அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
உலகத்தோடு தனக்குள்ள உறவை மனிதன் உணராவிட்டால் அவன் வாழுமிடம் சிறைக்கூடமாகும் - தாகூர்.
******
யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே!
பகுதி மூன்று இங்கே! பகுதி நான்கு இங்கே!
பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!
பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!
பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!
பகுதி பன்னிரெண்டு இங்கே!
பகுதி பதிமூன்று இங்கே!
பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே!
பகுதி பதினாறு இங்கே!
பகுதி பதினேழு இங்கே!
பகுதி பதினெட்டு இங்கே!
பகுதி பத்தொன்பது இங்கே!
பகுதி இருபது இங்கே!
பகுதி இருபத்தி ஒன்று இங்கே!
பகுதி இருபத்தி இரண்டு இங்கே!
பகுதி இருபத்தி மூன்று இங்கே!
பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே!
பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே!
பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே!
பகுதி முப்பத்தி இரண்டு இங்கே! பகுதி முப்பத்தி மூன்று இங்கே!
பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!
பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே!
பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!
பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று இங்கே!
பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!
பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!
பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே!
பகுதி ஐம்பத்தி நான்கு இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து இங்கே!
பகுதி ஐம்பத்தி ஆறு இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு இங்கே!
பகுதி ஐம்பத்தி எட்டு இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது இங்கே!
பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!
பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!
பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!
பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!
பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே!
பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!
பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!
பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!
பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!
பகுதி எண்பது இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று இங்கே!
பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே!
பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!
பகுதி எண்பத்தி ஆறு இங்கே!
யாரிவள்! பகுதி எண்பத்தி ஏழு – ஒட்டுதல் இல்லாத நிலை!
மனதிற்கான மாற்றத்தை வேறு இடத்தில் வசிப்பது மூலமாகவும் வேறு வேலைகளில் ஈடுபடுதல் மூலமாகவும், விருப்பமான விஷயங்களைத் தேடிச் சென்றும் பெறலாம். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் மனக் கவலைகளையும் குழப்பங்களையும் தவிர்க்கலாம்!
சிறுவயது முதலே எளிமையான வாழ்க்கைக்கு பழகியவள் இவள்! தனக்குத் தானே கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்படுபவள் என்றாலும் ஒட்டுதல் என்பது இயல்பாக வர வேண்டும்! அது மனிதர்களிடத்தில் என்றாலும் சரி! வசிப்பிடம் என்றாலும் சரி! வசதி வாய்ப்புகளுக்கும் ஒட்டுதலுக்கும் சம்பந்தமில்லை!
பிறந்ததிலிருந்து அரசுக் குடியிருப்பின் சிறிய வீட்டில் எந்தவிதமான வசதிகளும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக வலம் வந்தாள். இவளின் திருமணத்திற்கு சில மாதங்கள் முன்பு அப்பாவுக்கு பதவி உயர்வு கிடைத்ததால் சற்று பெரிய வீட்டுக்கு அப்ளை செய்து கிடைத்த போது அங்கு மாறினார்கள். முன்பு இருந்த வீட்டை விட சற்றே வசதிகள் கூடுதலாக இருந்தாலும் இவளுக்கு ஏனோ அங்கு ஒட்டுதலாக தோன்றவில்லை!
அதேபோல் திருமணமான பின் கணவர் வாங்கி வைத்திருந்த அழகான ஃப்ளாட்டுக்குச் சென்று மகிழ்வுடன் அங்கே பல வருடங்களை கடத்தி வந்தாள். வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வீட்டுக்கு வருபவர்கள் பாராட்டிச் சொல்லும் படியாக பளிச்சென வைத்திருப்பாள்!
ஒன்பது வருடங்கள் அந்த அழகான வீட்டில் வசித்த பின்னர் கணவன் தன் அலுவலகத்திற்கு செல்ல வசதியாக இருக்கும் என்று நினைத்து அரசுக் குடியிருப்புக்கு அப்ளை செய்தார்! உடனேயே அங்கேயும் கிடைக்கவே அந்த வீட்டிற்கு இடம் பெயர்ந்தார்கள்! மகளும் இப்போது குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து ஒன்றாம் வகுப்புக்கு வந்துவிட்டாள்! அவளையும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.
புதியதோர் பகுதியில் உள்ள வீட்டுக்குச் செல்லும் போது தான் இவளுக்கும் உடல்நலமின்மை ஏற்பட்டது! சுழற்சி மாறியதால் ஏற்பட்ட மன அழுத்தம் ஒருபுறம், இந்த வீட்டில் வசதிகள் இருந்தாலும் ஒட்டுதல் ஏற்படாதது மறுபுறம் என அவளுக்குள் குழப்பமான சூழ்நிலை நிலவியது! இப்படியே ஒரு வருடம் போல ஒட்டுதல் இல்லாமல் தான் அங்கு இருந்தாள்!
எப்படியாவது உடல்நலம் சரியாகணும் என ஒரு தீர்வைக் காண முன்பு வசித்த பகுதியில் உள்ள மருத்துவரிடமே சென்று காண்பித்தாள்! சில பரிசோதனைகளை செய்து பார்த்த பின் மருந்துகளை எழுதித் தந்தார் மருத்துவர்! இனிமேலாவது எல்லாம் சரியாகட்டும்! ஆரோக்கியம் மேம்பட்டு அவளுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!
எல்லாவற்றையும் யோசித்த பின் அப்போது தான் அவள் கணவன் இதற்கெல்லாம் ஒரு தீர்வாக இருக்கும் என நினைத்து இவளை ஊருக்கு சென்று வசிக்கும்படி சொல்லி அனுப்பி வைத்தார்! 'நீங்க ரெண்டு பேரும் முன்னாடி அங்க போய் செட்டிலானப்புறம் நானும் வந்துடறேன்' என்று சொன்னார்.
இனி! இவளின் வாழ்க்கை தமிழகத்தில் என முடிவானது! இவள் வசிக்கணும் என்று நினைத்த இடம் தான்! நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் அது இறைவனின் அருள்! இவளின் வாழ்க்கை அங்கு எப்படி செல்லப் போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
தொடர்கிறேன்...
பதிலளிநீக்குமுதலில் பழகிய வீடு என்பது மனதில் தங்கிவிடுகிறது!
பதிலளிநீக்கு//இவளின் வாழ்க்கை தமிழகத்தில் என முடிவானது!// - மிகவும் கஷ்டமான முடிவு. நானும் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இப்படிப் பிரிந்து இருந்தேன். மூன்று வருடங்கள் மட்டும்தான் என்று மனைவியிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சமயத்தில், 'என்னத்தைச் சாதிக்கிறோம்' என்ற சோர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. விரைவில் எல்லோரும் சேர்ந்திருக்கவேண்டும்.
பதிலளிநீக்குகுடும்பத்தோடு இணைந்து வாழ்வதற்கு இறைவனின் அருள் வேண்டும்.
பதிலளிநீக்கு'தமிழகத்தில் என்று முடிவானது' மனதுக்கு பிடித்த இடம் உடல் மாற்றத்தையும் தந்திருக்கும்.
பதிலளிநீக்குவிரைவில் குடும்பம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டுவோம்.