அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட
யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும்
மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு
வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
ஓராயிரம் கஷ்டங்களை
மனதில் மறைத்து வைக்க, காலம் கண்டுபிடித்த இரண்டு வார்த்தைகள் - “ஒண்ணும் இல்லை!”
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி
இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி
நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி
எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி
இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி
மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி
நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு
இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி
எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி
நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு
இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி
எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி
நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி
எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி
இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி
நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி
எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி
இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி
நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!
பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!
பகுதி எழுபத்தி
எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!
யாரிவள்! பகுதி எண்பது
– நிதர்சனப் பாதை!
இருபக்கமும் பக்கபலமாக
நின்ற தூண்கள் சரிந்த பின்னர் வாழ்வின் மீது கொண்ட நம்பிக்கையும், தைரியமும்
குறையத் தொடங்கியது! மனதில் இனம்புரியாத பயமும், பதட்டமும் இருந்து கொண்டே
இருந்தது! யாருக்கு எப்போது என்ன நிகழுமோ! தொலைபேசி அழைப்பு வந்தால் என்ன
செய்தியோ! என்பது போன்ற எண்ணங்கள் இன்னும் குறையாமல் இருந்து கொண்டிருந்தது
அவளுக்கு!
அக்கம் பக்கத்தில்
யாருக்காவது உடல்நலமின்மை ஏற்பட்டாலும் அப்பாவும் அம்மாவும் அவதிப்பட்ட தருணங்கள்
தான் நினைவுக்கு வந்து அவளை வாட்டி எடுக்கும்! மெல்ல மெல்ல அந்த எண்ணங்களிலிருந்து
மீட்டுக் கொண்டு வந்தது கணவனும், குழந்தையும்! மனதிற்கு தெம்பாகவும் வாழ்வின் மீது
பிடிப்பு ஏற்படவும் உறுதுணையாக இருந்தார்கள்!
டெல்லிக்கு திரும்பிய
பின் அன்றாட வீட்டு வேலைகளிலும், நட்பு வட்டத்தில் உள்ளவர்களோடு பேசிக்
கொண்டிருந்த நேரங்களிலும் கவலைகளை சற்று மறந்து இயல்புக்குத் திரும்பினாள்!
குழந்தையோடு விளையாடி பொழுதுகளை கழித்தாள்! கணவனுக்கு வேண்டியதை செய்து கொடுத்து
அலுவலகத்துக்கு அனுப்புவதுமாக வாழ்க்கை நகர்ந்தது!
பொதுவாக பயந்த சுபாவம்
கொண்ட இவள் சில சமயங்களில் துணிச்சலுடனும் செயல்படுவாள்! குழந்தைக்கு மூன்று
வயதாகி விட்டதால் நல்லதொரு நாளில் அவளை அந்தப் பகுதியில் உள்ள மழலையர் பள்ளிக்கு
அழைத்துச் சென்றாள்! விவரங்களை விசாரித்து விட்டு கையோடு விண்ணப்பமும் பூர்த்தி
செய்து கொடுத்து அப்போதே குழந்தையை அங்கே விட்டுவிட்டும் வந்து விட்டாள்!
குழந்தையின் அழுகை
அந்தத் தெரு முடியும் வரை கேட்டுக் கொண்டிருந்தது! மனம் பரிதவித்தாலும் அப்போது
தைரியமாக வந்து விட்டாள்! வீட்டுக்கு வந்த பின்பு தான் கணவனுக்கு ஃபோன் செய்து
மகளை பள்ளியில் சேர்த்து விட்ட தகவலைச் சொன்னாள்!
அடுத்த நாள் முதல்
கணவனையும், மகளையும் தயார் செய்வது, அவரவர் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது
என்று வாழ்வின் நிதர்சனத்தை நோக்கி செயல்படலானாள்! அன்றாடத் திட்டமிடலும்,
செயலாக்கமும் அவளை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்றது!
முழுநேர குடும்பத்
தலைவியாக செயல்பட்டாலும், எல்லோரையும் திருப்திபடுத்த முயன்றாலும், வீட்டில் உள்ள
வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும், மனதின் ஓரத்தில் அவ்வப்போது எழும்
கேள்விகளுக்கு எந்த சமாதானமும் சொல்லிக் கொள்ள இயலவில்லை! எதை நோக்கி என் வாழ்க்கை
பயணிக்கிறது????
*****
இன்றைய பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
வாழ்வில் அடுத்தடுத்து தாக்கும் சோதனைகளால் சில சமயங்களில் மனதில் ஒரு தேக்கம் ஏற்படுகிறது.
பதிலளிநீக்குசில நேரங்களில் இப்படி குழப்ப நிலைகள் வரும்....
பதிலளிநீக்குஇந்த மாதிரி எண்ணங்களுக்கு விடை கிடையாது... ம்...
பதிலளிநீக்குஉங்கள் அப்போதைய சூழலைப் புரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குஎன் மனதிலும் சமீபகாலமாக ஒரு டல்னஸ். இருந்து கொண்டே இருக்கிறது.
//எதை நோக்கி என் வாழ்க்கை பயணிக்கிறது????//
இக்கேள்வி என் மனதிலும் திருமணத்திற்குப் பிறகு எழுந்தது. அதன் முன்னும் பின்னும் குடும்பத்தில் நிகழ்ந்த மரணங்கள். மனம் ஆறுதலடையாமல்....ஆனால் மகனைச் சற்றுக் கூடுதலாகக் கவனிக்க வேண்டியிருந்ததால் மனம் அதில் ஊன்றி வாழ்க்கை ஓடியது. ஆனால் இப்போது மீண்டும் அந்தக் கேள்வி குடைகிறது. நிறைய ஏதேதோ எண்ணங்கள். விடை தெரியா எண்ணங்கள்.
ஆனால் நீங்கள் மீண்டுவந்து உங்களுக்கான பாதையை வகுத்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
கீதா
//வாழ்வின் நிதர்சனத்தை நோக்கி செயல்படலானாள்! அன்றாடத் திட்டமிடலும், செயலாக்கமும் அவளை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்றது!//
பதிலளிநீக்குஅது தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டீர்கள்.
//எந்த சமாதானமும் சொல்லிக் கொள்ள இயலவில்லை! எதை நோக்கி என் வாழ்க்கை பயணிக்கிறது????//
இப்போது எனக்கும் அப்படித்தான் இருக்கிறது.
கவலைகள் சேரும்போது மனம் சங்கடப் படுவதை தவிர்க்க முடிவதில்லை கால ஓட்டத்தில் மாறிவிடுகிறோம்.
பதிலளிநீக்கு