திங்கள், 17 ஏப்ரல், 2023

வாசிப்பனுபவம் - தங்கமணி ரங்கமணி சிரீஸ் - சஹானா கோவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட Bபைரவ் மந்திர் மற்றும் பிரதான படித்துறைகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“Reading can take you places you have never been before.” - Dr. Seuss.

 

******


 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் சஹானா கோவிந்த் அவர்கள் எழுதிய “தங்கமணி ரங்கமணி சிரீஸ்” எனும் மின்னூல். அவரவர் தங்கமணியிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரங்கமணிகள் (பாவம்!) குறித்த நகைச்சுவை கதைகள் கொண்ட மின்னூல் இது!. அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நகைச்சுவை சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 40

விலை: ரூபாய் 99/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

தங்கமணி ரங்கமணி சிரீஸ்: (நகைச்சுவை சிறுகதைகள்) (Tamil Edition) eBook : கோவிந்த், சஹானா: Amazon.in: Kindle Store

 

******* 

 

சஹானா இணைய இதழ் நடத்திய வாசிப்புப் போட்டி ஒன்றில் சஹானா கோவிந்த் அவர்கள் எழுதிய ”“தங்கமணி ரங்கமணி சிரீஸ்”” எனும் நூல் குறித்த வாசிப்பனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. அவரவர் தங்கமணியிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரங்கமணிகள் (பாவம்!) குறித்த நகைச்சுவை கதைகள் கொண்ட மின்னூல் இது! மேலும் நூல் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 

 

தங்கமணிகளிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் அப்பிராணி ரங்கமணிகள்… வீட்டுக்கு வீடு வாசப்படி தானே! அப்படி மாட்டிக் கொண்டு முழிக்கும் ரங்கமணிகளின் நிலை மற்றும் தங்கமணிகளின் அட்டகாசங்களைச் சொல்லும் கதைகளைத் தொகுத்து சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார் நூலாசிரியர் சஹானா கோவிந்த் அவர்கள்.  தங்கமணி(களி)யின் பார்வையில் ரங்கமணி(கள்) எப்போதுமே அசடுகள்! எப்படிப் பேசினாலும் ரங்கமணியை ஒரு வழி செய்து விடுவது வாடிக்கை தானே! உதாரணத்திற்கு ஒரு நகைச்சுவை சொல்கிறேன்… 

 

”ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நீயே எனக்கு மனைவி….  நானே உனக்கு கணவன்” என்று தனது மனைவியிடம் கணவன் சொல்ல, அதற்கு மனைவி சொன்ன பதில்…  “அப்படின்னா, ஆயிரம் வருஷத்துக்குப் பிறகு வேறு ஒருத்தியை மனைவியாக ஆக்கிக் கொள்ள நீ முடிவு செய்திருக்கியாய் என்று தெரிகிறது!” என்று கண்ணைக் கசக்கினாளாம்! 

 

இப்படி ஒவ்வொரு சிறுகதையிலும், எப்படிப் பேசினாலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரங்கமணிகளைப் பற்றிய சிறுகதைகள் நிறைய உண்டு.  படிக்கும்போது உங்களையும் அந்த கதாபாத்திரத்தில் வைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது.  ரங்கமணிகள் அவர்கள் பார்வையிலும், தங்கமணிகள் அவர்கள் பார்வையிலும் படிக்கும்படியே அமைந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.  சுவையான கதைகளை வாசித்து ரசிக்கலாமே! 

 

மேலும் பல மின்னூல்களை வெளியிட நூலாசிரியருக்கு வாழ்த்துகள். படிக்க இருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நான், எனது இல்லத்தரசி மற்றும் நண்பர் சுப்பிரமணியன் என மூவரும் எழுதி இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

7 கருத்துகள்:

  1. நான் ரசித்த நூல்களையும் உங்களைப் போல் விமர்சனம் செய்ய முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது ஜி

    ஆயிரம் வருடங்கள் ஹா.. ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
  3. நல்ல அறிமுகம். அவங்க தளத்தில் (முன்னர் அவங்க எழுதின தளம்) அதில் அவங்களுடைய நகைச்சுவை வாசித்திருக்கிறேன். அப்பாவித்தங்கமணி...நல்ல நகைச்சுவையாக எழுதக் கூடியவர். இப்போதும் சஹானா வாசிப்பதுண்டு. ஒரு சிலவற்றிற்கு அங்கு கருத்திடுவதுண்டு.

    நல்ல விமர்சனம்...

    வாசகம் அருமை. உண்மை!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம்.

    ”ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நீயே எனக்கு மனைவி…. நானே உனக்கு கணவன்” என்று தனது மனைவியிடம் கணவன் சொல்ல, அதற்கு மனைவி சொன்ன பதில்… “அப்படின்னா, ஆயிரம் வருஷத்துக்குப் பிறகு வேறு ஒருத்தியை மனைவியாக ஆக்கிக் கொள்ள நீ முடிவு செய்திருக்கியாய் என்று தெரிகிறது!” என்று கண்ணைக் கசக்கினாளாம்!

    ஆயிரம் காலத்து பயிர் என்று முன்னோர்கள் சொல்வதால் "கணவர் 1000 ஆண்டு ஆனாலும் நீயே எனக்கு மனைவி" என்றார் போலும்.
    நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு அரிமுகம் சார்.
    விரைவில் வாசிக்கிறேன்.
    அப்பாவி தங்கமனி அவர்களின் நகைச்சுவை உணர்வு சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....