வியாழன், 22 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 96 – மனதின் மாற்றங்கள்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட ராமையா டாக்கீஸ் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மனிதர்கள் புகழ்வதும் விரைவு; இகழ்வதும் விரைவு - எனவே அடுத்தவர்கள் சொல்லும் வார்த்தைகளை கவனிக்காதீர்கள் - இராமக்ருஷ்ண பரமஹம்சர்.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி எண்பத்தி எட்டு இங்கே! பகுதி எண்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி 90 இங்கே! பகுதி 91 இங்கே! பகுதி 92 இங்கே! பகுதி 93 இங்கே!

 

பகுதி 94 இங்கே! பகுதி 95 இங்கே!

 

யாரிவள்! பகுதி 96 மனதின் மாற்றங்கள்!




 

டெல்லியில் இருந்தவரை விடுமுறை நாளென்றால் பத்து மணி வரை கூட தூங்குவாள்! அலுவலக நாளென்றால் கூட இவளாக எழுந்தால் தான் உண்டு! கணவன் இவளை எழுப்பி தொந்தரவு செய்யவே  மாட்டார்! ஆனால் இங்கோ அப்படியெல்லாம் தூங்க முடியலை! 

 

புகுந்த வீடும் அருகிலேயே  இருந்தபடியால் யாரேனும் வருவார்களோ என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்! இல்லையென்றாலும் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளோர் 'ஏன் இன்னும் கோலம் போடலை'ன்னு கேட்பார்கள்! அவை மட்டுமா வீட்டு வாசலில் புதிதாக காலணிகள் ஏதேனும் இருந்தால் கூட யார் வந்திருக்கிறார்கள் என்று பார்ப்பார்கள்! 

 

இப்படி பல விஷயங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது டெல்லி வாழ்க்கை வேறு! இங்குள்ள வாழ்க்கையும் மனிதர்களும் வேறு என்று அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது! அடுத்தவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைப்போரை பார்க்கும் போது கடுப்பாக இருந்தாலும் யாரிடமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாகச் செல்ல வேண்டும் என்று நினைத்தாள்!

 

சுற்றியுள்ளோரை பார்க்கும் போது ஒரு இணக்கமான புன்னகையுடன் கடந்து விடுவாள்! என்றைக்காவது அப்படியே சற்று பேசினாலும் அவர்களின் முதல் கேள்வியாக 'அவர் இன்னுமா வரல! என்பதாகத் தான் இருக்கும்! இவளும் எல்லோரிடமும் பதில் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டாள்! இவளே சற்று மறந்திருந்தாலும் அவர்களின் கேள்வியால் மீண்டும் மனதில் ஒரு அலை உருவாகும்!

 

கணவனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாட்கள் எல்லாம்  மறைந்து வருகின்றன. இப்போதெல்லாம் அப்படியொரு நினைப்பே அவளுக்கு வருவதில்லை! தனியொருவளாக எல்லாவற்றையும் சமாளிக்கும் இந்த வாழ்க்கையும் நன்றாகத் தான் இருக்கிறது என்று நினைக்கத் துவங்கினாள்! வரும் போது வரட்டும்! பார்த்துக் கொள்ளலாம் என்பது போல நினைக்கத் தோன்றியது!

 

நாட்கள் மாதங்களாகி வருடங்களும் கடந்து வருகின்றன! இவள் மூன்று வருடங்களாக வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டை காலி செய்யச் சொல்ல வேறு வீடுகள் தேடி அலைந்தாள்! அப்போது சந்தித்த மனிதர்களும் அவர்களின் நிறங்களும் தனி அனுபவமாக இருந்தது இவளுக்கு! 

 

பேச்சிலர் வீடு தேடுவது போல இவளுக்கும் 'அம்மாவும் மகளுமாக இருப்போம்! கணவர் அவ்வப்போது வருவார்!' என்று ஒவ்வொருவருக்கும் கதையாக சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது! இந்த சமயத்தில் தான் கணவர் மீண்டும் வாடகை வீடெல்லாம் வேண்டாம்! லோன் போட்டு சொந்தமாகவே வீடு வாங்கிடலாம்! என்று முடிவு செய்தார்!

 

நேரம் வந்தால் எல்லாம் தானாகவே அமையும்! என்று முன்னோர்கள் சொன்ன வாக்கு உண்மை தான் என்பது போல 'அழகான வீடு' ஒன்று அமைந்தது! இனி! இவளின் வாழ்க்கைப்பதையில் ஒரு சின்ன மாற்றமாக இந்த வீடு இருக்கும்! பெரிய வீடோ, சின்னஞ்சிறிய வீடோ மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திருக்கணும் என்று நினைத்தாள்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. மனப் போராட்டங்கள், சமாளிப்புகள்...  வீடு தேடும் படலம் அனுபவம் வருத்தம் தருகிறது.  ஆனால் அதனால் விளைந்த சொந்த வீடு மகிழ்ச்சி.  ஐந்தாவது பாரா படித்து கவலையும் வருத்தமும் ஏற்பட்டது..

    பதிலளிநீக்கு
  2. சொந்த வீடு இதுதானே எல்லோருடைய கனவும்...

    பதிலளிநீக்கு
  3. கடினமான நாட்கள்தாம். இருந்தாலும் சோலையை எதிர்நோக்கிய பாலைவனப் பயணம். எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெரிய வீடோ, சின்னஞ்சிறிய வீடோ மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திருக்கணும் என்று நினைத்தாள்!//
      இறைவன் அருளால் நல்லபடியாக இருக்கும் ஆதி.வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.
      வாசகம் அருமை.

      நீக்கு
  4. முதலில் எதிர்பார்ப்புகள் இருக்கும் அப்புறம் அதுவே வாழ்க்கையாகிப் போனால் மனம் அதற்குப் பழகிவிடும்....

    சொந்த வீடு அமைந்தது நல்ல நிகழ்வு.

    வாசகம் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வீடு தேடும் படலம் விரிந்து ........சொந்தவீடானது மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கும் அவரவர் இல்லம் சொர்க்கமே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....