வியாழன், 13 ஏப்ரல், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி நாற்பத்தி ஆறு - மீண்டும் வாரணாசி - வாராஹி அம்மன் கோவில்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தமிழகப் பயணமும் கோவில் உலாக்களும் - சில எண்ணங்கள் பதிவினை டித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“KINDNESS IS ONE THING YOU CAN’T GIVE AWAY. IT ALWAYS COMES BACK.” - GEORGE SKOLSKY.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்

 

பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி

 

பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்

 

பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க

 

பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்

 

பகுதி நாற்பத்தி ஒன்று - ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்

 

பகுதி நாற்பத்தி இரண்டு - அக்ஷய் வட் மற்றும் பாதாள் புரி மந்திர்

 

பகுதி நாற்பத்தி மூன்று - ப்ரயாக்ராஜ் - Bப(d)டே ஹனுமான்

 

பகுதி நாற்பத்தி நான்கு - ஷங்கர் விமான் மண்டப் - கச்சோடி சப்ஜி

 

பகுதி நாற்பத்தி ஐந்து  - மீண்டும் வாரணாசி - நகர்வலம்

 

சென்ற பகுதியில் நண்பரும் அவரது துணைவியும் காலையிலேயே எழுந்து ஒரு இடத்திற்குச் சென்று வந்தார்கள் என்று சொல்லி இருந்தேன். அந்த இடம் குறித்து இந்தப் பகுதியில் பார்க்கலாம். 

 

வாரணாசியில் வாராஹி




 

வாரணாசி என்றால் நினைவுக்கு வருவது காசி விஸ்வநாத் கோவில் என்றாலும் அங்கே நினைவுக்கு வர வேண்டிய இன்னுமொரு விஷயம் அங்கே குடிகொண்டிருக்கும் வாராஹி தேவி!  ஆம் வாரணாசியில் கங்கைக் கரை அருகே வாராஹிக்கும் ஒரு கோவில் உண்டு.  மன் மந்திர் Gகாட் என அழைக்கப்படும் படித்துறை அருகே ஒரு சிறு சந்தில் இந்த வாராஹி தேவியின் கோவில் அமைந்திருக்கிறது.  காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல இருக்கும்  நுழைவாயில்களில், முதலாம் நுழைவாயில் வழி உள்ளே சென்று சின்னச் சின்ன சந்துகள் வழி இந்த கோவிலை அடைய வேண்டியிருக்கும்.  நாமாகவே கூகுள் மேப் உதவியுடன் சென்றுவிடலாம் என்று முயற்சித்தாலும், அவ்வப்போது உள்ளூர் மக்களிடமும் வழி சரிதானா என்பதைக் கேட்டுக் கொள்வது நல்லது. இல்லையெனில் ஏதேனும் ஒரு சந்து வழியே சென்று வேறு ஒரு வழியில் வெளியே வந்து விட வாய்ப்புண்டு.  சின்னச் சின்ன சந்துகள் என்பதால் குழப்பம் ஏற்படலாம்.  


 

வாராஹி தேவி - அறுபத்தி நான்கு யோகினிகளில் ஒருவராகிய வாராஹி தேவியை துதிப்பவர்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.  மிகவும் சக்தி வாய்ந்த தேவி.  காசி செல்லும் பலரால் இந்தக் கோவிலுக்குச் செல்ல முடிவதில்லை - காரணம் கோவில் திறந்திருக்கும் நேரம் மிகமிகக் குறைவு.  அதிகாலை நான்கரை மணிக்கு திறந்தால், காலை ஒன்பதரை மணிக்கே மூடிவிடுவார்கள்.  சுமார் ஐந்து மணி நேரம் தான் திறந்திருக்கும் - அதிலும் பூஜை நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.  வாராஹி தேவியின் கர்ப்பக்கிரகம் தரைத்தளத்தில் இருக்கிறது என்பதோடு வாராஹி தேவியின் குடிகொண்டிருக்கும் அத்தளத்திற்குச் செல்ல யாருக்கும் அனுமதி கொடுப்பதில்லை. பூஜை செய்பவர் மட்டுமே அங்கே சென்று பூஜை செய்வார்.  ஆரத்தி சமயத்திலும் கோவிலுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை.  தரைத்தளத்திற்குச் செல்ல அனுமதி இல்லை என்றால் எப்படி தேவியை தரிசிப்பது?  

 

தரைத் தளத்திற்கு மேலே  ஒரு இரண்டு துவாரங்கள் உண்டு. பக்தர்கள் தேவியை தரிசிக்க ஒரு துவாரம் வழியே தான் தேவியின் திருமுகத்தினையும், மற்றொரு துவாரம் வழியே திருவடியையும் தரிசிக்க முடியும்.  தரையில் அமர்ந்து கொண்டு தான் தேவியை தரிசிக்க வேண்டியிருக்கும்.  ஒரு சில நொடிகள் மட்டுமே தேவியை தரிசிக்க அனுமதி அளிக்கிறார்கள்.  தரிசனம் மட்டுமே.  வேறு பூஜைகள் எதுவும் செய்ய வாய்ப்பில்லை.  குறைவான நேரமே வாராஹி தேவியின் கோவில் திறந்திருக்கும் என்பதால், திறந்திருக்கும் நேரத்தில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.  அதிகாலை நேரத்திலேயே கோவிலுக்குச் சென்று விடுவது நல்லது.  வரிசையில் நின்று வாராஹி தேவியை தரிசனம் செய்து அவளின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டு நமக்கு அருள் கிடைக்கலாம்.  பொதுவாக பெண்கள் மட்டுமே அங்கே அதிக அளவில் செல்கிறார்கள் என்பதும் நவராத்திரி சமயத்தில் அங்கே அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள் என்பதும் கூடுதல் தகவல்.  

 

வாரணாசி நகரத்தினை பகல் நேரங்களில் கால பைரவர் காவல் புரிகிறார் என்றால் இரவு நேர காவல் வாராஹி தேவியின் பொறுப்பில் என்பதும், இந்தக் கோவில் சக்தி பீடங்களில் ஒன்று என்பதும் உங்களுக்கு இங்கே தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி.  சதி தேவியின் பற்கள் விழுந்த இடம் இந்த வாராஹி தேவி என்பதும் ஒரு நம்பிக்கை. வாராஹி தேவி நீதி தேவதை என்பதும் வழக்குகளில் வெற்றி பெற வாராஹி தேவியை வணங்க வேண்டும் இன்பதும் இங்கே உள்ள பக்தர்களின் நம்பிக்கை.  காலை நேரங்களில் மட்டுமே ஏன் கோவிலை திறந்திருக்க வேண்டும்? மாலை நேரத்திலும் கோவிலை திறந்து வைத்தால் கோவிலுக்கு பக்தர்கள் வரவும், தரிசனம் பெறவும் வழியிருக்குமே என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.  எனக்கும் அக்கேள்வி மனதில் எழுந்தது. அதற்கான பதிலும் கிடைத்தது. 

 

மாலை நேரங்களில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வாராஹி தேவியை யக்ஷ, யக்ஷினிகள் போன்றவர்கள் தரிசிக்க வருவார்கள் என்பதும், அந்த நேரத்தில் மனிதர்களாகிய நாம் தப்பித் தவறி கோவிலுக்குள் சென்று விட்டால்  ஆபத்தினை சந்திக்க நேரிடும் என்பதால் தான் இப்படி காலை நேரம் மட்டுமே பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் வாராஹி தேவி என்பது ஒரு நம்பிக்கை.  அடுத்த முறை காசி எனும் வாரணாசி நகருக்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்தால் நிசசயம் ஒரு முறையேனும் வாராஹி தேவியின் கோவிலுக்கு அதிகாலை வேளையில் சென்று தேவியின் பூரண அருளை பெறுவீர்களாக! 

 

வாரணாசியில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன, வேறு சில விஷயங்கள் ஆகியவை குறித்து அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைத்திருங்கள் நண்பர்களே! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

11 கருத்துகள்:

  1. இந்த இடம் குறித்து சமீபத்தில் துளசி டீச்சர் குறிப்பிட்டிருந்தார். சம்திங் கொடுத்தால் சட்டென தரிசனம் கிடைக்கும் என்பதையும் சொல்லி இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. காசு கொடுத்து தரிசனம் - பல இடங்களில் இது போல விஷயங்கள் நடப்பது பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு அப்படிச் சென்று இறைவனை தரிசிப்பதில் விருப்பம் இல்லை ஸ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  2. வாராஹி அம்மன் கோயில் குறித்த தகவல்கள் பயனுள்ளவை‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தகவல்கள் யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே கில்லர்ஜி. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தகவல்கள் யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே தனபாலன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  4. ஒரு முறையேனும் வாராஹி தேவியின் கோவிலுக்கு அதிகாலை வேளையில் சென்று தேவியின் பூரண அருளை பெறுவீர்களாக!..


    ஸ்ரீ வாராஹி அம்மனின் நல்லருள்
    எல்லாருக்கும்
    கிடைக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும். எனக்கும் காலை நேரத்தில் வாராஹி அம்மனை தரிசிக்க ஆசை உண்டு. அவள் அருளாலே அது நடக்கும்! தங்கள் அன்பிற்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  5. வராஹி அம்மன் கோயில் பற்றிய தகவல்கள் அருமை. தகவல்களை மனதில் பதிய வைத்துக் கொண்டேன். குறிப்பாக நேரத்தை. இரு துவாரங்கள் வழி என்பதை நீங்கள் சொல்லியிருப்பதை வைத்து கற்பனை செய்து பார்த்தேன்....தரையிலேயே இருக்குமோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரைத்தளத்தில் தான் இருக்கிறது கீதா ஜி. நிச்சயம் தரிசிக்க வேண்டிய கோவில் தான். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  6. வித்யாசமான கோயிலாக இருக்கு சார். அடுத்தமுறை செல்லும்போது மறக்காமல் தரிசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....