திங்கள், 1 மே, 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி ஐந்து - மதிய உணவும் MONASTERY அனுபவமும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிஇந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்

 

“HAPPINESS CAN BE FOUND, EVEN IN THE DARKEST OF TIMES, IF ONE ONLY REMEMBERS TO TURN ON THE LIGHT.” - STEVE KLOVES, SCREENWRITER.

******

 

பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவைஆதலினால் பயணம் செய்வோம்தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே

 

பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  

 

பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்

 

பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்

 

பகுதி நான்கு - இந்திரனின் தோட்டம் - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்

 

******

 


Bபாக்டோக்ரா விமான நிலையத்திலிருந்து ஐந்து வாகனங்களில் புறப்பட்டு டார்ஜிலிங் அருகே GHUM என்ற இடத்தில் இருக்கும் Sterling Resorts சென்று சேர்ந்தது குறித்து சென்ற பதிவில் எழுதி இருந்தேன்நாங்கள் செல்லும் வழியில் பார்த்த ஒரு விஷயம் அதிசயமாகவே இருந்ததுஅந்த விஷயம் என்ன என்று கடைசியில் சொல்கிறேன். அப்படிப் பார்த்த விஷயம் - கடைகளில் பகிரங்கமாகவே விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ஒரு திரவம் - பார்க்க மேலே உள்ள படம்! சரி இந்த விஷயத்தினை பதிவின் இறுதியில்  பார்க்கலாம்.



சென்ற பகுதியில் சொன்னது போல டார்ஜிலிங் பாதையில் எட்டு கிலோமீட்டர் முன்பே இருக்கும் GHUM எனும் இடத்தில் எங்களுக்கு தங்குவதற்கு Sterling Resorts - இல் அறைகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்எனக்கும் தினேஷ் குமார் மீனா எனும் நண்பருக்கும் அறை எண் 1202 கிடைத்தது. அறைக்குச் சென்று உடைமைகளை வைத்து விட்டு, நானும் அவருமாக வெளியே வந்தோம். விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஐந்து வண்டிகளில்  எங்கள் வண்டிதான் முதன் முதலில் தங்குமிடம் வந்து சேர்ந்ததுஅவர்கள் வந்து சேரும் வரை ஒன்றும் வேலை இல்லை என்பதால் அப்படியே காலாற நடந்து நகர் வலம் வரலாம் என நானும் நண்பர் தினேஷ் அவர்களும் புறப்பட்டோம். சிறிது நடந்த பிறகு வீடுடன் அமைந்து இருக்கும் சிறிய உணவகம் ஒன்றில் liquor chai, அதாவது கட்டஞ் சாய் அருந்தினோம். கடைக்காரரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு தங்குமிடம் திரும்பினோம். இந்த பகுதி முழுவதும் மலைப்பகுதி என்பதால் சாதாரணமாக சாலையில் நடப்பதே மலையேற்றம் போல தான்எங்கள் தங்குமிடம் இருந்தது மேடான பகுதிஅங்கே இருந்து வெளியே வர வேண்டும் என்றால் மலையிலிருந்து இறங்க வேண்டும். திரும்பி தங்குமிடம் வர, மலையேற்றம் செய்ய வேண்டும்வண்டி தங்குமிடம் வரைக்கும் வருவதற்கு வழி இருப்பதால் பிரச்சனை இல்லைநடந்து வரும்போது மலையேற்றம், பழக்கம் இல்லாதவர்களுக்கு கடினமாகவே இருக்கும்

 

நாங்கள் தேநீர் அருந்தி திரும்பிய சமயம் மற்ற நண்பர்கள் வந்த வண்டிகளும் வந்து சேர்ந்து இருந்ததுஅனைவரும் அவரவருக்கு ஒதுக்கிய அறைகளுக்குச் சென்று உடைமைகளை வைத்து விட்டு Refresh செய்து கொண்டு மதிய உணவுக்கு வர வேண்டும் என பயண ஏற்பாட்டை செய்த திரு விஷால் அவர்கள் சொல்ல, அனைவரும் தயாராகி வந்து விட்டார்கள்தங்குமிடத்தில் இருந்த வரை அங்கே தான் உணவுஒவ்வொரு வேளையும் Buffet தான்பல வகைகளில் உணவுகள் இருக்க நமக்குத் தேவையானவற்றை எடுத்து தட்டில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம்பொதுவாக இந்த மாதிரி ஏற்பாடு சில சமயங்களில் நல்லதாக இருந்தாலும் - அதாவது உணவை வீணடிக்காமல் நமக்கு வேண்டியதை மட்டும் போட்டு சாப்பிடலாம் என்றாலும், பலருக்கு இந்த விஷயம் புரிவதில்லைவைத்திருக்கும் அனைத்து வகை உணவுகளையும் ருசிக்க வேண்டும் என்று ஆசையுடன் அனைத்தையும் தட்டில் போட்டுக்கொண்டு வந்து விடுவார்கள். பிறகு அவை அனைத்தும் கலந்து சாப்பிடப் பிடிக்காமல் வீணடிப்பார்கள்எங்கள் குழுவிலும் சிலர் இப்படிச் செய்வதை பார்க்க முடிந்ததுநான் எனக்குத் தேவையானவற்றை, அதுவும் மிகக் குறைவான அளவில் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன்உணவு நன்றாகவே இருந்ததுபல வகை உணவுகளின் பெயர்கள்தான் ஒன்றும் புரியாமல் இருந்தது. அதிலும் குறிப்பாக இனிப்புகளின் பெயர்கள் குழப்பம் கொள்ள வைத்தது











 

மத்திய உணவிற்குப் பிறகு சற்றே ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, அரை மணி நேரம் ஒய்வு. மற்றவர்கள் தயார் ஆக நேரம் எடுத்தது என்பதால், எங்கள் தங்குமிடத்தின் தொட்டடுத்து இருந்த ஒரு புத்தமத வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று வரலாம் என நான் புறப்பட்டு விட்டேன்ஆசிய கண்டத்தில் இருக்கும் மிகவும் பழமையான புத்த மத வழிபாட்டுத் தளங்களில் ஒன்றாக இந்த Yiga Choeling Monastery-யைச் சொல்கிறார்கள்.  1850-ஆம் வருடம் இந்த வழிபாட்டுத் தலம் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறதுபொதுவாக Ghum அல்லது Ghoom Monastery என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டுத் தலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்திருக்கிறதுடார்ஜிலிங் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் புத்தமத வழிபாட்டுத் தலம் இது தான் என்பதும் கூடுதல் தகவல்புத்த மதத்தின் Gelukpa என்ற பிரிவினர்கள் வழிபடும் தலம் என்றும் அந்த பிரிவினர்களை மஞ்சள் தொப்பி பிரிவினர் என்றும் அழைப்பார்கள் என்றும் சில தகவல்கள் இருக்கின்றன. மங்கோலியாவைச் சேர்ந்த புத்த பிக்ஷுவும் ஜோதிடரும் ஆன Sokpo Sherab Gyatso என்பவரால் அமைக்கப்பட்ட வழிபாட்டுத்தலம் இது என்பதை அங்கே இருக்கும் தகவல் பலகை மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.   மிகவும் அமைதியான சூழலில் அமைந்து இருக்கிறது இந்த வழிபாட்டுத் தலம்.

 

இந்த இடம் ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்ததுபெரிதாக மக்கள் கூட்டம் இல்லாமல் அமைதியாகவும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்திலும் இருந்ததால் முதல் நாள் மட்டுமல்லாது அடுத்த நாள் காலையிலும் இந்த இடத்திற்கு வந்து நீண்ட நேரம் இருந்ததோடு நிறைய படங்களையும் எடுத்துக் கொண்டேன்வழிபாட்டுக்காக விளக்குகளை தயார் செய்து கொண்டிருந்த பெரியவரிடம் பேச்சுக் கொடுக்க அவர் ஒன்றிரண்டு வார்த்தைகளே பேசினார்அதனால் அதிகம் தகவல்கள் தெரிந்து கொள்ள முடியவில்லைஅந்த இடத்தில் இருந்த சிறுமி எனது கையில் இருந்த கேமராவைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவரையும் ஒரு படம் எடுத்து காண்பித்தேன்கேமராவை கையில் பிடித்துக் கொண்டு தனது படத்தைப் பார்த்துப் பார்த்து அப்படி ஒரு புன்னகை சிந்தினாள்தவிர அந்தப் பக்கமாக வரும் அனைத்து குழந்தைகளிடமும் தனது நிழற்படத்தைக் காண்பிக்கச் சொல்லி அப்படி ஒரு மகிழ்ச்சி அவருக்கு.  

 

இரண்டாம் நாள் இந்த இடத்திற்கு வந்தபோது அங்கே ஏதோ ஹோமம் நடந்து கொண்டிருந்ததுபொதுவாக இந்து மதத்தினர் தான் இந்த ஹோமங்கள் செய்வார்கள் என அதுவரை நினைத்திருந்தேன்ஆனால் புத்த மதத்தினைச் சேர்ந்தவர்களும் ஹோமங்கள் செய்வார்கள் என்பதை இங்கே வந்த பிறகே தெரிந்து கொள்ள முடிந்தது. மலைப்பகுதிகளில் இருக்கும் இது போன்ற புத்தமத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் அமைதி நிச்சயம் நாம் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டிய விஷயம். நான் இரு முறை பார்த்து ரசித்த இந்த Yiga Choeling Monastery மனதை விட்டு அகலவே இல்லை என்பது தான் உண்மைஅதன் பிறகு நாங்கள் என்ன செய்தோம், எங்கே சென்றோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்இப்பகுதியினை முடிப்பதற்கு முன்னர் சொல்ல வேண்டிய தகவல் ஒன்றையும் சொல்லி விடுகிறேன் - பதிவின் ஆரம்பத்தில் சொன்ன விஷயம் தான் - இங்கே பெட்ரோல் நிலையங்கள் குறைவு என்பதால் ஒரே மாதிரியான சாராய பாட்டில்களில் சிறு  கடைகளில் பெட்ரோல் விற்கிறார்கள்மேலே இணைத்திருக்கும் படம் சாராய குப்பிகளில் அடைத்திருக்கும் பெட்ரோல் !

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து

 

7 கருத்துகள்:

  1. விவரங்கள் சுவாரஸ்யம்.  வண்டிக்கு போடும் பெட்ரோலா?  நான் கூட மனிதன் எடுத்துக் கொள்ளும் பெட்ரோல் என்றுதான் நினைத்தேன்.  அலலது எண்ணெய் என்று சொல்லப் போகிறீர்களா என்று பார்த்தேன்.  

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா1 மே, 2023 அன்று AM 6:04

    சாராய பாட்டிலில் பெட்ரோலா? தமிழகம் போல் போதையில் தடுமாறினால்?

    குழந்தையின் அமைதி முகம் அழகு. புத்த வழிபாட்டுத் தலம் அருமை.

    உணவு பெயர் தெரியவில்லைன்னு சொல்லிட்டீங்க. இனிப்புக்கு எதற்குப் பெயர்? நெல்லை

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அந்த குழந்தையின் முகமும், புத்தரின் முகத்தைப் போல் அமைதியாக காட்சி தருகிறது. புத்தமத வழிபாட்டுத் நன்றாக உள்ளது. புத்தர் என்றாலே அமைதிதானே..! அமைதி மனதுக்குள் ஒரு சாந்த உணர்வை ஏற்படுத்தும்.

    நானும் பாட்டில் படங்களை பார்த்ததும் அது வேறு வகையான திரவம் என்றுதான் நினைத்தேன். வழி நெடுக ஆங்காங்கே இருக்கும் பெட்ரோல் பங்க்கெல்லாம் அங்கு குறைவா? பாட்டில் விற்பனை செய்வதும் நல்லதுதான். அவசர தேவைக்கு அவரவர் வாங்கிக் கொள்ளலாம். அடுத்து வரும் பயணத்தில் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. டாஸ்மாக்கில் பெட்ரோல் என்று சொல்லலாமா ?

    பதிலளிநீக்கு
  5. பதிவு அருமை, படங்கள் விவரங்கள் அருமை.
    பள்ளி செல்லும் சிறுமி அழகு. குழந்தையின் அம்மா கைகுட்டையை சட்டையில் பின் செய்து அனுப்பி இருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
  6. //இரண்டாம் நாள் இந்த இடத்திற்கு வந்தபோது அங்கே ஏதோ ஹோமம் நடந்து கொண்டிருந்தது. பொதுவாக இந்து மதத்தினர் தான் இந்த ஹோமங்கள் செய்வார்கள் என அதுவரை நினைத்திருந்தேன். //
    புத்தர் இருந்த காலத்தில் இவை எல்லாம் கிடையாது.
    அதன் பின் இரண்டாக பிரிந்து விட்டதே!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....