புதன், 14 டிசம்பர், 2022

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - அறிமுகம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIFE IS LIKE MAKING TEA; BOIL YOUR EGO; EVAPORATE YOUR WORRIES; DILUTE YOUR SORROWS; FILTER YOUR MISTAKES; AND GET A TASTE OF HAPPINESS.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - அறிமுகம்


 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

அனைவரும், தத்தம் வலிமையைப் பன்மடங்காக பெருக்கவே விரும்புவோம்.  அதுவே நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கான சிறந்த வழியும் கூட. 

 

சமூக விலங்காகிய நாம், எவ்வளவு திறமையை வளர்த்துக் கொண்டாலும், பிறர் ஒத்துழைப்பை,  நமக்குச் சாதகமாகப் பெற்றுக்கொள்ளும் திறனிலேயே நம் வெற்றிக்கான ரகசியம் ஒளிந்திருப்பதாக வெற்றியாளர்களின் அனுபவங்கள் உணர்த்துகின்றன.  

 

குடும்பத்தை வழிநடத்துவது முதல், பணியிடங்கள் வரை, எவ்வயதினருக்கும், "Soft skills" என ஆங்கிலத்தில் சொல்லப்படும் தொடர்பாடல் உத்திகள் மிக அவசியம்.  

 

அத்தகைய உத்திகளை, எளிய முறையில், வரலாற்று உதாரணங்களுடன் விளக்கியிருப்பதே அமெரிக்க யூதர், திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" என்னும் ஆங்கில நூல். 

 

"சில புத்தகங்களைச் சுவைப்போம்; சிலவற்றை அப்படியே விழுங்குவோம்; சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்" என்றார் திரு பிரான்சிஸ் பேக்கன் அவர்கள். 

 

அதற்கேற்ப, இந்நூலில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு விதியும், மற்ற விதிகளோடு ஒப்புமைப்படுத்திச் சிந்திக்கச்  செய்து, வாழ்வு குறித்த தெளிவைப் படிப்படியாக எனக்கு ஏற்படுத்தியது. 

 

எனவேதான், பொதுவாக நூல்களை அறிமுகம் மட்டுமே செய்யும் எனக்கு, இந்நூல் குறிப்பிடும் நாற்பத்து எட்டு விதிகளையும் ஒவ்வொன்றாகச் சுவைத்து விவாதிக்கும் ஆர்வம் எழுந்தது. 

 

மேலும், இந்நூலின் சுருக்கப்பட்ட தமிழாக்கம், "அமேசான் ஆடிபிள்", "குக்கூ எஃப் எம்" உள்ளிட்ட தளங்களிலும் கிடைப்பது தமிழ் வாசிப்பாளர்களுக்கும் மிக மகிழ்ச்சியான செய்தி. 

 

நம் செழிப்பான வாழ்வுக்காக, எவரையும், எந்த எல்லை வரையும் சென்று ஒழித்துவிடலாம் என நூல் சொல்வதாக சில விமர்சகர்கள் கருதுவதும் உண்டு என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன். 

 

நெருப்பால் உலகையே அழிக்கவும் முடியும், உணவின் சுவையைப் பெருக்கவும் முடியும். 

 

அதுபோல, இவ்விதிகளைத் தெளிவாக புரிந்துகொள்வோர், தம்மோடு தம் சுற்றம் முழுவதையும் வாழ்வாங்கு வாழச் செய்வர் என்னும் உறுதியான புரிதலாலேயே, நூல் குறித்த விவாதத்தைத் தொடராக எழுத முடிவு செய்தேன். 

 

மேலும், நூலாசிரியர், தம் வாழ்வில் கிட்டத்தட்ட அறுபத்தைந்து வகையான வேலைகளைச் செய்ததன் அனுபவ வெளிப்பாடாகவே இந்நூல் கருதப்படுவதால், அத்தகைய நடைமுறை அறிவை எவரும் தவறவிடக் கூடாது என்னும் எண்ணத்தின் வெளிப்பாடே இத்தொடர். 


விவாதங்களில், சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் திரைத்துறை உதாரணங்களைத் தவிர்த்து, இயன்றவரை என் சார்ந்த வீடு மற்றும் தொழில் உதாரணங்களோடு நூலின் கருத்துக்களை சுவாரசியமாக விளக்க முயல்கிறேன். 

 

நன்மையும் தீமையும் கலந்த மனிதர்களின் நடத்தையைத் தெளிவாக உணர்ந்து, நம் வலிமையைப் பெருக்கவல்ல இந்நூலின் விதிகளை வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம். 

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

13 கருத்துகள்:

  1. ​நல்லதொரு அறிமுகம். புத்தகம் கிடைக்கும் தளங்களின் சுட்டியைக் கொடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. தற்போது, காகித வடிவில் நூல் அமேசானில் பார்க்க முடிகிறது ஐய்யா. குக்கூ எஃ்ப் எம் செயலியில் இந்நூல் காணப்படுகிறது. https://kukufm.com/show/48-laws-of-powerநாம் நூலை விளக்கும் தொனி சற்று வித்யாசமாக நடைமுறை உதாரணங்களுடன் இருக்கும். என் முயர்ச்சி அப்படியே மொழிப்பெயர்க்கும் திட்டம் இல்லை. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

    பதிலளிநீக்கு
  3. குக்கூசெயலி சுட்டியாக நான் அணுப்பியது நூலிந் ஒலி வடிவம்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.

    பதிலளிநீக்கு
  5. ஆரம்பம் வெகு ஜோர். 

    //"சில புத்தகங்களைச் சுவைப்போம்; சிலவற்றை அப்படியே விழுங்குவோம்; சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்" என்றார் திரு பிரான்சிஸ் பேக்கன் அவர்கள். //  

    பதிவை சுவைத்தேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி Jayakumar ஐய்யா.
    அடுத்தடுத்த விதிகள் மிகச் சுவையாக இருக்கும்.
    நீங்கள் ரசித்த மேற்கோள், ஏர்க்கெனவே இந்த வலையில் பல நாட்களுக்கு முந் வெங்கட் அவர்களால் வாசகமாக போடப்பட்டதுதான்.
    நான் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது மிகவும் ரசித்த வாசகம் இது என்பதால் இங்கும் உபையோகித்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி ராமசாமி ஐய்யா.

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி மாதேவி மேடம்.
    தொடர்ந்து வாசித்து தங்கள் என்னங்களைப் பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல அறிமுகமே மனம் மயக்கும் நுழைவாயிலாக...நுழைகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐய்யா.
      தொடர்ந்து 34 விதிகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
      அனைத்தையும் சுவைத்து மகிழுங்கள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....