தொகுப்புகள்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எழுபத்தி ஏழு – அப்பாவின் பற்று!

 


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அப்பா கைக்குள் மகள் இல்லை;  மகள் கைக்குள் தான் அப்பா…. தொட்டிலில் துவங்கும் இந்தப் பாசத்திற்கு மவுசு அதிகம் தான்.

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! 

 

யாரிவள்! பகுதி எழுபத்தி ஏழு – அப்பாவின் பற்று!



 

அப்பா எல்லாவற்றிலுமே perfect ஆன மனிதர். சுத்தமும் நேர்த்தியும், உழைப்பும் என ஓடிக் கொண்டிருந்த மனிதர்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் உறவினர்களையும் நண்பர்களையும் தேடிச் சென்று பார்த்து வருவார்! எல்லோரிடமும் அன்பும், பாசமும், பணிவும், மரியாதையும் கொண்டவர். கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்து தன் உழைப்பால் முன்னேறியவர்!

 

குடும்பத்தின் மேல் அளவு கடந்த பற்று கொண்டவர்! பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்வார்! பெரிதாக எந்தவிதமான வசதிகளையும் அனுபவிக்காத மனிதர்! தன்னிடமிருக்கும் எதையும் அடுத்தவருக்கு யோசிக்காது கொடுத்து விடும் குணம் கொண்டவர்! அப்பாவைப் பற்றி இப்படி பக்கம் பக்கமாக சொல்லிக் கொண்டே போகலாம்!

 

இது எல்லாவற்றையும் விட அப்பாவுக்கு ஒரு விஷயத்தின் மீது பற்று இருந்தது என்றால் அது புகைப்பழக்கம்! சுட்டிப்பெண்ணாக விவரம் தெரியாமல் இருந்த போது அப்பாவுக்காக கடைக்குச் சென்று 'ரெண்டு scissors' என்று கேட்டு வாங்கி வந்து தந்திருக்கிறாள்! ஒருசமயம் ஊருக்கு வந்த அத்தைக்கு இந்த விஷயம் தெரிந்து அப்பாவையும், இவளையும் திட்டினார்.

 

விவரம் தெரிந்த பின்பு அப்பாவிடம் இந்த பழக்கத்தை விடச் சொல்லி எவ்வளவோ முறை கோபப்பட்டிருக்கிறாள்! கேள்வி கேட்டிருக்கிறாள்! அப்போதெல்லாம் அப்பா இவளிடம் எதையாவது சொல்லி சமாதானம் செய்வாரே தவிர அவரால் அதை விட முடியவில்லை! 

 

30 வருட புகைப்பழக்கம் அப்பாவை இந்த மோசமான நிலைக்கு தள்ளி விட்டிருக்கிறது! நுரையீரல் முழுவதும் கொடும் நோயின் பாதிப்பு! இதிலிருந்து மீட்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் சொல்லி விட இதோ இவளும் குழந்தையும் அப்பாவைக் காண ரயிலில் பயணிக்கப் போகிறார்கள்! 

 

அது ஒரு மார்கழி மாத குளிர்காலம்! புத்தாண்டை எதிர்பார்த்து வரவேற்க மக்கள் தயாராகி கொண்டிருக்க, இவள் கேட்டதெல்லாம் கனவாக இருக்கக்கூடாதா என்று யோசித்துக் கொண்டே பயணம் செய்தாள்! இந்த முறை செய்யும் பயணம் வழக்கமான பாதையில்லாமல் இது கொஞ்சம் சுற்றுப்பாதையாக இருந்தது! வழி நெடுக குழந்தையோ 'அப்பாவை இப்போதே பார்க்க வேண்டும் இறங்கலாம்' என்று சொல்லிக் கொண்டே வந்தாள்!

 

இவளும் இப்படித்தானே தன் அப்பாவை சுற்றி சுற்றி வந்திருக்கிறாள்! இதுநாள் வரை தன் வாழ்வில் சிறந்த மனிதராக அப்பாவே தோற்றமளித்தார்! தன் மகளை சமாதானம் செய்து கொண்டே அப்பாவைக் குறித்தான எண்ணங்களுடன் பயணித்தாள்! அப்பா நாங்கள் வரும் வரை உங்கள் உயிர்மூச்சில் பற்று வைத்திருங்கள்! உங்கள் செல்ல மகள் வந்து கொண்டிருக்கிறேன்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. நிலைமை தெரிந்து பார்க்கச் செல்லும் கொடுமை.   கட்டுப்படுத்த முடியாத எண்ணங்களின் அணிவகுப்பு மாந்தை ஆக்கிரமிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இதே நிலை எனக்கும் வந்து இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. ஆதி கடைசி வரி வாசித்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது என்னையறியாமல். புகைப்பிடித்தல் உடல்நலத்துக்குக் கேடுதான்....ஆனால் பாருங்கள் ஆதி அந்த விதி உங்கள்அப்பாவைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது. நான் எத்தனையோ புகைப்பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். பார்த்து வருகிறேன். தண்ணியும் புகையும் என்று இருப்பவர்களையும். எந்த வியாதியும் கூட இல்லாமல், 90 வயதில் கூட பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஏனோ சிலருக்கு மட்டுமே இப்படியாகிறது. நானும் எதிர்ப்பவள்தான் ஆனால் இப்படியான கேள்விகள் மனதில் எழாமல் இல்லை... என்னவோ போங்க....ஆதி! உங்கள் நிலை எப்படி இருந்திருக்கும் என்று புரிகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. தொடர்ந்து பதிவுகள் வாசித்து வருகிறேன். உங்கள் அம்மாவின் உடல்நலம் பாதிப்பு, பின்னர் மரணத்தைத் தொடர்ந்து அடுத்து அப்பா உடல்நலம் சரியில்லாமல் அடுத்தடுத்துப் பிரச்சனைகளும் மன வேதனைகளும். தாத்தா பேத்தியோடு கொஞ்சம் விளையாட முடிந்ததே. அம்மா சொன்னது போல் மகள் பிறந்தாலும் பார்க்க முடியாமல் போனது வேதனை என்றால் இப்போது அப்பாவைக் காண, வேதனையோடு பயணம். வாழ்க்கையின் சோதனைக்காலங்கள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. அப்பாவின் நிலை மனதுக்கு மிகுந்த கவலைதான். கவலைகளையும் சுமந்து கொண்டு பயணிப்பது என்பது மனதுக்கு எவ்வளவு சிரமமானது என்பதை உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....