வியாழன், 16 மார்ச், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி முப்பத்தி ஆறு - வாரணாசி - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIFE TEACHES US NOT TO COMPLAIN ABOUT OTHERS BUT TO CHANGE ONESELF, IF ONE WANTS PEACE.  BECAUSE IT’S EASIER TO PROTECT YOUR FEET WITH SLIPPERS THAN TO CARPET THE WHOLE WORLD.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

சென்ற பகுதியில் தென்னிந்திய உணவுகள் குறித்தும், வாரணாசி நகரில் அமைந்திருக்கும் மிகவும் பழமையான தென்னிந்திய உணவகம் குறித்தும் பார்த்தோம்.  அந்த உணவகத்தில் ஒரு காஃபி குடித்த பின்னர் நாங்கள் சென்ற இடம் கூட தென்னிந்தியாவுடன் சம்பந்தம் கொண்ட இடம் தான்.  நகரத்தார்களால் பராமரிக்கப்படும் காசி விசாலாக்ஷி கோவில் தான் நாங்கள் அடுத்ததாகச் சென்ற இடம்.  


 

காசி விசாலாக்ஷி.... காசி விஸ்வநாதர் கோயில் உள்ளே இல்லாமல் வெளியே குடி கொண்டிருக்கிறார் காசி விசாலாக்ஷி.... மிகவும் அழகான கோயில். பின்புறம் சுயம்பு உருவம்... முன்புறம் ஆதி சங்கரர் வைத்த சிலாரூபம். நகரத்தார்கள் இந்தக் கோவில் அமைவதில் அதிக அளவில் பங்கு கொண்டு இருக்கிறார்கள். இங்கே காசி நகரில் நடக்கும் பல நல்ல விஷயங்களில் நகரத்தார் பங்கு மிக மிக அதிகம். சக்தி பீடங்களில் ஒன்றான இந்தக் கோவிலில் சதி தேவியின் காது வளையங்களும் கண்களும் விழுந்ததாக நம்பிக்கை. விசாலாக்ஷி என்ற பெயருக்கு அகன்ற கண்களைக் கொண்டவள் என்பது தான் அர்த்தம். கங்கை நதிக்கரையில் அமைந்த எண்ணற்ற படித்துறைகளில் (Ghat), இந்த காசி விசாலாக்ஷி கோயில், மீர் Gகாட் பகுதியில் அமைந்திருக்கிறது. 


 

மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு காசி நகரின் குறுகிய சந்துகள் வழியே தான் செல்ல வேண்டியிருக்கும். சரியான வழி காட்டும் பதாகைகள் இருந்தால் இங்கே பயணமாக வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். என்னதான் இந்த காலத்தில் Google Maps உதவியுடன் உங்களால் பல இடங்களுக்குச் சென்று வர முடியும் என்றாலும் வழிகாட்டி பதாகைகள் இருந்தால் அலைபேசி பயன்படுத்தத் தெரியாத மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் அழகான கோயில்.... தென்னிந்திய பாணியில் அமைந்த இந்தக் கோவில், காசி வரும் போது பார்க்க வேண்டிய கோவில்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலில் காசி விசாலாக்ஷி அம்மனுக்கு பக்தர்கள் சாற்றிய வஸ்த்திரங்களை விற்பனை செய்து விடுகிறார்கள். ரூபாய் 400 முதல் விலை இருக்கிறது.  எண்ணற்ற வஸ்த்திரங்கள் வந்து கொண்டே இருப்பதால் இந்த ஏற்பாடு. பக்தர்களும் அம்மனுக்கு சாற்றிய புடவை என்பதால் பயபக்தியுடன் வாங்கிக்கொள்கிறார்கள். உங்கள் காசி பயணத்தில் இந்த கோவிலுக்கும் கண்டிப்பாக சென்று வாருங்கள்....


 

காசி நகரிலும் நமது தமிழ் மொழியில் கோவிலுக்குள் பதாகைகள் வைத்து இருப்பதைப் பார்க்கும் போது மனதில் ஒரு உற்சாகம் வந்து விடுகிறது.  பல வியாபார தலங்களில் தமிழ் பதாகைகள் இருந்தாலும் அவை பொதுவாக தமிழர்களை அவர்களது மொழியில் எழுதி வைத்தோ, அல்லது ஓரிரு வார்த்தைகள் பேசி அவர்கள் விற்கும் பொருட்களை வாங்க வைக்கும் யுக்தியாகவே கொள்ள முடியும். ஆனால் கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும், தமிழில் எழுதி வைத்திருப்பதை பார்க்கும்போது மனதில் நிச்சயம் மகிழ்ச்சி உண்டாகும் அல்லவா?  இந்தக் கோவில் தினமும் காலை 04.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.  கோவில் நடை திறந்திருக்கும் நேரங்களில் கால தேச வர்த்தமானத்தைப் பொறுத்து மாறுபாடுகள் இருக்கலாம் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்.  



 

காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று மூவரையும் சேர்த்து சொல்வது நம் வழக்கம் அல்லவா?  மூன்று கோவில்களிலும் சில முறை பயணித்து தரிசனம் கிடைத்திருக்கிறது என்றாலும், மதுரை மீனாக்ஷியை தரிசித்து நீண்ட நெடுங்காலம் ஆகிவிட்டது. இந்தப் பயணத்தில் காசியில் குடிகொண்டிருக்கும் விசாலாக்ஷியை தரிசனம் செய்து கொண்டாயிற்று.  மதுரை செல்லும் வாய்ப்பு என்றைக்கு அமைகிறதோ அன்று பார்க்கலாம்!  கோவிலுக்குச் சென்ற பிறகு அங்கிருந்து மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.  காசி நகரம் முழுவதும் கங்கையின் கரையோரமாகவே நிறைய கோவில்களுண்டு.  ஒவ்வொரு கோவிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை என்றாலும் எல்லா கோவில்களும் புகழ்பெற்றவை அல்ல.  எல்லாவற்றையும் சென்று பார்க்கவும் நேரம் இருப்பதில்லை. கங்கையின் கரையோரமாகவே ஒவ்வொரு Gகாட் வழியாகவே நடந்து வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு Gகாட் அமைந்ததற்கும் பின்னர் நிறைய கதைகள் இருக்கலாம்.  அப்படி ஒரு Gகாட் - மான்மஹல் Gகாட்!  


 

மான்மஹல் Gகாட் (படித்துறை) என்பது மன்மந்திர் என்று பிரபலமாக அழைக்கப்படும் மான்மஹல் அமைந்துள்ள இடம். (DH)தசாஸ்வமேத்(dh) படித்துறைக்கு அருகில் உள்ள படித்துறை மற்றும் இந்த அரண்மனை கி.பி 1600 ஆம் ஆண்டில் அமேரின் கச்வாஹா ராஜபுத்திர மன்னர் மான் சிங் அவர்களால் கட்டப்பட்டது. கட்டிடக்கலை ரீதியாக, மான்மஹல் Gகாட் மற்றும் அரண்மனை ராஜபுத்திர மற்றும் முகலாய பாணிகளின் கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டு. புனித நதியான கங்கையில் உள்ள மன் மந்திர் படித்துறையில் கல்லால் கட்டப்பட்ட சூரிய வான்காணகம் (Solar Observatory) ஒன்றும் அமைந்திருக்கிறது. 


 



ஜெய்ப்பூர், டெல்லி, உஜ்ஜைன், மதுரா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி. 1737) ஜெய்பூரின் வானியலாளர் கச்வாஹா மன்னர் ராஜா ஜெய் சிங் அவர்களால் கட்டப்பட்ட ஐந்து சூரிய வான்காணகங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெய்பூரின் ராஜா ஜெய் சிங் மிகவும் திறமையான மன்னராகவும், வானியல் மற்றும் 'வாஸ்து சாஸ்திரம்' ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் இருந்திருக்கிறார் என்பதை இவர் கட்டிய சூரிய வான்காணகங்கள் பார்க்கும் போது புரிந்து கொள்ளலாம். இந்த படித்துறை ஒட்டி நிறைய மேடைகள் கங்கைக்கரையில் இருக்கிறது.  அப்படி ஒரு மேடையில் ஒரு காவி உடை தரித்தவர் அமர்ந்து இருக்க, அதே மேடையில் நானும் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்து கொண்டிருந்தேன்.  அந்த சமயத்தில் என் விருப்பத்திற்கேற்ப, என்னை நிழற்படம் எடுத்தார் நண்பரின் இல்லத்தரசி.  இந்தப் பயணத்தில் இப்படியான சில படங்கள் எடுக்க முடிந்தது - எதற்காக இந்தப் படங்கள்? பெரிதாக ஒன்றும் காரணம் இல்லை. தொடர்புகளற்ற இடங்களில் சில நாளேனும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு என்றாலும் இப்படியான பயணங்கள், தற்போதைய சூழலில் மேற்கொள்ள முடிவதில்லை. அதனால் செல்லும் பயணங்களில் சில படங்கள் தனிமையில் - அல்லது தியானத்தில் எடுத்துக் கொள்ள ஆசை! 🙂ஆசை யாரை விட்டது!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

14 கருத்துகள்:

  1. ஒரு வீட்டின் வாயிற்படி போல இருக்கும் இந்தக் கோவிலுக்கு நானும் சென்று வந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சி!  நீங்கள் சொன்னபிறகுதான் நானும் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலட்சுமி மூவரையும் தரிசித்திருக்கிறேன் என்பது உரைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இந்தக் கோவில் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்கள் வருகையும் கருத்துப் பகிர்வும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  2. காசி விசாலாக்ஷி. கோவில் பதிவு அருமை. படங்களும் நன்றாக இருக்கிறது.
    நீங்களும் தியானம் செய்யும் படம் அருமை.

    //தொடர்புகளற்ற இடங்களில் சில நாளேனும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு என்றாலும் இப்படியான பயணங்கள், தற்போதைய சூழலில் மேற்கொள்ள முடிவதில்லை//

    இன்னும் கடமைகள் நிறைய இருக்கே! தொடர்புகளற்ற இடங்களில் தனிமையில் இருக்க முடியாதே!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இன்னும் கடமைகள் இருக்கே” - ஆமாம் அம்மா. நிறையவே இருக்கிறது. ஆசைப்படுவது எல்லாம் கிடைத்து விடுவதில்லையே!

      தங்களது வருகை மகிழ்ச்சி அளித்தது. கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  3. காசி விசாலாக்ஷியைத் தரிசிக்கணும். அனேகமா மாலையில்.

    நான்கூட, நீங்கள் அவரிடம் ஏதேனும் கற்றுக்கொண்டிருக்கிறீர்களோ என் நினைத்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று மாலை நீங்கள் காசி விசாலாக்ஷியை தரிசனம் செய்ய இருப்பது அறிந்து மகிழ்ச்சி. முடிந்தால், வாராஹி (காலை 04.30 மணி முதல் 09.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்) மற்றும் பைரவர் கோவில்களுக்கும் சென்று வாருங்கள்.

      தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. அந்த உற்சாகம் மிகவும் பிடித்தது... அருமை...

    பதிலளிநீக்கு
  5. காமாட்சி, மீனாட்சி இருவரையும் சந்தித்திருக்கிறேன். விசாலாட்சியைத்தான் இன்னும் சந்திக்கவில்லை. நேரம் கேட்டிருக்கிறேன்!!

    தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

    //தொடர்புகளற்ற இடங்களில் சில நாளேனும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு என்றாலும்//

    எனக்கும் இப்படியான ஆசைகள் (பேராசையோ?!!) உண்டு.

    அந்தப் படத்தில் சட்டென்று நீங்கள் என்பதுதெரியவில்லை. அப்புறம் க்ளிக்கிப் பார்த்ததும் தெரிந்தது நீங்கள் என்பது,

    எனக்கு இப்படி கடற்புரம், நதிப்புரத்தில் பாறை அல்லது மணலில் அமர்ந்து அவற்றைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பதே தியானம்தான்... அமர்வது ரொம்பப் பிடிக்கும். தனியாக...அமர்தல்....

    படங்களெல்லாம் நன்றாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அருமை ! //கங்கையின் கரையோரமாகவே ஒவ்வொரு Gகாட் வழியாகவே நடந்து வந்து கொண்டிருந்தோம்.// எனக்கும் இப்படி கரையோரமாகவே நடந்து பார்க்க ஆசைதான்.உடல்நலம் ஒத்துழைக்கலையே (-: படித்துறையில் உக்கார்ந்து விஷ்ணுசஹஸ்ரநாமம் வாசிக்கணும் என்ற ஆசை கூட நடக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே பின்னூட்டம் துளசி கோபால்.

      நீக்கு
  7. தகவல்கள் மிக அருமை சார்.
    விசாலாக்ஶி என்னும் பெயரின் பொருளையும் அறிந்துகொண்டேன்.
    தொடர்பற்ற இடம் என்றவுடன், மும்பையிலிருந்து 12 மணிநேர பயண தூரத்தில் உள்ள டாபோளி என்னும் இடம் சென்று ஒரு நாள் அலைபேசி இணைப்பே இல்லாமல் நிம்மதியாக இருந்த அணுபவங்கள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  8. காஞ்சி, மதுரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது காசி தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்குமா ? தெரியவில்லை. உங்கள் பகிர்வின் மூலம் தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  9. காசி பயண அனுபவங்கள் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. காசி விசாலாக்ஷி....அமைதியாக தரிசனம் தருகிறாள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி கோவில்களை கண்டு வியந்து அது போல இருக்கும் என எண்ணி சென்றேன். ஆனால் காசி விசாலாக்ஷி அம்மா சிறிய கோவிலில் பெரிய கீர்த்தியுடன் இருக்கிறார். மனதிற்கு நிறைவு தரும் தரிசனம் கிட்டியது

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....