அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
அழகான முகம் வயதாகிப் போகலாம்; கட்டுக்கோப்பான உடல் இழக்கப்படலாம்; வைத்திருக்கும் வசதிகள் கூட காணாமல் போகலாம்; மனதால் அழகானவர்கள் மரணம் வரை மட்டுமல்ல, அதற்குப் பிறகும் சிறந்தவர்கள்.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
யாரிவள்! பகுதி எழுபது – காற்றோடு கலந்தாள்!
இல்லாத குழந்தையை எங்கே சென்று கொண்டு வருவது! என்று குழப்பத்துடன் காணப்பட்டாள் இவள்! இப்படியொரு நிலை யாருக்கும் வர வேண்டாமென நினைக்கத் தான் முடிந்தது! அறிவுரைகளும், விழாவுக்கான ஏற்பாடுகளும் சொல்லிக் கொண்டேயிருந்த அம்மா தன்னிடம் குழந்தையைக் கொண்டு வந்து காண்பிக்க மட்டும் சொல்லவே இல்லை! இறைவனின் செயல்!
நாளுக்கு நாள் அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாகத் தான் போய்க் கொண்டேயிருந்தது. உடலில் படுக்கைப் புண்கள் வேறு ஏற்பட, அன்றாடம் உடம்பை துடைத்து விட்டு அதற்கான மருந்துகளை போட்டும் சரியாகாததால் பஞ்சு மெத்தையை எடுத்து விட்டு தண்ணீர் மெத்தை வாங்கி போடுமாறு மருத்துவர் பரிந்துரை செய்ய அதையும் வாங்கிப் போட்டார்கள்!
என்றும் அம்மா நம்முடன் இருந்தால் போதும் என்று நினைத்த மனதில் இப்போது அவள் படும் கஷ்டங்களை பார்க்க முடியாமல் அவள் இவ்வுலகில் இருந்தது போதும்! ஈசனின் பாதங்களில் இளைப்பாறட்டும்! என நினைக்க வைத்து விட்டது. அதுவே எல்லோரின் பிரார்த்தனையாகவும் மாறிப் போயிற்று!
பத்து நாட்கள் உன்னோடு இருந்துட்டு போகலாம் என்று வந்ததாக சொன்ன இவள், இதோ ஒன்றரை மாதங்கள் அம்மாவுடன் இருந்து வேண்டிய உதவிகளை செய்ய முடிந்ததை பெரும் பாக்கியமாக கருதினாள். அம்மாவின் இறுதி நாட்களில் உடனிருக்க வாய்ப்பு கிடைத்தது! இனி! அம்மா என்பவள் கனவாய் போகப் போகும் தருணம்! அவளில்லா உலகில் என்ன செய்யப் போகிறேன்!!
அந்த ஒரு நாளும் இதோ வந்துவிட்டது! பாட்டி தன்னுடன் மகளையும் அழைத்துச் செல்ல வந்துவிட்டார்! 'அதோ என்னோட அம்மா தெரியறாப் பாரு! பவழ மோதிரம் போட்டுண்டு இருக்காப் பாரு! அம்மா இதோ வரேன்!' என்று முதல் நாள் மாலை அம்மா சொன்னாள். அடுத்த நாள் காலை அம்மா காற்றோடு கலந்து சென்று விட்டாள்..!
அம்மா என்னும் அற்புதமான ஜீவன் தன் அன்பாலும், பாசத்தாலும், உழைப்பாலும், தைரியத்தாலும், சிக்கனத்தாலும், சேமிப்பாலும் என்னை பிரமிக்க வைத்தவள்! இறுதி நாட்களில் அவளின் சிந்தனை முழுக்க என்னைச் சுற்றியே இருந்திருக்கிறது! என்று அம்மாவை நினைத்து வருந்தினாள்!
இதோ சட்டென்று எல்லாம் முடிந்து விட்டது! நோயின் வீரியத்தால் அம்மாவின் உடலை நெடுநேரம் வைத்திருக்கக் கூட முடியவில்லை! தானும் ஒரு சொம்பு நீரை தலையில் விட்டுக் கொண்டு, அம்மாவுக்கும் விட்டாள்! மின் மயானத்தில் பொசுங்கிய அம்மா சில நிமிடங்களில் சாம்பலாகிப் போனாள்! இதுவே வாழ்வு நமக்குக் கற்றுத் தரும் பாடம்!
அம்மாவைப் போன்ற ஒரு தைரியமான மனுஷி தான் இந்தக் காரியங்களை எல்லாம் ஏற்பாடு செய்து நடத்துகிறாள்! இது தான் அவரது தொழில்! எல்லோரையும் வாழ்க்கை பல அவதாரங்களை எடுக்க வைக்கிறது!
அன்றைய மாலை அம்மாவைப் பற்றிய நினைவுகளுடனும், மனது நிறைய துக்கத்துடனும் வாசலில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்! வீடு நிறைய மனிதர்கள் இருந்தாலும் அம்மா இல்லாத வீட்டில் தனியே இருந்தது போலிருந்தது!
அம்மா சில நாட்கள் முன்பு இவளிடம் குறிப்பிட்ட இடத்தில் வைத்திருக்கும் ஒரு பர்ஸை எடுக்கச் சொன்னாள். அதில் நிறைந்திருந்தது பணம்! நான் போன பிறகு இதை அப்பாகிட்ட குடுத்து என்னோட காரியத்துக்கு செலவு பண்ணிக்கச் சொல்லு! என்று சொல்லியிருந்தாள்.
அதே போல் இவளுக்கு திருமணமான புதிதிலேயே, 'இதை பிரசவ செலவுக்காக அம்மா தருகிறேன்! அப்போ நான் இருப்பேனான்னு தெரியல! இதை வாங்கிக்கோங்கோ! என்று ஒரு குறிப்பிட்ட தொகையை இவள் கணவனிடம் வற்புறுத்திக் கொடுத்தாள்.
அம்மா நீ என்றுமே இரும்பு மனுஷி தான்! அம்மா! நீ இல்லாத உலகில் இனி நான் என்ன செய்யப் போறேன்! வெற்றிடமாய்ப் போனதே அனைத்தும்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
பிரமிக்க வைக்கிறார் உங்கள் அம்மா. தெய்வம்.
பதிலளிநீக்கு//அம்மா இவ்வுலகில் இருந்தது போதும்! ஈசனின் பாதங்களில் இளைப்பாறட்டும்!//
பதிலளிநீக்குஇந்நிலையில் நானும் இருந்திருக்கிறேன்.
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவாசகம் அருமை. பதிவு கண் கலங்க செய்து விட்டது. கண்களில் நீர் வழியத்தான் பதிவை படித்தேன்.
/அம்மா நீ என்றுமே இரும்பு மனுஷி தான்! அம்மா! நீ இல்லாத உலகில் இனி நான் என்ன செய்யப் போறேன்! வெற்றிடமாய்ப் போனதே அனைத்தும்/
அம்மா இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. சகோதரி. மனதெல்லாம், தங்கள் தாயின் பிரிவை நினைத்து இது வரை ஒவ்வொரு நாளும் வருந்தும் உங்கள் அனுபவங்களாலும், என் வாழ்க்கை அனுபவங்களாலும் பாரமாக உள்ளது. என்ன செய்வது.? இதுதான் இந்தப் பிறவியில் யதார்த்தம். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
பதிலளிநீக்குஉங்கள் அம்மா மனதில் உயர்ந்து நிற்கிறார்.
உங்கள் மனதில் என்றும் வாழ்வார்.
நீங்கள் எழுதும் தொடர்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். கண்கள் குளமாகி விட்டது இந்தத் தடவை படிக்கும்போது. மிக அருமையாக தாய்க்கும் மகளுக்கும் உள்ள பந்தத்தைப் பதிவு செய்து உள்ளீர்கள். நன்றி
பதிலளிநீக்குஆதி இப்பகுதியை வாசிக்க முடியலை அதாவது வாசிக்கும் போது மனம் கனத்துவிட்டது. என்னென்னவோ நினைவுகள் மனதில் வரத் தொடங்கியது. அம்மா உயர்ந்து நிற்கிறார்!
பதிலளிநீக்குகீதா
எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு வழிநடத்தி இருக்கிறார் அம்மா கிரேட் மம் .
பதிலளிநீக்கு