குரங்கு நீர்வீழ்ச்சியும் நண்பர் நடராஜனும்
நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதம் படித்து கொண்டிருந்த போது மாணவ மாணவிகள் எல்லோரும் சுற்றுலா சென்றிருந்தோம். நான்கு நாட்கள் சுற்றுலா. பல இடங்களுக்கு சென்று வந்தோம். பசுமையான சில நினைவுகள். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் ஆனைமலை பகுதியில் ஆழியார் அணைக்கட்டில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள குரங்கு நீர் வீழ்ச்சி. நிர்வீழ்ச்சியில் இருந்து மூலிகை செடிகளில் தவழ்ந்து நல் மணத்துடனும் வேகமாகவும் இடைவிடாமலும் வரும் தண்ணீரில் ஆனந்தமான ஒரு குளியல். குளிர்ந்த தண்ணீர் மேலே பட்டவுடன் Vibrator Mode-ல் உள்ள செல் போன் போல உடம்பில் ஒரு நடுக்கம். நண்பர்கள் எல்லோரும் குளித்து விட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். நிறைய குரங்குகளுடன் நாங்களும்! இயற்கையை அனுபவித்து இருந்த வேளையில், நண்பர் நடராஜன் கவனிக்காமல் பாசியில் காலை வைக்க, வழுக்கி விழுந்தார். நாங்களும் மற்ற மாணவிகளும் அலற, நண்பர் நடராஜனோ சமாளித்து, "டேய் மச்சி, இந்த போஸில் என்னை ஒரு போட்டோ எடுங்கடா!" என்று மீசையில் மண்ணே ஓட்டவில்லை [நண்பருக்கு அப்போது மீசையே முளைக்கவில்லை!] என்பது போல படுத்துக் கொண்டு ஒரு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் பின்[!] விளைவு அப்படி ஒரு மோசமாக இருந்தது. இரவில் மெதுவாக எங்களிடம் வந்து தேங்காய் எண்ணை இருக்கா? என்று வினவியது மட்டும் இல்லாமல், அடுத்த இரண்டு நாட்களும் பேருந்தில் உட்காராமல் நின்று கொண்டே பயணம் செய்தார்.
நல்லாதான் போஸ் கொடுத்தார் நடராஜன் போங்க. பழைய நிகழ்ச்சிகளை அசை போடுவதில் இருக்கும் சுகமே அலாதி, நல்ல பதிவு.
பதிலளிநீக்குரேகா ராகவன்.
கல்லூரி நினைவுகளை அசைபோடுவதே தனி சுகம்....வாழ்த்துக்கள். நிலாமதி
பதிலளிநீக்குமுதல் பதிவுக்கும் 500வது பதிவுக்கும் இடையே என்ன ஒரு பிரம்மாண்ட வளர்ச்சி !
பதிலளிநீக்குஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ரிஷபன் ஜி.....
நீக்குஇன்றைக்கும் இந்தப் பதிவினை பார்க்கும்போது “இதை இன்னும் நல்லா எழுதி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.....”
முதல் பதிவுக்கு வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஆஹா முதல் பதிவே பயணக்கட்டுரையா...சகோ...இம்மாத நந்தாலாலா இணையைஇதழில் உங்களை அறிமுகம் செய்ய உள்ளேன்.அதற்காக உங்களின் முதல் கட்டுரையை வாசித்தேன்..நகைச்சுவை உணர்வுடனே எழுதிய விதம் அருமை..
பதிலளிநீக்குநந்தலாலா இணைய இதழில் அறிமுகம்..... மிக்க மகிழ்ச்சி. சில நாட்களுக்கு இணையம் பக்கம் வர இயலாது. முடிந்த போது பார்க்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா.