புதன், 2 செப்டம்பர், 2026

ஆடி மாத அமர்க்களங்கள் @ CGV - Part 1 - விஜி வெங்கடேஷ்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.



ஆடி மாத அமர்க்களங்கள் @ CGV - Part  1:

ஆடி மாதம் பிறந்ததோ இல்லையோ போட்டி போட்டுக் கொண்டு CGV யின் தேவிகள் தங்கள் வீட்டில் பெண்களைக் கூப்பிட்டு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் வைப்பது என்ன, தடபுடலாக பிரசாத விநியோகம் என்ன வெத்தலை பாக்கு, gift வைத்துத் தருவது என்ன ஒரே தடபுடல்தான்...


பார்வதி தேவி வீட்டு பூஜை:




Smt பார்வதி ஒரு வியாழன் (30.07.26) எங்களையெல்லாம் ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திற்குக் கூப்பிட்டார். இங்கு வெள்ளிக்கிழமை போல் மகாராஷ்டிராவில் லக்ஷ்மிக்கு உகந்த தினம் வியாழன். அதனாலேயோ என்னவோ அவர் அந்த தினத்தைத் தேர்ந்தெடுத்தார்.


வந்தவுடன் அனைவரையும் அன்போடு கூப்பிட்டு அமரவைத்து குங்குமம், சந்தனம், பூ கொடுத்தனர்.

கூடவே தொண்டைக்கு இதமாக பானகமும் வந்தது. 


லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடக்க நடக்க Smt. லதா அம்பாள் படத்திற்கு அர்ச்சனை செய்தார். லேட்டாக வந்தவர்கள் கூட பேசாமல் வந்து இருக்கையில் அமர்ந்து பாராயணத்தைத் தொடர்ந்தது சிறப்பு. அந்த ஹால் முழுவதும் ஒருவித பக்தி கலந்த ஆன்மீக உணர்வு அனைவரையும் ஆட்கொண்டது. பாராயணம் முடிந்து அம்பாள் பேரில் சிலர் பாடல்கள் பாடினர். அனைவரும் அம்பாளுக்கு பூக்களைச் சமர்ப்பித்தோம். பின்னர் அழகழகான நிறங்களில் இருந்த foldable பைகளில் அனைவருக்கும் தாம்பூலம் வழங்கப்பட்டது.



Smt. பார்வதியின் தங்கை Smt. கீதா வந்திருந்து அங்குமிங்கும் சுழன்று எல்லாவற்றையும் திறம்பட கவனித்து அம்பாள் பேரில் ஒரு பாடலும் பாடி (ஶ்ரீசக்ர ராஜ) தங்கை உடையார் பணிக்கு அஞ்சார் (இது என்னோட சரக்கு🤗) என்று நிரூபித்தார்.


அனைவரும் photo எடுத்துக் கொள்ளும் படலம் தொடங்கியது.. smart ஃபோனின் storage நிரம்புமளவிற்கு snaps எடுத்துத் தள்ளப் பட்டன.... இதெல்லாம் ஒரு memory தானே!😊


அடுத்து சுவாரசியமான பகுதி... அதான் பிரசாத விநியோகம்..




அன்று உண்டலி கொழுக்கட்டையும் சேமியா பாயசமும். அதெப்படி 35 - 40 பேருக்கு உண்டலி கொழுக்கட்டை பொறுமையாக பிடித்தார்களோ! அந்த அம்பாளுக்குத்தான் வெளிச்சம்!👏🏻👏🏻 மிக மிக மிருதுவாக வாயில் போட்டவுடன் தொண்டை குழிக்குள் சல்லென்று இறங்கியது.. awesome👌🏻👌🏻👌🏻. சிலர் அதன் recipe கேட்டுக் கொண்டிருந்தனர்..(சாதரணமாக இந்தப் பதார்த்தம் சரியாக வேகவில்லையென்றால் மேலன்னத்தில் ஒட்டிக் கொள்ளும்... ஹி ஹி நான் செய்யும் போது😜) 


அடுத்து வந்தது சேமியாப் பாயசம். சரியான consistency & தித்திப்போடு நடு நடுவே வாயில் முந்திரி அகப்பட்டு மிக நன்றாக இருந்தது... சிலர் once more கேட்டு வாங்கி ரசித்தனர், ருசித்தனர்...


மொத்தத்தில் மிகவும் திருப்தியாகவும் நிறைவாகவும் இருந்தது அந்த நாள்.... அம்பாளும் மிகவும் மகிழ்ந்து Smt.பார்வதி குடும்பத்திற்குத் தன் அருள் மழையைப் பொழிந்திருப்பாள் என்பது நிச்சயம்🙏🏻🙏🏻

ஆடி அமர்க்களம் இன்னும் வரும்....


விஜி வெங்கடேஷ்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

2 செப்டம்பர்  2026

9 கருத்துகள்:

  1. உண்டலி கொழுகட்டை என்றால் என்ன?  எப்படி செயவது?  உப்புமா கொழுக்கட்டை மாதிரியா?

    பதிலளிநீக்கு
  2. நிகழ்ச்சிகளின் வர்ணனை சூப்பர். பக்தி வெள்ளம் பெருகட்டும். வித்தியாசமான தாம்பூலப்பை என்று சொல்லி இருக்கிறீர்களே.. அதன் படம் போட்டிருக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  3. நம்மை சுறுசுறுப்புடனும், எல்லோருடனும் கலந்து பழகும் வாய்ப்பாகவும் மனம் எப்போதும் உற்சாகமாகவும் இருக்கவும் இது மாதிரி நிகழ்வுகள் உதவுகின்றன.  ஒரே அபார்ட்மென்ட்டில் இருந்தாலும் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு    தாண்டிச் செல்வதைவிட இது எவ்வளவோ நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் மிக அருமை.

    சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் ஆடி மாத அமர்க்களங்கள் பதிவு அமர்க்களமாக உள்ளது. அங்கு நடந்த அம்மன் பூஜை நிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்து தந்திருப்பது படித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    புகைப்படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. உண்டலி கொழுக்கட்டை என்றால், நானும் அரிசி உப்புமா கொழுக்கட்டை என்றுதான் நினைக்கிறேன். சேமியா பாயாசம் படத்திலேயே கவர்கிறது. இது போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை ஒரு நன்மையாக கருதி வீட்டில் செய்தால் , (எடுத்து செய்பவர்களுக்கும், கலந்து கொள்பவர்களுக்கும்) மனதுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உண்மை. . உங்களின் அடுத்தப் பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
  5. படித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உண்டலி கொழுக்கட்டை என்பது கொழுக்கட்டைக்கு மாவு கிளறுவது போல் கிளறி அத்துடன் உப்பு, காரப்பொடி போட்டு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து பின் கடுகு உ. பருப்பு கறிவேப்பிலை போட்டு தேங்காயென்னையில் தாளித்து பெருங்காயப்பொடி தேங்காய் துருவல் தூவி இறக்கவேண்டும்.
    நார்மலாக கொழுக்கட்டை மாவு மிஞ்சினால் இதைச் செய்வார்கள்.
    விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. அம்மணி கொழுக்கட்டையா ? புரிந்து கொண்டேன்.

      நீக்கு
    2. அட நம்ம அம்மிணி கொழுக்கட்டை! நினைத்தேன்.

      நீக்கு
  6. அழகான வர்ணனை.

    பக்தியுடன் அம்பாளை வழிபட உடனடி பலன் என்று சும்மாவா சொன்னார்கள். உண்டிலி கொழுக்கட்டையும் சேமியா பாயாசமும் கண்களை கவர்கிறதே.

    (இந்த உண்டலி கொழுக்கட்டையை உண்டு உண்டே பிள்ளையாரின் சுண்டெலி கொழுக் மொழுக் என்று இருக்கிறதோ!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :/இந்த உண்டலி கொழுக்கட்டையை உண்டு உண்டே பிள்ளையாரின் சுண்டெலி கொழுக் மொழுக் என்று இருக்கிறதோ! /

      :))))

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....