அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
HONEST RELATIONS ARE LIKE “WATER”! NO COLOUR, NO SHAPE, NO SPACE BUT STILL
VERY IMPORTANT FOR “LIFE”.
******
இந்த வாரத்தின் தகவல் - 3000 பதிவுகள் :
2009-ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த வலைப்பயணம் தற்போது 3000 பதிவுகளை கடந்து இருக்கிறது. தொடர்ந்து பதிவுகள் எழுதி வந்திருக்கிறேன் என்றாலும் சில சமயங்களில் நீண்ட இடைவெளி வந்திருந்தது. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு கூட மிகப் பெரிய இடைவெளி! கடந்த ஆண்டில் 365 நாட்களில் 274 பதிவுகள் மட்டுமே எழுதி இருக்கிறேன். வருடத்தின் ஆரம்பத்தில் தினம் தினம் பதிவுகள் எழுத நினைத்திருப்பதாக சொல்லி இருந்தேன். ஆனாலும் எனது ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் நீண்ட இடைவெளி வந்ததும் இந்த வருடம் தான். திரும்பிப் பார்க்கும் போது எனக்கே பிரமிப்பாகவே இருக்கிறது. பதிவுகள் எழுத வேண்டும் என தூண்டுதல் தந்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். இன்னமும் பதிவுகள் எழுத உற்சாகம் அளிக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் இந்த நேரத்தில் நன்றியைச் சொல்ல வேண்டும்! அனைவருக்கும் நன்றி நண்பர்களே.
******
இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை: காளை பூட்டிய வண்டி
முகநூல் பக்கத்தில் மத்யமர் குழுவில் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய பதிவு ஒன்று உங்கள் பார்வைக்கு….
வாஷிங்ஸ்டனில் இ௫ந்து, போன் வ௫து.
"அப்பா, புது கா௫ வாங்கி இ௫க்கேன், இதுலே ரெம்ப முக்கியம் என்ன என்றால் ஓட்டுபவரின் கண் தொடர்ந்து ஐந்து வினாடி மூடி இ௫ந்தால், வண்டியே சாலையின் ஓரத்திற்கு சென்றுவிடும். உடனே ஆஃப் ஆகி, சைரன் சத்தம் கொடுக்கும், அப்போ வண்டி ஓட்டுபவர்,கண் முழித்து சுதாரித்து கொள்வார்"
"ரெம்ப சந்தோஷம்"
அப்பா, இந்த மாடல் வண்டி நம்ம ஊ௫க்கு வர இன்னும் பல வ௫ஷம் ஆகும்"
சரிப்பா, பத்திரமா ஓட்டுப்பா,
அப்பா மனசுக்குள் சிரித்தார். மகன் வண்டி, கண் அயர்ந்தால் நிற்க்கத்தான் செய்யும். ஆனால், என் வண்டி நான் நன்றாக தூங்கினாலும், எந்த சாலையில் ஓடினாலும், என்னை பத்திரமாக வீட்டிற்க்கே கொண்டு சேரக்குமே. ஆமாம், அங்கே ஒய்யாராமாக, அவர் வண்டி இரண்டு காங்கேயம் காளைகள் பூட்டி கம்பீரமாக நிற்கிறது.
******
பழைய நினைப்புடா பேராண்டி : ஹிந்தி எதிர்ப்பும் தில்லி அனுபவங்களும்
2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஹிந்தி எதிர்ப்பும் தில்லி அனுபவங்களும் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
நெய்வேலியின் NLC Boys Senior Secondary School,
Block-10 எனும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம். ஒன்பதாவது, அல்லது பத்தாம் வகுப்பாக இருக்க வேண்டும். பள்ளியின் சில மாணாக்கர்கள், மாணவர்கள் இயக்கம் ஒன்றில் தீவிரமாக இருந்தவர்கள். தொடர்ந்து சில நாட்களுக்கு மேல் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் – ஏதாவது போராட்டத்தில் குதிப்பார்கள்!
1984/1985 வருடம் இப்படி திடீரென ஒரு நாள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற ஒன்றை நடத்தினார்கள் – பள்ளியிலிருந்து கிளம்பி Block-11-இல் இருக்கும் பெண்கள் உயர் நிலைப் பள்ளியினை பல சைக்கிள்களில் வந்தடைந்தார்கள் – முன்னாலும் பின்னாலும் இயக்கத்தில் தீவிர ஈடுபாடுடன் இருந்தவர்கள் அணையாக இருப்பார்கள் – காரணம் இந்த போராட்டங்களில் ஈடுபாடு இல்லாத என் போன்றவர்கள் தப்பி வீட்டுக்கு [பெண்கள் பள்ளியிலிருந்து இரண்டாம் வீடு என்னுடையது!] சென்று விடக்கூடாது என்பதே!
பெண்கள் பள்ளியின் முன் வந்து சைக்கிள் bell கொண்டு ஓசை எழுப்பி பெண்கள் பள்ளியையும் மூட வைக்கத் திட்டம். தொடர்ந்து பதினைந்து இருபது நிமிட போராட்டத்திற்குப் பிறகும் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. கோபம் கொண்ட சில மாணவர்கள் சாலை ஓரங்களில் இருந்த கருங்கற்களை சரமாரியாக பள்ளியை நோக்கி வீச, சில பல ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. உள்ளேயிருந்து ஒரு ஆசிரியர் தைரியமாக வெளியே வந்து “பள்ளியை மூட முடியாது, ரொம்ப தகறாறு பண்ணா, செக்யூரிட்டியை கூப்பிடுவோம்!” என்று சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து நகர ஆரம்பித்தது அங்கிருந்து சைக்கிள் பேரணி!
முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - புதிய பணத்தின் வாசனை :
சென்ற மாதத்தின் கடைசி வேலை நாள் (30 டிசம்பர் 2022) அலுவலகத்திற்கு வரும்போது அலுவலகத்தின் வாயிலில் இருக்கும் SBI கிளையின் வாசலில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். எப்படியும் எண்பது வயதுக்கு மேலிருக்கலாம். பென்ஷன் வாங்கும் முதியவராக இருக்க வேண்டும். எப்படி வேலையில் இருக்கும் போது மாதத்தின் கடைசி வேலை நாள் சம்பளப் பட்டுவாடா நடக்குமோ அதே போல பென்ஷன் வாங்கும் இந்தச் சமயத்திலும் மாதத்தின் கடைசி நாள் அன்று வங்கியின் வாயிலில் வந்து காத்திருக்கிறார். நான் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்து சம்பளம் வாங்கிய முதல் நிறைய வருடங்கள் பணமாகவே சம்பளம் கையில் கிடைத்துக் கொண்டிருந்தது. பத்துப் பன்னிரெண்டு வருடங்கள் முன்பு தான் வங்கியில் நேரடியாக சம்பளம் சேர்க்கப்பட்டது. சம்பளம் வந்த உடன் ஒவ்வொரு பிரிவில் இருப்பவர்களுக்கான சம்பளம் ஒரு பையில் போட்டு கொடுப்பார்கள். அனைவருக்கும் அந்த பிரிவில் உள்ள ஒருவர் சம்பளத்தினை பிரித்துக் கொடுப்பார். சில சமயம் புதிய நோட்டுகளாகக் கிடைக்கும். புதிய நோட்டுகளை வாங்கி முகர்ந்து பார்ப்பவர்கள் சிலரை பார்த்திருக்கிறேன். வாசனை பார்க்கும் பழக்கம் சென்ற வாரம் பார்த்த பெரியவருக்கு இன்னமும் மறக்கவில்லை என்று தோன்றுகிறது. காலை ஒன்பது மணிக்கு முன்னதாகவே வங்கியின் வாசலில் வந்து அமர்ந்து இருக்கும் அந்தப் பெரியவரை பார்க்கும்போது பழைய நினைவுகள் எனக்குள்ளும்!
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - Vicks - Touch of Care :
சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு விளம்பரம்! நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!
மேலே உள்ள காணொளியை காண இயலாவிடில், கீழே உள்ளே சுட்டி வழி யூட்யூப் தளத்தில் நேரடியாகவும் காணலாம்.
Vicks
- Generations of Care #TouchOfCare - YouTube
******
இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் - ஜுகல் சர்க்கார் :
சமீபத்தில் பார்த்து ரசித்த இரு ஓவியங்கள். ஜுகல் சர்க்கார் அவர்களின் ஓவியங்கள் மிகவும் அழகானவை. மனதைத் தொடும் சில ஓவியங்களை கண்டு ரசித்திருக்கிறேன். நீங்களும் ரசிக்கலாமே!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
தரமான மூவாயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். மூவாயிரம் முப்பதாயிரமாக வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமாட்டு வண்டிக்கு காட்சி ரசனை.
கண்கலங்க வைத்த அம்மா.
வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம். பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்கு3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குகண்கலங்க வைத்து விட்டது விளம்பர காணொளி அருமையான அம்மா.
வாழ்த்தியமைக்கு நன்றி கோமதி அம்மா. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.
நீக்கு3000 பதிவுகள் அதுவும் அழகான பதிவுகள்.வாழ்த்துகள் ஜி. இன்னும் மேலும் மேலும் நீங்கள் நிறைய எழுத வேண்டும்.
பதிலளிநீக்குஇடைவெளி தவறில்லை ஜி.....நமக்கும் ஒரு சின்ன ஓய்வு தேவைதானே. நாம் ரோபோக்கள் அல்லவே....
வாழ்த்துகள் மீண்டும்.
கீதா
வாழ்த்தியமைக்கு நன்றி கீதா ஜி. இடைவெளி அவ்வப்போது தேவையாகவும் இருக்கிறது தான். இன்னமும் மற்ற நண்பர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை என்ற வருத்தம் உண்டு.
நீக்குவிக்ஸ் விளம்பரக் காணொளி பார்த்து கண்ணில் நீர் வந்துவிட்டது.கண்கள் கலங்கிவிட்டட்ன....அருமையான விளம்பரப் படம். குறும்படம் போன்று....நான் இப்போது காணொளிகள் பார்ப்பது கொஞ்சம் அரிதாகிவிட்டது. நேரப்பளு.
பதிலளிநீக்குஓவியங்கள் சூப்பர். மிகவும் ரசித்தேன்
கீதா
கீதா
விளம்பரமும், ஓவியங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குமுத்தான மூவாயிரம் பதிவுகள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநீங்கள் இன்றளவும் இளமையுடனும் பொலிவுடனும் மிளிரக் காரணம்.....
"பெண்கள் பள்ளியிலிருந்து இரண்டாம் வீடு என்னுடையது" என்ற பெருமைதானே!
இரண்டாம் வீடு எனும் பெருமை - ஹாஹா…. அப்படி சொல்லிக்க ஆசை தான் - ஆனாலும் சொல்ல முடியல! அம்மணி பக்கத்துல உட்கார்ந்து இருக்காக! தங்கள் அன்பிற்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்கு3000...!
வாழ்த்துகள்...
பதிவின் பகுதிகள் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குமூவாயிரம் பதிவுகள் வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பதிவு
ஓவியப்படங்கள் சிறப்பு.
வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குஹிந்தி எதிர்ப்பு - பழைய பதிவும் வாசித்தேன்.
பதிலளிநீக்குநெய்வேலில பெண்கள் பள்ளி அருகில் உங்கள் வீடா!!! ஹாஹாஹா வீரதீரச் செயல்கள் எதுவும் இல்லையா அப்ப?!!!
வீரதீரம் இருந்தா பஞ்சாபி உடை அணிந்த தமிழ் பேசிய பெண்களை வர்ணித்துவிட்டு ஓடிருப்பாரா...!!!! ஹாஹாஹா பப்பு அண்ணாச்சியின் புறமுதுகோட்டமும் சிரித்துவிட்டேன்.
ஹிந்தி தெரிந்து கொண்டா எந்த வட மாநிலம் உட்பட தென்னக பங்களூர் உட்பட பிழைத்துவிடலாம். இப்போதைய பகுதியில் தமிழ் அதிகம் கேட்கிறது! பங்களூரின் தென் பகுதி...
கீதா
வாசகம் மிக அருமை சார்.
நீக்குமூவாயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
கண்ணை மூடினால் கார் நிற்பது மிகவும் அவசியம்.
சமீபத்தில்தான் விளையாட்டு வீரர் ரிஶவ் பந்த், கண் அயர்ந்து சாலைத் தடுப்பில் கார் மோதி தீப் பிடித்து உயிர் தப்பிய நிகழ்வும் நடந்ததை மறந்திருக்க மாட்டோம்.
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. பழைய பதிவும் வாசித்ததற்கு நன்றி.
நீக்குவாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குமூவாயிரம் பதிவுகள் வாழ்த்துகள். பதிவுகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குகாணொளி மனதை தொட்டது.
ஓவியங்கள் சூப்பர்.
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி மாதேவி.
நீக்குஉங்களின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் வெங்கட் ஜி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.
நீக்குமாட்டு வண்டி - மத்யமர் - பதிவு சுவாரசியம். அதானே மாட்டு வண்டிக்கு எந்த சென்சரும் வேண்டாம்....அழகா கொண்டு வ்னது விட்டுரும்...ஒப்பீடு ரொம்ப ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா
சென்சார் இல்லா மாட்டுவண்டி - சிறப்பான விஷயம் தான். பதிவு குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி கீதா ஜி.
நீக்குசிறப்பான பதிவுகளோடு மூவாயிரம் எனும் மைல் கல்லைத் தொட்டிருக்கிறீர்கள்! பயணம் தொடரட்டும். மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதொகுப்பு அருமை.
மூவாயிரம் எனும் மைல்கல்… வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு3000ம் பதிவுகளுக்கு பாராட்டுகள். நிறைய உருப்படியான பதிவுகள் (பெரும்பாலானவை) என்று நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
பதிலளிநீக்குஅந்தப் பெண், திருமணம் என்ற பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டீர்களே என்று வருந்துகிறாரா இல்லை பெற்றோரைப் பிரிந்து முகம் தெரியா ஆட்களிடம் மாட்டிக்கொண்டேனே என்று வருத்தப்படுகிறாரா? நல்ல ஓவியம்
பெரும்பாலானவை உருப்படியான பதிவுகள் - மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்கு