வியாழன், 2 பிப்ரவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி நான்கு - அயோத்யா ஜி - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

FAITH - IT DOES NOT MAKE THINGS EASY; IT MAKES THEM POSSIBLE!

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்






Bபேல் PபThத்தர்...



 

Bபேல் PபThத்தர்... இந்த பெயரில் விற்பனை செய்யப்படும் வில்வ மரத்தின் பழம் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பானம் உண்டு. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும் பானம் இது. வில்வ பழத்தின் கடினமான மேல் பாகத்தை உடைத்து உள்ளே இரும் சதைப் பகுதியை எடுத்து பிழிந்து மசாலா பொடி, உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து பானமாகத் தருவார்கள். கோடை நாட்களில் இந்த பானம் தினம் தினம் அருந்தலாம். தினம் வேண்டாம் என்றாலும் வாரத்திற்கு ஒரு நாளாவது இந்த பானத்தை அருந்துவது நல்லது. வட இந்தியாவில் நிறைய ஊர்களில், சாலையோரங்களில் தள்ளு வண்டிகளில் இந்த  பானம் விற்பனை செய்வார்கள். அயோத்யா ஜி நகரில் சரயு நதிக்கரையில் மாலை நேரம் இந்த பானம் அருந்தினோம்.  பெரிதாக சுவை இருப்பதாகச் சொல்ல முடியாது - அதுவும் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிட்டால் சுவை அத்தனை இருக்காது. தில்லியிலும் சுவைத்து இருக்கிறேன் என்றாலும் இங்கே அருந்திய பானத்தின் சுவை வித்தியாசமாக இருந்தது. நம் ஊரில் இந்த மாதிரி பானம் கிடைப்பது அரிது என்றாலும் வில்வப் பழம் கிடைத்தால் வீட்டிலேயே கூட நீங்கள் தயாரிக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் சுவைக்கலாமே! காணொளியில் பார்த்தால் அந்த உழைப்பாளி எவ்வளவு மரியாதையாக அளித்தார் என்பது தெரியும். ஒரு டம்ளர் விலை இருபது ரூபாய் மட்டுமே!


 

அயோத்யா ஜி நகரில் வந்து இறங்கியவுடன் மதியம் சாப்பிட்ட உணவு எங்களுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இல்லை.  இரவு ஒழுங்காக சாப்பிடலாம் என நினைத்து காவலுக்கு இருந்த ஒரு காவல்துறை அலுவலரிடம் நல்ல உணவு எங்கே கிடைக்கும் என்று கேட்க, அவர் சொன்ன இடம், “சந்திரா மார்வாடி Bபோஜனாலயா” எனும் உணவகம்.  சரயு நதியிலிருந்து சில நிமிடங்கள் நடந்தால் வந்து விடும் என்று சொல்லி அனுப்பினார்.  சரி என நடக்க, சிறிது நடந்த பிறகு காவல்துறை நண்பர் சொன்ன உணவகம் இருந்தது - ஆனால் அதில் ஒரு குழப்பம் - அருகருகே ஒரே பெயரில் இரண்டு உணவகங்கள்! ஒரு காலத்தில் ஒரே உணவகமாக இருந்திருக்க வேண்டும், பிறகு இரண்டாக பிரிந்திருக்கலாம்! சொத்து பிரிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என நினைத்தபடியே இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உள்ளே சென்றோம்.  



thதாலி...

 

ரொட்டி, சாதம், dhதால், சப்ஜி, தயிர் என மூன்று பேருக்குமாக தனித்தனியாக சொல்லாமல் “thதாலி” என அழைக்கப்படும் முழு சாப்பாடு இரண்டு பேருக்கு சொல்லி விட்டோம்.  மூன்றாமவருக்கு ஒரு பிளேட் சாதம் மற்றும் தயிர்! அந்த உணவகத்தில் இருக்கும் இரண்டு சப்ஜி, தயிர், dhதால், ரொட்டிகள் என வரிசையாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  உணவு சுவை ஓஹோ என்று சொல்ல முடியாது என்றாலும், மதியம் சாப்பிட்டதைவிட நன்றாகவே இருந்தது. விளையும் அத்தனை அதிகமில்லை.  மதியம் சாப்பிட்ட உணவை விட நன்றாக இருந்தது என்பதால் மூன்று ரொட்டி, கொஞ்சம் சாதம் என அனைத்தும் உள்ளே தள்ளியபிறகு அதற்கான பணத்தையும் கொடுத்து, அங்கேயிருந்து புறப்பட்டோம். இன்னும் ஒரு விஷயம் - இங்கேயும் ஆந்திர மாநிலத்தவர்கள் அதிகம் வருகிறார்கள் என்பதால் மார்வாடி உணவகமாக இருந்தாலும், தகவல் பலகையில் ஆந்திரா மீல்ஸ்! என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்! நல்ல வியாபார தந்திரம்!

 

 

வெளியே பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.  நாள் முழுவதும் சாலைகளில் பக்தர்கள் நடந்த வண்ணமே இருக்கிறார்கள்.  சிறிது தூரம் கிடைத்த தெருவில் வேடிக்கை பார்த்தபடியே நடந்த பிறகு, எங்க மூவருக்குமே ஓய்வு தேவை என்று தோன்றியதால், அந்தப் பக்கம் வந்த பேட்டரி ரிக்ஷாவில் அமர்ந்து எங்கள் தங்குமிடம் அருகே வந்து இறங்கிக் கொண்டோம்.  இரவு நேரத்திலேயே அடுத்த நாள் காலி செய்து விடுவோம் என்பதையும் தங்குமிட உரிமையாளர்களிடம் சொல்லி விட்டு அறைக்குச் சென்று படுத்தது தான் தெரியும்.  சில நிமிடங்கள் அன்றைய தினத்தின் நிகழ்வுகளையும் அனுபவங்களையும் சிந்தித்துக் கொண்டே இருந்த நான் எப்போது தூங்கினேன் எனது தெரியாது.  நல்ல உறக்கம்.  மனதில் இராமபிரானை அவனது ஊரில், அவனது சன்னதியில் தரிசித்த நிம்மதியோடு நல்ல உறக்கம் வாய்த்தது.  நல்ல உறக்கம் வந்தால் அடுத்த நாள் பயணத்தில் இன்னும் அதிகமான இடங்களை பார்க்க முடியும் என்பது கூடுதல் வசதி. 

 

எங்கள் பயணத்தின் அடுத்த நாள் எப்படி இருந்தது, அன்றைய தினம் பார்த்த இடங்கள் என்ன போன்ற தகவல்களை வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  அயோத்யா ஜி குறித்த மேலும் தகவல்கள் வரும் பதிவுகளில் வரும். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

19 கருத்துகள்:

  1. வில்வ மரத்தின் பழம் கொண்டு வீட்டில் எப்போதோ பானம்  தயாரித்ததுண்டு.  அதன் வாசனை ஒரு மாதிரி இருக்கும் - நெயில் பாலிஷ் மாதிரி!  ஹோட்டல் போன்ற தோற்றத்தில் உணவகத்தை நான் எங்கள் பயணத்தில் பார்க்கவில்லை- காட்டப்படவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தமிழகத்திலும் இந்த வில்வ பழத்தினை சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றாலும் வடக்கில் இதன் பயன்பாடு அதிகம் ஸ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      உங்கள் பயணத்தில் ஹோட்டல் கண்ணில் காட்டப்படவில்லை - 🙂ஹாஹா… ஓர் பயண ஏற்பாட்டாளர் மூலம் பயணிக்கும்போது இப்படி சில பிரச்சனைகள் உண்டு. அவர்களுக்கு எது சௌகர்யமோ அதை மட்டுமே காண்பிப்பார்கள்.

      நீக்கு
  2. அது முலாம்பழம் மாதிரி இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முலாம் பழம் அல்ல கில்லர்ஜி - வில்வம் தான். இரண்டும் ஒரு போலவே இருக்கும். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. வில்வம் பழ ரசம் வீட்டில் செய்ததுண்டு, ஆனால் இங்கு வந்த பிறகு கிடைப்பதில்லை. அது வித்தியாசமான சுவையோடு இருக்கும்...

    காணொளியில் ப்ழரசம் விற்பவர் மிகவும் மரியாதையுடன் இடக்கையை வலக்கை முட்டியில் வைத்துக் கொண்டு நீட்டுகிறாரே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கில் நிறையவே கிடைக்கிறது - குறிப்பாக கோடை நாட்களில் கீதா ஜி. சுவை பலருக்கும் பிடிப்பதில்லை.

      ஆமாம் மரியாதையாகவே தருகிறார். பலர் இப்படி இருப்பதை கவனித்து இருக்கிறேன்.

      தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  4. சாப்பாடு தட்டில் பார்க்க நன்றாக மூன்று சப்ஜியுடன் இருக்கிறது. சுவை பற்றி நீங்க சொல்லிட்டீங்க!!

    ஊரே கல கலன்னு இருக்கு...

    அடுத்த இடங்கள் பற்றி அறிய தொடர்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாடு தட்டில் நன்றாகவே இருக்கிறது. இப்படி வைப்பதும் ஒரு கலை தானே கீதா ஜி. பலருக்கும் வருவதில்லை!

      ஊர் எப்போதும் கலகல தான். தொடர்ந்து வாசித்து வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. விளாம் பழமும் வில்வ பழமும் ஒன்றா? விளாம் பழம் சாப்பிட்டிருக்கிறேன் திருச்சியில். அது போலத்தான் இருந்தாலும் கொஞ்சம் பெரிய சைசில் இருக்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளாம்பழம் மற்றும் வில்வப்பழம் வேறு வேறு ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. இரண்டின் சுவையும் வித்தியாசம்.

      தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  7. வில்வம் பழம் கசப்பாக இருக்கும் வெல்லம் அல்லது சீனி கலந்து சாப்பிடுவார்கள். பலவித உடல் நோய்களுக்கும் நல்லது என்பார்கள்.

    சுற்றுப் பயணத்தில் நல்ல சாப்பாடு கிடைப்பதே தவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்வம் பழம் சுவை சிலருக்கு பிடிப்பதில்லை. சீனி அல்லது வெல்லம் சேர்ப்பது நல்லதே.

      கிடைத்த சாப்பாடு சாப்பிடுவது - அதுவும் அந்த ஊர் சாப்பாடே சாப்பிடுவது நல்லது.

      தங்கள் அன்பிற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  8. வில்வமா இல்லை விளாம்பழமா? நான் விளாம்பழங்களைத்தான் நைமிசாரண்யம் மற்றும் அயோத்தியில் பார்த்திருக்கிறேன் (அதிலும் கயாவில் விளாம்பழத்தை விட்ட பிறகு, அதே பயணத்தில் நைமிசாரண்யம் வந்தால் 10 ரூபாய்க்கு பெரிய விளாம்பழங்கள். எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் உள்ளே உள்ளதை வெல்லம் கலந்து சாப்பிட்டால் யம்மிதான்). வில்வம் பழத்தை இப்படிச் செய்து பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்லை.

    எவ்வளவு பவ்யமாக, மரியாதையோடு அவர் அந்த ஜூஸை வாடிக்கையாளருக்கு அளிக்கிறார். அந்த ஆட்டிடியூட்...பாராட்டத்தக்கது

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....