திங்கள், 12 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 91 – திட்டமிடுதலும் சேமிப்பும்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வரவறிந்து செலவு செய்தால் வாழ்க்கை மலரும்; வரவை மீறி செலவு செய்தால் வாழ்க்கை கருகும்.

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி எண்பத்தி எட்டு இங்கே! பகுதி எண்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி 90 இங்கே! 

 

யாரிவள்! பகுதி 91 திட்டமிடுதலும் சேமிப்பும்!


 

அன்றாட வேலைகளுடன் கடைத்தெருவுக்குச் சென்று மளிகைப் பொருட்கள், காய்கறி என வெளியில் சென்று வாங்க வேண்டியிருந்தால் அவற்றை வாங்கி வருவது, மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்குச் சென்று வருவது, மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என அவளுக்கான வேலைகளை அவளே தான் செய்து வந்தாள்! இதற்காக யாரையும் அவள் தொந்தரவு செய்ததில்லை! 

 

கணவன் மாதாமாதம் வங்கிக் கணக்குக்கு அனுப்பும் பணத்தை எடுத்து வந்து, செய்யும் செலவுகளுக்கு கணக்கு எழுதி வைத்துக் கொள்வாள்! மாத இறுதியில் அந்த இருப்பினை சரி பார்த்துக் கொண்டு, தேவையற்ற அல்லது திடீரென ஏற்பட்ட செலவுகளை குறித்துக் கொண்டு அதை கவனத்தில் வைத்துக் கொள்வாள்!

 

திருமணத்துக்கு முன்பு வரை வீட்டிற்கு வரும் உறவினர்கள் கொடுக்கும் பணம், வேலை பார்த்த போது சம்பாதித்த பணம் என எல்லாவற்றையும் உண்டியலிலும், பின்பு வங்கியிலும் தான் சேமித்து வந்தாள்! திருமணத்திற்கு பின் தனியே இவளுக்கென்று பணம் எதுவும் அவள் வைத்துக் கொள்ளவில்லை! கணவனுக்கு சம்பளம் வந்ததும் அதை பொதுக் கணக்கில் வைத்துக் கொண்டு செலவு செய்த பின் இருவருமே கணக்கு எழுதி விடுவார்கள்!

 

தீபாவளி, கார்த்திகை, பொங்கல், திருமண நாள் என ஒவ்வொரு தருணத்திலும் சிறு எழுத்தில் நலம் விசாரித்து அப்பா அனுப்பிய  மணியார்டர், ஊருக்கு செல்லும் போது உறவினர்கள் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கும் பணம் என எல்லாவற்றையுமே கணவனிடம் கொடுத்து விடுவாள்! 

 

திருமணத்திற்கு மறுநாள் புகுந்த வீட்டுக்கு கிளம்பும் போது அப்போதிருந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் எடுத்துச் சென்ற ஆயிரம் ரூபாயைக் கூட பின்பு கணவனுடன் புரிதல் ஏற்பட்டு அவரை முழுதாக நம்பிய பின் அவரிடமே வீட்டு செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள கொடுத்து விட்டாள்!

 

இப்போது தனியொருவளாக குடித்தனம் செய்யத் துவங்கிய பின் மாதாமாதம் எடுக்கும் தொகையில் மிச்சம் பிடித்து பத்து வருடங்களுக்கு  பின் மீண்டும் சேமிப்பை துவக்கினாள். திட்டமிட்டு கணவனிடம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை தான் அனுப்பச் சொல்வாள்! அதில் செலவுகளை கட்டுக்குள் வைத்து எப்படியாவது மிச்சம் பிடித்து விடுவாள்! 

 

அவளைப் பொறுத்தவரை எளிமையான, ஆரோக்கியமான வாழ்வுக்கு என்ன தேவையோ அதை சரிவர கடைபிடித்து வந்தாள்! அனாவசியமான செலவுகளுக்கு அவள் இடம் கொடுக்க மாட்டாள்! அவசரத்தேவை என்கிற போது கையிருப்பு முக்கியமல்லவா! அதை யாரிடமும் சென்று கேட்க வேண்டாமே என்கிற எண்ணம் அவளுக்கிருந்தது!

 

தனியே ஒரு குடித்தனம் செய்தாலும் தனக்கென சில கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் வகுத்துக் கொண்டு அதை கடைபிடித்து வந்தாள்! மகளையும் அவ்விதமே வளர்த்துக் கொண்டு வந்தாள்! மகளும் எதற்காகவும் இவளிடம் அடம் பிடிக்க மாட்டாள்! எது வேண்டுமோ அதை முதலில் இவளிடம் சொல்வாள்! 

 

அதன் அவசியத்தை பொறுத்து உடனே தேவையென்றால் அதை செய்து தருவதும், பொறுமையாக செய்ய வேண்டிய விஷயங்களை அதற்கேற்றவாறு செய்து தருவதுமாக திட்டமிட்டுக் கொள்வாள்! வாங்க வேண்டிய பொருட்களோ, செய்ய வேண்டிய வேலைகளோ அதை குறித்து வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு செய்து முடிப்பாள்!

 

தனியே ஒரு பெண்மணி குடித்தனம் செய்து வந்தால் இந்த சமூகம் அவளை எப்படி பார்க்கும்??? என்ன கேள்விகளை அவள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்???

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

5 கருத்துகள்:

  1. தொடர்கிறேன்.  முதன் முதலில் எடுத்துச் சென்ற அந்த 1000 ரூபாயையும் கணக்கில் கொண்டு வந்து விட்டீர்கள்!!

    வாசக முதல் வார்த்தை வாழ்வறிந்து என்பதற்கு பதில் வரவறிந்து என்றிருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  2. பழைய ஆயிரம் ரூபாய் கணக்கில் சேர்த்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. குடும்ப செலவுகளை திட்டமிட்டு வழிநடத்தி சேமிக்கவும் செய்துள்ளீர்கள் .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....