செவ்வாய், 28 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"BE A FIRST-RATE VERSION OF YOURSELF, INSTEAD OF A SECOND-RATE VERSION OF SOMEBODY ELSE." — JUDY GARLAND.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்

 

பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி

 

பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்

 

பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க

 

சென்ற பகுதியில் வாரணாசி நகரில் நீங்கள் சுவைக்க வேண்டிய, சுவைக்கக் கூடிய உணவுகள் குறித்து பார்த்தோம்.  தொடரின் இந்தப் பகுதியிலும் இன்னும் சில பகுதிகளிலும், நாம் இந்தத் தொடரில் பார்த்த மூன்றாம் நதிக்கரை நகரமான வாரணாசியிலிருந்து ஒரே ஒரு நாளைக்கு விலகி நான்காம் நதிக்கரை நகரமான ப்ரயாக்ராஜ் சென்று வந்தது குறித்து பார்க்க இருக்கிறோம். வாரணாசி நகரில் இரயிலில் வந்து இறங்கிய போது கிடைத்த ஓலா ஓட்டுனரிடம் அவரது தொடர்பு எண் வாங்கி வைத்திருந்தோம் என்று சொல்லி இருந்தேன். இரவு உணவை முடித்துக் கொண்டு, அவரிடம் தொடர்பு கொண்டு காலை புறப்பட்டு ப்ரயாக்ராஜ் சென்று சங்கமத்தில் குளித்து, சில கோவில்கள் பார்த்த பிறகு, வாரணாசி அதே நாள் மாலையில் திரும்பவேண்டும், எத்தனை பணம் வேண்டும் என்று கேட்க, 1700 ரூபாய் என்று குருட்டாம்போக்கில் சொன்னார்.  மிகவும் குறைவாக இருக்கிறதே, அதுவும் ஒரு நாள் முழுவதும் எங்களுடன் இருக்க வேண்டும், சென்று வர குறைந்தது 250 கிலோமீட்டர் (125 + 125) ஆகுமே, என்று நினைத்தாலும், அவர் சொன்ன கட்டணத்திற்கு ஒப்புக் கொண்டு, காலை ஆறு மணிக்குள் வந்து விடுங்கள் என்று சொல்லி விட்டோம்.   

 

இரவு தூங்கிய பின்னர் அதிகாலை எழுந்து புறப்பட்டோம்.  ஓட்டுநருக்கு அழைத்தபோது அவர் அழைப்பை ஏற்கவே இல்லை.  என்னடா இது என தொடர்ந்து அழைத்தபோது, ஒரு வழியாக அழைப்பை ஏற்று பேசியபோது, தான் கட்டணம் ஏதோ நினைவில் குறைவாகச் சொல்லியதாகக் கூறினார். கடைசி நேரத்தில் இப்படிச் சொன்னால் என்ன செய்வது என்று அவரிடம் பேசி, எத்தனை கட்டணம் வேண்டும் என்பதை மீண்டும் பேசி அவரை வர வைத்தோம்.  20 நிமிடம் ஆனது அவர் வந்து சேர! ஆனாலும் நாங்கள் விடாமல் அவரிடம் பேசி, அவர் வந்த பின்னர் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு கீழே வந்தோம்.  வாரணாசியிலிருந்து ப்ரயாக்g நோக்கிய பயணத்தினை துவங்கினோம்.  பயணித்தபடியே அந்த ஓட்டுநரிடம் இப்படி தப்பாக கட்டணத்தைச் சொன்னது ஏனோ, எனக் கேட்டபோது, “ஏதோ சொல்லி விட்டேன்.  நீங்கள் அதே கட்டணம் தந்து தான் வருவேன் என்று சொல்லி விடுவீர்களா என பயந்தேன், அதனால் தான் வர யோசித்தேன்.  சரியான கட்டணம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டால் வண்டி உரிமையாளருக்கு நான் கொடுக்க வேண்டி வந்து விடுமே! என்ற பயமும் இருந்தது” என்றார்.  

 

முன்பை விட வாரணாசி - ப்ரயாக்ராஜ் சாலையும் நன்றாகவே இருக்கிறது.  சரியான வேகத்தில் போய்க் கொண்டிருந்தவரை வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி தேநீர் அருந்தலாம் என்று சொல்ல, அவர் நிறுத்திய இடம் ஒரு சாலை வழி உணவகம் அல்ல - ஒரு சிறு கொட்டகையில் இருந்த டீக்கடை.  அங்கேயே பக்கோடா, ஜிலேபி எனவும் வைத்திருந்தார்கள்.  எது கேட்டாலும் ஒரு பேப்பரில் வைத்து தருகிறார் அந்த கடைக்காரர்.  பக்கோடா பொரித்த எண்ணெய் பார்த்தபோது சாப்பிடத் தோன்றவில்லை.  தேநீர் மட்டும் வாங்கிக் கொண்டு, கூடவே கிடைத்த பிஸ்கெட் பாக்கெட் ஒன்றையும் வாங்கிக் கொண்டு “ஒரு கடி, ஒரு குடி” என சுவைத்தோம்.  சில நிமிடங்கள் அங்கே அமர்ந்து இருந்த பிறகு புறப்பட்டோம்.  நேரடியாக சங்கமம் பகுதிக்கு அருகில் இருந்த கரைப்பகுதிக்கு எங்களைக் கொண்டு சேர்த்தார் எங்கள் வாகன ஓட்டி!  

 

ப்ரயாக்ராஜ் என்று தற்போது பெயரிடப்பட்டுள்ள, பல நூற்றாண்டுகள் முன்பு பெயர் பிரயாகை என்று இருந்ததை அலஹாபாத் என்று பெயர் மாற்றம் செய்ததை, இப்போது மீண்டும் மாற்றியுள்ள புண்ணிய பூமியில், முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள் என்று சொன்னால், திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் யமுனா, கங்கை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு பிரதான இடம்! மூன்று நதிகளில் இரண்டு நதிகள் - கங்கை மற்றும் யமுனை கண்களுக்குத் தெரிந்தாலும் மூன்றாவதான சரஸ்வதி நம் கண்களுக்குத் தெரிவதில்லை. திரிவேணி சங்கமத்தில் நீராடுவது மிகவும் சிறப்பானது என்பது நீண்ட நெடும் காலமாக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை. இந்த நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவது மிகவும் கடினம் - ஆழம் அதிகம். ஆகவே ஆற்றில் படகுகள் வழி பயணித்து, படகுகளுக்கு நடுவே அமைத்திருக்கும் பலகையில் இறங்கி நீராடலாம். யமுனை நதிக்கரையில் இருக்கும் நூற்றுக்கணக்கான படகுகளில் ஒன்றில் பயணித்து சங்கமிக்கும் இடம் கடந்து சென்று குளிக்க வேண்டும். 


 

ப்ரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமம் வரை படகில் உங்களை அழைத்துச் செல்ல கஷ்டப்பட்டு துடுப்பு போட்டு படகை செலுத்தப் போவது படகோட்டிகள் தான் என்றாலும் நேரடியாக அவர்களிடம் நீங்கள் பேசிக் கொள்ளமுடியாது.  படகில் செல்ல நீங்கள் பேச வேண்டியது கரையில் இருக்கும் வேறு நபர்களிடம் தான்.  இங்கே படகுகள் செலுத்த நிறைய படகோட்டிகள் தத்தமது படகுகளுடன் இருந்தாலும் நாம் அவர்களிடம் நேரடியாக பேசி கட்டணத்தை முடிவு செய்து கொள்ள முடியாது. இதற்கென அங்கே நிறைய இடைத்தரகர்கள் இருப்பார்கள்.  இடைத்தரகர்கள் அரசாங்கத்தின் அனுமதி பெற்று, அதாவது படகு செலுத்த டெண்டர் மூலம் ஏலம் எடுத்து அரசுக்கு பணம் கட்டுவதால் அவர்கள் சொல்வது தான் கட்டணம். அரசு பணம் இவ்வளவு தான் வாங்க வேண்டும் என்ற அதிகபட்ச/குறைந்தபட்ச கட்டணமோ நிர்ணயிப்பது இல்லை. பல்லாண்டு காலமாக இதே நிலை தான். மூன்றாயிரம், நான்காயிரம் என்று அதிகமாகவே சொல்வார்கள். நிறைய பேரம் பேச வேண்டும். ஒரு வழியாக பேசி கட்டணம் உங்களுக்கு ஒத்து வரும் பட்சத்தில் ஒப்புக்கொண்டால் கட்டணத்தை படகோட்டி இடம் கொடுங்கள் என்று சொல்லியோ, அவரே வாங்கிகொண்டோ நகர்ந்து விடுவார் - அடுத்த கிராக்கி நோக்கி! 

 

நாங்கள் அங்கே சென்ற போதும் எங்களிடம் இப்படியான சில நபர்கள் பேசினார்கள் - எங்களிடம் - நாங்கள் மூன்று பேர் மட்டும் சென்று திரும்ப எங்களிடம் கேட்ட தொகை மிகவும் அதிகம் - 2500 ரூபாய்!  நிறைய பேச வேண்டியிருந்தது.  பலமாக பேரம் பேசினாலும் ரொம்பவும் கறாராகவே இருந்தார் அந்த இடைத்தரகர்.  சங்கமம் பகுதிக்குச் செல்லாமல் கரையோரமாகவே குளித்து விடலாமா என்று கூட யோசித்தோம்.  நான் முன்னரே சில முறை சென்று சங்கமத்தில் குளித்து இருப்பதால் கவலையில்லை.  ஆனால் நண்பரும் அவரது இல்லத்தரசியும் முதல் முறை அங்கே வருகிறார்கள் என்பதால் படகு அமர்த்தி சங்கமம் பகுதிக்குச் செல்ல முடிவு செய்தோம்.  அப்படிச் சென்றபோது எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன, படகோட்டிகள் என்ன சொன்னார்கள் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்லவா?   தொடர்ந்து பயணத்தில் இணைத்திருங்கள் நண்பர்களே! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

10 கருத்துகள்:

 1. நாங்களும் அங்கு நீராடினோம்.  பேரம் எங்கள் ட்ராவலர் பேசி விட்டார்.  படகோட்டிகளுக்கு மட்டும் நீங்கள் யாராவது விரும்பினால் ஐம்பது நூறு கொடுக்கலாம் என்றார்கள்.  ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தோம்.   உங்கள் ஓட்டுநர் கேட்ட சரியான கட்டணம் என்ன என்று நீங்கள் சொல்லவில்லையே...

  பதிலளிநீக்கு
 2. டாக்சி கட்டணம் மற்றும் எவ்வளவுக்கு படகோட்டி பயணத்துக்குப் பேரம் பேசினீர்கள் என்று சொல்லவில்லை.

  பதிலளிநீக்கு
 3. இந்த படகோட்டி பிசினெசை வாரணாசி கங்கைக் கரையிலும் பார்த்தோம். எவ்வளவு கேட்பாங்க என்பது அத்துப்படியாகிவிட்டது

  பதிலளிநீக்கு
 4. பக்தி என்பது வியாபாரம் ஆகி விட்டது என்ன செய்வது ?

  பதிலளிநீக்கு
 5. இந்தப் பயணம் அழகான பயணம் ஆனால் இப்படி பல வியாபாரங்கள்தான் சில சமயம் யோசிக்க வைக்கிறது. அவர்களும் பிழைக்க வேண்டியதுதான் ஆனால் ரொம்ப அத்து மீறிக் கேட்பது கொஞ்சம் யோசிக்கவும் வைக்கிறது. அவர்கல் அங்கு வரும் மக்களின் நாடித் துடிப்பை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்!

  ஏன் அரசு இதற்குக் கட்டணம் நிர்ணயிக்கவில்லை?

  கீதா

  பதிலளிநீக்கு
 6. தொடர்கிறோம்......எங்கும் வியாபாரம்.

  பதிலளிநீக்கு
 7. தொடர்கிறோம். அடுத்த பகுதி மேலும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.
  பிரயாகையில் 2015 இல் சென்றபோது சற்று காய்ச்சல் காரணமாக என்னால் குளிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 8. இந்த நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவது மிகவும் கடினம் - ஆழம் அதிகம். ஆகவே ஆற்றில் படகுகள் வழி பயணித்து, படகுகளுக்கு நடுவே அமைத்திருக்கும் பலகையில் இறங்கி நீராடலாம்.//

  நாங்கள் அப்படித்தான் நீராடினோம்.
  ரயில் நிலையத்திலிருந்தே இடை தரகர்கள் இருக்கிறார்கள், படகில் அழைத்து செல்வரிடம் வாகன ஓட்டிகள் கொண்டு விடுகிறார்கள். அவர்களுக்கும் கமிஷன் உண்டு.

  பதிலளிநீக்கு
 9. நாங்கள் 1500 கொடுத்தோம். அப்புறம் அந்த படகோட்டி க்கு தனியாக தந்தோம்.

  காசியிலிருந்து சில உடைகள் வாங்கி இங்கு கொடுக்க எடுத்து வந்தேன். படகோட்டி யிடம் பேசும் பொழுது கல்யாண வயதில் பெண்கள் இருப்பதாக கூறினார். அதனால் அதை படகோட்டி பெண்களுக்கே கொடுக்க, எனக்கு இல்லையா என்று அவர் கேக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அடுத்தமுறை எடுத்து வருகிறோம் என கூறி வந்தோம். ஆனாலும் அவரின் பெண்களுக்கு கொடுத்ததில் அவருக்கு மிக மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....