வியாழன், 25 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எழுபத்தி ஆறு – முக்கியமான விஷயம்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உன்னை விட்டு விலகிச் செல்பவை எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக வழி அனுப்பி வை; இழந்ததை விட சிறப்பான ஒன்றைத் தர வாழ்க்கை காத்திருக்கிறது. 

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

யாரிவள்! பகுதி எழுபத்தி ஆறு – முக்கியமான விஷயம்! 

அம்மாவைப் போலவே அப்பாவுக்கும் மாப்பிள்ளையை விட்டுட்டு இவள் இங்கேயே இருந்துடப் போகிறாளோ என்ற எண்ணம் வந்து விட்டது! புது வீட்டில் அப்பாவுடன் கடந்து சென்றன  20 நாட்கள்! அப்பாவுக்கும் மகளுடனும், பேத்தியுடனும் பொழுதுகளை செலவிட்டது மனதிற்கு சற்று தெம்பைத் தந்திருக்கும்!

 

இவளுக்கும் தன்னால் இயன்றதை அப்பாவுக்கு உடனிருந்து செய்து கொடுத்ததும், அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்ததும் மனதிற்கு நிறைவாகவும் மகிழ்வையும் தந்தது! ஆனால் ஏனோ மனதின் ஒருபுறம் இந்த மகிழ்வு தொடரணுமே!!! அதில் எந்த வித பங்கமும் வந்துடக் கூடாது! என்று மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது! கடந்து வந்த பாதைகள் அப்படியல்லவா!

 

சரி! உன்னையும் குழந்தையும் நானே கொண்டு வந்து விட்டுட்டு வரேன்! டிக்கெட் போட்டுடலாம்! என்றார் அப்பா! 

 

சரிப்பா! போலாம்! என் கூட அங்க கொஞ்ச நாள் வந்து இருக்கலாம் சரியா! என்றாள்.

 

இங்க எனக்கு கொஞ்ச வேலையெல்லாம் இருக்குடா! அப்புறம் உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயத்தை பத்தி சொல்லணும்னு நினைச்சுண்டு இருக்கேன்! என்றார்.

 

என்னப்பா விஷயம்! சொல்லேன்! என்றாள்.

 

இல்லடா! அத அப்புறமா சொல்றேன்! என்றார் அப்பா.

 

அப்பாவுடன் டெல்லிக்கும் போயாச்சு! ஒரு வாரம் போல அங்கிருந்து விட்டு இதோ அப்பா கிளம்பும் நாளும் வந்து விட்டது! தனியாக இருக்கப் போகும் அப்பாவுக்கு சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொன்னாள்! டெல்லி வந்த பின்பும் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்னு சொன்னாரே தவிர அது என்னவென்று சொல்லவில்லை! அதைச் சொல்வதில் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது அப்பாவுக்கு!

 

ஆறு மாதங்கள் போலக் கடந்தது! இவளுக்கும் அவள் அன்றாட வேலைகளிலும், கணவரையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வதிலும் நேரங்கள் சரியாக இருந்தன. அப்பா நலமோடு தான் இருப்பார் என தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டாள். தொலைபேசியில் பேசும் போதெல்லாம் தன் வழக்கமான விசாரிப்புகளை மட்டும் தான் கேட்டுக் கொண்டார்.

 

திடீரென ஒருநாள் அப்பாவை கோவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் வரவும் இவளுக்கு எதுவும் புரியலை! என்னாச்சு அப்பாவுக்கு!!! நலமோடு தானே இருந்தார்! இவளின் நெருங்கிய தோழி தான் அப்பாவின் நிலவரத்தைக் கூறி உடனே கிளம்பி வரச் சொன்னார்! இடியே இவள் தலையில் வீழ்ந்தது போலிருந்தது!

 

கடந்து வந்த பாதைகளின் கடினத்தன்மை இப்போது தான் சற்று மாறியிருந்தது! இது என்ன கடவுளே! சோதனைகளைக் கடந்து வருகிறோம் என்பதற்காக இப்படியா!! அம்மாவை இழந்தேன் என்றால் இப்போது அப்பாவையுமா! அதுவும் அம்மாவுக்கு வந்த அதே நோயால் இழக்கப் போகிறேன்! இறுதி கட்டமாம்! வாய்ப்பே இல்லை என்பதாகத் தான் தோழி சொல்லியிருந்தார்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

 1. தொடரும் சோதனைகள்.. மனதின் வேதனைகள்.

  பதிலளிநீக்கு
 2. அப்பா சொல்ல நினைத்தது அதுவாகத்தான் இருந்திருக்கும். நீங்கள் முன்னரேயே பதிவுகள் எதிலோ சொல்லியிருந்ததாலோ என்னவோ இரண்டு மூன்று பதிவுகள் முன்னரே ஹையோ இப்பகுதி வந்துவிடக் கூடாதே என்று தோன்றிக் கொன்டே இருந்தது....வாசகமும் பூடகமாகச் சொல்லிவிட்டது,

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அப்பா தன் உடல் நிலையை பற்றி சொல்லவந்தாரோ!
  சோதனையான நேரங்கள்!

  பதிலளிநீக்கு
 4. மிகுந்த கவலையான தருணங்கள். அப்பா முன்பே வருத்தம் பற்றி தெரிந்திருந்தும் மகளை கவலைகொள்ள செய்யும் என சொல்லாது இருந்துள்ளார் போலும்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....