வெள்ளி, 2 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எண்பத்தி நான்கு – ஓட்டுனரின் அலட்சியம்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

லட்சியத்திற்கும் அலட்சியத்திற்கும் ஒரே ஒரு எழுத்து தான் வித்தியாசம்; லட்சியம் ஒருவரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும்; அலட்சியம் பின்னோக்கிச் செல்ல வழி வகுக்கும்.

 

******



 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

யாரிவள்! பகுதி எண்பத்தி நான்கு – ஓட்டுனரின் அலட்சியம்!



 

மகளை அடுத்த வகுப்புக்காக வேறு ஒரு பள்ளியில் சேர்த்து விட்டதும் இவளுக்கான வேலைகளும் மாறத் தொடங்கியது! காலை எழுந்ததும் செய்யும் முதல் வேலை சப்பாத்திக்கு மாவு தயார் செய்வதாக இருந்தது! முதல் நாள் இரவே மறுநாளுக்கான சமையல் முன்னேற்பாடுகளை செய்து கொள்வதும், காலை வேளைகளில் கணவருக்காகவும், மகளுக்காகவும் பரபரப்பாக  செயல்படுவதும் என ஆனது!

 

மதியம் பள்ளியிலிருந்து வேனில் திரும்பும் குழந்தைக்காக காத்திருப்பதும், அவள் வந்ததும் இடுப்பில் சுமந்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வருவதும், பள்ளியில் நிகழ்ந்த  கதைகளை அவளிடம் கேட்பதுமாகச் செல்லும்! அடுத்து அவளுக்கான ஆக்டிவிட்டி வேலைகளை செய்யத் திட்டமிட்டு சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருப்பாள்!

 

ஒருநாள் பள்ளியிலிருந்து வேனில் திரும்பும் குழந்தைக்காக நிறுத்தத்திற்கு சென்ற போது ஒரு இறக்கத்திலிருந்து 'அம்மா' என்று காலை கட்டிக் கொண்டாள் குழந்தை! தூக்கி வாரி போட்டது இவளுக்கு! இவள் எப்போது இங்கே வந்தாள்! டிரைவர் எப்போது விட்டுட்டுச் சென்றார்???

 

வாகன நெரிசலும், வரிசையாக கடைகளும், ஜனசந்தடியும் உள்ள சாலை அது! விவரம் அறியாத நான்கு வயது குழந்தை! யாரேனும் அழைத்துச் சென்றிருந்தால் அல்லது குழந்தை சாலையை கடக்க முயற்சி செய்திருந்தால்?? நினைத்துப் பார்க்கவே பகீரென்றது இவளுக்கு! கலங்கிப் போய் கண்ணீர் மல்க குழந்தையை சுமந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பினாள்!


அந்த டிரைவரின் அலட்சியத்தை நினைத்த போது கோபமாக வந்தது! நல்லவேளை விபரீதமாக எதுவும் நிகழவில்லை! குழந்தையை வளர்க்கும் போது ஏற்படும் சவால்கள் எண்ணிலடங்கா! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விஷயம் நம்மை நிச்சயமாக யோசிக்க வைக்கும்! பதட்டமடையாமல் அதை சந்தித்து சமாளிக்க வேண்டும்! 

 

குழந்தையிலிருந்து ஒவ்வொரு பருவத்திலும் கிடைத்த அனுபவங்களால் அவளுக்கு பக்குவமும், புதிய பொறுப்புகளும் வந்தது! சில விஷயங்களை இப்படித்தான் நடக்கும் என அனுமானிக்கவும் அதற்கு ஏற்றாற் போல் தன்னைத் தயார் செய்து கொள்ளவும் முடிந்தது!

 

இப்படியே நாட்கள் கடந்து செல்லவும், தனக்கான அடையாளத்தை தேடிக் கொண்டிருந்தவளிடம் கணவன் இணையத்தில் ஒரு தளத்தை உருவாக்கி எழுதச் சொன்னார்! அவளும் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள். அதில் கிடைத்த ஒவ்வொருவரின் கருத்துகளும் அவளை ஊக்கப்படுத்தியது!

 

தன் அனுபவங்களையும், தனக்குத் தெரிந்த சமையல் முறைகளையும் அந்த தளத்தில் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்! இதன் மூலம் அவளின் சிந்தனைகள் விரிவடைய ஆரம்பித்தது! தொடர்ந்து எழுத ஆவலும் கூடியது! அவளை மேம்படுத்திக் கொள்ளவும், மெருகேற்றிக் கொள்ளவும் இந்த விஷயம் உதவிகரமாக இருந்தது!

 

இப்படியே வாழ்க்கைப் பாதை இதமாக சென்றால் நன்றாக இருக்கும்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. குழந்தையைச் சாலையில் பார்த்து நீங்கள் பதைத்தது புரிகிறது. பெங்களூருவில் இதுபோல நடந்து மறுநாள் ஓட்டுனருடன் உடைந்த ஹிந்தியில் சண்டை போட்டது நினைவிற்கு வருகிறது. :-)
    அழகான நினைவலைகள்!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் செல்வதற்கு முன்பே பஸ்ஸிலிருந்து குழந்தையை இறக்கி விட்டுச் சென்ற அந்த டிரைவர்களின் பொறுப்பை என்ன என்று சொல்ல!

    பதிலளிநீக்கு
  3. மறுதினம் ஓட்டுனரிடம் கேட்டீர்களா ?

    பதிலளிநீக்கு
  4. ஓட்டுநரிடம் மறுநாள் சண்டை போட்டிருக்கலாமே அல்லது பள்ளியில் புகார் கொடுத்திருக்கலாமோ? எனக்குத் தெரியவில்லை அங்கு அப்போது என்ன மாதிரியான சூழல் என்று. நீங்களும் இதை எல்லாம் யோசித்திருப்பீர்கள்தான்.

    ஓட்டுநர் மிக மிக மோசம் பொறுப்பில்லாத ...என்னென்னவோ திட்ட வருகிறது.

    வலையில் எழுதத் தொடங்கியது நல்ல விஷயம்.

    கடைசி வரி என்னவோ சொல்கிறதே.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குழந்தையை தனியே இறக்கிவிட்டுச் சென்ற ஓட்டுனர் படிக்கும்போதே பகீர்
    என்றது.
    எனது இப்போதைய வாழ்க்கையும் பேரனுடன் இவ்வாறே செல்கிறது . பிள்ளைகளை வளர்த்தபின் மீண்டும் பல அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....