புதன், 29 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"THOSE WHO BRING SUNSHINE INTO THE LIVES OF OTHERS CANNOT KEEP IT FROM THEMSELVES." — J.M. BARRIE.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி நான்கு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ; விதி நாற்பது ; விதி நாற்பத்தி ஒன்று ; விதி நாற்பத்தி இரண்டு ; விதி நாற்பத்தி மூன்று ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 


நாற்பத்தி நான்காம் விதி சொல்வது, "போட்டியாளரை பொறுமையிழக்கச் செய்யவும், நிராயுதபாணியாக்கவும், பிரதிபலிப்பு என்னும் உத்தியைக் கைகொள்."

 

மூல நூலில், இதை "DISARM AND INFURIATE WITH THE MIRROR EFFECT" என்கிறார் எழுத்தாளர்.

 

இவ்வுலகில், ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதையும், ஒவ்வொருவரும் ஒரு வித்யாசமான நோக்கத்துடன் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் உணராத சிலர், வீணே நம்மை போட்டியாளர்களாகக் கருதுவதும், அவர்கள் வளர்ச்சிக்குக் குறுக்காக நாம் நிற்பதாகவும் எண்ணுவதுண்டு.

 

இத்தகைய எண்ணமே, காலப்போக்கில் நம் மீதான பொறாமையாக மாறி அவர்கள் நம் நற்பெயரைக் களங்கப்படுத்தவும் முயல்வதுண்டு.

 

இவர்களைப் புரிய வைத்துத் திருத்துவது பல சமயங்களில் அசாத்தியமாகவே இருப்பதால், இவர்களை நாசுக்காகக் கையாளும் உத்தியை இவ்விதி மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

இவ்வுத்தியின் வேறு சில வடிவங்களால், நண்பர்களையும், நம் மேலதிகாரிகளையும் கவரும் முறைகளையும் அறிந்துகொள்ளலாம்.

 

1. எதிர்பார்ப்பைப் பிரதிபலித்து போட்டியாளரின் வலிமையை மட்டுப்படுத்துதல்;

 

போட்டியாளரைச் சமாளிக்க நம்மிடம் தற்போதைக்கு எந்த உத்தியும் இல்லாத போது, சிறிது காலத்தைச் சம்பாரித்துக்கொள்ள இந்த வழிமுறை சிறப்பாகப்  பயன்படுவதுண்டு.

 

"சரணாகதி" எனும் இருபத்து இரண்டாம் விதிக்கிணங்க, போட்டியாளர் சொல்வதையெல்லாம் நம்புவது போலவும், அவர் எதிர்பார்ப்பது போலவே செயல்படுவது போலவும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வது இவ்வுத்தி.

 

ரஷ்யாவும் அமெரிக்காவும், தங்கள் அணுகுண்டுகளின் இருப்பை வெளிப்படையாக அறிவிப்பதாக 2020 வரை கடைபிடித்த நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் "New START Treaty" இதற்கான சிறப்பான உதாரணம்.

 

1991 இல் சிதைந்த சோவியத் குழுமத்தால் பாதிக்கப்பட்ட ரஷ்யா, அமெரிக்காவின் நம்பிக்கையைப் பெற்று அதன் ஆதிக்க ஆற்றலை மட்டுப்படுத்தவும், தம் வலிமையை இரகசியமாகப் பெருக்கவும் கையாண்ட பல உத்திகளில் ஒன்றுதான் இந்த ஒப்பந்தம்.

 

இருப்பினும், இதில் ஒருவரையொருவர் பல வழிகளில் சந்தேகத்துடன் நூதன முறைகளில் உளவு பார்ப்பதால், எவர் முதலில் தம் பொறுமையை இழந்து அடாத செயல்களில் இறங்கி அவப்பெயரைச் சம்பாரிப்பார் எனும் மறைமுகப் போட்டி நடந்துகொண்டே இருக்கும்.

 

2023 ஃபிப்பிரவரியில், ஒப்பந்தத்தை ரஷ்யா முறித்தது போல், தாம் வலிமை பெற்றதாக உறுதி கொண்டபின், ஒருவரையொருவர் வெளிப்படையாக எதிர்க்கும் சூழலும் பின் நாட்களில் கட்டாயம் உருவாகும்.

 

2. நார்ஸிஸ விளைவு;

 

கிரேக்க புராணக் கதைகளில், நார்ஸிசா என்னும் அழகிய இளைஞன், குளத்தில் பிரதிபலித்தது தன்னுடைய பிம்பம்தான் என்பதை உணராமல், நெடுநாள் ஏமாற்றப்பட்ட கதை ஒன்று உண்டு.

 

அதுபோல், தம்மைப் போலவே சிந்திக்கும் மனிதர்களிடம், ஒருவகை அபிமானம் கொள்வது மனிதர்களின் இயல்பு.

 

உளவியல் மருத்துவர்கள், நோயாளிகளின் மனதைத் திறக்கச் செய்ய, நோயாளிகளின் ஆழ் உணர்வுகளைத் தாமும் அடைவதாகக் காட்டிக் கொள்ளும் சிகிச்சை முறையை பரவலாகக் காணலாம்.

 

அறிவார்ந்த சான்றோர்களின் நட்பைப் பெறவும், அவர்களிடமிருந்து ஞானம் பெறவும், அவர்களின் ஆழ்நிலை உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் வெளிப்படையாகப் பிரதிபலித்து பின்தொடர்தலை இவ்வழிமுறையின் நேர்மறையான பயன்பாடாகக் கொள்ளலாம்.

 

அச்சான்றோர்களிடமிருந்து நாம் முரண்படும் இடங்களை, அவர்களிடம் தனிமையாகவும், தகுந்த சமயம் பார்த்தும் விவாதிப்பதால், மேலும் பலதரப்பட்ட உலகியல் சிந்தனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

 

3. நீதியை உணர்த்தும் பிரதியெடுத்தல் முறை;

 

போட்டியாளர்கள் இழைத்த தவறுகளை, அவர்கள் பாணியிலேயே செயல்பட்டு புரியவைப்பதே  இவ்வழிமுறை ஆகும்.

 

இரண்டாம் உலகப்போருக்குப் பின், தம் ஆசிய போட்டியாளர்களைச் சமாளிக்க, ஜப்பானுக்கு மட்டும் தம் நுண் சில்லுகள் "Chips" தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வழங்கிய அமெரிக்காவைக் குறித்து நாற்பத்தி இரண்டாம் விதியில் விவாதித்திருந்தோம்.

 

அதைச் சிறப்பாக உபயோகித்துக்கொண்ட ஜப்பான், ஒரு பக்கம் அமெரிக்கா சொல்வதையெல்லாம் பின்தொடர்ந்தாலும், மரு பக்கம் "VLSI" என்னும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் குழுவை உள்நாட்டில் உருவாக்கி, தம் பெரு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து தொழில்நுட்பத்தை மேன்படுத்துவதற்காக பணியாற்றும் சூழலை ஏற்படுத்தியது.

 

அத்தகைய ஒத்துழைப்பால், 1980 களில், அமெரிக்காவை விடத் தரமான நுண்சில்லுகளையும், பொதுப்பயன்பாட்டுக் கருவிகளையும் உருவாக்கும் திறனை, நிக்கன், சோனி போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் பெற்றன.

 

அதுவரை, ராணுவப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலை மாறி, அமெரிக்க ராணுவமே, தம் உபகரணங்களுக்காக ஜப்பானைச் சார்ந்திருக்கும் அதிர்ச்சியான திருப்பம் ஏற்பட்டது.

 

4. தோற்றமயக்க விளைவு;

 

போட்டியாளர்களைக் குழப்ப, நம்மைப் போன்ற சிறிய மாதிரி உருவங்களை உருவாக்கி, அவ்வுருவங்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறையைச் சோதித்துப் பார்ப்பதே இவ்வுத்தி.

 

மஹாபாரதத்தில், அதர்மமாக நடந்துகொண்டதால், போரில் மாண்ட தம் புதல்வர்களுக்காகப் பீமசேனரைப் பழிவாங்கத் துடித்தார் திருதராஷ்டிரர் அவர்கள்.

 

அதை அறிந்த கண்ணபிரான், ஆசிர்வாதம் பெறச் சென்ற பீமசேனருக்கு முன், அவரைப் போலவே ஒரு பாவையை அனுப்பி, திருதராஷ்டிரரின் கொலை எண்ணத்தை அனைவருக்கும் வெளிப்படுத்தினார்.

 

இதுபோல, தீய நோக்கத்துடன் செயல்படும் நம் போட்டியாளர்களின் குணத்தை, பொதுமக்களிடம் வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இந்த உத்தி பயன்படுத்தப்பட வேண்டும்.

 

மேற்காட்டப்பட்ட உத்திகளை, அவற்றிற்கானத் தகுந்த சூழலை  உணர்ந்து உபயோகித்தால் மட்டுமே, அனைவருக்கும் நலம் பயக்கும் என்பதை மனதில் கொள்வோம். 

 

போட்டியாளர்களைச் சீர்திருத்தி வழிக்குக் கொண்டுவருவது குறித்து இவ்விதியில் விவாதிக்கப்பட்டது.


உலகின் பெரிய அமைப்புகளில் சீர்திருத்தங்களைக் கொணர விரும்பும் அறிவார்ந்த தலைவர்கள் கையாளும் சக்திவாய்ந்த நுட்பம் ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா? 


நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

9 கருத்துகள்:

  1. நல்ல விவரிப்பு.  சில சமயங்களில் இப்படி விதியையெல்லாம் உபயோகப்படுத்தி சிந்தித்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ள வேண்டுமா என்று தோன்றுகிறது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா. திருப்பதி மஹேஶும், இதுபோலவே வாழ்க்கை மிகச் சிக்கலானதாக இவ்விதிகள் காட்டுவதாக தன் என்னத்தை என்னிடம் பதிவு செய்திருக்கிறார்.
      கடினமும் சிக்கலும் நிறைந்ததே நம் வாழ்க்கை. அதுவே வாழ்வின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது என நான் சொல்வேன்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. இவ்விதியின் அலசல் சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்வதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. நன்றாக எடுத்துச் சொன்னீர்கள். சிக்கலான விதியை பிரயோகிப்பதில்தான் தயக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம், நூலின் இறுதிக்கட்ட விதிகள் சற்று சிக்கலானவையே.
      தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு
  4. இந்த விதியின் உப உத்திகள் வியாபாரம், நாடுகள் போன்றவற்றிற்கு உதவக் கூடும்.

    தனிப்பட்ட முறையில் என்றால்

    //ஒவ்வொருவரும் ஒரு வித்யாசமான நோக்கத்துடன் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் உணராத சிலர், வீணே நம்மை போட்டியாளர்களாகக் கருதுவதும், அவர்கள் வளர்ச்சிக்குக் குறுக்காக நாம் நிற்பதாகவும் எண்ணுவதுண்டு.

    இத்தகைய எண்ணமே, காலப்போக்கில் நம் மீதான பொறாமையாக மாறி அவர்கள் நம் நற்பெயரைக் களங்கப்படுத்தவும் முயல்வதுண்டு.//

    இது தனிப்பட்ட முறையிலும் குடும்பங்களிலும் உண்டு. ஆனால் இதனைக் கையாள்வதென்பது தனி... அதற்கு ரொம்ப யோசித்துக் குழப்பிக் கொள்ள வேண்டியது வராது..

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....