செவ்வாய், 30 மே, 2023

கதம்பம் - திருவரங்கம் - மட்கா குல்ஃபி - Modern Love Chennai - சென்னை பயணம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கண்ணின் மணியே... பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


திருவரங்கத்து இற்றைகள் - 21 May 2023:


வெயிலும், புழுக்கமும் இங்கே வாட்டி எடுக்கின்றன! எத்தனை முறை குளித்தாலும் பயனில்லை! உங்க ஊரில் எப்படி??


மேங்கோ குல்ஃபி!



அடிக்கும் வெயிலில் சில்லென்ற பானங்களும், பனிக்கூழும் தான் மனதிற்கு இதம் தருகின்றன! 


மாம்பழத்துடன், பால் பவுடரும், பாலும்,  சர்க்கரையும், ஏலக்காய் எசன்ஸும் சேர்த்து மிக்சியில் அடித்து செட் செய்திருந்தேன்! நன்றாகவே வந்திருந்தது! ஃப்ரெஷ் க்ரீம் இருந்தால்  பால் பவுடருக்குப் பதிலாக சேர்க்கலாம். இன்னும் க்ரீமியாக வரும்! சர்க்கரைக்கு பதிலாக கண்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளலாம்!


மட்கா குல்ஃபி!


சில மாதங்களுக்கு முன்பு மங்கள் & மங்கள் சென்ற போது அங்கே எல்லோரும் மட்கா குல்ஃபி வாங்கி ருசித்தோம்! ருசிக்கும் போதே இந்தப் பானை எனக்கு வேண்டும்! நான் வீட்டுக்கு எடுத்துப் போகப் போறேன்! என்று என்னவரிடம் சொல்ல, அவரோ அதை திருப்பி கொடுக்கணும் என்கிறார்...🙂 ஏனென்றால் அது செராமிக் பானை! 


அடுத்து குல்ஃபியை எடுத்து சாப்பிட குட்டியாக எவர்சில்வர் ஸ்பூனும் தந்திருந்தார்கள்! அதையும் திருப்பி கொடுக்கணும் என்கிறார்..🙂 நான் அதெல்லாம் இல்லை! இந்தப் பானையும் ஸ்பூனும் நமக்கு தான் என்றேன்..🙂 இந்த மாதிரி குட்டி ஸ்பூன் பெருங்காயத்துக்கு ஒருமுறை கிடைத்தது என்றும் சொன்னேன்..🙂


அப்புறம் என்ன தான் ஆச்சு என்கிறீர்களா!! கடை ஊழியரிடம் கேட்பதா! வேண்டாமா! என்று தயக்கத்துடன் அங்கிருந்த அக்காவை பார்க்க....


என்னமோ கேட்கணும்னு நினைக்கிறீங்க! என்னன்னு சொல்லுங்க! என்றார்!


இல்லக்கா! இவரு இந்த ஸ்பூனையும் பானையையும் திருப்பி குடுக்கணும்னு சொல்றாரு! நான் இல்லைங்கறேன்! நீங்களே சொல்லுங்கக்கா ஒரு நியாயத்த....! என்றேன்.


சிரித்துக் கொண்டே அந்த அக்கா வீட்டுல போய் தயிர் விட்டு வெச்சு சாப்பிடுங்க!! என்றார்...🙂


அப்படி எடுத்து வந்த மூன்று பானைகளில் தான் இந்த மேங்கோ குல்ஃபியை செட் செய்தேன் என்று சொல்லணுமா..🙂


வாய்ப்புக் கிடைத்தால் செய்து பாருங்கள்!


******


Modern Love Chennai..!  - 22 May 2023:



மதியநேரம் பொழுதைப் போக்க primeல் பார்த்த ஒரு Webseries இது! மொத்த ஆறு கதைகள்! ஆறு டைரக்டர்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்! இன்றைய நாளில் காதல் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏற்படுத்தும் தாக்கத்தை இக்கதைகளின் மூலம் காண்பித்திருக்கிறார்கள்!


ராஜா ராணி காலத்திலிருந்தே காதல் என்பது இருக்கிறது தான்! புறா மூலம் தூது விடுவதில் ஆரம்பித்து மரத்தைச் சுற்றி சுற்றி ஆடுவதும், கடிதங்கள் வாயிலாக நேசிப்பதும், பார்க்காமலே காதல் என்று சினிமாக்களில் எத்தனையோ படங்களில் காதல் என்ற உணர்வை பலவிதங்களில்  காண்பித்திருக்கிறார்கள்!


இங்கே நான் பார்த்த ஆறு கதைகளில் சிலவற்றை மனம் ஏற்றுக் கொண்டாலும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை! இன்றைய இளைஞர்களுக்கு காதல் என்ற உணர்வு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தான்  நினைக்கிறேன்!


இளையராஜா அவர்களின் இசையுடன் பயணிக்கும் இந்த சீரிஸில் பாரதிராஜா சார் கூட இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களுக்கு சமர்ப்பணமாக 'பறவைக்கூட்டில் வாழும் மான்கள்' என்ற கதையை இயக்கியுள்ளார்!


அதேபோன்று 'இமைகள்' என்ற கதையும் எனக்குப் பிடித்திருந்தது! மெல்ல மெல்ல பார்வை பறிபோய்க் கொண்டிருக்கும் கதாநாயகியை காதலித்து கரம் பிடித்து வாழ்வின் நிசர்சனங்களை சவால்களுடன் கடந்து வருவதே கதையின் சாராம்சம்!


நான் வெப்சீரிஸ் பார்ப்பது இதுவே முதல்முறை! திரைப்படங்களைப் போன்று இதில் நேரத்தை கடத்த இழுப்பதில்லை! சட்டென்று முடிந்து விடுகின்றது தான்! அதேபோன்று நம் நிஜ வாழ்க்கையும் அல்லவே! பிரச்சினைகளை சந்திப்பதும் அதைக் கடந்து பயணிப்பதும் தானே வாழ்க்கை! இதில் சொல்ல வரும் நிஜங்கள் அவசர யுகத்தில்  இன்றைய தலைமுறையின் தவறான வாழ்க்கைமுறையை தான் காண்பிக்கிறது!


வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் பாருங்களேன்!


******


சென்னை பயணம் - 24 May 2023:



உறவுவட்டத்தில் நிகழவிருக்கும் ஒரு சுபநிகழ்வுக்காக சென்னையை நோக்கி ரயிலில் இன்றைய தினம் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.


நாலு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு இட்லிகளை வார்த்து மிளகாய்ப்பொடியுடன் பேக் செய்து எடுத்துக் கொண்டாச்சு! 


ரயிலுக்காக காத்திருந்த போது ஒரு சுட்டிப்பையன் எங்களைக் கவர்ந்தான்! மூன்று வயது இருக்கலாம்! அதற்குள் கண்ணாடி..🙁 அம்மா! தெயின் எப்ப வரும்?? என்று மழலை மொழியில் கேட்டுக் கொண்டேயிருந்தான்! தன் அம்மாவிடம் சொல்லி பவுடர் போட்டு விடச் சொல்ல, அவன் அம்மாவோ பையிலிருந்து பெரிய Yardley டப்பாவை எடுத்து அவன் சட்டைக்குள் கொட்டி விட்டார்...🙂 அவனும் அவன் பங்குக்கு விரல்களில் எடுத்து பூசிக் கொண்டான்...🙂


எங்கள் சீட்டில் அமர்ந்து கொண்டு பின்னாடி சீட்டில் இருப்பவர்களோடு அரட்டையடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணியும் சிறுவனும் நாங்கள் வந்து நின்று கொண்டு எங்கள் உடமைகளை  மேலே வைப்பதைப் பார்த்தும், நான் கூப்பிட்டுப் பார்த்தும் கண்டுக்கவே இல்லை! அவ்வளவு சுவாரஸ்யமான பேச்சு..🙂


சிறிது நேரத்திற்குப் பிறகு, Excuse me! இந்த ரெண்டு சீட்டும் எங்களோடது! என்று சற்று உரக்கச் சொன்ன பின்பு நகர்கின்றார்! ஏனோ அவ்வளவு  அலட்சியம்! பலவிதமான மனிதர்களோடு இரயில் பயணம் மட்டுமல்ல வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

16 கருத்துகள்:

  1. சுவையான, சுவாரஸ்யமான அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பெயரில்லா30 மே, 2023 அன்று AM 8:04

    சுவையான, சுவாரஸ்யமான அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்.

      நீக்கு
  3. தகவல்கள் சொல்லிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. ஹைஃபைவ் ஆதி! நானும் குல்ஃபி (முன்னாஆஆஆஆஆஆஆஆஆஆடி) சாப்பிட்டப்ப பானைகளை விட்டதில்லை வீட்டிற்குக் கொண்டுவந்துவிடுவேன். இப்போது நான் சாப்பிட முடியாதே ஆனாலும் நம் வீட்டு மற்றவர்கள் சாப்பிடும் போது விடுவேனா....எல்லாரும் எங்கிட்ட கொடுங்க என்று வாங்கிக்கொண்டுவந்துவிடுவேன். அதை ஏன் கேக்கறீங்க வந்து நல்லா கழுவிட்டு ஒவ்வொருவருக்குமான தயிர் என்று அதில் உறை ஊத்தி...

    மண்பானையில் தருவதை திரும்ப பயன்படுத்த மாட்டாங்க. நான் அறிந்த வரையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் முடிந்தவரை கொண்டு வந்துவிடுவேன். இது பீங்கான் பானை என்பதால் திரும்ப கொடுக்கணுமோ என்று நினைத்திருக்கிறார்...:)

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  5. உங்கள் மண்பானைக் கதை படிக்க எனக்கும் டெல்கி நினைப்பு வருகிறது, டெல்கியில் மண்பாத்திரங்கள் வாங்க முடியவில்லை, அதனால பிரியாணி மண் பானையில் மூடியுடன் வாங்கலாம், அப்படி வாங்கி கஸ்டப்பட்டு காண்ட் லக்கேஜில் இழுத்து வந்திட்டேன் அதை, அதுபோல அங்கு ச்சை ரீ, குட்டிக் குட்டி மண் கப்புக்களில் வாங்கி அதையும் எறியாமல் சேர்த்தேன், ஆனால் டெல்கி மகாபலி ரெஸ்டோரண்ட் போயிருந்தோம், அங்கும் அழகிய குட்டிப் பானையில் பிரியாணி தந்தார்கள், அதை எடுத்து வரோணும் என நானும் அடம்பிடிச்ச இடத்தில், விசாரித்தால் அது, திருப்பிக் குடுக்கோணுமாம், ரெரகொட்டா வகைப் பானை.. கர்ர்ர்:)).

    நானும் எந்தச் சீரியல்களும் பார்ப்பதில்லை.. ஒன்றாவது பார்த்தேன் எனச் சொல்லுமளவுக்கு இருக்கோணும் என நினைச்சு, சுந்தரி பார்க்கத் தொடங்கினேன், ஆரம்பத்திலேயே எரிச்சலாகி விட்டுவிட்டேன்ன்.. அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டிருப்பது சீரியல்களில் மட்டும்தான், அதைவிடக் கதைப்புத்தகம் படிச்சிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்கள் அருமை.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ஆதிரா.

      நீக்கு
  6. ரயிலில் இப்படி எனக்கும் நேர்ந்ததுண்டு.

    வெப் சீரீஸ் பார்க்க வாய்ப்பு இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி பலதரப்பட்ட மக்களிடையே தான் நம் வாழ்க்கையும் நகர்கிறது!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  7. இந்த பதிவிலும் என் கருத்து காணவில்லை என்னாச்சு?
    வெப் சீரீஸ் நன்றாக இருக்கிறது. நானும் பார்ப்பேன்.
    மட்கா குல்ஃபி மண் பானை விவரம், நீங்கள் செய்த மட்கா குல்ஃபி எல்லாம் அருமை.
    பொடி இட்லி பயணத்திற்கு சிறப்பு. பயணவிவரம் மழைலை பேச்சு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் கோமதிம்மா

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தனபாலன் சகோ.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....