ஞாயிறு, 25 டிசம்பர், 2022

ப்ரேம் Bபிஷ்ட் - நந்தி குண்ட் - நிழற்பட உலா - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

RESPECT YOUR TIME; IT’S ALWAYS TRYING TO GIVE YOU THE BEST. USE IT WELL.


******


 

அலுவலக நண்பர் திரு ப்ரேம் பிஷ்ட் அவர்கள் அவ்வப்போது மலையேற்றம் செய்வது குறித்து முன்னரும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.  அவரது இரு பயணங்கள் குறித்த தொடர்களும், சில மலையேற்றம் தொடர்பான நிழற்பட உலாக்களும் இங்கே பதிவு செய்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  நடுவில் இங்கே எனது பதிவுகளே வெளியிடாமல் இருந்ததோடு, நண்பரின் பதிவுகளும் வெளியிட இயலவில்லை.  இதோ மீண்டும் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் மற்றுமொரு மலையேற்றத்தில் எடுத்த நிழற்படங்களை இந்த ஞாயிறிலிருந்து உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  அவர் எடுத்த படங்களை இங்கே பகிர்ந்து கொள்ள சம்மதித்ததற்கு அவருக்கு உங்கள் சார்பாகவும் நன்றி சொல்லி விடுகிறேன்.  அவர் 2021-ஆம் ஆண்டு செய்த ஒரு மலையேற்றப் பயணம் உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள நந்தி குண்ட் (Nandi Kund) என்ற இடத்திற்கு!  நந்தி குண்ட் குறித்த தகவல்கள் வரும் நாட்களில் பதிவாக எழுதுகிறேன். அந்தப் பதிவுகளுக்கு முன்னோடியாக அங்கே எடுத்த சில நிழற்படங்கள் இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு! 

 

******









































 

இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

21 கருத்துகள்:

  1. படங்களை பெரிது படுத்திப்  பார்த்த போது தான் இமயமலையின் பிரமாண்டமும் அழகும் தெரிகின்றன. நந்திக்குண்ட் பற்றிய தகவல்களுக்குக் காத்திருக்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா. இமயமலை - பிரம்மாண்டத்தின் உச்சம் தான். நந்திகுண்ட் தகவல்கள் வரும் பகுதிகளில் தருகிறேன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. அருமை.  அந்த டென்ட் உட்பட சில படங்கள் ஏற்கெனவே பார்த்தது போலுள்ள.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய மலையேற்ற நிழற்பட பதிவுகளில் இந்த டெண்ட் பார்த்திருக்கலாம் ஸ்ரீராம். அவர்களுடைய ஒவ்வொரு பயணத்திலும் இவர்களே டெண்ட் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். பிரம்ஹ கமலப் பூக்களும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். தங்களது கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  3. படங்கள் அழகு.

    மலையேற்றம் சுலபம் என நினைத்தேன், சமீபத்தில் சிவனதுர்கா மலையை ஏறும் வரையில். வயதாகிவிட்டது என்பதை உணர்த்திவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. மலையேற்றம் அத்தனை சுலபமானது அல்ல நெல்லைத் தமிழன். சில பயணங்கள் எனக்கும் கடினமாகவே இருந்தன. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  4. அழகிய படங்கள் பிறகு கணினியில் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் மகிழ்ச்சி கில்லர்ஜி. முடிந்த போது கணினியில் பாருங்கள். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. புகைப்படங்கள் எல்லாம் அழகு. கோவில் மணியுடன் கூடிய புகைப்படம் தனித்தன்மையுடன் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும், குறிப்பாக கோவில் மணி படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  7. வெங்கட்ஜி! வாவ் மீண்டும் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட்!

    படங்கள் அட்டகாசம்! இமயமலையை என்னவென்று சொல்ல! பிரம்மாண்டம். நான் நேரிலும் கண்டிருக்கிறேனே அதன் பிரம்மாண்டத்தை ரசிப்பதுண்டு...

    இது காணொளியாகப் போட்டிருக்கிறாரோ? சில பார்த்த நினைவு வருகிறது ஆனால் நந்தி குன்ட் என்பது நினைவில் இல்லை. அவர் போட்ட காணொளிகள் பார்க்கிறேன் அவ்வப்போது கருத்தும் கொடுக்கிறேன். இடையில் பார்க்க முடியவில்லை. மீண்டும் தொடர வேண்டும். அவர் பெயரில் இரண்டு மூன்று யுட்யூபுகள் இருப்பது போல் தோன்றுகிறது.

    நந்தி குன்ட் பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறேன்! நண்பரை வரவேற்போம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் குறித்த தங்கள் கருத்திற்கு நன்றி கீதா ஜி. நந்திகுண்ட் குறித்த காணொளி நண்பரின் யூட்யூப் பக்கத்தில் உண்டு. அவரது காணொளிகள் இரண்டு மூன்று இடங்களில் உண்டு. சமீப காலமாக ஒரே தளத்தில் மட்டுமே வெளியிடுகிறார். நந்தி குண்ட் குறித்த தகவல்கள் வரும் பகுதிகளில் தருகிறேன்.

      நீக்கு
  8. கோவில் மணி இருக்கும் அந்தப் படம் செம அழகு....வயலட் பூ, அந்த வித்தியாசமான தாவரம்? அது பதிவில் தெரியவரும் என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நந்திகுண்ட் குறித்து முடிந்த வரை தகவல்கள் தருகிறேன் கீதா ஜி. கோவில் படம் - தனியே எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு கோவில்!

      நீக்கு
  9. பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  10. படங்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஐயா. இடமாற்றம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

      நீக்கு
  11. காட்சிகள் மிகவும் அருமை. பூக்களும் அழகு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....