்கு மகிழ்ச்சி உண்டானது! எல்லாம் சரி! குழந்தையைக் கொண்டா நான் பார்க்கணும் என்று சொன்னால் என்ன செய்வது! யாரிடம் போய் கேட்பது! என்று யோசித்துக் கொண்டிருந்தாள் இவள்!!!!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. கற்பனை உலகே நிஜம் என்று தோன்றும் அளவு நோயின் தீவிரம்.  எவ்வளவு சிரமமான நாட்கள்..

    பதிலளிநீக்கு
  2. //பாட்டியின் கண்கள் யாருக்கேனும் பயன் தரட்டும் என கொடுக்கப்பட்டது//

    சிறப்பான செயல்.

    பதிலளிநீக்கு
  3. கண் தானம் போற்றுதலுக்கு உரிய செயல்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    தொடரும் பதிவின் வலிகள் மனதை அழுத்துகிறது. படிக்கவே மிகவும் கஸ்டமாக உள்ளது. தாங்கள் எத்தனை மன கஸ்டங்களைப் பட்டு எல்லாவற்றையும் தாண்டி வந்திருக்கிறீர்கள் என உணரும் போது, உங்களின் மனோதிடமும் அழுத்தமாக இணைந்து உங்களுடன் வந்திருக்கும் என உணர முடிகிறது. அதனால் பொறுமை என்ற மனோபாவமும் உங்களிடம் தாராளமாகவே வந்திருக்கும். ஆண்டவன்தான் இவையனைத்தையும் தருகிறான் என்று நினைத்தாலும், ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது மனம் கஸ்டப்படுகிறது. உங்களின் அன்பான சுபாவங்கள் இனி அனைத்தையும் நல்லபடியாக நடத்தித் தரட்டும் என வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை பொருத்தம்

    அம்மாவின் அடுத்த ஆசை....தான் காண நினைத்தது, உங்களுக்குப் பிரசவம் பார்த்து குழந்தையைத் தன் கையால் குளிப்பாட்டி என்று பல ஆசைகள் மனதினுள் இருந்திருக்கிறது. அதுவும் நீங்கள் வந்து இறங்கியதும் சொன்னாங்க இல்லையா...ரெண்டு வருஷம் ஆகிறதுன்னு.....அதெல்லாம் மனதினுள் இருந்து நோயின் தீவிரத்தில் நினைவு தப்பி வெளி வந்திருக்கிறது. பாவம்...வாசித்து வரும் போது நான் நினைத்தவை பதிவின் இறுதி வரிகளில்...வந்துவிட்டது..கோலம்....அப்புறம் அம்மா குழந்தையைக் கேட்டால்?

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அம்மாவின் மனதிலுள்ள ஆசை அவர் நினைவில்லாமல் வெளிப்படுகிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....