புதன், 4 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி ஒன்பது

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அடுத்த நதிக்கரை நகரம் நோக்கி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

HAPPINESS IS A CHOICE, NOT A RESULT. NOTHING WILL MAKE YOU HAPPY UNTIL YOU CHOOSE TO BE HAPPY. NO PERSON WILL MAKE YOU HAPPY UNLESS YOU DECIDE TO BE HAPPY. YOUR HAPPINESS WILL NOT COME TO YOU. IT CAN COME ONLY FROM YOU - RALPH MARSTON.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி ஒன்பது



வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம்விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

ஒன்பதாம் விதி சொல்வது, "செயலால் உன்னை நிரூபி, விவாதங்களால் அல்ல". 

 

மூல நூலில், இதை "WIN THROUGH YOUR ACTIONS, NEVER THROUGH ARGUMENT" என்கிறார் எழுத்தாளர். 

 

நம் ஆற்றலை சொற்களால், விவாதங்களால் வீணடிக்காமல், செயலாற்றுவதை நோக்கி திருப்பி விடுவதை இவ்விதி தெளிவாக வலியுறுத்துகிறது. 

 

எவ்வளவு நீண்ட வாதத்தாலும் ஏற்படும் வெற்றி, தற்காலிகமானதாகவும், நல்ல நண்பர்களை நீண்டகால பகைவர்களாக மாற்றுவதாகவுமே இருப்பதை நூல் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளது. 

 

அதற்கும் மேல், வார்த்தை மோதல்கள் நீண்டு செல்லச்செல்ல, நம் அறியாமையும் கீழ்மையும் வெளிப்படுவதோடு, நாமே விரும்பாதனவற்றைச் சொல்லி ஆபத்தில் மாட்டிக் கொள்வதை பல முறை உணர்ந்திருப்போம். 

 

எனவேதான் வலிமையானவர்கள், தேவையற்ற வாதங்களைத் தவிர்த்து குறிக்கோளை நோக்கியே செயல்படுவதையும், அப்படிப்பட்டோர் அவ்வப்போது உதிர்க்கும் ஒரு சில வார்த்தைகள் கூட, மக்களால் வேதவாக்காக எடுத்துக் கொள்ளப்படும் அதிசயத்தையும் கண்டிருப்போம். 

 

இங்கனம், சொல்லுக்கும் செயலுக்குமான பின் விளைவுகளை, என் நண்பர் திருமதி விஜயலக்ஷ்மி அவர்கள் பகிர்ந்த கீழ்காணும் வாழ்வனுபவங்கள் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். 

 

நண்பர், மிகவும் தைரியமானவராக மனதில் பட்டவற்றை எவருக்கும் அஞ்சாமல் வெளியிடுபவர் என, அவர் பணியாற்றும் நிறுவனத்தில் முகத்திற்கு நேராகப் புகழப்படுவது உண்டு. 

 

அத்தகைய பேச்சாற்றலால், தமக்கு நிறைய நண்பர்கள் அமைவதையும், மிகச் சிக்கலான வாடிக்கையாளர்களைக் கையாளும் சிறப்பான பொறுப்புகள் வழங்கப்படுவதையும் பெருமையாக உணர்ந்திருக்கிறார். 

 

சில காலம் செல்லச் செல்ல, தனக்குப் பின்னால், "முன்கோபி, திமிர் பிடித்தவர், ஆபத்தானவர்" போன்ற அவப்பெயர்களும் சிலரால் உருவாக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வருந்தினார். 

 

இருப்பினும், தம் மீதான உண்மையான அக்கறை கொண்டோரின் ஆலோசனைகளால், தொடர்ந்து பணியைச் சிறப்பாக செய்து முடிப்பதிலேயே முழு கவனத்தையும் திருப்பினார். 

 

ஒரு நாள், தாம் முன்பு பணியாற்றிய கிளையின் மேலாளரிடமிருந்து அழைப்பு வரவே, அங்கே சென்றவர் திகைத்தே போனார். 

 

சரியான அக்கறையுடன், வாடிக்கையாளர்களுக்கு உகந்த காப்பீட்டுத் திட்டங்களை வழங்கியதால், அந்தக் காப்பீட்டு நிறுவனம், ஒரு ஆண்டிராய்டு டேப்ளெட்டை நண்பருக்குப் பரிசாக வழங்கியிருந்தது. 

 

இதிலிருந்து, நீண்டகால அடிப்படையில் மாபெரும் வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்புகள், நம் செயல்களின் மூலமே என்பதை அறிந்து வியந்தோம். 

 

பேச்சாற்றல் அதிகம் தேவைப்படும் அரசியலில் கூட, தம் சொல்லுக்கேற்ப நடப்பவராலேயே, நீண்டகால அடிப்படையில் கவர்ச்சிமிக்கவராகத் திகழ முடிந்திருக்கிறது. 

 

இதற்கும் அப்பால், பல நிலைப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் இந்திய-சீன வெளியுறவு அமைப்புகள் கூட, தம் படை வலிமையைக் காட்டியே, எல்லைப் பிரச்சனை குறித்த விவாதங்களை தமக்குச் சாதகமாக திருப்ப முடிகிறது. 

 

நம் மீதான உண்மையான அக்கறையுடன் விமர்சிப்போரை அடையாளம் கண்டு, அவர்களை மட்டும் பொருட்படுத்துதலே, நம்மை வீண் விவாதங்களிடமிருந்து விலக்கி சரியான திசையில் வழி நடத்தும். 

 

இதற்கு, கிரிக்கெட்டில் ஹிமாலய சாதனைகளைப் படைத்த சச்சின் அவர்கள், சதுரங்கத்தில், ருஷ்யர்களையே ஆட்டம்  காணச் செய்த விஸ்வனாதன் ஆனந்த் அவர்கள் என உலகெங்கும் உதாரண மனிதர்கள் கொட்டிக் கிடக்கின்றனர். 

 

எனவே, செயல்களாலேயே நம் சொற்களுக்கு வலிமை கூட்டுவோம், மகத்தான வெற்றியாளர்களாக மாறுவோம். 

 

நம் செயல்பாடுகளின் வீரியத்தை மேலும் பன்மடங்காக வலுவூட்ட, கையாளவேண்டிய மிக இன்றியமையாத உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

9 கருத்துகள்:

  1. விவாதங்கள் செயலின் வேகத்தையும் மங்கச்செய்து விடும்.  நேர வீண்.  செயலில் காட்டி விடுவது சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரி ஐய்யா.
      தங்கள் வருகைக்கும் சிந்தனைகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. அலசல்கள் நன்று தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  3. But sometimes action is not rewarded unless backed by strong arguments. Think of that also.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you very much for your valuable views jeyakumar sir.
      the Upcoming laws, especially law12 will discuss particularly on framing the arguments as per people's capabilities.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....