செவ்வாய், 18 ஏப்ரல், 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி நாற்பத்தி எட்டு - வாரணாசியில் ஸ்ரீராம நவமி - பயணத்தின் முடிவு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“The real voyage of discovery consists not in seeking new lands, but in seeing with new eyes.” - Marcel Proust.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்

 

பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

பகுதி இருபத்தி இரண்டு - அயோத்யா ஜி - இராம ஜென்ம பூமி

 

பகுதி இருபத்தி மூன்று - அயோத்யா ஜி - சரயு நதி அனுபவங்கள்

 

பகுதி இருபத்தி நான்கு - Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு

 

பகுதி இருபத்தி ஐந்து - ராஜ் (dh)த்வார் மந்திர் 

 

பகுதி இருபத்தி ஆறு - கனக் Bபவன் எனும் தங்க மாளிகை

 

பகுதி இருபத்தி ஏழு - காலை உணவு - குஷி க்ளிப் - சரயு படித்துறை

 

பகுதி இருபத்தி எட்டு - ஸ்ரீ நாகேஷ்வர்நாத் ஜி எனும் சிவன் கோவில்

 

பகுதி இருபத்தி ஒன்பது - அயோத்யா ஜி - Khகாந்தானி DHதவா Khகானா

 

பகுதி முப்பது - அடுத்த நதிக்கரை நகரை நோக்கி

 

பகுதி முப்பத்தி ஒன்று - காசி விஷ்வநாத் ஆலயம் - புதிய ஏற்பாடுகள்

 

பகுதி முப்பத்தி இரண்டு - வாரணாசி - துர்கா கோவில் (எ) குரங்கு கோவில்

 

பகுதி முப்பத்தி மூன்று - வாரணாசி - சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன்

 

பகுதி முப்பத்தி நான்கு - வாரணாசி - துள்சி மானஸ் மந்திர்

 

பகுதி முப்பத்தி ஐந்து - தென்னிந்திய உணவும் அய்யர் கஃபேவும்

 

பகுதி முப்பத்தி ஆறு - காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்

 

பகுதி முப்பத்தி ஏழு - அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி

 

பகுதி முப்பத்தி எட்டு - Gகங்கா ஆரத்தி - ஒரு அற்புத அனுபவம்

 

பகுதி முப்பத்தி ஒன்பது - விதம் விதமாக சாப்பிடலாம் வாங்க

 

பகுதி நாற்பது - நான்காம் நதிக்கரை நகரம் - ப்ரயாக்ராஜ்

 

பகுதி நாற்பத்தி ஒன்று - ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம்

 

பகுதி நாற்பத்தி இரண்டு - அக்ஷய் வட் மற்றும் பாதாள் புரி மந்திர்

 

பகுதி நாற்பத்தி மூன்று - ப்ரயாக்ராஜ் - Bப(d)டே ஹனுமான்

 

பகுதி நாற்பத்தி நான்கு - ஷங்கர் விமான் மண்டப் - கச்சோடி சப்ஜி

 

பகுதி நாற்பத்தி ஐந்து  - மீண்டும் வாரணாசி - நகர்வலம்

 

பகுதி நாற்பத்தி ஆறு - வாராஹி அம்மன் கோவில்

 

பகுதி நாற்பத்தி ஏழு - பார்க்க இன்னும் உண்டு - Bபைரவ் மந்திர்

 

தில்லி நகரிலிருந்து 2022 ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒரு திங்கள் கிழமை (05.04.2022) அன்று புறப்பட்டு நைமிசாரண்யம், அயோத்யா, பிரயாகை மற்றும் வாரணாசி நகரங்களில் பல இடங்களில் சுற்றிய பிறகு ஞாயிற்றுக் கிழமை (10.04.2022), சைத்ர நவராத்திரியின் ஸ்ரீராம நவமி அன்று விட்டேத்தியாக வாரணாசி வீதிகளில் அலைந்து கொண்டிருந்தேன்.  வீதி எங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குழுமி இருந்தார்கள்.  இந்தப் பயணத்தில் பார்த்த அயோத்யாஜி நகரில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்றாலும் அதிக அளவில் கூட்டம் இருக்கும்.  நாங்கள் அதே நாளில் சிவபெருமானின் கோவில் அமைந்திருக்கும் வாரணாசி நகரில் இருந்தாலும் நகரெங்கும் ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தது.  அதிலும் மாலை நேரம் ஊர்வலங்கள் நிறையவே சென்று கொண்டிருந்தது. சிவன், பார்வதி, ஸ்ரீராமர், சீதா தேவி, லக்ஷ்மணர், ஹனுமான் வேடம் அணிந்து கொண்டு வாகனங்களில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.  ஊரெங்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் விண்ணைப் பிளக்க, ஊரெங்கும் திருவிழாக் கோலம்.  அந்தச் சமயத்தில் எடுத்த சில காணொளிகளை இந்தப் பகுதியில் இணைத்திருக்கிறேன்.  நீங்களும் பார்த்து ரசிக்கலாம்!




 

கிட்டத்தட்ட ஆறு நாட்கள் பயணம் ஒரு முடிவுக்கு வர இருந்தது.  நண்பரும் அவரது இல்லத்தரசியும் வாரணாசியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் பயணிக்க, நான் அங்கிருந்து தில்லி வரை இரயிலில் பயணம்.  நண்பரது விமானம் முன்னதாகவே (மாலை) இருந்ததால், அவர்கள் முன்னதாக புறப்பட்டார்கள்.  அவர்கள் இருவரையும் தங்குமிடத்தின் கீழ் வரை வந்து, ஒரு வாகனத்தில் விமான நிலையம் செல்ல வழி அனுப்பி விட்டு நான் மீண்டும் நகர்வலம் வந்தேன்.  தங்குமிட வாயிலில் நின்று ஊர்வலங்களையும், மக்கள் செல்வதையும் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியாமல் இருந்தது.  வயிறு சரியாகி விட்டது என்றாலும் இரவு, தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டேன். தில்லி திரும்பும் வரை கவனமாக இருக்க வேண்டுமே! அதுவும் காலை தில்லி இரயில் நிலையத்தில் இறங்கிய உடன் வீடு சென்று மீண்டும் தயாராகி அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் ஜாக்கிரதையாகவே இருந்தேன்.  எட்டு மணிக்கு மேல் தங்குமிடத்தினை காலி செய்து ஒரு ஆட்டோவில் பயணித்து இரயில் நிலையம் சென்றடைந்தேன்.  








 

இரவு 10.15 மணிக்கு தற்போது Bபனாரஸ்  என்றும், முன்பு மண்டுவாடி எனவும் அழைக்கப்பட்ட இரயில் நிலையத்திலிருந்து ஷிவ் Gகங்கா விரைவு இரயிலில் புறப்பட்டு காலை 08.25 மணிக்கு புது தில்லி இரயில் நிலையம் சென்று சேர வேண்டும். இரயிலில் 3AC பெட்டியில் என்னைத் தவிர நான்கு பெண்மணிகள் மற்றும் ஒரு சர்தார்ஜி. அதிலும் மூன்று பெண்மணிகள் மொத்த இரயிலே அவர்களுடையது போலவும், அந்த இடம் முழுக்க அவர்களுடைய சொந்தம் போலவும் நடந்து கொண்டார்கள். ஒரு பக்கம் மூன்று பேர் அமரக் கூடிய இருக்கைகளில் இரண்டு பேர் அமர்ந்து கொள்ள, மற்ற பக்கத்தில் அவர்களது மற்ற தோழி, நான் மற்றும் சர்தார்ஜி. அவர்கள் பக்கம் அமர வேண்டிய ஒரு யுவதி வர, அப்பெண்ணிடம் "உன் சீட் நம்பர் என்ன, மேலே உள்ள படுக்கை தானே, இப்ப கீழே உட்காரணுமா" என அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை வீச, அந்த யுவதி தகுந்த பதிலடி கொடுத்தாள் - "என் சீட் இது, படுக்கும் முன் இங்கே கொஞ்சம் நேரம் உட்கார்ந்து கொள்வேன். டென்ஷன் ஆகாதே" என்று! 

 

அந்தப் பெண்மணிகள் பேசிக் கொண்டதிலிருந்து அவர்கள் மூவரும் உத்திரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் இருப்பதாகவும், இந்த இரயிலில் தில்லி வரை வந்து பேருந்து மூலம் குலூ மணாலி சுற்றுலாவாகச் செல்ல  இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. யாரையும் தூங்க விடாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் பேசியதில் பலவற்றை பொது வெளியில் எழுத முடியாது - அந்த அளவுக்கு இருந்தது.  அவர்கள் பேசிக் கொண்டே இருந்தது மட்டுமின்றி ஒரே சிரிப்பு...... விட்டு விடுதலை ஆகி வந்த உணர்வில் இருந்தார்கள் போலும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பயணிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்தப் பயணம் முன்பே திட்டமிட்டாலும்,  தன் கணவரிடம் புறப்படும் போது தான் இப்படி பயணிக்க போவதாக சொன்னதாகவும் அதனால் வீட்டில் பெரிய சண்டை என்றும் சொன்னார் ஒரு பெண்மணி. அவர்கள் பேசியதில் இருந்து மாதிரிக்கு ஒன்று.....

 

கணவனின் பெயர் பொறித்துக் கொள்ள நம் உடல் என்ன நிலமா என்ன? அந்தக் காலத்தில் இவர் மனைவி இவர் தான் என்பதை தெரிந்துகொள்ள இப்படி செய்திருக்கலாம். அடுத்தவர் பெயரை எதற்கு பதிய வைக்க வேண்டும்? மனதிலேயே இன்னும் வைத்துக் கொள்ள முடியாத ஒரு பெயரை கையில் எதற்கு பொறித்துக் கொள்ள வேண்டும்? மூன்று பெண்மணிகளும் ஐம்பதைக் கடந்தவர்கள் என்பதும், அவர்களின் குழந்தைகள் கல்லூரிகளில் படிக்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல்.

 

பேச்சு பல விஷயங்களைக் கடந்து சென்றது. எனக்கென்னமோ அவர்கள் இரயிலில் கூட பள்ளியில் பாடம் எடுக்கும் உணர்வுடனே இருந்தது போலத் தோன்றியது! எப்படியோ தூங்கும் வரை எனக்கும் பொழுது போனது. காலை கண் விழித்த போது அவர்கள் மூவரும் மீண்டும் தங்களது பாடத்தினை ஆரம்பித்து விட்டார்கள்...... நல்ல வேளை நான் எழுந்த சில நிமிடங்களில் புது தில்லி வந்து சேர்ந்து விட்டது..... காலை 08.25 மணிக்கு புது தில்லி இரயில் நிலையம் வர வேண்டிய இரயில், 07.55 மணிக்கே வந்து சேர்ந்து விட அது எனக்கு இன்னும் வசதியானது. 20 ரூபாய் கொடுத்து இ-ரிக்ஷாவில் வீடு வந்து சேர்ந்து விட்டேன். வீடு சென்று புறப்பட்டு அலுவலகம் நிதானமாக செல்லலாமே! 

 

இந்தப் பகுதியில் இணைத்து இருக்கும் படங்கள் Bபனாரஸ் இரயில் நிலையத்தில் வரைந்து இருந்த ஓவியங்களின் படங்கள். ஒவ்வொரு பயணமும் நமக்கு புது விஷயங்களை கற்பிக்கிறது என்பதோடு, புது வித அனுபவங்களையும் தருகிறது. இந்த நதிக்கரை நகரங்கள் பயணமும் பல விஷயங்களை, பல அனுபவங்களை எனக்கும் என்னுடன் பயணித்த நண்பர் குமார் மற்றும் அவரது இல்லத்தரசிக்கும் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.  நாங்கள் பார்த்த இடங்கள், எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள், தகவல்கள் என பலவற்றையும் கலந்து கட்டி, என்னால் இயன்ற அளவு சுவாரஸ்யமாக “நதிக்கரை நகரங்கள்” என்ற தலைப்பில் உங்களோடு தொடராக பகிர்ந்து வந்திருக்கிறேன்.  நடுவே கொஞ்சம் இடைவெளி வந்துவிட்டாலும், மீண்டும் புத்துணர்வுடன் திரும்பி இந்தத் தொடரை எழுதி முடித்து விட்டேன்.  தொடரை மீண்டும் எழுத உற்சாகம் தந்த உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி - குறிப்பாக நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.   

 

மீண்டும் விரைவில் வேறு ஒரு பயணத் தொடருடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.  இந்தப் பயணத்தில் உத்திரப் பிரதேசம் என்றால் அடுத்த பயணம் வேறு ஒரு மாநிலத்திற்கு - அதுவும் நான் இதுவரை சென்றிராத மாநிலத்திற்கு! அது எந்த மாநிலம்?  விரைவில் அந்தப் பயணம் இங்கே தொடங்கும்!  அது வரை….

 

நதிக்கரை நகரங்கள் பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருந்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

 

11 கருத்துகள்:

  1. நிறைவான பயணம் உங்களுக்கு.  நிறைவான பதிவு எங்களுக்கு!  இப்படி ஊர் சுற்றிவிட்டு திரும்பிய நாளே அலுவலகம் செல்ல எனக்குத் தோன்றாது!  அன்றும் விடுமுறையாக இருக்க பார்த்துக்கொண்டு, மறுநாள் அலுவலகம் செல்லுமாறு அமைத்துக் கொள்வேன் என்று நினைக்கிறேன்!  ரயில் பெண்மணிகள் பேச்சு அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பதிவு..
    நேர்முக வர்ணனை அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. நிறைவான அணுபவத்தை எங்களுக்கும் அளித்துவிட்டீர்கள் சார். விரைவில் ஒரு நூலாக வெளியிட வாழ்த்துக்கள்.
    இன்றைய பதிவின் படங்களும் பாட அணுபவமும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. பயண அனுபவம் சிறப்பு. நீங்களும் துளசி டீச்சரும் எழுதாதவைகளை அல்லது செல்லாத இடங்களைப் பற்றி மட்டும், படக்குவியல்களாக நான் எழுத நினைத்திருக்கிறேன். அக்டோபருக்கு மேல்தான் ஆரம்பிக்கணும்.

    பதிலளிநீக்கு
  5. இரயில் பயணங்களில், ஹெட்போன் உபயோகிக்காமல் இரவில் சத்தமாக வைத்து நூ டியூப் பார்த்து, கேட்டுக்கொண்டு இடைஞ்சல் செய்யும், பாடல்களை வைத்து நிம்மதியைக் கெடுக்கும் அராஜகங்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள் இல்லையா?

    பதிலளிநீக்கு
  6. படங்களும் பயணக் குறிப்புகளும் பிறருக்கு பயனுள்ளவை ஜி

    பதிலளிநீக்கு
  7. ரயில் நிலைய படங்கள் ரொம்ப நல்லாருக்கு. இப்ப பல ரயில் நிலையங்களையும் அழகு படுத்துகிறார்கள் விமான நிலையங்களையும்...

    ரயிலில் இப்படியான தொல்லைகள் அவ்வப்போது உண்டு.

    அதுவும் இவர்கள் ஆசிரியர்கள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களின் பேச்சிலிருந்து நீங்கள் சொன்னது போல் விடுதலை பெற்று வந்தது போன்று...

      பயணம் நல்ல பயணமாக அமைந்திருக்கிறது மகிழ்வான விஷயம். காணொளிகளை ரசித்தேன், ஜி.

      இன்றைய வாசகம் செம...

      அடுத்த மாநிலம் எதுவாக இருக்கும் அதுவும் இதுவரை செல்லாத மாநிலம்!! ஒன்று யூகத்தில் உண்டு. பார்ப்போம் அதுதானா என்று!

      கீதா

      நீக்கு
  8. நிறைவான பயண கட்டுரை வெங்கட் சார் இந்த நதிக்கரை நகரங்களை வாசித்ததில் மிகவும் மகிழ்ச்சி .
    எத்தனை எத்தனை இடங்கள், மனிதர்கள் ...ஒவ்வோன்றும் ஒரு அனுபவம் .


    பயணங்கள் பல அனுபவங்களையும், நினைவுகளையும் நம்மிடம் விட்டு செல்லுகின்றன.

    தேங்கி இருக்கும் தேவையில்லா எண்ணங்கள் இல்லாமல், ஓடும் நதி போல பல புதிய நல் எண்ணங்களுடன் வாழ வேண்டும்.... அதற்கு பயணங்கள் பல வகையில் உதவும்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....