சனி, 10 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி எண்பத்தி ஒன்பது – அவளின் வாடிக்கை!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உங்களுக்கு மதிப்பில்லை என்று நீங்கள் உணரும் இடங்களில் மௌனமாக இருக்கப் பழகுங்கள்; காலப்போக்கில் உங்கள் மௌனம் உங்களுக்கான மதிப்பை அங்கே ஈட்டித்தரும்.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி எண்பத்தி எட்டு இங்கே! 

 

யாரிவள்! பகுதி எண்பத்தி பகுதி எண்பத்தி ஒன்பது அவளின் வாடிக்கை!


 

கடந்த பத்து வருடங்களாக கணவன் தன் பொறுப்பிலேயே  எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டதால் பொறுப்புகள் ஏதுமின்றி சிறு பிள்ளையாக தன்னை நினைத்துக் கொண்டு நாட்களை கடத்தி வந்தாள்! ஆனால் இனி அப்படியிருக்க முடியாது! யாரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காத வண்ணம் அவளுடைய வேலைகளுக்கு அவளே தான் அலையணும்!

 

மகளுக்கு பள்ளியும் திறந்து விட்டது! காலை எழுந்தது முதல் அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்து தயார்படுத்தி பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பி விடுவதும், பின்பு வீட்டு வேலைகளை செய்வதும், வீட்டு பெரியவர்களை பார்த்து விட்டு வருவதும், அங்கு செல்லும் போது முடிந்த வேலைகளை செய்து தருவதுமாக நாட்கள் நகர்ந்தது!

 

மாலை பள்ளியிலிருந்து திரும்பும் மகளை குளிக்க வைத்து, உடை மாற்றி விட்டு, குடிக்கவும், சாப்பிடவும் ஏதேனும் தந்த பின் இருவருமாக அரங்கன் கோவிலுக்கு நடந்து செல்வார்கள். தாயார் ரங்கநாயகியையும், சக்கரத்தாழ்வாரையும் தரிசித்த பின் கோவில் மணல்வெளியில் சிறிதுநேரம் மகளை விளையாட விடுவாள்!

 

வீட்டுக்குத் திரும்பியதும் மகளுக்கு பாடங்களை சொல்லித் தருவதும், வீட்டுப்பாடங்களை எழுத வைப்பதும் எனத் தொடரும்! பின்பு இருவருக்குமாக இரவு உணவை தயார் செய்து சாப்பிட்டு முடித்ததும் அடுப்பு மேடையை சுத்தம் செய்து விட்டு வருவதற்குள் மகள் ஒரு ஓரமாக தூங்கி விடுவாள். அவளை படுக்க வைத்து விட்டு இவளும் படுத்து விடுவாள்! 

 

காதருகில் பண்பலையின் இனிமையான கீதங்கள் ஒலிக்க மகளை தட்டிக் கொடுத்துக் கொண்டே இவளும் கண்ணுறங்க முயற்சி செய்வாள்! ஒவ்வொரு நாளும் இப்படியே தான் கடந்து செல்லும்! நாளைக்கான நம்பிக்கை பாதையில் பயணம் செய்து கொண்டே அவளும் சவால்களை சந்தித்து வந்தாள்!

 

அப்பாவை இப்போதே பார்க்கணும் என்று இரவு நேரத்தில் மகள் அழுவதும், அவளிடம் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி எப்படியாவது சமாதானம் செய்து விட முயற்சி செய்வதுமாக சில நாட்கள் செல்லும்! இவளும் அப்பாவின் செல்ல மகளாக வலம் வந்தவள் தானே! கல்லூரியில் படித்த போது கூட அப்பாவின் தொப்பையில் குத்து விட்டு விளையாடியவள்!

 

பெண் குழந்தைகளுக்கு அப்பாவின் மீது ஏற்படும் பாசப் பிணைப்புக்குள் யாரும் நுழைந்து விட முடியாது! அது அம்மாவே ஆனாலும் அவர்களைப் பொறுத்தவரை மூன்றாம் மனுஷி தான்! குழந்தையின் உணர்வுகளை இவளால் புரிந்து கொள்ள முடிந்தாலும் அப்போது என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று செய்வதறியாது தவிப்பாள்!

 

இப்போது இவளுக்கு கணவனும் ஒருவிதத்தில் அப்பா தான்! அப்பாவின் குணாதிசியங்களை கொண்டவரும் இவளின் நலனில் அக்கறை கொண்ட நல்ல மனிதரும் ஆவார்! கணவனுடன் அன்றாடம் அலைபேசியில் விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் அவரின் வரவை எதிர்நோக்குவதும் அவளின் வாடிக்கையாகிப் போனது! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

10 கருத்துகள்:

  1. சுமூகமாக செல்கிறது வாழ்க்கை தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  2. //இவளும் கண்ணுறங்க முயற்சி செய்வாள்!//

    //அப்பாவை இப்போதே பார்க்கணும் என்று இரவு நேரத்தில் மகள் அழுவதும்,//

    சிரமமான, நெகிழ்வான தருணங்கள்.  இதே காலகட்டத்தில் அவர் மனம், நிலை என்ன என்பதையும் சேர்த்திருக்கலாமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நான் என்ன மனநிலையிலிருந்தேன் என்று எழுதறேன். ஆபீஸ், மற்ற வேலைகளில் மனம் முழுமையாக ஈடுபட்டுவிடும். வார இறுதி நாட்களில், தனிமை கொஞ்சம் யோசிக்க வைக்கும். மனத்தை அதிலிருந்து திருப்பிவிட mall களுக்கு காரை ஓட்டிச் சென்றுவிடுவேன், அங்கே ஏதேனும் வாங்குவேன். திரும்ப வீட்டிற்கு வந்து ஏதேனும் செய்து சாப்பிடுவேன், படம் பார்ப்பேன். உடற்பயிற்சிக்கு நடப்பதும், ஜிம் போவதும் என்று ரொம்ப பிஸியாக வைத்துக்கொள்வேன். நான் பண்ணும் சாப்பாடு சொதப்பும்போது மனைவியின் எண்ணம் வரும்.

      You won't believe. இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது அருகில் அவள் படுத்திருப்பது தெரியும், மூச்சுக்காற்று, போர்வை விலக்கும் சப்தம் என்று... இது எப்போதாவது நிகழும்.

      கொஞ்சம் போரடித்தால், இனிப்புகளைச் செய்வேன். வெள்ளிக்கிழமை, ஆபீஸில் வேலை பார்க்க சிலர் வருவார்கள் (என் டிபார்ட்மெண்ட்). போன் பண்ணி அப்படி யாரேனும் வந்திருந்தால், கொண்டுபோய்க்கொடுப்பேன். (ஐந்து நிமிட நடைதூரம்).

      மனைவி என்ன நினைக்கிறாள், குழந்தைகள் என்ன நினைக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்துக்கொள்வதில்லை. அது நம் தனிமையை மேலும் அதிகமாக்கும்.

      நீக்கு
    2. ஆனால் என் குழந்தைகள் 11, 7ம் வகுப்புகள். சென்னையில் வீட்டிலிருந்து 200 மீட்டருக்குள் பள்ளி.

      நீக்கு
    3. //You won't believe. இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது அருகில் அவள் படுத்திருப்பது தெரியும், மூச்சுக்காற்று, போர்வை விலக்கும் சப்தம் என்று... இது எப்போதாவது நிகழும்.//

      டெலிபதி போல இதுவும் சாத்தியமோ...

      //மனைவி என்ன நினைக்கிறாள், குழந்தைகள் என்ன நினைக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்துக்கொள்வதில்லை. அது நம் தனிமையை மேலும் அதிகமாக்கும்.//

      உண்மை என்று தோன்றுகிறது.  

      நீக்கு
    4. நெல்லை ஒரு பெண்ணின் கோணம் வேறு, ஆணின் கோணம் வேறு. அதுவும் வெளி வேலை இல்லாமல் வீட்டிலிருந்து கவனித்துக் கொள்ளும் பெண். உங்கள் கருத்திற்கு வெங்கட்ஜியின் பதில் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்!

      கீதா

      நீக்கு
  3. //நாளைக்கான நம்பிக்கை பாதையில் பயணம் செய்து கொண்டே அவளும் சவால்களை சந்தித்து வந்தாள்!//

    அருமை.

    //பெண் குழந்தைகளுக்கு அப்பாவின் மீது ஏற்படும் பாசப் பிணைப்புக்குள் யாரும் நுழைந்து விட முடியாது//

    உண்மை. நானும் அப்பா செல்லம்.

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் ஆதி மகளுக்கும் தந்தைக்குமான உறவே தனிதான். உங்கள் சவால்கள் அதை நீங்கள் எதிர்கொண்டவிதம் எல்லாம் அருமை,

    கீதா

    பதிலளிநீக்கு
  5. மகளும் நீங்களும் தனிமையில் அப்பாவை மகள் தேடுவதும் நீங்கள் சமாளித்த விதமும் நன்று.
    நான் சிறுவயதில் இருந்த போது அப்பா வேலை நிமித்தம் வெளியூருக்கு புறப்பட்டு செல்ல நான் அழுததில் அதற்குப்பிறகு அதிகாலை நான்கு மணிக்கே நான் எழும்பு முன் புறப்பட்டு சென்று விடுவார்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....