அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
TASTE YOUR WORDS, BEFORE YOU SERVE THEM.
******
சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, நான்
படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் விஸ்வதேவி தேவி
அவர்கள் எழுதிய “இசைக் காதலி என்னைக் காதலி” எனும் மின்னூல். மின்னூல் குறித்து இன்றைய பதிவில்
பார்க்கலாம் வாருங்கள்!
வகை: நாவல்
வெளியீடு: அமேசான் கிண்டில்
பக்கங்கள்: குறிப்பிடப்படவில்லை
விலை: ரூபாய் 250/-
மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:
இசைக்காதலி என்னைக் காதலி (Tamil Edition) eBook : தேவி,
விஸ்வதேவி: Amazon.in: Kindle Store
*******
அபிநயன் - அம்ருதவர்ஷினி திருமணத்தில் ஆரம்பிக்கிறது
கதை.
அபிநயன் ஒரு பிரபல திரை இசையமைப்பாளர் மற்றும் பாடகர். அம்ருதவர்ஷினி கூட ஒரு
பாடகி தான்.
மணப்பெண் அம்ருதவர்ஷினிக்கு திருமணத்தில் சுத்தமாக இஷ்டமில்லை. அதுவும் தனது தாயின் மறைவுக்குக் காரணமாக இருந்த
அபிநயன் உடன் நடக்கும் திருமணத்தில் இஷ்டமில்லை. மணநாள் அன்று தயாராகாமல் இருக்கும் அவளை மிரட்டி
சம்மதிக்க வைக்கிறான் மணமகன் அபிநயன்.
விறுவிறுப்பாக சம்பவங்களைச் சொல்லி, கதையை நகர்த்தி
இருக்கிறார் நூலாசிரியர்.
அம்ரு என்கிற அம்ருதவர்ஷினியின் தாய் மறைவில் பின்னே இருந்தவர் யார்? அதன் காரணம்
என்ன என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டு சென்றிருக்கிறார். படிக்கும் போதே சில இடங்களில் அம்ருதவர்ஷினியை
நினைத்தால் பாவமாக இருக்கிறது. கடைசியில் அவர்கள் இவருடைய வாழ்க்கையில் வசந்தம்
வந்ததா, நாயகியின் தாய் விபத்தில் மறைந்ததன் பின்னர் யார் இருந்தார்கள் போன்ற
முடிச்சுகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
காதல், நட்பு, சகோதர-சகோதரி பாசம், அன்பு, துரோகம், குரோதம் என அனைத்தும்
இருக்கும் ஒரு குறுநாவல் இந்த இசைக்காதலி என்னைக் காதலி நாவல். வாசித்துப் பாருங்களேன். நூலாசிரியருக்கு
வாழ்த்துகள். வாசிக்கப் போகும் உங்களுக்கு பாராட்டுகள்.
*******
எங்களது இல்லத்திலிருந்து, நான், எனது இல்லத்தரசி
மற்றும் நண்பர் சுப்பிரமணியன் என மூவரும் எழுதி இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான
சுட்டி கீழே.
முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள்
வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!
சந்தித்ததும் சிந்தித்ததும்:
மின்புத்தகங்கள்...
மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
கதையின் முடிச்சை சொல்லும்போதே சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குபதிவு குறித்த கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.
நீக்குகதை Thriller போன்ற க்தைக்களமோ என்று நினைத்தேன் ஆனால் உங்கள் விமர்சனம் காதல் நட்பு, சகோதர சகோதரி பாசம் என்று செல்கிறது என்று சொல்லியிருக்கீங்க. சுவாரஸியமாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. ஆனால் இன்னும் அமேசானில் வாசிக்க கட்ட வாய்க்கவில்லை.
பதிலளிநீக்குகீதா
முடிந்த போது வாசித்துப் பாருங்கள் கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குஅழகான கருத்தைச் சொல்லும் வித்தியாசமான வாசகம்!
பதிலளிநீக்குகீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. மனம் நிறைந்த நன்றி.
நீக்குவிமர்சனம் சிறப்பாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குவிமர்சனம் அருமை...
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குகதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதை விமர்சனம் அருமை. சுவாரஸ்யமாக செல்லும் இக் கதையை படிக்க ஆவலாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.