வியாழன், 9 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர் - மதிய உணவு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WRITE IT ON YOUR HEART THAT EVERY DAY IS THE BEST DAY IN THE YEAR - RALPH WALDO EMERSON.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்



துள்சி மானஸ் மந்திர்
 

சென்ற பகுதியில் காசி மாநகரில் அமைந்திருக்கும் சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன் கோவில்  குறித்து பார்த்தோம்.  இந்தப் பகுதியில் பார்க்கப்போவது துர்கா கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் துளசி மானஸ் மந்திர் என்ற கோவில் குறித்து தான். துளசி மானஸ் மந்திர் வாரணாசி நகரில் அமைந்திருக்கும் கோவில்களில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.  வாலமீகி இராமாயணம் சமஸ்க்ருத மொழியில் இருந்தது என்பதால் பலராலும் படிக்க முடியாமல் இருந்தது.  துளசிதாசர் வாழ்ந்து வந்த வாரணாசி நகரில் பெரும்பாலானவர்கள் பேசும் அவத்(dh) எனப்படும் ஹிந்தி மொழியின் ஒரு பேச்சு வழக்கு வகையைக் கொண்டு  துளசிதாசர் அவர்கள் எழுதிய ராம்சரித்ரமானஸ் என்ற மஹா காவியம் எழுதப்பட்டது, தற்போது இந்தக் கோவில் அமைந்திருக்கும் பகுதி தான் என்பது நம்பிக்கை. 16 ஆம் நூற்றாண்டில் (சி. 1532-1623) Gகோஸ்வாமி துளசிதாஸால் எழுதப்பட்ட ராமாயண காவியம் ஏராளமான மக்களால் படிக்கப்பட்டது.



துள்சி மானஸ் மந்திர் முகப்பு
 

1964-ஆம் ஆண்டில், கோஸ்வாமி துளசிதாஸ் ராமசரிதமானஸ் எழுதிய அதே இடத்தில் ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்கள்.  அதற்கு முன்னரும் அந்த இடத்தில் சிறிய அளவில் வழிபாட்டுதலம் இருந்திருக்கலாம் என்றாலும் தற்போது அமைந்திருப்பது 1964-ஆம் ஆண்டில், கொல்கத்தாவைச் சேர்ந்த வியாபாரி சேட் ரத்தன் லால் சுரேகா அவர்களால் அமைக்கப்பட்ட கோவில் தான். கோவிலை திறந்து வைத்தது, நமது பாரத தேசத்தின் இரண்டாம் குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள். மிகப்பெரிய வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோவிலின் நுழைவாயில் அருகேயே ஒரு அழகான தோட்டமும் அமைத்திருக்கிறார்கள்.  கோவிலுக்குள் இருக்கும் சுவர்களில் ராம்சரித்ரமானஸ் காவியத்தினை பதித்து வைத்திருக்கிறார்கள். வளாகத்தின் மத்தியில் ஸ்ரீராமர், சீதா தேவி, இலக்குவன் மற்றும் ஹனுமன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் சன்னதி இருக்க இரண்டு புறங்களிலும் மாதா அன்னபூர்ணா, ஷிவ்ஜி மற்றும் சத்யநாராயண் ஜி ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உண்டு.  இன்னும் ஒரு விஷயம் இங்கே அமைந்திருக்கும் சிவன் மற்றும் அன்னபூர்ணா சன்னதிகள் குறித்துச் சொல்ல வேண்டும்.  துளசிதாசர் ராம்சரித்ரமானஸ் எழுதி முடித்த பின்னர்  முதன் முதலாக அதை படித்துக் காண்பித்தது வாரணாசி நகரில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் அன்னபூர்ணா சன்னதியிலும் என்பதால் இப்போதும் இந்தத் தலத்தில் அவர்கள் இருவருக்கும் தனி சன்னதிகள் அமைத்திருப்பதாக தகவல். 



கோவிலுக்குள் சன்னதிகள்…
 

இரண்டாவது மாடியில் சந்த் துளசிதாஸ் அவர்களுக்கும் தனிக்கோவில் உண்டு.  ஆனால் எனக்கு என்னமோ இந்த மாதிரி கோவில்களில், குறிப்பாக வட இந்திய கோவில்களுக்குச் செல்லும்போது ஒரு Exhibition செல்வது போன்ற எண்ணம் வரும்.  நமது தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் பிரம்மாண்டமான கோவில்களை பார்த்துப் பழகிய பிறகு இந்த மாதிரி இரண்டு அடுக்குகளில் பெரிய பெரிய வளாகத்தில் அமைந்திருக்கும் வெள்ளை பளிங்குக் கற்களில் இருக்கும் சிலைகள் ஏனோ அவ்வளவாக பிடிப்பது இல்லை.  இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.  அங்கே இருக்கும் பக்தர்களுக்கு இப்படி இருப்பது பிடித்தே இருக்கிறது - இறைவனை எந்த வழியிலும், எந்த ரூபத்திலும் தரிசிக்கலாம் என்ற கருத்து ஏற்புடையது தானே! கோவில் வளாகத்தில் தொடர்ந்து ராம்சரித்ரமானஸ் ஒலித்துக் கொண்டே இருப்பதும் மனதுக்கு அமைதியைத் தருகிறது.   நாங்கள் சென்ற போதும் பல பக்தர்கள்/சுற்றுலாப் பயணிகள் இங்கே வந்து கொண்டே இருந்தார்கள்.  நாங்களும் அந்த பக்தர்கள் போலவே உள்ளே நுழைந்து, தொடர்ந்து ஒலித்த இராமகாதையை கேட்டவாறே சன்னதிகளில் வலம் வந்தோம். 



தங்குமிடத்தில் பொம்மைகள்…

 

சில நிமிடங்கள் அங்கே அமர்ந்து இருந்த பிறகு கோவில் வளாகத்திலிருந்து வெளியேறி பக்கத்திலேயே அமைந்திருந்த இன்னுமொரு கோவில் சென்று விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  அந்தக் கோவில் அத்தனை பிரபலமான கோவில் அல்ல! அதே சமயம் எனக்கு அலைபேசியில் ஏதோ முக்கியமான அழைப்பு வர அந்த பிரச்சனையைத் தீர்ப்பதில் அதிக கவனம் வைத்ததால் கோவிலில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை!  என்பதையும் சொல்ல வேண்டும்.  பல இடங்களில் நம் உடனே, நம் உடலைப்போலவே ஒட்டிக்கொண்டு வரும் இந்த அலைபேசி, நல்ல விஷயம், தேவையான வசதி என்றாலும் பெரும்பாலான  சமயங்களில் தொல்லையாகவும் அமைந்து விடுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகவும் கொள்ளலாம்.  கோவில் வளாகத்தில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் ஒரு ஆட்டோவில் பயணித்து எங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பினோம்.  



தங்குமிட நுழைவாயில் அருகே பிள்ளையார்…









 

தங்குமிடத்தில் நுழைவாயிலில் இருந்த பிள்ளையார் சிலை மனதைக் கவர்ந்தார்.  அதனால் அவரையும் போகிற போக்கில் ஒரு க்ளிக்! தங்குமிடத்திலேயே மத்திய உணவு எடுத்துக் கொண்டோம். மத்திய உணவில் ஃபுல்கா ரொட்டி, சாதம் (பாஸ்மதி), dhதால், சலாட், தயிர் என மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டோம். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஒய்வு எடுத்துக் கொண்டோம்.  இந்தப் பயணத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் அதிக இடங்களை பார்க்க வேண்டும் என ஓடாமல் நின்று நிதானித்து சில இடங்களை மட்டுமேனும் பார்க்க வேண்டும் என்ற திட்டமிருந்தது.  பெரும்பாலும் யாராவது குழுவுடன் வரும்போது பயண ஏற்பாட்டாளர் நம்மை துரத்திக் கொண்டே இருப்பார் என்பதாலேயே இப்போதெல்லாம் அப்படியான பயண ஏற்பாடு செய்பவருடன் வராமல் நாங்களாகவே திட்டமிட்டு பயணிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்த நதிக்கரை நகரங்கள்  பயணம் கூட அப்படி நாங்களாகவே, எங்கள் இஷ்டப்படி, நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்று வரும் படியே சென்று வந்தோம்.  

 

சற்றே ஓய்வெடுத்த பிறகு நாங்கள் என்ன செய்தோம், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை இந்தப் பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன் நண்பர்களே. 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

8 கருத்துகள்:

  1. துளசிதாசர் கோவில் பார்த்த நினைவு இல்லை.  ஆம்.  நிறைய முக்கியமான சமயங்களில் அலைபேசி குறுக்கிட்டு விடுகிறது.  தவிர்க்க முடியாமல் அதுவும் சில முக்கியமான செய்திகளையும் தாங்கி வருகிறது!

    பதிலளிநீக்கு
  2. தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி.

    படங்கள் வழக்கம் போல அருமை

    பதிலளிநீக்கு
  3. இந்த மாதிரி இரண்டு அடுக்குகளில் பெரிய பெரிய வளாகத்தில் அமைந்திருக்கும் வெள்ளை பளிங்குக் கற்களில் இருக்கும் சிலைகள் ஏனோ அவ்வளவாக பிடிப்பது இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. //

    எனக்கும் இந்த எண்ணம் உண்டுதான் ஜி. உண்டு என்பதை விட இருந்தது எனலாம். அதன் பின் அது மாறிவிட்டது. நீங்களே அடுத்தாற்போல் சொல்லியிருப்பதுதான்...இறைவனை மனதில் நினைத்து தியானிக்க எப்படி இருந்தால் என்ன? வடிவம் பொருள் முக்கியமா மனதால் தியானிப்பது முக்கியமா என்ற எண்ணம் வலுத்ததால் மற்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று மாறிவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. துளசி மானஸ் மந்திர் நாங்களும் பார்த்து இருக்கிறோம்.
    தங்குமிட பொம்மைகள், பிள்ளையார் எல்லாம் நன்றாக இருக்கிறது. உணவு படங்கள் எல்லாம் அருமை.
    பயணத்தை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் பயண ஏற்பாட்டாளர் வழி செல்வதை விட நாமே திட்டமிட்டுச் செல்வதுதான் பிடிக்கும். நீங்கள் சொல்லியிருப்பதுதான் - நினைத்தபடி நினைத்த நேரத்தில் சென்று வரலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. துள்சி மானஸ் மந்திர் கண்டு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  7. துள்சி மானஸ் மந்திர் எங்கள் லிஸ்ட் ல் இருந்தது ஆனாலும் அன்றைய நாளின் நெருக்கடியால் அங்கு செல்லவில்லை. நாங்களும் நாங்களாகவே திட்டமிட்டு பயணிப்பது தான் இப்பொழுது உள்ளது சில பல விசாரிப்புகள் களும் கொஞ்சம் நேரம் விரயமும் இருந்தாலும் நன்றாக பார்த்த மனநிறைவு உள்ளது

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....