தலைப்பு பார்த்ததும் “அட உங்களுக்கான்னு” எல்லாரும் என்னை வாழ்த்த ஆரம்பிச்சுடாதீங்க!!
இலங்கை வானொலி கேட்டிருக்கிற பல நண்பர்கள் “பிறந்த நாள் இன்று பிறந்த நாள்” என்ற பாடலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது. அப்படி ஒரு நல்ல பாடல். அதைப் பாட, அது பற்றி சிந்திக்க எனக்கும் இன்று ஒரு வாய்ப்பு.
இன்று காலை எனது அப்பாவும் அம்மாவும் திருச்சியிலிருந்து தில்லி வந்தார்கள். காலையிலேயே சென்று அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தேன். வந்து சிறிது இளைப்பாறிய பின் குளித்து முடித்து சற்று நேரம் கழித்து “சஸ்பென்ஸாக” நேற்றே வாங்கி வைத்திருந்த கேக் எடுத்து வைத்து, அதன் மேல் ஒரு 7–ஆம் எண் மெழுகுவர்த்தியும், ஒரு 3-ஆம் எண் மெழுகுவர்த்தியும் வைத்து, அதை 73-ஆக செய்தோம்.
பின்னர் பிறந்த நாள் காணும் அப்பா கேக் ”கட்” செய்ய, பிறந்த நாள் கொண்டாடினோம். ”73 வயதில் இது தான் இப்படி முதல் முறையாய் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறேன்” என அவருக்கும் மகிழ்ச்சி. எங்களுக்கும் ஆனந்தம்.
இந்த நாளில் அவருக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்லவனை பிரார்த்திக்கிறேன்.
மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.
வெங்கட்.
