செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மத்திய அரசில் வேலை வாய்ப்புகள் [தொடர் பதிவு]

நண்பர் மோகன்குமார் இந்த மாத ஆரம்பத்தில் ”வக்கீல் படிப்பும், வேலையும்” என்ற ஒரு பதிவில் தான் படித்த வக்கீல் படிப்பு பற்றியும் அதை படித்தவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றியும் எழுதி இருந்தார். பதிவின் முடிவில் தோழர்கள் அதிபிரதாபன், ஜெயமார்த்தாண்டன் மற்றும் என்னையும் அவரவர் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி எழுத அழைத்திருந்தார்.

மத்திய அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு என்ன கல்வி தகுதி தேவை, எந்த விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றி கீழே கொடுத்துள்ளேன். முதலில் “இந்திய அரசு பணி [IAS] என்று சொல்லப்படும் சிவில் சர்வீஸ் பற்றிப் பார்ப்போம்.

Union Public Service Commission [UPSC] என்ற அரசு தேர்வாணையத்தினால் நடத்தப்படும் தேர்வினை எழுதி, வெற்றி பெற்று பணியில் சேருகிறவர்களின் பதவியே IAS, IPS போன்றவை. இந்த தேர்வினை எழுத முக்கியமான தேவைகள் - கல்லூரி பட்டப் படிப்பு, வயது 21 பூர்த்தியாகி இருக்க வேண்டும். மூன்று நிலைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகள் – Preliminary Exam, Main Exam மற்றும் நேர்முகத் தேர்வு. ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் 1 – 15 தேதிகளில் எல்லா நாளிதழ்களிலும் வருகிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை ரூபாய் இருபது மட்டுமே. பொதுவாக மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டத் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் General Studies மற்றும் ஒரு விருப்பப்பாடம் ஆகிய இரண்டு தாள்கள் – Objective Type – மொத்த மதிப்பெண்கள் – 450. இந்தத் தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வரும்.

இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அடுத்தது Main Exam – இந்த தேர்வு அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடத்தப்படும். இந்தத் தேர்வில் ஒன்பது தாள்கள் – விரிவான கட்டுரை, ஜெனரல் ஸ்டடீஸ் I, II, நான்கு ஆப்ஷனல் பேப்பர்கள், தாய்மொழி மற்றும் ஆங்கிலம். இந்தத் தேர்விலும் வெற்றி பெற்றால் அடுத்த நிலை தில்லியில் நேர்காணல் – நேர்காணலுக்கான மதிப்பெண்கள் – 300. இந்த மூன்றாவது நிலையிலும் வெற்றி பெற்றால் நீங்கள் எடுத்த மதிப்பெண்களைப் பொருத்து உங்களுக்கு IAS, IPS போன்ற மணிமகுடம் சூட்டப்படும். சிலருக்கு Allied Service-ஆக பல அரசு துறைகளில் பதவி கொடுக்கப்படும். இந்த தேர்வுகளில் வெற்றி பெற உங்களுக்கு முக்கியமான ஒரு தேவை – லட்சியம், விடாமுயற்சி மற்றும் முறையான பயிற்சி.

UPSC-ஆல் இன்னும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு கொடுக்கும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவை பற்றிய விவரங்கள் இந்த சுட்டியில் கிடைக்கும்.

Staff Selection Commission [SSC] என்று அழைக்கப்படும் தேர்வு ஆணையமும் மத்திய அரசில் வேலை பெறுவதற்கான பலவிதமான தேர்வுகளை நடத்துகிறது. அவற்றில் முக்கியமான இரு தேர்வுகள் – Combined Matric Level Examination மற்றும் Combined Graduate Level Examination ஆகியவை.

Combined Matric Level Examination – இந்த தேர்வினை எழுத பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. கூடவே தட்டச்சு பயிற்சியும் அவசியம். இந்த தேர்வானது மூன்று பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. அவை முறையே – Lower Division Clerk, Stenographer Grade D மற்றும் Stenographer Grade C ஆகியவை. Stenographer பதவிக்கு சுருக்கெழுத்து பயிற்சியும் அவசியம். Objective Type தேர்வு இது. இந்த தேர்வினில் வெற்றி பெற்றவர்களுக்கு Skill Test உண்டு. இந்த இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்றபின் இந்திய அரசாங்கத்தில் உள்ள எந்த அமைச்சகத்திலும் அதைச் சார்ந்த துறைகளிலும் பணியில் அமர்த்தப் படுவார்கள். LDC பதவியில் சேரும் ஒரு பணியாளருக்கு முதல் மாதமே ரூபாய் 12900/- கிடைக்கும் [பிடித்தங்கள் இல்லாமல்].

Combined Graduate Level Examination: இந்த தேர்வினை எழுத குறைந்த பட்சம் இளங்கலை பட்டதாரியாக இருக்க வேண்டும். இந்த தேர்வும் இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது – Preliminary and Main Exam. இந்த தேர்வு ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பெரும் மதிப்பெண்களைப் பொருத்து – Assistants in Central Secretariat Service, Armed Forces Head Quarters, Ministry of External Affairs, Inspectors in Central Excise/Preventive Officers/Income Tax Assistants, Inspector in Department of Posts போன்ற பல அலுவலகங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள். UDC பதவியில் சேரும் ஒரு பணியாளருக்கு முதல் மாதமே ரூபாய் 17600/- கிடைக்கும் [பிடித்தங்கள் இல்லாமல்]. அது போல இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று Assistant-ஆக பதவி ஏற்கும் ஒரு நபருக்கு பிடித்தங்கள் இல்லாமல் முதல் மாத சம்பளமாக ரூபாய் 23250/- கிடைக்கும். Staff Selection Commission நடத்தும் பலவிதமான தேர்வுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

பொதுவாக மத்திய அரசில் வேலை வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கிறது. MNCs, மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் Pay Package-ஐக் காட்டிலும் மிகவும் குறைவாகக் கிடைக்கிறது. இது போன்ற பலவிதமான குறைபாடுகள் இருந்தாலும், சாதாரண இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இப்படிப்பட்ட வேலை வாய்ப்புகள் இருப்பது நல்ல ஒரு விஷயம்.

நண்பர் மோகன் இதனை ஒரு தொடர் பதிவாக தொடங்கியிருந்தார். அதற்கான சில விதிகளாக சிலவற்றைக் குறிப்பிட்டு இருந்தார். அவை:

1. உங்கள் படிப்பு பற்றியும் , அதற்கு எந்த கல்லூரிகள் சிறந்தவை (சென்னை மற்றும் இந்தியாவில்) என்றும் அவசியம் குறிப்பிடவும்.
2.இந்த படிப்பிற்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து விவரமாக எழுதவும்.
3. படிப்பு மற்றும் துறையில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் தொட்டு செல்லலாம்.
4. நீங்கள் 3 - 5 பேரை தொடர அழையுங்கள். தொடர்பவர்கள் வெவ்வேறு துறை சார்ந்தவர்களாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

இந்த தொடர் பதிவை தொடர நான் அழைப்போர்:

சந்திரமோகன்
விக்னேஸ்வரி
இராகவன் நைஜீரியா

8 கருத்துகள்:

  1. தொடர்ந்தமைக்கும் நல்ல கருத்துகள் பகிர்ந்தமைக்கும் நன்றி வெங்கட். இன்னும் கூட விரிவாய் எழுதியிருக்கலாமோ ? படிப்பவர்களுக்கு பொறுமை இருக்காது என நினைத்தீர்களா என அறியேன்.

    விக்னேஸ்வரி அவசியம் இதனை தொடரவும். அவர் இருப்பது ஓர் வித்யாசமான துறை. நிச்சயம் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி எழுதினால் பலருக்கு useful ஆக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. நல்ல, பிறருக்கு பயனளிக்கக் கூடிய தொடர். சங்கிலித் தொடர் வளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. If you said earlier in college time means i can also try for the same.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு தொடர் .. நல்ல தகவல்களுடன் தொடர்ந்ததற்கு பாராட்டுக்கள்.. தொடரப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. // நல்லதொரு தொடர் .. நல்ல தகவல்களுடன் தொடர்ந்ததற்கு பாராட்டுக்கள்.. தொடரப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    //

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வெங்கட்,
    பயனுள்ள பதிவு.
    மதுரையில் இருந்தபடி என் மகளை இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தயார் செய்து IRS ஆக்கியிருக்கிறேன்
    அப்பொழுது அதிகமான விழிப்புணர்ச்சி,புத்தக வசதி தில்லியைப்போல அங்கில்லை.அலைந்து திரிந்து சேகரித்தேன்.
    மேலும் நான் தமிழ்ப் பேராசிரியராக இருந்ததால் தமிழை ஒரு சிறப்புப் பாடமாக எடுக்க வைத்துத் தயார் செய்தேன்.
    முதல் முறையே வெற்றி கிடைத்தது.
    போட்டித் தேர்வுக்கான தமிழ் சார்ந்த
    தகவல்கள் வேண்டுமெனில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் அழைப்புக்கு நன்றி வெங்கட்..
    அனிமேஷன் மற்றும் ஓவியம் சார்ந்த வேலைவாய்ப்புகளை பற்றி எழுத எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
    நிச்சயம் அதை செய்வேன். எனினும் வேலை பளு காரணமாக எந்த பதிவையும் எழுத முடியாத நிலையில் இருப்பதால் மற்ற துறைகளை சார்ந்த யாரேனும் தற்போது எழுதினால் மகிழ்வேன். இது ஆரோக்கியமான முயற்சி. இதை தொடங்கி வைத்தவர் எனும் முறையில் தங்களுக்கும் மோகன் அவர்களுக்கும் எனது நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வேலை வாய்ப்புகள் பற்றி எழுத தூண்டிய மோகன், எழுத தொடங்கிய வெங்கட் மற்றும் எழுதப்போகிற யாவர்க்கும் , வேலைதேடி அலையும் நொந்த உள்ளங்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க உம் தன்னலமற்ற தொண்டு.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....