செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா - இரயில் பயணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

EVERYTHING IS TEMPORARY - THOUGHTS, EMOTION, PEOPLE AND SCENERY; DO NOT BECOME ATTACHED; JUST FLOW WITH IT.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்



இரயில்…  படம் இணையத்திலிருந்து…

 

சென்ற பகுதியில் ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி என்ற சிவன் கோவில் குறித்தும் ராமர் படித்துறை குறித்தும் பார்த்தோம்.  படித்துறையில் சில நிமிடங்கள் அமர்ந்து சரயு நதியின் அழகை ரசித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  அயோத்யா ஜி நகரில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்களென நிறையவே இருந்தாலும், நாங்கள் ஓர் இரவு மட்டுமே தங்க முடிவு செய்திருந்ததால், அயோத்யாஜி வந்த அன்றே, அடுத்த நாள் அடுத்த நதிக்கரை நகரம் நோக்கிப் பயணிக்க இரயிலில் முன்பதிவு செய்துவிட்டோம்.  கங்கா-சட்லுஜ்  விரைவு வண்டி (13308) - பஞ்சாபில் இருக்கும் firozpur-லிருந்து ஜார்க்கண்டில் இருக்கும் Dhanbad வரை செல்லும் விரைவு வண்டி அது - அதில் அயோத்யாவில் மதியம் 01.40 மணிக்கு ஏறிக்கொண்டு இரவு வாரணாசி ஜங்க்ஷனில் இறங்கிக் கொள்ள திட்டம்.  அதனால் படித்துறையிலிருந்து புறப்பட்டு நேராக தங்குமிடம் வந்து அறையைக் காலி செய்து கொண்டு புறப்பட தங்குமிடம் நோக்கி பேட்டரி ரிக்ஷாவில் பயணித்தோம்.  அப்படி பயணித்தபோது வழியில் பார்த்த ஒரு விஷயம் குறித்து தான் இந்தப் பகுதியில் எழுத இருக்கிறேன்.



நாட்டு மருந்துக் கடை - கவனிக்க கீழே உள்ள படங்கள்…
   

வட இந்திய நகரங்கள் அனைத்திலும் Khகாந்தானி DHதவா Khகானா என்று உள்ளூர் மொழியான ஹிந்தியில் அழைக்கப்படும் நாட்டு வைத்தியர்களின் மருந்துக் கடைகள் நிறைய பார்க்க முடியும். அவர்களது வைத்தியத்தில் குணம் அடைந்தவர்கள் என பெரிய பட்டியலே எழுதி வைத்து இருப்பார்கள். எழுதி வைத்து இருப்பது தவிர நிறைய பிரபலங்கள் - குறிப்பாக சினிமா நடிகர்கள், அரசியல்வா(வியா)திகள் போன்றவர்களுடன் இந்த வைத்தியர்கள் உடன் இருப்பதாக படங்கள் மாட்டி வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக சல்மான் கான், ஷாரூக் கான் போன்றவர்களுடன் இருப்பதான படங்கள் ஒவ்வொரு நாட்டு வைத்தியரின் கொட்டகையிலும் நிச்சயம் இருக்கும்.



நாட்டு மருந்து பொருட்கள்…
 

இந்த மாதிரி நாட்டு வைத்தியர்கள் ஒரே இடத்தில் கடை விரிப்பதில்லை! ஊர் ஊராக சுற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரு மாதத்திற்கு மேல் எந்த ஊரிலும் இருப்பதில்லை. ஒரு பெரிய வண்டியில் (வாகனம்) தங்களது மருந்துகள், தங்குவதற்கான கொட்டகைகள் என அனைத்தும் வைத்திருப்பார்கள். ஒரு ஊரில் கொட்டகை அமைத்து ஒரு மாதம் இருந்தால் பிறகு அங்கிருந்து புறப்பட்டு அடுத்த ஊரில் கொட்டகை! நாடோடி வாழ்க்கை தான்... குடும்பமே மொத்தமாக பயணிக்கும்... ஒரு முறை அவர்களிடம் மருந்து வாங்குவது போலச் சென்று அவர்களது அனுபவங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுவதுண்டு! ஆனாலும் ஏதாவது ஒரு மருந்தை நம் தலையில் கட்டி விடுவார்களோ என்று பயந்து கொண்டு முயன்றது இல்லை! 🙂

 

தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அவர்களது மருந்துகளை எடுத்துக் கொண்டால் குணமாகும் வியாதிகள் குறித்தும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். விதம் விதமான மூலிகைகள், மரப் பட்டைகள், இலைகள் என சொல்லி அவை மூலம் குணப்படுத்தும் வியாதிகள் குறித்தும் சொல்வார்கள். பல வண்ணங்களில் மருந்துகளையும் திரவங்களையும்  கொடுப்பார்கள். அவர்களை நம்பி மருந்து வாங்கிச் செல்பவர்களை பார்த்தது உண்டு. நம்பிக்கை இருந்தால் எதையும் வாங்கிக் கொள்வார்கள்! நம்பிக்கை இருந்தால் எதையும் விற்கவும் முடியும்!  சரி அவர்கள் மருந்து மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? பரவாயில்லை - அவர்கள் மருந்து குறித்து அவர்கள் சொல்வதையாவது ரசிக்கலாம்! ஹிந்தியில் அவர்கள் சொல்லும் சில வாசகங்கள் கேட்டு இந்தப் பயணத்தில் இருந்த எங்கள் மூவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு! ஒரு மாதிரி கீழே!

 

வாயுத்தொல்லை இருக்கிறதா? எங்களிடம் வாருங்கள்.... நாங்கள் கொடுக்கும் மருந்தை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் உடலில் இருக்கும் வாயு, எப்படி துப்பாக்கியிலிருந்து குண்டு அதிவேகத்தில் வெளிவருமோ, அதே வேகத்தில் உங்கள் உடலிலிருந்து வாயு வெளியேறிவிடும்...... 

 

அப்படி வாயு, நம் உடம்பிலிருந்து வெளியேறினால் எப்படி இருக்கும் என்றுயோசித்து யோசித்து சிரித்துக் கொண்டே இருந்தோம்! ஹாஹா! 



அயோத்யா ஜி இரயில் நிலைய முகப்பு…
 

தங்குமிடம் சென்று சேர்ந்தபோது, தங்குமிட உரிமையாளர்கள், விரைவில் அறையை Gகாலி செய்யுங்கள், உங்களுக்கான நேரம் மதியம் 12 வரை தான் - என்று சொன்னபோது மணி 11.30! காலையில் புறப்படும்போதே எல்லாவற்றையும் பையில் வைத்து விட்டுச் சென்றதால் உடனேயே எங்களால் அறைகளைக் Gகாலி செய்து கொண்டு இரயில் நிலையம் நோக்கிச் செல்ல முடிந்தது.  மீண்டும் ஒரு பேட்டரி ரிக்ஷா பயணம்.  அயோதித்யா ஜி இரயில் நிலையம் வெளிப்புறம் மிக அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.  வேலைகள் முழுமையடையவில்லை என்றாலும் வெளிப்புறத்தோற்றம் நன்றாகவே இருந்தது.  இரயில் நிலையம் உள்ளே சென்று சேர்ந்து உடமைகளை வைத்து விட்டு, நானும் நண்பரும் வெளியே சென்று உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு நண்பரின் மனைவிக்கும் வாங்கிக் கொண்டு இரயில் நிலையம் சென்றோம்.  சில நிமிடங்கள் வரை காத்திருந்த பிறகு, எங்களுக்கான இரயில் வந்து சேர்ந்தது.  பயணம் எப்படி இருந்தது, நாங்கள் சென்று சேர்ந்த நதிக்கரை நகரம் எது போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

16 கருத்துகள்:

  1. நம்மூரிலும் இப்படி விற்பவர்கள் இருக்கிறார்களே..  மைக் வைத்துக்கொண்டு கூவுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரில் உண்டு என்றாலும் வடக்கே இது கொஞ்சம் அதிகம் ஸ்ரீராம். பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. அதான் வாரணாசி செல்வதாக எழுதிவிட்டீர்களே... சீக்கிரம் எழுதுங்கள். அடுத்த மாதம் மூன்றாவது தடவையாக வாரணாசி செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாரணாசி பயணம் சிறக்க வாழ்த்துகள் நெல்லைத்தமிழன். வாரணாசி குறித்த தகவல்கள் தொடரும்.

      நீக்கு
  3. நாட்டு மருந்துக் கடைன்னதும், வட நாடுகளில் இந்த மாதிரி வியாபாரத்தில் பெருங்காயம் வாங்கின நினைவு வந்தது. ஶ்ரீ நாத்த்வாரகாவில் 1/2 கிலோ பெருங்காயம் வாங்கினேன். அப்போ வாசனையா இருந்த மாதிரி இருந்தது. வீட்டுக்கு வந்த பின், மனைவி அதனை உபயோகிக்க மாட்டேன், வாசனையே இல்லைனுட்டா. போர்பந்தரில் கட்டிப் பெருங்காயம் சாக்கில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். வாங்க ஆசை. எதுக்கு வம்புன்னு வாங்கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை வட இந்தியா பெருங்காயம் உண்மையிலேயே நல்ல ப்யூர் நல்ல மணமுடையதாக இருக்கும். ஆனால் கடைகள் பார்த்து வாங்க வேண்டும். விலை ரொம்பவே கூடுதல்...

      கீதா

      நீக்கு
    2. பெருங்காயம் - அடடா… சில இடங்களில் இப்படி ஏமாற்றம் உண்டாகலாம். கர்நாடகா செல்லும் சமயங்களில் சந்தன ஊதுபத்தி என்று சொல்லி நிறைய ஏமாற்றுவார்கள். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதம். தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    3. Hing என்று ஹிந்தியில் அழைக்கப்படும் பெருங்காயம் இங்கே நன்றாகவே கிடைக்கிறது. சில சமயங்களில் ஏமாற்றமும் உண்டாகலாம் கீதா ஜி. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. ஹாஹாஹா நாட்டு மருந்து விற்பனை படத்தைப் பார்த்ததுமே நினைவுக்கு வந்த ப்டமும் காட்சியும் பிதாமகன் படம். அதில் சூர்யா இப்படித்தான் மருந்த்துகள் விற்பார். அதிலும் அந்த வாயுத் தொல்லைக்கான அவர்களின் வாசகம்....கிட்டத்தட்ட இதே காட்சிதான் பிதாமகனிலும்....இயக்குநர் பாலா வட இந்தியாவில் நிறைய பயணித்திருப்பார் போலும்...காட்சி அமைப்பு இப்படித்தான்.

    அந்த வாயுத்தொல்லை வசனம் சிரித்துவிட்டேன்....

    ஆனால் யதார்த்தத்தில் இப்படியான பிரச்சனை உள்ளவர்கள் இருக்கிறார்கள். பாவமாக இருக்கும். அவர்களது அவஸ்தை, சுற்றியுள்ளவர்களின் பார்வை, அவர்களில் பலர் வெளியில் வருவதையே தவிர்த்து வீட்டிற்குள்ளேயே முடங்குவதும் உண்டு, ஜி.

    அவர்களுக்கு என்ன மருந்து எடுத்துக்கொண்டாலும், சிலருக்கு அது தற்காலிகமானதாக இருக்கிறது. மீண்டும் தொடங்கும். உணவுக் கட்டுப்பாடு என்று சொல்லப்படுபவை எடுத்துக் கொண்டாலும் கூட. எனவே தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளும் நிர்பந்தமும் ஏற்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. அடுத்தவர்களுக்கு சிரிப்பாக இருக்கும் விஷயம், சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுமையான விஷயமாக இருக்கும் என்பதற்கு இந்த விஷயம் ஒரு உதாரணம்.

      நீக்கு
  6. நாட்டு மருந்துக் கடைகளும் அவர்களுடைய பிரபல படங்களும் வைத்தியத்துக்கு கூவி அழைப்பும் சிரிப்பை வரவழைக்கிறது.

    வாரணாசி வருகிறோம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வாசித்து வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....