ஞாயிறு, 26 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பத்தி ஒன்பது - வாரணாசி - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

THE TRUE SECRET OF HAPPINESS LIES IN TAKING A GENUINE INTEREST IN ALL THE DETAILS OF DAILY LIFE - WILLIAM MORRIS.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்

 

பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி

 

பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்
சென்ற பகுதியில் எங்களுக்குக் கிடைத்த Gகங்கா ஆரத்தி குறித்து சொல்லி இருந்தேன். மக்கள் வெள்ளத்தில் நீந்தி வெளியே வந்து நாங்கள் சென்ற இடங்கள் குறித்து தான் இன்றைய பகுதியில் பார்க்க இருக்கிறோம்.  சென்ற பகுதியிலும் ஒரு விஷயம் சொல்லி இருந்தேன். அது காசி நகரில் இருக்கும் உணவகங்கள் குறித்தது. கால நிலைக்குத் தக்கவாறு சில உணவுகள் இங்கே ஸ்பெஷல் ஆகக் கிடைப்பதுண்டு.   நண்பரும் அவரது இல்லத்தரசியும் வட இந்திய உணவுகளை - அதிலும் குறிப்பாக Chசாட் வகை உணவுகளை விரும்பி உண்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். எனக்கும் அந்தவித உணவுகளை உண்பதில் ஈடுபாடு உண்டு.  காசி நகருக்குப் பயணிக்கும் போதே ஒரு சில உணவுக் கடைகள் குறித்து, பார்த்துச் சென்றிருந்தோம் என்பதால் Gகங்கா ஆரத்தி முடித்து நேரடியாக நாங்கள் சென்றது அப்படி ஒரு கடைக்கு தான்.  அந்தக் கடை…. வாரணாசி நகரில் Dhதஷாஸ்வமேத் Gகாட் செல்லும் வழியில் Gகோடிலியா CHசௌக் பகுதியில் இருக்கும் காஷி Chசாட் Bபண்டார்..... 

 

மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது இந்த இடத்தில்..... மிகச் சிறிய கடை. உள்ளே பத்து பேர் கூட அமர்ந்து சாப்பிட முடியாது. மற்றவர்கள் அனைவரும் சாலை ஓரங்களில் நின்று சாப்பிட வேண்டும். விதம் விதமான Chசாட் வகைகள் - ஆலு டிக்கி Chசாட், டமாட்டர் Chசாட், Chசூரா மட்டர் Chசாட், சமோசா Chசாட், Bhபல்லா Pபாப்டி, Dahi Bhalla, Pபாப்டி Chசாட், Pபானி பூரி, Dahi பூரி, குலாப்ஜாமுன், குல்ஃபி போன்றவை கிடைக்கின்றன. நாங்களும் அந்த கூட்டத்தில் சங்கமித்தோம் - சமோசா Chசாட், டமாட்டர் Chசாட், Dahi பூரி போன்றவற்றை சுவைத்தோம்.... பெரும்பாலான உணவு வகைகள் 50 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. பனாரஸ் எனும் வாரணாசி பான் வகைகளுக்கும் புகழ் பெற்றது. இந்த காஷி Chசாட் பண்டார் அருகிலேயே இருந்த கடையில் நாற்பது ரூபாய் கொடுத்து நவரத்தன் பான் வாங்கி சுவைத்தோம். சிறப்பான அனுபவங்கள்.... 


 

வாரணாசி நகரில் Dhதஷாஸ்வமேத Gகாட் செல்லும் வழியில் இருக்கும் இன்னுமொரு உணவகம் Keshri Chaat Corner என்று ஒரு கடை. விதம் விதமாக வட இந்திய Chசாட் வகை சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள், இனிப்புகள், குல்ஃபி போன்றவை கிடைக்கின்றன. கட்டோரி Chசாட், குங்குமப்பூ போட்ட லஸ்ஸி, பானி பூரி என்று நிறைய உணவுகள் அங்கே கிடைக்கின்றன. அங்கே சென்ற போது, பார்க்கும் அனைத்தையும் சாப்பிடத் தோன்றியது என்றாலும் அனைத்தையும் சாப்பிட முடியாதே! அதுவும் ஒரே நாளில்! அதனால் அன்றைய பொழுது விட்டுவிட்டு அதற்கு அடுத்த நாட்களில் சென்று அங்கே சென்று நான் குங்குமப்பூ போட்ட லஸ்ஸி சுவைக்க நண்பர் பானி பூரி, Chசாட் என்று சுவைத்தார். சுவை நன்றாகவே இருந்தது என்பதோடு விலையும் அதிகமில்லை என்பது இந்த இடத்தின் சிறப்பு. 

 

பானி பூரி பொதுவாக சாப்பிடச் சென்றால் நம்மிடம் ஒரு கப் கொடுத்து, அவர்களாகவே ஒவ்வொரு பானி பூரி ஆக தயார் செய்து நம்மிடம் தர நாம் ஒவ்வொன்றாக சுவைக்கலாம். இப்படித்தான் வட இந்தியாவில் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கே ஒரு தட்டில் ஆறு பானி பூரி வைத்து நடுவே ஒரு கிண்ணத்தில் அதனோடு ஊற்றி சாப்பிடத் தேவையான புளிப்பு நீரையும் தந்து விட்டார்கள். படம் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். தென்னிந்தியாவில் சில கடைகளில் இப்படித் தருவது உண்டு என்றாலும் வடக்கில் பார்த்ததில்லை. 

 

சரி பானி பூரி குறித்த இன்னுமொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? பானி பூரி என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த சிற்றுண்டிக்கு வேறு பெயர்களும் உண்டு! இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இதற்குப் பெயர் Puchkaa! எப்படியெல்லாம் பேர் வைக்கிறார்கள்? சரி என்ன பெயர் வைத்தால் தான் என்ன? சுவை நன்றாக இருக்க வேண்டும், கூடவே உடல் நலனுக்கு எந்த வித தீங்கும் விளைவிக்கக் கூடாது! அவ்வளவுதான்! இப்படியான பதார்த்தங்களை சுவைத்து ரசிக்கலாம்! மலாய்யோ...
 

லவ்ங் லதா...


நாங்கள் சென்றது ஏப்ரல் மாதத்தில் என்பதால் அங்கே குளிர் சமயத்தில் - அதுவும் நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு இனிப்பை சுவைக்க முடியவில்லை.  தில்லி நகரிலும் கிடைக்கிறது என்றாலும் வாரணாசியில் கிடைக்கும் அந்த இனிப்பின் சுவைக்கு நிகரில்லை என்று இரண்டையும் சுவைத்தவர்கள் சொல்வதுண்டு.  அந்த இனிப்பு - மலாய்யோ! அதுவும் வாரணாசியின் thதட்டேரி Bபஜார் பகுதியில் இருக்கும் சில குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மலாய்யோ எனும் இனிப்பு, பாலிலிருந்து தயாரிக்கப்படுவது - நிச்சயம் ருசிக்க வேண்டிய ஒரு இனிப்பு.  இதைத் தவிர எல்லா நாட்களிலும் கிடைக்கும் இன்னுமொரு இனிப்பையும் நீங்கள் சுவைத்துப் பார்க்கலாம் - அந்த இனிப்பின் பெயர் லவ்ங் லதா!  இந்த இனிப்பு வங்காளத்திலிருந்து வந்தது என்றாலும் இங்கே கிடைக்கும் இனிப்பின் சுவை மாறுபட்டது.  மைதாவிலிருந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பையும் உங்கள் பயணத்தில் சுவைக்கலாம்!

 

இங்கே குறிப்பிட்டவை தவிரவும் நிறைய உணவு வகைகள் அங்கே கிடைக்கின்றன.  கொஞ்சம் சுகாதாரமான இடமாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டால் பெரிய உணவகங்களில் சாப்பிடலாம் - இல்லை என்றால் thதட்டேரி Bபஜார் பகுதியில் இருக்கும் சிறு சிறு கடைகளில் விதம் விதமாக உணவு வகைகளை நீங்கள் சுவைத்துப் பார்க்கலாம்!  வாரணாசி செல்லுங்கள் - விதம் விதமாய் உணவுகளை சுவைத்துப் பாருங்கள்.  தொடர்ந்து என்ன அனுபவங்கள் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைத்திருங்கள் நண்பர்களே! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

13 கருத்துகள்:

 1. வராணசியில் வித விதமாக சுவைத்து உண்ண கடைகள் இருப்பது மகிழ்ச்சி.
  பயணம் செய்பவர்களுக்கு வசதிதான். நல்ல உணவு கிடைக்கும் இடம் தெரிந்து கொள்வது.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. தட்டேரி பஜாரில் பல கடைகளைப் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றையும் பார்த்தேன்.

  ஒரு வாரத்துக்கு முன்பு இந்தப் பதிவு வந்திருந்தால் தைரியமாக ருசித்திருப்பேன்.

  லவங்க் லதிகா இல்லையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை, லவங்க் லதா ன்னும் சொல்வதுண்டு. லதாவோ லதிகாவோ லதாங்கியோ....ஸ்வீட் ஸ்வீட்டுதான். நல்லாருக்கும் அதுவும் உள்ளே இருக்கும் அந்த கோவா கலவை....செய்ததுண்டு.

   கீதா

   நீக்கு
 4. தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

  பதிலளிநீக்கு
 5. நாவில் நீர் சுரக்கிறது ஜி! சாட் வகையறாக்கள். எனக்குச் சுவைத்திட ரொம்பப் பிடிக்கும். இடங்களைக் குறித்துக் கொண்டுவிட்டேன். கிட்டத்தட்ட எல்லாமே தில்லியில், வடக்குப் பயணம் போனப்ப, அப்புறம் பூனா வில் சுவைத்ததுண்டு. ஆமாம் பானி பூரி ஒவ்வொன்றாகத் தருவாங்க....இங்கும் தெருவோர பானிபூரி கடைகளில் அப்படித்தான். ஆனால் ஒரு சில உணவகங்களில் தட்டில் வைத்துக் கொடுக்கிறாங்க நீங்கள் சொல்லியிருப்பது போல்.

  மலாய்யோ ....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இது சாப்பிட்டதில்லை. சுவைக்கணுமே கொஞ்சமேனும்....கொஞ்சமேனும் சாப்பிட்டுட்டு அப்புறம் வேறு எதுவும் சாப்பிடாம நல்லா நடை நடந்துட்டா போச்சு!!! ஆனால் சுவைக்க வேண்டும் என்று ஆசை வருது படத்தைப் பார்த்ததும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாரணாசியில் பிகானீர்வாலாவில் ஒரு தடவை மனைவியுடன் சென்று சாப்பிட்டேன். ஒரு வாய் சாதம் (அதில் பட்டாணி ஒரு சில இருந்ததால் அதனை புலாவ் என்று சொல்கிறார்கள்), ஒரு கரண்டி சைட் டிஷ் (போன்று இரண்டு), இரண்டு ரோடி, ஒரு சிறிய ரசகுல்லா - 290 ரூபாய், எனக்கு 3 கரண்டி மேற்படி புலாவ் போன்று, மலாய் பனீர் சைட் டிஷ் - 200 ரூபாய். கட்டுப்படியாகுமா (என்று எனக்குத் தோன்றியது)

   நீக்கு
  2. வெங்கட் சொல்லும் கடைகள் கையேந்தி பவன் அல்லது சிறு கடைகள். எனக்கு சரிப்பட்டு வருமா என்ற சந்தேகம் இருந்ததால் சாப்பிடவில்லை.

   நீக்கு
 6. சுவையான தகவல்கள்.
  சிலர், பானி பூி செய்பவரின் கையைப் பார்த்து சுகாதாரம் குறித்து பயப்படுவதுண்டு.
  அவர்களுக்கு இவ்வாறு முழுவதுமாக ஒரு தட்டில் வைத்து குடுத்தால் கொஞ்சம் நிம்மதியாக சாப்பிடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 7. சுவையான பகிர்வு..
  படங்களை பார்த்தால் சாப்பிட தூண்டுகிறது.
  எனக்கு இனிப்பு பிடிக்காது.

  பதிலளிநீக்கு
 8. ஆஹா ...ஆனாலும் புது இடத்தில முயற்சிக்க கொஞ்சம் பயமே வெங்கட் சார் ... ப்ளூ லஸ்ஸி கடை மட்டும் செல்ல வேண்டும் என bookmark செய்து இருந்தோம். ஆனால் நாங்கள் செல்லும் பொழுது கடை இல்லை

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....