அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட
யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
அப்பாவின் அன்பில் ஒரு
அழகியல் இருக்கின்றது; அது… மகள்களுக்கு மட்டுமே உரித்தாகின்றது.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி
இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி
நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி
எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி
இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி
மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி
நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு
இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி
எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு
இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி
எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி
எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி
இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி
நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி
எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி
இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி
நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!
பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!
யாரிவள்! பகுதி
எழுபத்தி எட்டு – உயிர்ப்பறவை!!
இரண்டு நாட்கள் பயணம்
செய்து கோவைக்கு சென்றடைந்தாள்! ரயில்நிலையத்திலிருந்து நேரே அப்பாவை முதலில்
மருத்துவமனையில் கண்ட பின்னே தான் தோழியின் இல்லத்துக்குச் சென்றாள்! அப்பா ஓரளவு
சுயநினைவுடன் தான் இருந்தார். அவரிடம் பெரிதாக எதையும் காண்பித்துக் கொள்ளாமல்
நம்பிக்கையுடன் பேசினாள்!
அம்மாவின் இறுதி
நாட்களில் இவள் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டது போல், இப்போது
அப்பாவுக்கு தம்பி தான் கூடவே இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டான்!
அன்றாடம் தோழி வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு இவளும் காலை முதல் மாலை வரை
அப்பாவுடன் இருந்தாள்! இப்படியே பதிமூன்று நாட்கள் கடந்தது!
இறைவனின் அருளால்
அப்பாவின் இறுதி நாட்களில் உடனிருக்க வாய்ப்பு கிடைத்தது! சட்டென்று ஒருநாள் இரவு
அப்பா தன் உயிர்மூச்சை நிறுத்திக் கொண்டார். அப்பா எனும் உன்னதமான உறவு இவ்வுலகில்
இனியில்லை! இவளுக்கு இனி தந்தையுமில்லை! தாயுமில்லை! இறுதி கட்டத்தில் இருவரும்
படும் வேதனைகளைப் பார்த்து இவளே கடவுளிடம் இவர்களை உன்னிடம் அழைத்துக் கொள் என்று
சொல்லும் நிலை தான் உருவானது! இதற்கு மேல் என்ன பார்க்க வேண்டும்!
கோவையை விட்டு பிரிய
மனமில்லாத அப்பா எங்கெங்கோ சுற்றி இறுதியில் கோவையில் தான் தன் உயிரை
விட்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்து அப்பா உடலை வாங்கிய பின் பெரிய மாமா
வீட்டில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு மின் மயானத்திற்கு கொண்டு
சென்றார்கள்.
அப்பாவின் உடலிற்கு
மயில் கண் வேஷ்டி போர்த்த முற்படும் போதும், விபூதியோடு குங்குமமும் இடுவதற்கு
வந்ததும் பதறிப் போய் தடுத்தாள்! அப்பா தனக்கு வகுத்துக் கொண்ட நியதி நினைவுக்கு
வந்தது! அப்பா உங்கள் விருப்பத்திற்கு மாற்றாக எதுவும் நாங்கள் செய்யவில்லை!
எப்போதுமே நீங்கள் perfect ஆகவே இருங்கள்!
அப்பாவின் காரியங்கள்
எல்லாம் முடிந்த பின் திருச்சிக்கு வந்தார்கள்! சில நாட்களாக எதையோ சொல்லாமல் தவித்தாரே
என்பது நினைவுக்கு வர அப்பாவின் வீட்டில் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாள்!
உடல்நலம் குறித்த எந்த காகிதங்களும் அங்கு இல்லை! அப்பா எதுவும் யாருக்கும்
தெரிந்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்!!
ஒருவேளை மனதளவில் தான்
நீண்ட நாட்களுக்கு இருக்க மாட்டோம் என்று தோன்றியிருக்கலாம்! அதை இவளிடம்
சொல்லுவதில் தயக்கம் ஏற்பட்டிருக்கலாம்! என்கிற அனுமானங்கள் தான் இவளிடத்தில்
இருந்தது! இனி! என்ன யோசித்து என்ன பலன்?? அப்பா என்ற ஜீவன் இவளை விட்டு பறந்து
விட்டார்!
அம்மா தன் 50வது
வயதிலும், அப்பா தன் 58வது வயதிலும் இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார்கள்! அதுவும்
உடல்நலக் குறைபாட்டால் மிகவும் அவதியுற்று தான் உயிர் பிரிந்திருக்கிறது! வாழும்
நாட்களில் இருவருமே யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லை! எந்த வசதிகளும்
இல்லையென்றாலும் நம்பிக்கையுடன் உழைத்து போராடியவர்கள்! இருப்பதை வைத்து
சிறப்புடன் வாழ்ந்தவர்கள்!
இனி! இவளின்
மனப்போக்கு எப்படி இருக்கும்?? தொடர்ந்து பார்க்கலாம்!
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
//அதுவும் உடல்நலக் குறைபாட்டால் மிகவும் அவதியுற்று தான் உயிர் பிரிந்திருக்கிறது! வாழும் நாட்களில் இருவருமே யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லை! //
பதிலளிநீக்குஇந்த வரிகள் வேதனையுறச் செய்கின்றன. ஏனென்று தெரியாமல் இப்படி சோதனைகள். நினைத்த்து நினைத்துப் பார்த்தாலும் ஜீரணிக்க முடியாத விஷயங்கள்.
அன்பு ஆதி, இளம் வயதில் அடுத்தடுத்து தாய் தந்தையின் பிரிவு மிகுந்த வேதனையை கொடுத்திருக்கும்...அனைத்தும் கடந்து, மன திடமும், பக்குவமும் பெற்றுள்ளீர்கள். யாருக்கும் எத்தீங்கும் செய்யாத ஜீவன்களை இறைவன் தன்னிடம் சேர்த்துக்கொண்டார்.
பதிலளிநீக்குமுதுமையும் ஒரு வரம்...
பதிலளிநீக்கு50, 58 மிகவும் வருத்தமளிக்கிறது...
//கடவுளிடம் இவர்களை உன்னிடம் அழைத்துக் கொள் என்று சொல்லும் நிலை தான் உருவானது//
பதிலளிநீக்குஎனக்கும் இதேநிலை உண்டானது.
50 மற்றும் 58 லேயே உலகை விட்டு, உறவுகளைவிட்டுப் பிரிவது வேதனைதான்
பதிலளிநீக்குஅம்மா , அப்பா இருவரின் பிரிவும் மிகுந்த வேதனை தான்.
பதிலளிநீக்குஅப்பா கட்டிய வீட்டில் அப்பாவின் காரியம் நடக்கவில்லையா?
பதிலளிநீக்குமாமா வீட்டுக்கு ஏன் எடுத்து போனீர்கள்?
அப்பா உடல் நிலையை பற்றி சொல்லாமலே போய் விட்டது மனதை வருத்துகிறது.