சனி, 20 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்பது - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட LOVERS MEET VIEWPOINT படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DO EVERYTHING WITH A GOOD HEART AND EXPECT NOTHING IN RETURN, AND YOU WILL NEVER BE DISAPPOINTED. 


******


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு  


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி மூன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி நான்கு 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஐந்து


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஆறு


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஏழு


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி எட்டு 


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


ராஜ்தானியில் சென்னை நோக்கி பயணம்:




ஈவினிங் ஸ்நாக்ஸாக சமோசா, ப்ரெட் சாண்ட்விச், ஹல்திராம் சோன்பாப்டி, டயட் மிக்சர் வந்தது! நன்றாகவே இருந்தது! ஹரித்வாரிலிருந்து வரும் போதும் சதாப்தியில் சாயங்காலம் தந்தவை எல்லாமே நன்றாகவே இருந்தது! ஆனால் இரவு டின்னரோ கேவலமாக இருந்தது! 


இதிலும் இரவு டின்னர் வந்தால் தான் தெரியும் அதன் லட்சணம்...🙂


******


ராஜா சாரின் இசையோடு…



ராஜா சாரின் இசையோடு எங்கள் பயணம் தொடர்கிறது! சிக்னல் குறைவாக இருந்தாலும் Spotify  வேலை செய்கிறது! 


எதிர்சீட்டில் உள்ள இருவர் தெலுங்கில் ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.


பின்சீட்டில் மூன்று குட்டீஸ்களுடன் ஒரு குடும்பம்! அந்த குட்டீஸ் மூவரும் பொழுது போகாமல் மேலே ஏறி ஏறி குதித்துக் கொண்டிருக்கின்றனர்...🙂


******


அந்நியன் தேவை…



ஏழே முக்காலுக்கெல்லாம் டின்னர் வந்தாச்சு! அதே அதே!! இரண்டு சப்பாத்தியுடன் மட்டர் பனீர் சப்ஜி, தால், ஒரு dry சப்ஜி, கொஞ்சம் சாதம், தயிர் மற்றும் ஊறுகாய்...!


வாங்குகிற காசுக்கு கொஞ்சம் நல்லா பண்ணி குடுக்கலாம்! அன்று சதாப்தியில் கொடுத்த சப்பாத்தி அப்பளம் போல் உடைந்தது! இன்று கொடுத்த சப்பாத்தி அதற்கு பரவாயில்லை என்று சொல்லலாம்! சாதம் ரப்பர் போன்று இருக்கிறது..🙁


என்னவோ போங்க! ஒரு அந்நியன் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது ..🙁


******


சுத்தம் என்ன விலை…



அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வீட்டில் வழக்கமான வேலைகளை கவனிப்பது போல் ரயிலிலும் முழிப்பு வந்துவிட்டது..🙂 இங்கு எழுந்து என்ன செய்யப் போகிறேன்...🙂 இல்லையா???


சரி! வாஷ்ரூம் போயிட்டு வரலாம் என்று சென்றால்.... யாரோ காலைக்கடனை கிளாஸட்டின் முன்புறமாகவே முடித்து விட்டு தண்ணீரே விடாமல் சென்றிருக்கிறார்கள்...🙁 அவர்கள் வீட்டிலும் இப்படித்தான் இருப்பார்களா??? தெரியலை.. 🙁


அரசுத்துறைகளை மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை! மக்களும் சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம்! இல்லையா!



கோச் உள்ளே அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்! டஸ்ட் பின்னும் இருக்கிறது! சாப்பிட்டதும் தட்டை இருக்கைக்கே வந்தும் வாங்கிச் செல்கிறார்கள்!  ஆனாலும் நம் மக்கள் எப்படி இருக்கிறார்கள்?? பாருங்கள்!


******


காலை உணவு…



இரண்டு ப்ரெட் துண்டுகளுடன், வெண்ணெய், டெட்ரா பேக்கில் மேங்கோ ஜுஸ் மற்றும் வெஜிடபிள் கட்லட் தரப்பட்டது!


கட்லட்டை பார்த்ததும் ஏனோ பிடிக்கலை! இது வெஜ் தானா என்ற சந்தேகம் எழுந்தது!


Bபையா ஏ வெஜ் ஹை க்யா?? 


ஹான் மேடம்! ஏ வெஜிடபிள் கட்லட் ஹை! 


ஆனாலும் ப்ரெட் துண்டங்களை மட்டும் வெண்ணெய் தடவி சாப்பிட்டு விட்டு ஜுஸை குடித்தேன்...🙂


******



இந்த பயணத்தில் ஸ்வாரஸ்யமான விஷயங்கள் ஏதும் இல்லாததால் பாடல்கள் கேட்டவாறும், தூங்கிக் கொண்டும் எங்களுடைய நேரத்தை கடத்துகிறோம்!


உணவும் சொல்லிக் கொள்கிற மாதிரி வித்தியாசம் ஏதுமில்லாமல் அதே அதே ரகம் தான்..🙂 முதல் நாள் இரவு தந்த டின்னர் மெனு தான் அடுத்த நாள் மதியமும் உணவாக...🙂 கூடுதலாக இரண்டு ரஸகுல்லா தரப்பட்டது! முதல் நாள் இரவு டின்னருடன் ஐஸ்க்ரீம் தரப்பட்டது! மாலை ஸ்நாக்ஸாக நேற்று சமோசா என்றால் இன்று கச்சோடி..🙂 இப்படியாக தலைநகரிலிருந்து சென்னை வரையான பயணம் முடிவுக்கு வந்தது.  இரண்டு நாள் சென்னையில்.  அது குறித்த இடுகைகள் தொடர்ந்து வரும் பதிவில் வரும்! தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

14 கருத்துகள்:

  1. பயணங்களுக்கு என்றுமே இளையராஜா....

    வணிகநோக்கில் செய்யபப்டும் உணவுப்பொருட்களில் அந்நிறுவனங்கள் என்றுமே அக்கறை கொள்வதில்லை.  கேஸ் போடவேண்டும்.

    நாங்கள் வாரணாசி சென்ற ரயில் மிகவும் சுத்தமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் படு கேவலமான சாப்பாட்டிற்காக கேஸ் போட்டே தான் ஆகணும் சார்!

      சுத்தம் என்பது மக்களால் தான். துறையின் மீது தவறு சொல்ல நியாயமில்லை! அவர்கள் அடிக்கடி வந்து சுத்தப்படுத்திக் கொண்டே தான் இருந்தார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ!

      நீக்கு
  3. ரயில் பயணம் எப்போதும் சுகமானதே. சுத்தம் மட்டுமே கொஞ்சம் பிரச்சநையானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக. சுத்தம் என்பது எங்கு சென்றாலும் கேள்விக்குறி தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த் சகோ.

      நீக்கு
  4. எனக்குப் பிடித்தது ரயில் பயணம் அதில் தரும் சாப்பாடு தவிர! அதாவது இப்படியான ராஜஸ்தானி போன்றவற்றில் பயணம் செய்யும் போது. முதல் நாள் மாலை நொறுக்குத் தீனி ஹல்திராம் சோன்பப்டி இது புதுசா இருக்கே!!! இப்படியான இனிப்பு ராஜதானியில் நான் பயணித்த போது தந்ததே இல்லையே!!! ஹாஹாஹா என்னவோ நான் இனிப்பை சாப்பிடுவது போல!!

    ஆ!!!இரவுச் சாப்பாடு அதே கேவலமான சாப்பாடுதான் போல இன்னமும்!! ஆ நான் பயணித்து வருடங்கள் ஆயிற்றே இன்னமுமா மாறலை! அப்ப கண்டிப்பா அந்நியன் வந்தே ஆகணும்! பனீர் சப்ஜி படு கேவலமா பூண்டு மட்டுமே போட்டிருக்காப்ல இருக்கும்!

    ஏன் இப்படி மட்டமான உணவு வழங்கப்படுகிறதோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலைநேரத்தில் தரும் ஸ்நாக்ஸ் நன்றாக இருக்கிறது! காலை, மதியம், இரவு தான் கேவலம்! எந்த மாற்றமும் இருப்பதில்லை!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. அட! ஏதோ ரெண்டு இட்லி கண்ணில் படுகிறதே! கொடுத்தாங்களா என்ன? நீங்க வாங்கினீங்களா போபால் ஸ்டேஷன்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லியெல்லாம் இல்லை! மதியச் சாப்பாட்டுடன் ரசகுல்லா கொடுத்தார்கள் என்று எழுதியிருக்கிறேனே!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. ரயில் சுத்தம் பத்தி சொல்லாதீங்க ஆதி! நானே அந்நியள் ஆகிடுவேன்! அந்த அளவு எனக்குக் கோபம் வரும். நம்ம மக்கள் படு மோசம். குப்பைத் தொட்டி இருந்தாலும் இப்படிக் குப்பை போடுறாங்களே...நற நற.....கூடியவரை அந்தப் பக்கம் போகாமல் இருந்துவிட நினைப்பேன். ஆனால் நெடுந்தூரப் பயணத்தில் முடியாதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! துறையின் மீது குற்றம் சொல்ல முடியாது! நம் மக்கள் தான் எங்கு சென்றாலும் குப்பை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. முகநூலில் படித்தேன், பயணத்தில் மனதுக்கு பிடித்த பாடலை கேட்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கும் படித்து கருத்திடுவது குறித்து மிக்க மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....