வெள்ளி, 23 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 97 – தனியொருவள்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பல நேரங்களில் உறவுகளால் தரமுடியாத ஆறுதலையும் நிம்மதியையும் தனிமை தந்துவிடும்.

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி எண்பத்தி எட்டு இங்கே! பகுதி எண்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி 90 இங்கே! பகுதி 91 இங்கே! பகுதி 92 இங்கே! பகுதி 93 இங்கே!

 

பகுதி 94 இங்கே! பகுதி 95 இங்கே! பகுதி 96 இங்கே! 

 

யாரிவள்! பகுதி 97 தனியொருவள்!
சுட்டிப்பெண்ணாக இருந்த போது தனியே அறை என்ற ஒன்றே இல்லாத அரசுக்குடியிருப்பின்  சின்னஞ்சிறிய வீட்டில் மகிழ்ச்சியாக வளர்ந்தவள் இவள்! வாழ்க்கைப் பாதையின் ஓட்டத்தில் மாறுதல்களைக் கண்டு இப்போது திருவரங்கத்தில் இரண்டு அறைகள் கொண்ட அழகான வீட்டில் குடியேறியிருந்தாள்!

 

அவளைப் பொறுத்தவரை வீட்டில் இடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை! வீடும், சுற்றுப்புறமும் சுகாதாரமாகவும், மனதிற்கு இணக்கமாகவும் இருந்தால் போதும்! அப்படியொரு அமைப்புடன் அமைந்த புத்தம் புதிதான அபார்ட்மெண்ட்டில் நல்லதொரு நாளில் மனதுக்கு திருப்தியாக பூஜைகள் பல செய்த பின் பாலைக் காய்ச்சி குடி புகுந்தார்கள்! இனி! நல்லதே நடக்கணும்!

 

இதற்காக ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து புது வீட்டில் குடியேறத் தேவையான எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்து உடனிருந்த  கணவரும் டெல்லிக்கு கிளம்பி விட, மகளும் இங்கிருந்து பள்ளிக்குச் சென்று வர, இவளும் தன் அன்றாட வேலைகளை கவனிக்கத் துவங்கினாள்! இரண்டு நாட்களுக்குப் பின்பு தான் இவளுக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது!!

 

இவள் வசித்தது முதல் தளத்தில்! அந்த தளத்தில்  எட்டு வீடுகள் இருந்தது! இதே போன்ற அமைப்பு கொண்டது தான் இரண்டாம் தளமும்! இந்த இரண்டு தளங்களில் இருந்த மொத்தம் பதினாறு வீடுகளில் தனியொருவளாக குடியிருந்தது இவள் மட்டும் தான் என்று இரண்டு நாட்கள் கழித்து தான் இவளுக்கு தெரிய வந்தது! 

 

இந்த விஷயம் அவளுக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், சற்றே திகிலாகவும் இருந்தது! ஏனென்றால் எதிரே மாந்தோப்பும், தென்னந்தோப்பும், அருகில் வெட்டவெளியாகவும் இருந்த இடமாக இருந்தது! மனதுக்குள் பயம் சற்றே எட்டிப் பார்த்தாலும் கடவுளின் துணையோடு நாட்களை கடத்தினாள்!

 

இதற்கு முன் வசித்த இடத்தில் நெருக்கமாக வீடுகள் இருந்தாலும் மனதுக்குள் ஒரு கலக்கம் தோன்றிக் கொண்டே இருக்கும்! உறக்கத்திலும் திடீரென்று விழிப்பு உண்டாகும்! ஆனால் இந்த வீட்டில் அக்கம்பக்கம் யாருமே இல்லையென்றாலும் மனதுக்கு நிம்மதியைத் தந்தது! நேர்மறை எண்ணங்களைத் தந்தது! பயமின்றி நல்ல உறக்கத்தைத் தந்தது!

 

தன்னம்பிக்கையுடன் அன்றாடக் காரியங்களை திட்டமிட்டு கவனித்துக் கொண்டு வந்தாள்! மாதங்கள் கடந்து செல்ல, மெல்ல மெல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஆட்கள் குடியேற புதியதொரு சூழலில், புதிய நட்புகள் உருவாக, புதிய பொறுப்புகளும் அவளைத் தேடி வர வாழ்க்கைப்பாதையும் தடையில்லாது பயணிக்கத் துவங்கியது!

 

அவளின் மனதில் அவ்வப்போது உருவாகும் எண்ணங்கள் அவளை உற்சாகம் கொள்ளவும் வைக்கிறது! சில நேரங்களில் கவலை கொள்ளவும் வைக்கிறது! மனதை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகவும் உள்ளது! எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ்வை முதலிலிருந்து துவக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது அவளுக்கு!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

 1. உரத்த சிந்தனையாக பகிரப்படும் எண்ணங்கள் உங்கள் சிரமங்களையும் சிறு மகிழ்ச்சிகளையும் சொல்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. புதிய வீட்டில் வாழ்க்கை நலமாக தொடரட்டும்.
  உங்கள் நேர்மறை எண்ணம் வாழ்க!
  வாசகம் அருமை.

  பதிலளிநீக்கு
 3. நேர்மறை எண்ணங்கள் நல்ல விஷயம். உங்கள் உணர்வுகளை அழகாகச் சொல்லி போகிறீர்கள் ஆதி

  வாசகம் நன்றாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....