புதன், 14 செப்டம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 93 – அவளும் சைக்கிளும்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

முதல் முறை விழுந்துவிட்டோம் என்று பயந்துவிட்டால் மிதிவண்டி ஓட்டக் கூட பழகமுடியாது - வாழ்க்கையும் அது போல தான்.

 

******


 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

 

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

 

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

 

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

 

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

 

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

 

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

 

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!  பகுதி முப்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி முப்பத்தி நான்கு இங்கே! பகுதி முப்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி முப்பத்தி ஆறு இங்கே! பகுதி முப்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி முப்பத்தி எட்டு இங்கே! பகுதி முப்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி நாற்பது இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்று இங்கே!

 

பகுதி நாற்பத்தி இரண்டு இங்கே! பகுதி நாற்பத்தி மூன்று  இங்கே!

 

பகுதி நாற்பத்தி நான்கு இங்கே! பகுதி நாற்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி நாற்பத்தி ஆறு இங்கே! பகுதி நாற்பத்தி ஏழு இங்கே!

 

பகுதி நாற்பத்தி எட்டு இங்கே! பகுதி நாற்பத்தி ஒன்பது இங்கே! 

 

பகுதி ஐம்பது இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி இரண்டு இங்கே! பகுதி ஐம்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி நான்கு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஐந்து  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி ஆறு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஏழு  இங்கே! 

 

பகுதி ஐம்பத்தி எட்டு  இங்கே! பகுதி ஐம்பத்தி ஒன்பது  இங்கே! 

 

பகுதி அறுபது இங்கே! பகுதி அறுபத்தி ஒன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி இரண்டு இங்கே! பகுதி அறுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி அறுபத்தி நான்கு இங்கே! பகுதி அறுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி அறுபத்தி ஆறு இங்கே! பகுதி அறுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி அறுபத்தி எட்டு இங்கே! பகுதி அறுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எழுபது இங்கே! பகுதி எழுபத்தி ஒன்று இங்கே! 

 

பகுதி எழுபத்தி இரண்டு இங்கே! பகுதி எழுபத்தி மூன்று இங்கே!

 

பகுதி எழுபத்தி நான்கு இங்கே! பகுதி எழுபத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எழுபத்தி ஆறு இங்கே! பகுதி எழுபத்தி ஏழு இங்கே!

 

பகுதி எழுபத்தி எட்டு இங்கே! பகுதி எழுபத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி எண்பது  இங்கே! பகுதி எண்பத்தி ஒன்று  இங்கே! 

 

பகுதி எண்பத்தி இரண்டு இங்கே! பகுதி எண்பத்தி மூன்று இங்கே! 

 

பகுதி எண்பத்தி நான்கு இங்கே! பகுதி எண்பத்தி ஐந்து இங்கே!

 

பகுதி எண்பத்தி ஆறு இங்கே! பகுதி எண்பத்தி ஏழு இங்கே! 

 

பகுதி எண்பத்தி எட்டு இங்கே! பகுதி எண்பத்தி ஒன்பது இங்கே!

 

பகுதி 90 இங்கே! பகுதி 91 இங்கே! பகுதி 92 இங்கே! 

 

யாரிவள்! பகுதி 93 அவளும் சைக்கிளும்!




 

மகள் சங்கீதம் கற்றுக் கொள்ள வகுப்புக்குச் செல்கிறேன் என்ற போது ஆசையாக சேர்த்து விட்டாள்! வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்பு! நடைப்பயிற்சியாக இவளே மகளை அழைத்துச் சென்று வகுப்பில் விட்டுவிட்டு அங்கேயிருந்து கோவிலுக்கும், கடைத்தெருவுக்கும் சென்று வருவாள்! 

 

ஏறக்குறைய ஒரு மணிநேரம் போல இப்படி பொழுதை செலவிட்ட பின், மகளை அழைத்துச் செல்ல மீண்டும் வகுப்புக்கு வருவாள்! சிலநேரங்களில் அங்கேயே அமர்ந்து வகுப்பிலிருந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் அம்மாக்களிடமும் பேசிக் கொண்டிருப்பாள்! அதில் சில ஆத்மார்த்தமான நட்புகளும் கிடைத்தது இவளுக்கு!. 

 

இப்படியே நாட்கள் கடந்து செல்ல மகளின் மூன்றாம் வகுப்பில் அவளுக்கென ஒரு அழகான  சைக்கிள் ஒன்றை சர்ப்ரைஸாக வாங்கித் தந்தார் கணவர்! அதை வாங்கிய போது சுட்டிப்பெண்ணாக இவளின் சைக்கிள் ஓட்டின நினைவு மனதுக்குள் வந்து அவளை புன்னகைக்க வைத்தது!

 

சிறுவயதில் இவளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறேன் என்று ஒரு விடுமுறை நாளில் அப்பாவும், தம்பியும் இருபுறமும் பிடித்துக் கொள்ள அப்பாவின் சைக்கிளில் அமர்ந்து சிறிது தூரம் பெடல் செய்தாள்! திடீரென சைக்கிளிலிருந்து இவள் கீழே விழுந்து விட குடியிருப்பில் உள்ளோர் இவளை பார்த்து சிரிப்பதாக தோன்றி விட, அப்போது அவளுக்கு அது பெருத்த அவமானமாகத் தோன்றியது! 

 

கீழே விழுந்ததில் காலில் அணிந்திருந்த கொலுசும் கழண்டு விழுந்து விட, அழுது கொண்டே அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிச் சென்று விட்டாள்! அன்று வெந்தயக் கலரில் பாவாடையும் சட்டையும் தான் அணிந்திருந்தாள்! அதன் பிறகு எவ்வளவோ முறை அப்பா எடுத்துச் சொல்லிப் பார்த்தும் வர மறுத்து விட்டாள்!

 

இவளுக்கு சைக்கிள் ஓட்டத்  தெரியாது என்றாலும் மகளுக்கு இப்போது இவள் தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். மகள் சைக்கிளை ஓட்ட அவளுடன் சேர்ந்து சித்திரை வீதிகளில் இவளும் ஓடினாள்! கொஞ்சம் விட்டுவிட்டு இடைவெளி கொடுத்து அவளின் பின்னால் சென்று பார்ப்பாள்! பின் அவளை தனித்தே சென்று வர அனுப்பி விட்டாள்!

 

சிலநேரங்களில் சைக்கிளுடன் சாலையில் விழுந்த மகளை சமாதானம் செய்து அழைத்து வருவாள்! பழுதான சைக்கிளை கடைக்கு தள்ளிச் சென்று சரி செய்து கொண்டு வருவாள்! ஆக! இவளுக்கு தெரியாத ஒரு விஷயத்தை மகளுக்கு கற்றுக் கொடுத்ததில் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி!

 

அதன் பின் மகளே தனித்து சைக்கிளில் சென்று சற்று தொலைவில் இருந்த மருந்தகத்துக்கோ, காய்கறி கடைக்கோ சென்று வாங்கி வந்து தர ஆரம்பித்தாள்! இப்படியாக அவள் ஒவ்வொரு நாளையும் சவாலாக ஏற்று அதை திறம்பட செய்து வந்தாள்! தனக்கு கிடைக்கும் அனுபவங்களின் மூலம் வாழ்க்கைக்கான பாடமும் கற்றுக் கொண்டு வந்தாள்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

8 கருத்துகள்:

  1. நன்றாக எழுதி வருகிறீர்கள்!
    அன்பு மகளுக்கு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அந்த வயதில் என்ன கலர் பாவாடை சட்டை எல்லாமும் நினைவு இருக்கிறதே ஆதி! வாவ்! நல்ல நினைவுத்திறன். வாழ்த்துகள்!

    மகளின் சைக்கிள் கற்றலுடனான உங்கள் நினைவுகளும் அனுபவங்களும் நன்று.

    நான் கற்றுக் கொண்டது ரொம்பத் தாமதமாகத்தான் விழுந்து விழுந்துதான் கற்றுக் கொண்டேன். கற்றல் எல்லாமே அப்படித்தானே

    வாசகம் பொருத்தம்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வாசகம் , பதிவுக்கு பொருத்தம்.
    மகளுக்கு கற்று கொடுத்தது அருமை.

    பதிலளிநீக்கு
  4. விடாமுயற்சி உடையஉங்கள் குணத்துக்கு நீங்கள் ஒருமுறை விழுந்ததற்கு தயங்கி சைக்கிள் கற்றுக்கொள்ளாமல் விட்டது ஆச்சர்யம்.  அதே போல கீதா சொல்லி இருக்கும் அதே ஆச்சர்யம் எனக்கும்...  ட்ரெஸ் காலர் கூட நினைவு வைத்திருப்பது...

    பதிலளிநீக்கு
  5. மகளுக்கு ஓட்டக் கற்றுக்கொடுத்தது நன்று.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....