ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி தொண்ணூறு – நட்பு பாதை!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல!; உணர்வோடும் உறவோடும் நம் வாழ்வில் ஒரு பொக்கிஷம்.

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி எண்பத்தி எட்டு இங்கே! பகுதி எண்பத்தி ஒன்பது இங்கே!

 

யாரிவள்! பகுதி தொண்ணூறு நட்பு பாதை!


 

அவளின் அன்றாட பொழுதுகளை ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வாள்! அக்கம்பக்கத்தில் நின்று யாரிடமும் பேசிக் கொண்டிருக்காமல், தேவையற்ற வம்புகளுக்கு இடம் கொடுக்காமல் கிடைக்கும் நேரத்தில் புத்தகங்களை வாசிப்பதும், அனுபவங்களை எழுதுவதுமாக தன்னை மேம்படுத்திக் கொண்டாள்!

 

இணையத்தில் எழுதத் துவங்கியது முதலாக பார்க்கும், கேட்கும் விஷயங்களை பதிவாக எழுதி விட துடித்தாள்! திருவரங்க வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்த அனுபவங்கள், கோவில் புறப்பாடு, சந்தித்த நண்பர்கள், செய்து பார்த்த சமையல், வாசித்த புத்தகங்கள் என்று வரிசையாக பகிர்ந்து கொள்வதற்கு ஏதேனும் இருந்து கொண்டே தான் இருந்தது!

 

அன்றாடம் மகளை பள்ளிக்கு அனுப்பிய பின் கிடைத்த பகல் பொழுதுகளில் மடிக்கணினியில் தட்டச்சு செய்வதும், செய்து பார்த்த பதார்த்தங்களை புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்வதும், வாசித்த புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்களை எழுதுவதும் என பயனுள்ளதாக மாற்றிக் கொண்டாள்!

 

இன்னாருடைய மகள், மனைவி, மருமகள் என்றில்லாமல் இவளைப் பற்றிய யாதொரு முன் அறிமுகமே இல்லாத நபர்களின் நட்பு கிடைக்கப் பெற்று  அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது அவளின் மனதிற்கு தன்னம்பிக்கை கொடுத்தது! அவளுக்கு ஒருவித உற்சாகத்தையும், தன்னைப் பற்றிய பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ளவும் முடிந்தது!

 

இங்கு வந்தது முதல் அரசு  நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டு அவ்வப்போது புத்தகங்களை எடுப்பதும், வாடகை நூலகம், அக்கம் பக்கம் என அவள் வாங்கி வாசித்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அவள் மனதை பக்குவப்படுத்தியது! விரிந்த எழுத்தாளர்களின் வட்டமும், வாசிப்பில் இருந்த ஈர்ப்பும் பல விஷயங்களை அவளுக்கு உணர வைத்தது!

 

அருகில் இருந்த தோழி ஒருவரின் ஸ்நேகத்தில் உப்பு, புளி பரிமாற்றம் முதல் புத்தக பரிமாற்றங்கள், கலந்துரையாடல், சந்தேகங்கள், புரிதல்கள் என இருவருக்குமிடையே நல்லதொரு நட்பு பாதையை உருவாக்கித் தந்தது! நட்புக்கு வயது ஒரு தடை இல்லை! அவளுக்கு கிடைத்த நட்புவட்டங்கள் பெரும்பாலும் இவளை விட மூத்தவர்களாக தான் இருப்பார்கள்!

 

அப்படித் தான் அந்த தோழியும்! அவருக்கு கல்லூரியில் படிக்கும் பெண்ணும், பள்ளி இறுதியில் மகனும் இருந்தார்கள். செய்யும் பதார்த்தங்களை இருவரும் பரிமாறிக் கொள்வதும், உதவிகள் செய்து கொடுப்பதும், கோவிலுக்கு ஒன்றாகச் சென்று பல மணிநேரங்கள் காத்திருந்து ரங்கனை தரிசிப்பதும், காத்திருக்கும் நேரத்தில் இருவரும் வாசித்த திருவரங்க வரலாறை குறித்து பேசுவதுமாக நாட்கள் கடந்து சென்றன!

 

இவளின் திருவரங்க வாழ்வில் ஒவ்வொரு நாளையும் புதிதாக தான் பார்த்தாள்! பொறுப்புணர்வுடன் திட்டமிட்டு செயல்பட்டு அடுத்தடுத்த நிலைகளுக்கும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் முனைப்புடன் செயல்பட்டாள்! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

13 கருத்துகள்:

  1. நட்புகள் வாழ்க... தனக்கென தனி அடையாளம் தேடிக்கொண்டது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்து தொடர்ந்து கருத்து பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. சிறப்பான நகர்வு தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்து தொடர்ந்து கருத்து பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. உண்மை தான் சகோ.

      பதிவு குறித்து தொடர்ந்து கருத்து பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சகோ.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. தொடர் பதிவு நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பல பதிவுகள் உடனே வாசிக்க தவறி விட்டாலும், மறுநாளாவது வாசித்த விடுகிறேன். நேற்றைய பதிவும் நெகிழ வைத்தது. நல்ல நட்பு வாழ்க்கையில் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி வரும் காலம் உங்களுக்குள் ஒரு பிரிவெனும் சொல்லின்றி அனைவரும் சேர்ந்திருக்க வேண்டும் என மனதாற வாழ்த்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் குறித்த தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  5. உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்தியது சிறப்பான விஷயம். எழுதத் தொடங்கி உங்களுக்கான அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டதோடு நல்ல நட்பு அமையப்பெற்றதும் நல்ல விஷயம் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்து தொடர்ந்து கருத்து பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    நல்ல நட்பு கிடைத்தது வரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்து தொடர்ந்து கருத்து பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. இனிமையாக கழிந்த நாட்கள் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....