தொகுப்புகள்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி நாற்பத்தி ஏழு - மீண்டும் வாரணாசி - பார்க்க இன்னும் உண்டு - Bபைரவ் மந்திர் மற்றும் பிரதான படித்துறைகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“The bad news is time flies. The good news is you’re the pilot.” - Michael Altshuler.


******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்

 

பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி

 

பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்

 

பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க

 

பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்

 

பகுதி நாற்பத்தி ஒன்று - ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்

 

பகுதி நாற்பத்தி இரண்டு - அக்ஷய் வட் மற்றும் பாதாள் புரி மந்திர்

 

பகுதி நாற்பத்தி மூன்று - ப்ரயாக்ராஜ் - Bப(d)டே ஹனுமான்

 

பகுதி நாற்பத்தி நான்கு - ஷங்கர் விமான் மண்டப் - கச்சோடி சப்ஜி

 

பகுதி நாற்பத்தி ஐந்து  - மீண்டும் வாரணாசி - நகர்வலம்

 

பகுதி நாற்பத்தி ஆறு - வாராஹி அம்மன் கோவில்


 

சென்ற பகுதியில் வாராஹி அம்மன் கோவில் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இந்தப் பகுதியில் இன்னும் ஒரு கோவில் குறித்தும் சில பிரபலமான படித்துறைகள் குறித்தும் பார்க்கலாம்.  காசி நகரம் எண்ணிலா புராதனமான இடங்கள், கோவில்கள் என நிறைந்து இருக்கும் இடம்.  ஒரு நாள், இரண்டு நாள் என பயணித்து அங்கே சென்று திரும்பினால் நம்மால் எல்லா புராதனமான இடங்களையும், அங்கே இருக்கும் பிரபலமான இடங்களையும் பார்த்து விட முடியாது. இந்த முறை சற்றேறக்குறைய நான்கு நாட்கள் அங்கே இருந்தாலும், எங்களால் தரிசனம் செய்ய முடியாத கோவில்கள், மற்ற இடங்களின் பட்டியல் பெரிதாகவே இருந்தது.  அதில் முக்கியமான ஒரு கோவில் Bபைரவ் மந்திர் என்று அழைக்கப்படும் பைரவர் கோவில். நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று தான் இந்தக் கோவில்.  எனது பல வருடங்களுக்கு முந்தைய பயணம் ஒன்றில் (இந்த வலைப்பூவில் எழுதாத பயணம் ஒன்று) இந்தக் கோவிலுக்கும் சென்றதாக நினைவு.  கோவிலின் சிறப்பு என்ன பார்க்கலாம் வாருங்கள். 


 

(KH)கால் Bபைரவ் மந்திர் அல்லது Bபாட்டுக் Bபைரவ் மந்திர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்தக் கோவில் காசி நகரத்தில் இருக்கும் கோவில்களில் பிரதானமான ஒன்று - காசி விஷ்வநாத் கோவில் செல்லும் அனைவரும் இந்த Bபைரவர் கோவிலுக்கும் சென்று வருவது வழக்கம்.  காசி நகரின் பிரபலமான சிறு சந்துகளில் நுழைந்து சென்று வர வேண்டிய இடம். போகும்போதே கடைக்காரர்களிடம் கேட்டுக் கொண்டே செல்வது நல்லது. சிவபெருமானின் ஒரு அவதாரமாக இந்த Bபைரவரைச் சொல்வதுண்டு.  காசி நகரின் விஷ்வேஷ்வர்கஞ்ச் என்ற பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் காலை நேரத்தில் 05.00 மணி முதல் மதியம் 01.30 வரையிலும், மாலை நேரம் 04.30 மணியிலிருந்து இரவு 09.30 மணி வரையும் திறந்திருக்கும்.  பிறப்பு இறப்பு போன்ற லோக விஷயங்களுக்கு அப்பாற்பட்டவர் இந்த கால Bபைரவர். 

 

கால Bபைரவர் குறித்த கதை: மகாதேவர் என்று போற்றப்படும் சிவபெருமான், பிரம்மாவை தண்டிக்க வேண்டி, கால Bபைரவராக தோன்றினார். பிரம்மதேவர் கர்வம் கொண்டு பிரபஞ்சத்தைப் படைத்தவர் என்பதில் பெருமிதம் கொண்டார். சிவபெருமான் கால Bபைரவராக தோன்றி பிரம்மாவுக்கு பாடம் புகட்ட ஏற்படுத்திக் கொண்ட அவதாரம் கால Bபைரவர் அவதாரம். பிரம்மாவுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தன.  பிரம்ம தேவரின் அஹம்பாவத்திற்கு பாடம் புகட்ட, கால Bபைரவர் உருவெடுத்த சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை தனது திரிசூலத்தால் வெட்டினார். சிவபெருமானின் இந்த செயல் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அவர் கைகளில் ஒட்டிக்கொண்ட கபாலம் விடுபடவே இல்லை. அவர் காசியை அடையும் வரை பிக்ஷாண்டவர் கோலத்தில் கபாலத்துடன்  அலைய வேண்டியிருந்தது. காசி நகருக்கு வந்த சமயம் கால Bபைரவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி, அவர் கையில் இருந்த கபாலமும் நீங்கியது என்று கதை. இந்தக் கதை நமக்குச் சொல்ல வருவது ஒருவரின் வீழ்ச்சிக்கு ஆணவம், கர்வம் போன்ற தீமைகள் வழிவகுக்கிறது என்பது தான். 


 

காசிக்கு வருபவர்கள் அங்கே தங்குவதற்கும், காசியை விட்டு வெளியேறுவதற்கும் கால Bபைரவரின் அனுமதி பெற வேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுவது வழக்கம். அதனால் காசி நகருக்குச் சென்றால், நீங்களும் இந்த கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வாருங்கள். எப்போதும் ஒலித்துக்  கொண்டிருக்கும் மணிகளின் நாதம், பூஜைகள் என மிகவும் சிறப்பான கோவில் இந்த கோவில்.  சரி இந்தக் கோவில் குறித்துப் பார்த்தாயிற்று - அடுத்தது என்ன?  இங்கே இருக்கும் படித்துறைகள் தான். படித்துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை. இங்கே மொத்தம் 84 படித்துறைகள் இருப்பதாக இணையத்தில் படித்திருக்கிறேன்.  ஒரு வாரணாசி பயணத்தில், படகில் அமர்ந்து பல படித்துறைகளை பார்த்தவாறே சென்றதுண்டு. ஒரு சில படித்துறைகளுக்கு நேரே சென்றதும் உண்டு.  அவற்றில் முக்கியமாக சொல்லப்படும் படித்துறைகள் மணிகர்ணிகா படித்துறை மற்றும் ஹரிஷ்சந்த்ர படித்துறை.  நாள் முழுவதும் இறந்தவர்களின் பூத உடல்கள் வந்து கொண்டே இருக்க தொடர்ந்து சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கும் படித்துறை இவை.  

 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டது, காசி என்னும் வாரணாசி நகரம். இந்நகரத்தை சிவபெருமானே உருவாக்கினார் என்றும் சொல்வதுண்டு. வருணா-ஆசி என்னும் இரண்டு நதிகள் சங்கமமாகும் இடம் என்பதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டதாம். காசி என்றால் ஒளி என்றும் கூட ஒரு அர்த்தம். நாம் வாழும் போது மட்டுமில்லாமல் நாம் இறந்த பின்னும் பிறவா நிலை என்னும் முக்தியை அளிக்கும் நகரமாக அமைந்துள்ளது. காசியில் இறந்தால் சொர்க்கம் செல்வார்கள். அதனால் காசி நகரில் இறக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும்போது சிவபெருமானே முக்தி அளிக்கிறார் என்பது நம்பிக்கை. அதனால் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வயதான பலர் இங்கே வந்து இறக்கும் வரை தங்கிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் கூட அப்படி வரும் பலர் உண்டு. குறிப்பாக வட இந்திய கிராமங்களிலிருந்து இங்கே மேள தளத்துடன் இங்கே வந்து தங்கிவிடுபவர்கள் குறித்து கேட்டதுண்டு.  

 

அதனால் உங்கள் காசி/வாரணாசி பயணத்தில் நேரம் எடுத்து நீங்களும் இந்த பதிவில் சொன்ன கால Bபைரவர் கோவில் மற்றும் முடிந்த அளவு படித்துறைகளையும் பார்த்து வாருங்கள்.  அது தவிர இன்னும் நிறைய கோவில்கள் குறித்தும் இந்தத் தொடரில் சொல்லி இருப்பதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  காசி அனைவரும் சென்று வர வேண்டிய ஒரு இடம் என்பதில் ஐயமில்லை. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

6 கருத்துகள்:

  1. சென்றேனா இல்லையா என்று கூட நினைவில்லை.  அருமையான விவரங்கள்.  அகம்பாவம் வந்தால் பிரம்மாவே ஆயினும் அழிவு நிச்சயம் என்பது போல சிவனே ஆயினும் செய்யும் செயலின் தாக்கம் அவருக்கும் இருக்கும் என்பதும் தெரிகிறது. (கையில் கபாலம் ஒட்டிக்கொள்வது)

    பதிலளிநீக்கு
  2. பைரவர் கோவில் போய் இருக்கிறோம்.வாராஹி அம்மன் பார்த்த நினைவு இல்லை.
    படங்கள் எல்லாம் மிக அருமை. முதன் முதலில் பைரவர் கோவில் போய் இருந்த போது இந்த பைரவர் முகம் வாங்கினோம்.

    //காசி நகரில் இறக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும்போது சிவபெருமானே முக்தி அளிக்கிறார் என்பது நம்பிக்கை.//

    அங்கு போக முடையவில்லை என்றாலும் காசி காசி என்று சொல்லி கொண்டு இருந்தாலே முக்தி கிடைக்கும் என்பார்கள். அங்கு இறப்பது சிறப்புதான். கிடைக்க் வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  3. காலபைரவர் கோவிலுக்கு இந்தமுறை இருமுறை சென்றேன். இரண்டாவது தடவை சென்றிருந்தபோது காசிக்கயிறு கட்டி, கையில் வைத்திருந்த சிறிய கட்டையால் முதுகில் மந்மிரம் சொல்லி அடித்து, நூறு ரூபாயை வாங்கிக்கொண்டார் பிராகாரத்தில் இருந்த பண்டா.

    போட்டில் மணிகர்ணிகா வரை அழைத்துச் சென்றார்கள். அதற்குமேல் ஆழம் அதிகம், போவதில்லை என்றார்கள். இந்த மாதிரி நான்கு முறை படகுப் பயணம் மேற்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. காலபைரவர் கோயில் பற்றிய புராணக் கதை அருமை. ஹனுமன் கூட இங்கு வந்து சிவலிங்கத்தை ராமருக்காக எடுத்துச் செல்ல வந்த போது காலபைரவர் அனுமதி கேட்காமல் எடுக்க முனைந்ததால் எடுத்துச் செல்ல இயலவில்லை என்ற கதையும் வாசித்த நினைவு உண்டு!.

    தகவல்கள் சிறப்பு.

    //இந்தக் கதை நமக்குச் சொல்ல வருவது ஒருவரின் வீழ்ச்சிக்கு ஆணவம், கர்வம் போன்ற தீமைகள் வழிவகுக்கிறது என்பது தான். //

    பிரம்மாவிற்கு இது..ஆனால் தலையைக் கொய்த சிவபெருமானுக்கும் தோஷம் ஏற்படுகிறதே! தவறு என்று....அப்ப ஒவ்வொருவர் செயலுக்கும் அதற்கு ஏற்ப தண்டனை உண்டு என்பதாகிறது இல்லையா..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மணிகர்ணிகா பெயர் அஅழகான பெயர். இப்பெயரைக் கேட்டாலு வாசித்தால் உடனே ராயசெல்லப்பா சார்தான் நினைவுக்கு வருவார். அவர் மணிகர்ணிகா இன்று வரமாட்டாள் எனும் அவரது நாவல்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....