தொகுப்புகள்

சனி, 20 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எழுபத்தி ஒன்று – இயல்பு வாழ்க்கை!



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நாளைக்கு எல்லாம் மாறிவிடும் என்பது நம்பிக்கை - எதுவும் மாறவில்லை என்றாலும் சமாளிக்க முடியும் என்பது தன்னம்பிக்கை.



******




யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே


பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே


பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!


பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!


பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!


பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!


பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 


பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!


பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!


பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 


பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!


பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 


பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 


பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 


பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!


பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 


பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!


பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!


பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!


பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!


பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!


பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 


பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 


பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 


பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 


பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 


பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 


பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!


பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!


பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!


பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!


பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!


பகுதி எழுபது இங்கே! 


யாரிவள்! பகுதி எழுபத்தி ஒன்று – இயல்பு வாழ்க்கை!




அம்மாவின் 13 நாள் காரியங்கள் எல்லாம் வரிசையாக நடைபெற்று முடிந்தவுடன் உறவுகள் எல்லோரும் அவரவரின் இருப்பிடத்திற்கு கிளம்பும் போது இவளும் கணவனுடன் அங்கிருந்து கிளம்பி விட்டாள். பெண்ணாகப் பிறந்தவள் எதற்கும் கலங்காது அடுத்தடுத்த கட்டத்திற்குச் செல்லத் தான் வேண்டும்! அவளும் மாற்றிக் கொண்டு விடுவாள்! இதுவே நிதர்சனம்!


அப்பாவுக்கும், தம்பிக்கும் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லி விட்டு கணவனுடன் புகுந்த வீட்டுக்கு கிளம்பி விட்டாள்! அம்மாவைப் பற்றிய சிந்தனைகளுடன் திருச்சியை நோக்கிய பயணத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த இவளை  கணவனின் மென்மையான கரங்கள் அரவணைக்க அப்போது தான் இயல்பு நிலை புரிய ஆரம்பித்தது! இனி! இவளுக்கான வாழ்க்கையும், வேலைகளும் காத்திருத்தலைப் பற்றி தெரிய வந்தது!


திருச்சிக்கு வந்ததும் இத்தனை நாட்களின் பதட்டமான சூழலால் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்படவே அது ஜூரமாக மாறி இவளை படுக்க வைத்தது! உடலுக்கான மருந்துகளும் மனதுக்கான கணவனின்  ஆறுதல்களும் அவளை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது! நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டும் என செயல்படத் துவங்கி விட்டாள்.


அம்மாவின் நினைவுகள் மனதை ஒருபுறம் அலைக்கழித்தாலும் அச்சமயத்தில் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் கவனிக்கத் தான் வேண்டும்! இப்படியே இருந்து விட முடியுமா! கணவனின் துணையுடன் துயர சம்பவங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து வரத் துவங்கினாள்! அன்றாட வேலைகளில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டாள்.


டெல்லிக்குத் திரும்பியதும் சிந்தனைகள் முற்றிலும் மாறியது! இன்னும் அவளை நிசர்சனமான வாழ்வுக்கு கொண்டு வந்தது! கணவனுக்காக மெனக்கெடுதலும் அவருக்கு பிடித்தவாறு சமைத்துக் கொடுப்பதும், அவரின் பாராட்டை எதிர்பார்ப்பதும், அவ்வப்போது வெளியில் சென்று வருவதும், பிடித்த வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுமாக நாட்கள் கடந்து சென்றன.


அம்மாவின் தைரியம் தனக்கும் வேண்டும்! எதற்கும் அஞ்சாமல் வாழ்வின் நிகழும் நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டும். யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளக்கூடாது! தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்! எத்தனை துயர் வந்தாலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! என்றெல்லாம் தனித்திருக்கும் வேளைகளில் சிந்தித்துக் கொண்டாள்!


கணவனின் அன்பில் தன் கவலைகளை எல்லாம் மறந்து இயல்பு வாழ்க்கையில் ஒன்றிப் போயிருந்தாள். அவரின் இருப்பில் பாதுகாப்பை உணர்ந்தாள். திருமணமான பெண்கள் இல்லற வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்வதென்றால் அது தாயாக மாறும் போது! 


அதற்குள் சமூகம் அவளை கேள்விகள் கேட்டு, விழாக்களில் முன்னுரிமை தர மறுப்பது, ஒன்றை பத்தாக மாற்றி வதந்திகளாக பரப்புவது என்று வேதனையை ஏற்படுத்தி விடுவார்கள். இந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே இவளும் எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டாள்! தன்னை இன்னும் சிறுமியாகவே நினைத்துக் கொண்டிருக்கும் இவளை இந்த சமூகம் கேள்விக்கணைகளால் மாற்றி கவலை கொள்ள வைத்தது!


அம்மாவின் ஆழ்மனதின் ஆசையும் எதிர்பார்ப்பும் கூட அது தான். இறைவன் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்! நல்லதே நடக்கும் என நம்புவோம்!


*****


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்




7 கருத்துகள்:

  1. காலவெள்ளத்தின் ஓட்டத்தில் கவலைகள் சந்தோஷங்கள் எதுவுமே நிரந்தரம் இல்லை.  மாறிக்கொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அடுத்த நிகழ்வுகள் நலமாகட்டும்...

    பதிலளிநீக்கு
  3. பொருத்தமான அருமையான வாசகம், ஆதி. வாழ்க்கை என்பதே சுக துக்கம் மாறி மாறி வருவதுதானே.

    சமூகம் மிகவும் மோசமானது ஆதி. முதலில் கல்யாணம் நடக்கலையே என்று கேள்விகள், அடுத்து குழந்தை என்று கேள்விகள், அடுத்து ஒரே ஒரு குழந்தையா இன்னொன்னு இல்லையா என்ற கேள்விகள்....சமூகத்தைப் பற்றிக் கவலையே படக் கூடாது..

    அம்மா சொன்னபடியே நினைத்தபடியே பெண் குழந்தை...இதை அன்றைய பதிவில் சொல்ல விட்டுப் போச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சமூகம் இப்படித்தான் பேசும்.
    வாசகம் அருமை. நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தான் வாழ்வை நகர்த்தும் நல்லபடியாக.

    பதிலளிநீக்கு
  5. கணவரின் ஆதரவு இருக்கும்போது எல்லாவற்றையும் வென்றுவிடலாம் உங்களுக்கு நல்லாகவே கிடைத்துள்ளது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....