வெள்ளி, 9 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எண்பத்தி எட்டு – அவளும் நானும்!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது - ஜார்ஜ் பெர்னாட்ஷா.

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

யாரிவள்! பகுதி எண்பத்தி பகுதி எண்பத்தி எட்டு அவளும் நானும்!


 

மனதும் உடலும் சோர்வடைந்திருந்த நேரத்தில் இடம் மாறுவது ஒருவித  உற்சாகத்தையும் அதேசமயம் இறுக்கமான சூழலை மறக்கவும் செய்தது! கடந்த ஒரு வருடகாலமாக அவள் அவதிப்பட்ட நிலையை எண்ணிப் பார்த்தால் மிகவும் மோசமாக இருந்தது! என்ன காரணமென்று அறியாமல், தீர்வும் தெரியாமல், எந்த வேலையும் செய்ய முடியாமல், இரவில் தூக்கமும் இல்லாமல் தவித்திருக்கிறாள்!

 

மனதிற்கு ஒட்டுதலான இடத்திற்கு செல்வதால் இனியாவது அவள் அதிலிருந்து மீண்டு வரட்டும்! இந்த அவதிகள் ஏற்பட்ட போது அவளின் வயது 29 தான்! அதிகமான குளிரும், வெயிலும் கூட இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் சொல்லியிருந்தார். கடந்து சென்ற வருடத்தை அவள் வாழ்வில் மறக்க வேண்டிய ஆண்டாக கருதினாள்!

 

அது ஒரு கோடைக்காலம். டெல்லியை விட்டு கிளம்புவதற்கு முன் அங்கே பழகிய நட்புகளிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்!  தமிழகத்தை நோக்கிய ரயில் பயணத்தில் பத்து வருடங்களுக்கு முன் டெல்லியில் ஆரம்பித்த புது குடித்தனம், கணவனிடம் ஏற்பட்ட ஈர்ப்பு, புரிதல், மகிழ்ந்திருந்த நாட்கள், சென்று பார்த்த இடங்கள், கொண்டாடிய பண்டிகைகள் என மனது முழுவதும் பசுமையான நினைவுகளை சுமந்து கொண்டு பயணிக்கிறாள்!

 

அடுத்து திருச்சியில் துவக்கப் போகும் வாழ்க்கையில் முதலில் மகளை பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்க்க வேண்டும்!  வீட்டில் தமிழில் பேசிக் கொண்டிருந்ததால் மகளுக்கு தமிழில் பேச மட்டுமே தெரியும்! எழுதவோ, படிக்கவோ  தெரியாது! ரயிலில் பயணிக்கும் போது கூட தமிழ் கற்பித்துக் கொண்டே தான் வந்தாள்! சேர்க்கப் போகும் பள்ளியில் வைக்கும் எழுத்துத் தேர்வில் என்ன செய்யப் போகிறாளோ என்ற சிந்தனை தோன்றிக் கொண்டிருந்தது அவளுக்கு!

 

திருச்சியில் அடியெடித்து வைத்தாயிற்று! ஒரு மாதம் போல புகுந்த வீட்டில் இருந்தபடியே மகளுக்கும் இவளுக்குமாக வசிக்க வீடு தேடிய போது அருகிலேயே கிடைத்தது! நல்லதொரு நாளில் பாலை காய்ச்சி குடித்தனத்தை துவக்கினாள்! மகளும் எழுத்துத் தேர்வில் தமிழில் சுமாராக செய்திருந்தாலும் மற்ற எல்லாவற்றிலும் நல்லபடியாக செய்ததால் அட்மிஷன் கிடைத்து விட்டது!

 

உறவுகளுக்கு அருகே இருப்பதால் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க கணவன் அறிவுரைகள் பல இவளுக்கு சொல்லிச் சென்றார்! இனி! தனியொருவளாக எல்லாவற்றையும் சமாளிக்கணும்! யாரிடமும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாமல் தன் கடமைகளையும், வீட்டு பெரியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் மட்டும் செய்து கொண்டு நாட்களை கடத்தணும்!

 

மகளுக்கு இது புதியதோர் சூழலாக இருக்கும்! அவளையும் அதற்கேற்றவாறு தயார் செய்யணும்! அப்பாவை பார்க்கணும் என்று அழுதால் சமாளிக்கணும்! இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான்! உற்ற துணைவனாகவும், நல்லதொரு தோழனாகவும், வழிகாட்டியாகவும், நலம் விரும்பியாகவும் உள்ள கணவன் இங்கு வரும் வரை தான்! அவர் வேலையில் மாற்றல் கிடைத்து வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தாள்!

 

சரி! இப்போதைக்கு 'அவரும் நானும்' என்றில்லாமல் 'அவளும் நானும்' என்று செயல்பட வேண்டும்! உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்!  இங்கு ஒரு மருத்துவரை பார்க்கணும்! மீண்டும் அப்படியொரு நிலை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கணும் என்றெல்லாம் சிந்தித்தாள்!

 

அவளுக்கான வேலைகளும், சவால்களும் தயாராக இருந்தன! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. எல்லாம் சிறப்பாகும்...
    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  2. இதோ இதோ என்று வருடங்கள் ஓடுகின்றன.. சீக்கிரம் நீங்கள் மூவரும் இணைந்திருக்கும் நாட்கள் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. //அவளுக்கான வேலைகளும், சவால்களும் தயாராக இருந்தன! //

    வேலைகளை திற்ம்பட செய்து சவால்களை எதிர் கொண்டு அனைத்தையும் சிறப்பாக நடத்தி வரும் ஆதிக்கு வாழ்த்துகள்.
    உங்கள் எண்ணம் விரைவில் நடைபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மாற்றலாகி வந்துவிடுவார் என்று வருடங்கள் ஓடியே விட்டன. சவால்கள் இல்லாத வாழ்க்கையா!! அடுத்து என்ன என்று அறிய தொடர்கிறேன், ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....