தொகுப்புகள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எண்பத்தி ஒன்று – தனக்கான அடையாளம்!

 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இந்த உலகில் யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், அது உங்களை நீங்களே அவமானப்படுத்துவதற்கு சமம். 

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! 

 

யாரிவள்! பகுதி எண்பத்தி ஒன்று – தனக்கான அடையாளம்!

 


அன்றாட வேலைகள், திட்டமிடுதல், மகளுடன் பொழுதுகளை கழித்தல், கணவனுடன் நேரம் செலவிடுதல், அவருக்காக புதிய பதார்த்தங்களை செய்து பார்த்தல், வீட்டின் அலங்காரங்களை மாற்றுதல் என்று இவளின் வாழ்க்கைப் பாதை பயணித்தது! ஆனாலும் மனதுக்குள் அவ்வப்போது எழும் கேள்விகளுக்கு அவளிடம் பதிலில்லை!

 

அவளின் கனவுப்பாதை என்று ஒன்று இருந்ததே!! ஐஏஎஸ் அதிகாரி, மருத்துவர், பொறியியல் துறையில் பணி என்று அவளின் கனவுப்பாதைகள் மாறிக் கொண்டிருந்ததே!! இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள்!! வாழ்க்கை ஓட்டத்தில் இப்போது முழுநேர இல்லத்தரசியாக தன்னை மாற்றிக் கொண்டு விட்டாள்!

 

இதை விரும்பி ஏற்காவிட்டாலும் காலம் அவளை இந்த சூழலுக்கு  மாற்றியிருக்கிறது! முழு ஈடுபாட்டுடன் தன் கடமைகளை செய்து கொண்டிருந்தாலும் மனதின் ஓரத்தில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியலை! தன் அன்பால் கட்டிப் போட்ட கணவனும், உதவிக்கு பெரியோர்கள் இல்லாத சூழ்நிலையும் அவளை வேறு எதுவும் யோசிக்க விடவில்லை!

 

குழந்தையை வளர்ப்பதோடு தன்னையும் மேம்படுத்திக் கொண்டாள்! திருமணமாகும் வரை வீட்டில் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொண்ட இவள் கணவனோடு டெல்லிக்கு வந்ததும் 'கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல' தான் உணர்ந்தாள்! கணவனையே முழுதாக நம்பினாள்! 

 

அப்பாவின் சட்டையை பிடித்தபடி வெளியில் சென்றதைப் போல் இங்கு கணவனின் உயரமும், அவர் அணிந்து கொண்டிருக்கும் சட்டையின் நிறமும் தான் அவளுக்கு எல்லாம்! அவர் என்ன சொல்கிறாரோ அது தான் அவளுக்கு வேதவாக்கு! அவரைச் சுற்றியே அவள் உலகம் என்றானது! தன்னை ஒரு சிறு பெண்ணாக உணர்ந்தாள்!

 

இவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள கடைகளுக்கு, வங்கிக்கு, மருத்துவமனைக்கு என்று மட்டும் சென்று வருவாள்! மொழித் தடுமாற்றம் சற்று இருந்தாலும் சமாளித்து வந்தாள்! கடும் வெயிலோடும், கடும் குளிரோடும் வாழப் பழகிக் கொண்டாள்! குளிரை விட வெயில் தான் அவளை வாட்டி எடுக்கும்! வருடந்தோறும் 'சன் ஸ்ட்ரோக்கால்' அவதிப்படுவாள்!

 

நாட்களும், மாதங்களும் செல்லச் செல்ல இவளும் தன்னை அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டாள்! காலைநேர பரபரப்பும் அதன் பின்பான வேலைகளும், மதியம் பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தையோடு நேரம் செலவிடுதலும், அதற்கு உணவு கொடுத்து தூங்க வைப்பதும் எனச் செல்லும்! 

 

மாலைநேரம் மகளோடு சேர்ந்து கார்ட்டூன் பார்ப்பதும், அவளுக்கு வீட்டுப்பாடங்களை செய்ய வைப்பதும், அலுவலகத்திலிருந்து திரும்பும் கணவருக்காக தேநீர் தயாரிப்பதும், சற்று நேரம் உரையாடி விட்டு இரவுச் சிற்றுண்டி தயாரிப்பதும் என ஒவ்வொரு நாளும் இப்படியாகத் தான் கடந்து செல்லும்!

 

தினசரி செய்யும் வேலைகளில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டாலும், நேரம் சரியாக இருந்தாலும், தனக்கான அடையாளம் என்று ஏதும் இல்லாமல் வெட்டியாக இருக்கிறோமே! என்ற எண்ணங்கள் அவளுக்குள் தோன்றிக் கொண்டே தான் இருந்தது! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. இல்லக்கடமைகள்  இருந்தாலும் கற்ற படிப்பு வீணாகிறது என்கிற எண்ணமோ..  

    பதிலளிநீக்கு
  2. படித்த படிப்புக்கு இன்னும் பயன் வராமல் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. தனக்கான அடையாளம் என்று ஏதும் இல்லாமல் வெட்டியாக இருக்கிறோமே!

    போற்றுதலுக்கு உரிய சிந்தனை

    பதிலளிநீக்கு
  4. ஆதி, இன்றைய பதிவு அப்படியே என்னைப் பிரதிபலிப்பது போலவே இருக்கிறது. உங்கள் மனம் புரிகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வேறொரு வகையில் நிறைவேறி வருகிறது இல்லையா, உங்கள் எண்ணம்? நல்ல விஷயம் மேலும் மேலும் உங்களை மேம்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யுங்கள் ஆதி.

    அந்த எண்ணம் இதோ இப்போதும் என் மனதினுள் இருந்துகொண்டிருக்கிறது. திருமணத்தில் விருப்பமே இல்லாமல் இருந்தவள், எத்தனையோ கனவுகள் குறிக்கோள்கள் என்றுஇருந்தேன் ....இப்போது ஏற்கனவே ஏதேதோ எண்ணங்கள் மனச் சோர்வு இதையும் எண்ணத் தொடங்கினால் அவ்வளவுதான்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. படித்துவிட்டு வீட்டில் இருக்கிறோம் என்ற வெறுமைதான் அப்படி எண்ண வைத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....