தொகுப்புகள்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எழுபத்தி நான்கு – குழந்தை வளர்ப்பு!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கனவுகள் எல்லாம் நனவாகும் - நிறைய காயங்களுக்கு பிறகு!

 

******

 


யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

யாரிவள்! பகுதி எழுபத்தி நான்கு – குழந்தை வளர்ப்பு!


 

தாயாக தன்னைப் பற்றி உணர்ந்து கொண்டும், குழந்தையிடமிருந்தும் கற்றுக் கொண்டும் செயல்பட்டாள். குழந்தை வளர்ப்பு சாதாரணமானது இல்லை! திடீரென அழுகை, சட்டென்று கீழே விழுவது, வாய்க்குள் எதையாவது போட்டுக் கொள்வது, உடல்நலமின்மை என்று ஏதேனும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  வித்தியாசப்படும் குழந்தையின் செயல்கள்! அதைத் தெரிந்து கொண்டு அவளும் கவனமுடன் நடந்து கொண்டாள்.

 

வெளியில் செல்லும் போது குழந்தைக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்வது, குழந்தையை சுமந்து கொண்டு செல்வது, டெல்லியின் குளிருக்கும், வெயிலுக்கும் ஏற்றாற் போல் வீட்டை தயார் செய்வது, குழந்தையை பருவ மாற்றத்துக்கு ஏற்றாற் போல் பாதுகாப்பது என்று அவளுக்கான வேலைகளும், திட்டமிடல்களும் இருந்தன.

 

இப்படியாக நாட்களும், மாதங்களும் கடந்து கொண்டிருந்தது! குழந்தையின் மழலையில் தன்னை மறந்தாள்! தன் துயரங்களைக் கடந்தாள்! பொறுப்புகளை ஏற்றாள்! குழந்தையின் தூங்கும் நேரங்கள் மாறியது! இடுப்பில் இடுக்கிக் கொண்டும், அருகில் அமரவைத்துக் கொண்டும் தன்னுடைய வேலைகளையும் பார்த்து வந்தாள்!

 

குழந்தையும் இவளுக்கு ஏற்றவாறு அடம் பிடிக்காமல் இருப்பாள்! அம்மா துணி துவைத்தால் அருகில் அமர்ந்து நீரில் தட்டி தட்டி விளையாடிக் கொண்டும், அம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டும் இருப்பாள்! பெரியோர்களின் துணையின்றி குழந்தையும் அம்மா அப்பாவின் பராமரிப்பில் வளர்ந்து கொண்டிருந்தாள்!

 

அப்பா திருச்சியில் வசிக்க முடிவு செய்த பின்,  முதலில் இடம் வாங்கி அங்கே வீடு கட்டும் வேலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறத் தொடங்கியது! அதுவரை அருகே ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு அன்றாடம் அங்கே நடைபெறும் வேலைகளை பார்வையிட்டுக் கொண்டு வந்தார். நாட்களும் ஓடியது இறுதியில் கட்டுமான வேலைகள் எல்லாம் நிறைவடைந்து புது வீட்டில் குடியேறும் நாளும் வந்தது!

 

மகளும் மாப்பிள்ளையும் தம்பதி சமேதராக அமர்ந்து  ஹோமங்களையும், பூஜைகளையும் செய்ய வேண்டும் என்பது அப்பாவின் விருப்பமாக இருந்தது! இவளும் குடும்பத்துடன் வந்திருந்து பூஜைகளில் கலந்து கொண்டு புதிய வீட்டில் தன் கையால் பாலும் காய்ச்சினாள். அப்பாவின் மனதில் மகிழ்ச்சி உண்டானது! அப்போது இவளின் குழந்தைக்கும் மூன்று வயதாகி இருந்தது!

 

குழந்தையும் தாத்தாவிடத்தில் மிகுந்த ஒட்டுதலோடு இருந்தாள்! அப்பாவுக்கும் அது மிகுந்த மகிழ்வை தந்தது! தொடர்ந்து வந்த சில நாட்களும் அப்பாவுடன் நேரம் செலவிட இவளுக்கு வாய்ப்பு கிடைத்தது! இவளையும் குழந்தையையும் இங்கே இருக்கச் சொல்லி விட்டு கணவன் டெல்லிக்குத் திரும்பினார்! இனி! அப்பாவின் அழகிய வீட்டில் செலவிடப் போகும் நாட்களை பார்க்கலாம்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. சிரமங்களிலும் கூட இனிமையைத் தந்த குழந்தையுடன் கழித்த நாட்கள்...   சொந்த வீடு என்பது எல்லோருக்குமே ஒரு கனவு.  அது நனவாகும்போது வரும் பூரிப்பு...

    பதிலளிநீக்கு
  2. சிரமங்களிலும் கூட இனிமையைத் தந்த குழந்தையுடன் கழித்த நாட்கள்... சொந்த வீடு என்பது எல்லோருக்குமே ஒரு கனவு. அது நனவாகும்போது வரும் பூரிப்பு...

    பதிலளிநீக்கு
  3. அப்பாவுக்கும் குழந்தையை கொஞ்சுவதற்கு ஓர் வாய்ப்பு.

    பதிலளிநீக்கு
  4. அப்பாவுடன் இருந்த நாட்கள் நினைவு பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
  5. குழந்தை வந்தாலே குதூகலம்தான். குழந்தை வளர்ப்பு என்பது ஆகச் சிறந்த கலை. கஷ்டமானதும் கூட. ஆனால் தாய்மை உணர்வை நினைத்துப் பூரிக்கும் அது தனி உலகம்.

    அதுவும் தாத்தாவுக்குப் பேத்தியோடு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அப்பாவுடன் புதிய வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். குழந்தையுடன் தாத்தாவும் மகிழ்ந்திருப்பார்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....