செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி ஐந்து - அயோத்யா ஜி - ராஜ் (dh)த்வார் மந்திர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும் நம் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்.  நம் திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். 

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு



ராஜ் (dh)த்வார் மந்திர்….

 

அயோத்யா ஜி நகரில் ஓரிரவு நல்ல உறக்கம்.  முதல் நாள் பார்த்த இடங்கள் குறித்த நினைவுகளோடு உறங்கிப் போன நான், அடுத்த நாள் காலையில் எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு, மீண்டும் ஒரு நகர் வலம் வந்து விடுபட்ட சில இடங்களை பார்க்க, காலையிலேயே தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு விட்டோம்.  காலை நேரத்திலேயே பக்தர்கள் வெளி ஊர்களிலிருந்து வந்த வண்ணமே இருந்தார்கள்.  தங்குமிடத்திலிருந்து பிரதான சாலைக்கு வந்த நாங்கள் ஹனுமான் Gகடி வரை நடப்பதற்கு பதிலாக ஒரு பேட்டரி ரிக்ஷாவில் அமர்ந்து செல்ல முடிவெடுத்தோம்.  அப்படிச் சென்ற   இ-ரிக்ஷாவில் கிடைத்த அனுபவம் பல விஷயங்களை யோசிக்க வைத்தது.  



உழைப்பாளியான முதியவர்….

வாழ்வாதாரம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று.... ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையை சிறப்பாக நடத்த உழைக்க வேண்டியிருக்கிறது இல்லையா.... படத்தில் இருக்கும் முதியவர் அயோத்யா நகரில் நாங்கள் இ-ரிக்ஷாவில் பயணித்த போது எங்களுடன் வந்தார். எப்படியும் எண்பது வயதுக்கு மேல் இருக்கலாம்.... அவரைப் பார்க்கும்போதே அவருடன் பேசத் தோன்றியது. கையில் சிறு மூட்டையுடன் எங்கே செல்கிறீர்கள்? எனக் கேட்க, மூட்டையில் பூ இருக்கிறது என்றும் கோவில் அருகே விற்பனை செய்யப் போகிறேன் என்றும் சொன்னார். அதிகம் பேச அவர் விரும்பவில்லை என்று தோன்றவே, எங்களுக்குள் அவரது உழைப்பு குறித்து பேசிக் கொண்டோம். 


தள்ளாத வயதிலும் கூட, தன்னால் இயன்ற வேலையைச் செய்து தனக்கான சம்பாத்தியத்தில் வாழ நினைக்கும் அவரை எப்படி பாராட்டுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் மட்டுமல்ல நாங்களும் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. பொறுமையாக இறங்கி, வண்டிச் சத்தம் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு, பொறுமையாக, ஆனால் திடம் கொண்டு போராடும் எண்ணத்துடன் நடந்து சென்றதைப் பார்த்தபோது, சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட சுணங்கிவிடும் நம் போக்கு எவ்வளவு தேவையற்ற ஒன்று எனத் தோன்றியது.



(KH)குர்ச்சன் லஸ்ஸி கடை…

 

இறங்கிய இடத்திலிருந்து சிறிது உள்ளே நடக்க, முந்தைய பதிவு ஒன்றில் பார்த்த ஹனுமான் Gகடிக்கு அருகே வந்திருந்தோம்.  அங்கே இருந்த கடைகளில் ஒன்றில் தேநீரும் கொஞ்சம் பிஸ்கெட்டுகளும் சாப்பிட்டோம்.  வடக்கே Biscuit என ஆங்கிலத்தில் எழுதுவதை நம்மைப் போல பிஸ்கெட் என படிப்பதில்லை.  அவர்கள் பிஸ்கூட் என்றே படிக்கிறார்கள்/ சொல்கிறார்கள். இப்படி பல சொற்கள் உண்டு! இப்படி பல சொற்களை முதல் முறை கேட்டு குழப்பம் அடைந்தது உண்டு.  முந்தைய பதிவொன்றில் சொன்ன லஸ்ஸி கடை (KHகுர்ச்சன் லஸ்ஸி என்பது அந்த லஸ்ஸியின் பெயர் - இதுவும் அந்தப் பதிவில் சொல்ல விட்டுப்போன விஷயம்!) தாண்டிச் செல்லும்போது, அன்றைக்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்ததுவிட்டு திரும்பும் சமயம் மீண்டும் ஒரு KHகுர்ச்சன் லஸ்ஸி குடித்துவிட வேண்டும் என மனதில் முடிச்சு போட்டு வைத்துக் கொண்டேன். 


ராஜ் (dh)த்வார் மந்திர்….


கோவில் வளாகத்தில் நான்….

தேநீர் அருந்திய பிறகு நாங்கள் சென்ற இடம் - அயோத்யா ஜி நகரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் ஒரு மேட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் ராஜ் (dh)த்வார் மந்திர்.  மிகவும் பழமையான கோவில் என்றாலும் இப்போது அத்தனை பக்தர்கள் கூட்டம் இங்கே வருவதில்லை.  வருடத்தில் ஒரு முறை இந்தக் கோவில் சார்பாக நடத்தப்படும் திருவிழா சமயத்தில் மட்டும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிகிறது. நாங்கள் சென்ற காலை வேளையில் கோவில் திறந்திருக்கவில்லை.  வெளியே நின்று சில பல நிழற்படங்களை எடுத்துக் கொண்டிருந்த போது கோவில் வளாகத்திற்குள்ளேயே இருந்த அறைகளிலிருந்து ஒரு நபர் வந்து கோவில் கதவுகளைத் திறந்து விட்டார்.  கொஞ்சம் பேசலாம் எனப் பார்த்தால் ஒன்றும் அதிகம் பேச விரும்பாமல் கேட்ட கேள்விக்கு ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பதில் வந்தது.  ஒரு காலத்தில் கோபுரம் முழுவதும் தங்கத்தில் இருந்ததாம் - பிறகு எல்லாம் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.  தற்போது கலசங்கள் மட்டுமே தங்கத்தில் இருக்கிறது.  




ராம் தர்பார் மற்றும் ஹனுமன் சன்னதிகள்….


வானரம் - சிறு காணொளி….


உள்ளே இருக்கும் பெரிய அறையில் இருந்த ராம் தர்பார் மற்றும் ஹனுமன் சன்னதிகளில் பிரார்த்தனை செய்து கொண்டு வெளியே வந்தோம்.  அதன் பக்க வாட்டில் ஒரு பூங்கா - அந்த வழியே சென்றால் இன்னும் சில இடங்களுக்குச் செல்ல முடியும் என்று சொன்னதால் அது வழி நடக்கத் தொடங்கினோம்.  சற்றே மேடான பகுதியில் ஒரு வானரம் ஒய்யாரமாக படுத்திருந்தது.  அந்தப் பக்கம் நடந்து வந்த எங்களை அசிரத்தையாக ஒரு பார்வை - “இவன் என் இனம்!” என்று நினைத்தபடி மீண்டும் தனது ஓய்வினைத் தொடர்ந்ததோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! அவர் ஒய்யாரமாக படுத்திருந்ததை எனது அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டு (கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடுங்கடே! என்று அந்த வானரம் நினைத்திருக்கக் கூடும்!) தொடர்ந்து நடந்து, நாங்கள் சென்ற இடம் என்ன? அது குறித்த தகவல்கள் என்ன போன்றவற்றை வரும் பகுதியில் சொல்கிறேன். அயோத்யா ஜி குறித்த மேலும் தகவல்கள் வரும் பதிவுகளில் வரும். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 



12 கருத்துகள்:

  1. முழுவதும் தங்கமாக ஜொலித்த நாட்களில் கோவில் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்.  காலப்போக்கில் மவுசு குறைந்துவிட்டது போலும்.

    பதிலளிநீக்கு
  2. அருமை படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. ஹயோ இந்தக் கோயில் ரொம்ப அழகாக இருக்கிறது. முன்பே கோயிலாக இருந்திருக்குமோ அல்லது தசரதர் குடும்பம் வம்சாவளி வசித்திருக்கும் மாளிகையாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது பின்னர் கோயிலாக மாறியிருக்கும் என்று. ஆனால் மிகவும் பழமைவாய்ந்த அழகுமிக்கதாக இருக்கு

    ஆஹா கோபுரம் முழுவதும் தங்கம்னா ஊர் முழுக்க ஜொலிப்பா தெரிஞ்சுருக்கும்!

    ஊர் மிகவும் ஈர்க்கிறது. அல்லது உங்கள் விவரணம் ஈர்க்கும் அளவு இருக்கிறது வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. காணொளி பார்த்து சிரித்துவிட்டேன். தலையைத் தூட்ட்கிப் பார்த்துவிட்டு மீண்டும் படுக்கிறார். முதல்ல நினைச்சேன் தலையை தூக்கிப் பார்த்து பல்லைக்காட்டி ர்ர்ர்ர்ர் என்று கோபப்பட்டிருப்பாரோ தூங்கற டைம்ல யாரடா அது படம் புடிக்கிறதுன்னு,,,,,நல்ல வேளை திரும்ப படுத்துவிட்டார்!!!! ரொம்ப அசதி போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வயதானவர் உழைப்பது ஒரு விதத்தில் நல்லதுதான் ஜி. அதாவது அவருக்கு வருமானம் தேவை பாவம்...யாரையேனும் சார்ந்திருந்தால் பேச்சுக் கேட்க வேண்டியிருக்கும்...இன்னொன்று வயதாகும் போது சும்மா இருந்தால் மனதும் வேண்டாததை அசை போடும் idle mind is devil's paradise.. எனவே முடிந்த வரை வேலை செய்வது நலல்து என்றே எனக்குப் படுகிறது. நாம் தான் நினைக்கிறோம் 50...60 ஆகும் பொது ரிட்டையர்மென்ட் என்று....அதன் பின்னும் பணத்திற்காக இல்லை என்றாலும், நம் உடம்பு நன்றாக இருந்தால் உடல் மன ஆரோக்கியத்திற்காக நாம் ஏதேனும் விதத்தில் நேரத்தை நல்லவிதமாகப் பயன்படுத்தலாம் என்று தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதானவர் should keep him/herself busy. இல்லைனா, மத்தவங்க என்ன பண்ணறாங்கன்னு பார்த்து, அதில் உள்ள குறைகள் தெரியும், தேவையில்லாமல் பேசணும். யாருமே தங்கள் நேரத்தை பிஸியாக வைத்துக்கொண்டால் பிரச்சனைகள் குறைவு

      நீக்கு
  6. இந்த மாதிரி கோவில்கள் இடங்கள், 4 நூற்றாண்டுக்கு முன்புதான் கட்டியிருப்பார்கள். அங்கேயே பழங்காலத்தில் அதே இடங்கள் இருந்தன என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....