செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி ஏழு - அயோத்யா ஜி - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TO BUILD A STRONG TEAM, YOU MUST SEE SOMEONE ELSE’S STRENGTH AS A COMPLEMENT TO YOUR WEAKNESS AND NOT A THREAT TO YOUR POSITION OR AUTHORITY.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை



கச்சோடி…  சுவைக்க ஏதுவாக…


கச்சோடி தயாராகிறது….


கச்சோடி தயார்...

 

சென்ற பகுதியில் சொன்ன கனக் Bபவன் பார்த்த பிறகு நாங்கள் வெளியே வந்த உடன் எதிர் பக்கத்தில் நிறைய தள்ளுவண்டிகளில் கடைகள்.  கச்சோடி, பூரி, ஆலு சப்ஜி என விற்பனை கன ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  நாங்களும் களத்தில் இறங்கி ஒரு கை பார்க்கலாம் என முடிவு செய்தோம்.  இருந்த பல கடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எங்களுக்கு மூன்று பத்தா (தொன்னை) கச்சோடி சொன்னோம்.  அந்த கடை வைத்திருந்த நபர் லாவகமாக கைகளை பரபரவென இயக்கி கச்சோடிகளை நொறுக்கி தொன்னையில் போட்டு, அதன் மேலே வேகவைத்த பட்டாணி போட்டு, பலவித மசாலா பொடிகளை தூவி நன்கு கலக்கி ஒரு மர ஸ்பூன் போட்டு கைகளில் தந்து விடுகிறார்.  எத்தனை வேகமும் லாவகமும் அவர் இயக்கத்தில் என்பதை நீங்களும் காண ஒரு காணொளியும் பதிவில் இணைத்திருக்கிறேன். பார்த்து ரசியுங்களேன்.  பொதுவாக காரம் அதிகம் இருந்தால் எனக்குப் பிடிப்பதில்லை, ஒத்துக்க கொள்வதும் இல்லை.  அதனால் அதிக காரம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். 



குர்ச்சன் (பேடா) லஸ்ஸி கடை…

 

அதிக (CH)சட்பட்டா (அதாவது காரமாக) வேண்டாம் என்று சொல்லி இருந்தாலும் கொஞ்சமாக போட்ட மசாலாவே எனக்கு காரமாகத் தெரிந்தது.  இருந்தாலும் சுவையில் எந்தக் குறையும் இல்லை.  நன்றாகவே இருந்தது. நாக்கில் தான் காரம் அதிக நேரம் இருந்த உணர்வு.  அந்த உணர்வினை நீக்க, உணவு சாப்பிட்ட பிறகு நேராகச் சென்றது குர்ச்சன் லஸ்ஸி சாப்பிடத்தான். அந்தக் கடையில் நின்று நிதானித்து ஆளுக்கு ஒரு கிளாஸ் லஸ்ஸி சாப்பிட்ட பிறகு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம்.  சரயு நதிக்கரைக்கு முதல் தினம் மாலை நேரத்தில் சென்று வந்திருந்தாலும், நதிக்கரை அருகேயே படித்துறைகள் அமைத்திருந்த இடங்களுக்கு நாங்கள் அப்போது செல்லவில்லை.  அதனால் படித்துறை பக்கம் சென்று சிறிது நேரம் அமர்ந்து சரயு நதியின் அழகை ரசிக்கலாம் என்று முடிவு செய்தோம். படித்துறை வரை நடந்து செல்லும்போது வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள்.  அப்படி வந்து கொண்டிருந்த சமயத்தில் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்க நிறைய விஷயங்களை பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.  அப்படி ஒரு விஷயம்…

 

குஷி க்ளிப் - ராம் ஜென்ம பூமிக்கு வந்தால் குஷி க்ளிப் வாங்காம போவது சரியா!!!! 🙂

 

இப்படி வேற ஒரு விஷயம் இருக்கா என்ன? இராமபிரானையும் ஹனுமனையும் தரிசிக்க மட்டும் தாம் அயோத்யா ஜி செல்வார்கள் என்று இத்தனை நாட்களாக நானும் நீங்களும்  நினைப்பது தப்போ? 

 

காலை உணவை முடித்துக் கொண்டு கடைத் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது, சில தமிழ் பெண்மணிகள் எதிரே இருந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், சக பெண்மணியிடம், "அயோத்யா வந்ததிலிருந்து கடை கடையாக ஏறி கேட்டு விட்டேன்.... ஒரு கடையில் கூட இந்த குஷி க்ளிப் கிடைக்கல போ! என்ன ஊரோ?" என்று புலம்பினார். அடடா, தமிழ் நாட்டில் சினிமா நடிகை குஷி படத்துல போட்ட க்ளிப் என்பதால் அதற்கு குஷி க்ளிப் என்று பெயர் வைத்தது, பாவம் அந்த அயோத்யா நகர் வியாபாரிகளுக்கு எப்படி தெரியும்? இதிலே நம் ஊரிலிருந்து வந்திருந்த பெண்மணிகளுக்கு ஹிந்தி மொழியும் தெரியாது. ஒவ்வொரு கடையிலும் போய் குஷி க்ளிப் என்று சொல்வதோடு பரதநாட்டியம் தெரிந்தவர் மாதிரி விதம் விதமாக, அபிநயம் பிடித்து காண்பித்தால் அந்த கடைக்காரர் பயந்துட மாட்டாரோ? :))) தலையில ஒரு கை வைத்து, ஒரு விரல் வைத்து அழுத்தி படக் என சத்தம் வேற கொடுத்தால் என்ன ஆகும்? நட்டு கழண்ட கேஸ் போல என்று கடைக்காரர் நினைக்க வாய்ப்பு ஆகிடாதோ?  அந்த ஊர்ல என்ன கிடைக்குதோ அதை வாங்கலாமே! என்னமோ போடா மாதவா! இவங்கள புரிஞ்சிக்க உனக்கு இன்னும் வயசு பத்தல! என்று எங்களுக்குள் பேசிக் கொண்டு மேலே நடந்தோம். 



பல வண்ணங்களில் குங்குமம்

 

அயோத்யா ஜி முழுவதுமே சின்னச் சின்னதாய் நிறைய உணவகங்கள், கடைகள், வியாபார ஸ்தலங்கள் என நிறைந்திருக்கிறது.  அவற்றில் பலவிதமான விஷயங்கள் விற்பனைக்கு இருக்கிறது. பூஜைப் பொருட்களும், பல்வேறு வண்ணங்களில் குங்குமமும் கொட்டிக் கிடக்கிறது.  எத்தனை நபர்களுக்கு இந்த இடம் வேலை வாய்ப்பு அளிக்கிறது என்று நினைத்துப் பார்க்க, மனதுக்குள் பிரமிப்பு தான். எந்த ஊராக இருந்தாலும், பிரபல வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தளங்கள் என இருந்தால் அவை மூலம் பல மனிதர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் பசியாற வழிவகை கிடைக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதற்காகவேனும் சுற்றுலா வரும் அனைத்து விதமான நபர்களுக்கும் தேவையான வசதிகளை அரசாங்கம் - குறிப்பாக சுற்றுலாத் துறை செய்ய வேண்டியதை அந்தத் துறையினரும் அரசாங்கமும் புரிந்து கொண்டால் நல்லது.  அப்படி புரிந்தால் இது போன்ற இடங்கள், வசதிகளால் பலருக்கு வாழ்வாதாரம் கிடைப்பதோடு அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.  இந்தியாவில் சுற்றுலாவிற்கான இடங்கள் எண்ணற்றவை - நம் வாழ்நாளில் பார்த்து முடிக்க முடியாத அளவில் இந்தியாவின் பல மாநிலங்களில் பல அழகிய இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  அனைத்துமே இப்படியான இடங்கள்தான்.  இப்படியான சிந்தனைகளை எங்களுக்குள் பரிமாறியபடி நாங்கள் தொடர்ந்து நடந்தோம். 



சரயு படித்துறை அருகே…




படித்துறை...



ஆண்டவனுக்கு பூக்கள் - அலங்காரமாக தட்டில்…

 

இது போன்ற அனுபவங்களுடன் சிறிது தூரம் நடந்து சரயு நதி படித்துறை பக்கம் வந்து சேர்ந்தோம்.  படித்துறையும் எதிரே இருந்த கட்டிடங்களும் வெகு அழகு.  அந்த காலை நேரத்திலும் நிறைய பக்தர்கள் சரயு நதியில் நீராடி கோவில்களுக்குச் செல்ல நெற்றியில் சந்தனப் பட்டைகள் போட்டுக்கொண்டும் “ராம் ராம்” என்ற அச்சுகளால் சிவப்பு வண்ணத்தில் போட்டு போல வைத்துக் கொண்டும் இருந்தார்கள்.  அவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தபடியே படித்துறை ஓரமாகவே நடந்து கொண்டிருந்தோம்.  எதிரே நிறைய காவி உடையணிந்த முதியவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களையும் Candid - ஆக ஒரு படம் எடுத்துக் கொண்ட படியே நடந்தோம்.  படித்துறை அருகே நிறைய பூக்கடைகள்.  அங்கே வைத்திருந்த பூக்கள் அலங்காரம் பார்க்கவே அப்படி ஒரு அழகு.  அப்படியான அழகான காட்சிகளை ரசித்தபடியே நாங்கள் சென்று சேர்ந்த இடம் என்ன? அங்கே கிடைத்த அனுபவம் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.   

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

14 கருத்துகள்:

  1. கச்சோடி பார்க்க நன்றாய் இருக்கிறது.  எனக்கு இந்த வகை மசாலாக்கள் பிடிபப்தில்லை!  நான் சென்றபோது லஸ்ஸி சாப்பிட விட்டுப் போனது.  மசாலா பாலும் அப்படியே!  படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வட இந்திய மசாலாக்கள் நம்மில் பலருக்கும் பிடிப்பதில்லை ஸ்ரீராம். பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. விவரங்கள் நன்று. நானும் அங்கு லஸ்ஸி சுவைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத்தமிழன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. கச்சோடி காணொளி அருமை.குஷி பின் விவரம் சிரிப்பு வந்தது.சரயு நதிக்கரை அழகு.
    மலர் அலங்காரத்தட்டில் வெள்ளை எருக்கன் பூ போல இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா வெள்ளெருக்கு பூ தான். தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்கள் அன்பிற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. கச்சோடி ரொம்பப் பிடிக்கும் ஆமாம் ஜி எனக்கும் காரம் ஒத்துக் கொள்வதில்லை.

    காணொளியும் ரசித்தேன்

    அதென்ன குஷி க்ளிப்பா? புதுசா இருக்கிறதே...குஷி கிளிப் அந்தப் பெண்கள் செய்ததை நீங்கள் விவரித்த விதம் குஷியாக்கிவிட்டது!!! ஹாஹாஹா சிரித்துவிட்டேன்... ஆனா அப்படி என்ன க்ளிப் என்று இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன்!!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி. ஒரு காலத்தில் இந்த குஷி க்ளிப் மிகவும் பிரபலம்.

      நீக்கு
  6. அதற்காகவேனும் சுற்றுலா வரும் அனைத்து விதமான நபர்களுக்கும் தேவையான வசதிகளை அரசாங்கம் - குறிப்பாக சுற்றுலாத் துறை செய்ய வேண்டியதை அந்தத் துறையினரும் அரசாங்கமும் புரிந்து கொண்டால் நல்லது. அப்படி புரிந்தால் இது போன்ற இடங்கள், வசதிகளால் பலருக்கு வாழ்வாதாரம் கிடைப்பதோடு அரசுக்கும் வருமானம் கிடைக்கும். //

    டிட்டோ....அதே போன்று அடுத்து வரும் வரிகளும் அதே அதே என்று சொல்வேன். எவ்வளவு இடங்கள் இருக்கின்றன நம் நாட்டில்!!

    சரயு நதியும் படித்துறையும், சுத்தமாக அழகாக இருக்கின்றன மனதை ஈர்க்கின்றதே...அங்கிருக்கும் கட்டிடங்களும் அழகு! படங்கள் எல்லாமே ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரயு நதி படித்துறை மனத்தைக் கவர்ந்த ஒரு இடம். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. சரயு நதி படித்துறை நன்றாக இருக்கிறது.
    பூசை தட்டு மலர்கள் கண்ணை கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....