அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
"WATCH YOUR THOUGHTS; THEY BECOME WORDS. WATCH YOUR WORDS; THEY
BECOME ACTIONS. WATCH YOUR ACTIONS; THEY BECOME HABITS. WATCH YOUR HABITS; THEY
BECOME CHARACTER. WATCH YOUR CHARACTER; IT BECOMES YOUR DESTINY.” - LAO-TZE.
******
பயணங்கள் இனிமையானவை. தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர்
உங்களுக்கும் பயன்படலாம்.
இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.
பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.
பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்.
பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.
பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி.
பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.
பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.
பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.
பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும்
ராமேஷ்வர் dhதாம்.
பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.
பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.
பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.
பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி
பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்
பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா
பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்
பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…
பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…
பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்
பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்
பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்
பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி
பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்
பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு
பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர்
பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை
பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை
பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்
பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா
பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி
பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்
பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்
பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்
பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்
பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்
பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்
பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி
பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்
பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க
பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்
பகுதி நாற்பத்தி ஒன்று - ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்
சென்ற பகுதியில் ப்ரயாக்ராஜ் எனும் அலஹாபாத் நகரில்
அமைந்திருக்கும் திரிவேணி சங்கமத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்து
எழுதி இருந்தேன்.
குளித்து முடித்து மீண்டும் கரைக்குத் திரும்பிய பின்னர் நாங்கள் என்ன செய்தோம்,
எங்கெல்லாம் சென்றோம் போன்ற தகவல்களை இந்தப் பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள
இருக்கிறேன்.
ப்ரயாக்ராஜ் இதற்கு முன்னரும் நான் சென்றிருப்பதோடு, அந்தப் பயணங்கள் குறித்து இதே
வலைப்பூவிலும், மின்னூலிலும் நிறைய தகவல்கள் முன்னரே எழுதி இருக்கிறேன். அந்த கட்டுரைகள் படிக்காத சிலரும் இங்கே இந்தப்
பதிவுகளை படிக்கலாம் என்பதால் மீண்டும் இந்தப் பயணத்தில் பார்த்த சில இடங்களை எழுத
வேண்டியிருக்கிறது.
சங்கமத்தில் குளித்து முடித்த உடன் நாங்கள் சென்ற முதல் இடம் “அக்ஷய் வட்” என்ற ஒரு இறப்பே இல்லாத ஆல மரத்தினைக் காணத்தான்!
“அக்ஷய் வட்” தற்போது இருப்பது ஒரு கோட்டைக்குள்.
கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக பாழடைந்து வருகிறது என்பதும் வேதனையான உண்மை. கோட்டை யார்
கட்டியது, அதன் வரலாறு என்ன என்பதை இங்கே சுருக்கமாக பார்க்கலாம். மஹாராஜா அக்பர்
அவர்கள் தனது பரந்து விரிந்த ராஜ்ஜியத்தினை காப்பதற்காக ஒரு கோட்டை கட்டத் தீர்மானித்த இடம் -
சங்கமத்திலிருந்து அருகிலேயே யமுனை நதியோரம்! 1583 – ஆம் வருடம் அக்பர் இந்தக்
கோட்டையினைக் கட்டினார் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. மிகச் சிறப்பாகக்
கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டையின் உள்ளே பார்க்கவேண்டிய சில அற்புதமான விஷயங்கள்
உள்ளன. யமுனை ஆற்றிலிருந்து பார்க்கும்போது கம்பீரமாகத் தோற்றமளிக்கும் இக்கோட்டை
தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ராணுவம் என்றாலே ரகசியம் தானே! அதனால் கோட்டையின் பல
பகுதிகளைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இரண்டு மூன்று இடங்கள் மட்டுமே பொதுமக்கள்
பார்வைக்கு திறந்திருக்கிறார்கள். கோட்டைக்குள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அசோகர்
எழுப்பிய ஸ்தூபம் ஒன்றும் [தற்போதைய கௌஷம்பி பகுதியில் எடுத்து வரப்பட்டதாக
சொல்லப்படுகிறது], சரஸ்வதி குண்ட் என்றழைக்கப்படும் சரஸ்வதி நதியின் பிறப்பிடமும்,
ஜோதாபாய் அரண்மனையும் இருக்கிறது. அசோகர் காலத்து தூணில் ஹுவான் சுவாங், பீர்பல்,
போன்ற பிரபலமானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் உண்டு.
இப்படியான கோட்டைக்குள் அமைந்திருக்கும் அக்ஷய் வட் மரத்தினைப் பார்க்க கொஞ்சம்
நடக்க வேண்டும்.
கோட்டைக்கு உள்ளே அதற்காக ஏற்படுத்தி இருக்கும் வழியாக நடந்து மரம் இருக்கும் பகுதிக்குச்
சென்று சேர்ந்தால் முழுவதுமாக கம்பிகள் கட்டி அந்த மரத்தினை தொட முடியாதபடி
செய்திருக்கிறார்கள்.
மிகவும் பழமையான மரம் என்பதோடு, மிகவும் புனிதமானதும் கூட என்பதால் பலர்
அம்மரத்தின் கிளைகள், சிறு குச்சிகள் என உடைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்
என்பதால் இப்படியான பாதுகாப்பு தடுப்புகள்! ஆனாலும் நம் மக்கள் விடுவதில்லை!
தடுப்புக்கு அப்பாலிருந்து நாணயங்களை வீசி மரத்தின் மீது எறிகிறார்கள்! அப்படி
எறிந்த நிறைய நாணயங்களை அங்கே பார்க்க முடியும். மரத்தினைப் பார்த்த பிறகு கோட்டைக்குள் இருக்கும்
இன்னுமொரு கோவிலை நாங்கள் பார்க்கச் சென்றோம்.
அந்தக் கோவில் பாதாள் புரி மந்திர் என்ற கோவில். பாதாள் புரி கோவில் பூமிக்குள் அமைக்கப்பட்டு
இருக்கிறது. படிகள் வழி கீழே இறங்கிச் சென்றால், நிறைய சன்னதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாய் பார்த்தவண்ணம் நீங்கள் வெளியே வந்து
விடலாம். ஒரு முறை இங்கே பயணித்த சமயம், உள்ளே நுழைய கட்டணம் வசூலித்தார்கள். ஆனால் இந்த முறை கட்டணம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் வரும் பக்தர்களை எல்லாம் ஒரு வரிசையில்
நிறுத்தி, கோவில் குறித்த தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு பண்டா. அவரது
பேச்சில் கோவில் குறித்த தகவல்களை விட ஒவ்வோர் வரியின் முடிவிலும் பக்தர்கள்
கோவிலுக்குக் காணிக்கை செலுத்த வேண்டியதன் அத்தியாவசியத்தை மட்டுமே சொல்லிக்
கொண்டிருந்தது தான் அதிகம்.
பல நூற்றாண்டுகளாக இந்தக் கோவில் இருக்கிறது என்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க
நிகழ்வுகள் இந்த கோவில் பகுதியில் நடந்தது என்றும் அதற்கெல்லாம் பல புராணங்களில்
சாட்சியங்கள் இருக்கிறது என்றும் பத்து நிமிடத்திற்கு மேலாக பேசினார். அவர் பேசி முடிக்கும் வரை பக்தர்கள் யாரும் வாயைத்
திறந்தால் உடனேயே பேச்சின் நடுவில் அவர்களை கொஞ்சம் திட்ட வேறு செய்தார்! அதுவும் கோவில் குறித்த சந்தேகம் கேட்டால் கூட
திட்டு விழுந்தது!
ஒரு வேளை ஒரு flow-ஆக பேசிக்கொண்டு வரும்போது குறுக்கே யாரும் பேசினால், வடிவேலு
சொல்வது போல, அவருக்கு நாக்கு ரோலிங் ஆகும் எனத் தோன்றியது.
இந்தக் கோவில் மிகவும் பழைய கோவில் என்பதற்கு
உதாரணமாக ஒரு விஷயம் சொல்கிறார்கள் - பகவான் ஸ்ரீராமனும் பக்தப் ப்ரகலாதனும்
இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள் என்றும், பிரபல சீன யாத்ரி யுவான் சுவாங்
அவர்களும் இந்தக் கோவிலுக்கு வந்தது குறித்து எழுதி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தவிரவும் ஒரு புராணக்கதையின்படி, ஒரு காலத்தில், மார்க்கண்டேய முனிவர்
ஸ்ரீமந்நாராயணனின் தெய்வீக சக்தியைப் பற்றி கேள்வி கேட்டபோது, பகவான் ஒரு கணம்
இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் மூழ்கடித்துவிட்டாராம். அந்தச் சமயத்தில் கூட, பூமியின் நீர் மட்டத்திற்கு
மேலே காணப்பட்டது அக்ஷய வட் மரம் மட்டுமே. கூடவே இன்னுமொரு ஆச்சரியமான விஷயமாகச்
சொல்வது அந்த அக்ஷய் வட் மரத்தின் வேர்களில், அதாவது பூமிக்கு அடியில் அமைந்த கோவில்
தான் இந்த பாதாள் புரி கோவில் என்றும் சொல்கிறார்கள்.
கொஞ்சம் படிகள் இறங்கி உள்ளே செல்ல, வரிசையாக நிறைய
சன்னதிகள், ஒவ்வொரு இடத்திலும் சிவன், விஷ்ணு, தேவி என பலரது சிலைகள். ஒவ்வொரு சன்னதி வாயிலிலும் இருக்கும்
பண்டாக்கள்/பூஜாரிகள் கைகளில் வைத்திருக்கும் மயிலிறகுகளால் பக்தர்கள் முதுகில்
தட்டுவதோடு, காசு போடுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை கண்டு கொள்ளாது நாம் நம் போக்கில் சென்று
கொண்டே இருந்தால் பிரச்னை இல்லை.
நாங்கள் அப்படியே சென்று கொண்டிருந்தோம். சில நிமிடங்களில் கோவிலில் உலா வந்து
எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு வெளியே வந்து விடலாம். நம் ஊர் கோவில்கள் போல இந்த கோவிலில் அத்தனை
பிடிப்பு வர வாய்ப்பில்லை என்பதையும் இங்கே நான் சொல்லி விடுகிறேன். நேரம் இல்லை என்றால் இந்தக் கோவில் செல்லாமல் கூட
தவிர்த்து விடலாம்.
ஆனால் நிச்சயம் பார்க்க வேண்டிய இரண்டு இடங்கள் ப்ரயாக்ராஜ் நகரில் உண்டு. அந்த இடங்கள் குறித்து அடுத்த பகுதியில்
எழுதுகிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைத்திருங்கள் நண்பர்களே!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
எனக்கு இங்கே இருந்த அட்சய வடத்தினைப் பார்க்க முடியவில்லை - அழைத்துச் செல்லவில்லை- என்கிற குறை. அந்தக் கோட்டையைப் பார்த்தபோதே உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டது. பார்க்க முடியவில்லை. சுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குஅக்ஷய் வட் மரத்தை , கோட்டையை பார்க்கவில்லை நாங்கள்.
பதிலளிநீக்குவிவரங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
விளக்கங்கள் அருமை...
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள் ஜி
பதிலளிநீக்குகோயில் வளாகங்களில் வழுக்கும் டைல்ஸ் பதிப்பதுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறது. பழமையை மறந்து புதுமைக்கு மாறுகிறார்கள்.
பாதாள கோயில் வியப்பு
பதிலளிநீக்குஉங்கள் பயணத்தில் நாங்களும் தரிசித்து .........தொடர்கிறோம்.
பதிலளிநீக்குஜி இந்தத் தகவல்கள் முன்பு எழுதியதிலும் வாசித்த நினைவு வருகிறது. இப்போதும் வாசித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குகீதா
நீங்கள் அக்ஷயவடத்தின் அடிப்பாகம் அமைந்துள்ள இடத்தைப் படமெடுக்கவில்லையா? அந்த அக்ஷயவடத்தைக் கட்டிப்பிடிக்க 10 ரூபாய் கொடுத்த நினைவு. முதல் முறை சென்றிருந்தபோது அந்த வளாகத்திலேயே போன்/கேமராவை அனுமதிக்கவில்லை. கோட்டையின் நுழைவாயிலிலேயே வாங்கிக்கொண்டுவிட்டான். அடுத்த முறை வாய்ப்பு கிடைத்ததனால் நான் நிறைய படங்கள் எடுத்தேன்.
பதிலளிநீக்குசுவாரசியமான தகவல்கள். நான் அங்கே சென்றபோது இக்கோட்டையைப் பார்க்கவில்லை.
பதிலளிநீக்குஅக்ஷய் வட் மரத்தை , கோட்டையை பார்க்கவில்லை, காரணம் அது பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கபட்டிருப்பதாக பாதுகாப்பாளர்கள் தெரிவித்தனர்.
பதிலளிநீக்குஇன்னும் அக்ஷய் மரம் பார்க்கவில்லை அடுத்த முறை முயற்ச்சிக்கின்றேன்.தொடருங்கள் தொடர்வோம்.
பதிலளிநீக்குநாங்களும் கோட்டைக்குள் அமைந்திருக்கும் அக்ஷய் வட் மரத்தினை பார்க்கவில்லை..கோட்டையை வெளியிலிருந்து கண்டு திருப்திபட்டுக்கொண்டோம்
பதிலளிநீக்கு